HomeCropஉருளைக்கிழங்கு: நடவு மற்றும் பயிர் வளர்ப்பு நடைமுறைகளின் தொகுப்பு

உருளைக்கிழங்கு: நடவு மற்றும் பயிர் வளர்ப்பு நடைமுறைகளின் தொகுப்பு

உருளைக்கிழங்கு உலகின் மிகவும் பரவலாக வளர்க்கப்படும் மற்றும் நுகரப்படும் பயிர்களில் ஒன்றாகும். இதனை சீனாவும், இந்தியாவும் அதிக உற்பத்தி செய்கின்றன. அதன் ஊட்டச்சத்து மதிப்பு காரணமாக, இது உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு ஒரு மதிப்புமிக்க உணவு ஆதாரமாக உள்ளது. ஏழை மற்றும் உழைக்கும் மக்களுக்கு, இது ஒரு சிறந்த உணவு ஆதாரமாக உள்ளதால்,  தற்போது தங்கள் குடும்பங்களுக்கு தினசரி உணவளிக்க முடிகிறது. ‘ஐரிஷ் உருளைக்கிழங்கு பஞ்சம்’ உலகளாவிய விவசாய வரலாற்றில், குறிப்பாக உருளைக்கிழங்கு சாகுபடி மற்றும் நுகர்வு அடிப்படையில் மிகவும் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளில் ஒன்றாகும். 1845 முதல் 1849 வரையில் உருளைக்கிழங்கு அழுகல் நோய் அயர்லாந்தில் பரவி, உருளைக்கிழங்கு பயிர்களை அழித்தது. வைட்டமின்-C, பொட்டாசியம், வைட்டமின் B-6 மற்றும் இரும்புச்சத்து உள்ளிட்ட பல்வேறு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அவற்றில் அதிகம் உள்ளன. உருளைக்கிழங்கில் அதிக எதிர்ப்புத் திறன் கொண்ட மாவுச்சத்தும், பசையம் இல்லாதது மற்றும் குறைந்த’ கிளைசெமிக்’ குறியீடும் உள்ளது. இது பெருங்குடல் புற்றுநோய், செலியாக் நோய் அபாயத்தைக் குறைக்கும் மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இந்தப் பயிரில் உள்ள அத்தியாவசிய அமினோ அமிலங்கள் ‘லியூசைன்’, ‘டிரிப்டோபேன்’ மற்றும் ‘ஐசோலியூசைன்’.

  • தாவரவியல் பெயர்: சொலானம் டியூபரோசம் எல். 
  • பொதுவான பெயர்: உருளைக்கிழங்கு, தரை ஆப்பிள், டேட்டர், ஸ்புட், கிழங்கு
  • உள்ளூர் பெயர்கள்: பொட்டட்டோ (ஆங்கிலம்), ஆலு (இந்தி), உருளைக்கிழங்கு (தமிழ்), பங்களாடும்பா (தெலுங்கு), அலு கெட்டே (கன்னடம்), படாடா (குஜராத்தி)
  • பயிர் பருவம்: ராபி
  • பயிர் வகை: தோட்டக்கலை பயிர்

மண் தேவைகள்

களிமண் முதல் மணல் கலந்த களிமண் மண் வரை, இந்த மண் வகைகளில் பெரும்பாலானவை உருளைக்கிழங்கு தாவர சாகுபடிக்கு ஏற்றது. ஏனெனில், இந்த வகையான மண் நன்கு வடிகால் மற்றும் காற்றோட்டத்துடன் கூடிய அதிக கரிமப் பொருளைக் கொண்டுள்ளது. சிறந்த pH வரம்பு 5.2 முதல் 6.4 வரை உள்ளது. இந்த பயிரை உப்பு மண்ணில் வளர்க்க முடியாது.

காலநிலை தேவைகள்

உருளைக்கிழங்கிற்கான உகந்த வெப்பநிலையானது, தாவர வளர்ச்சியின் போது 24°C மற்றும் கிழங்கு வளர்ச்சியின் போது 20°C ஆகும். வெப்பநிலை 30°C-க்கு மேல் அதிகரித்தால், கிழங்கு உருவாக்கம் பாதிக்கப்படும். உருளைக்கிழங்கு சாகுபடிக்கு நீண்ட சூரிய ஒளியும் மற்றும் குளிர்ந்த இரவுகள் கூடிய காலநிலை தேவைப்படுவதால், இதன் மூலம் நோய் தாக்கத்தைக் குறைக்க முடியும்.

உருளைக்கிழங்கு பயிர் வளர்ப்பு நடைமுறைகள்

விதை நேர்த்தி

நடவு செய்வதற்கு முன், 100 கிலோ கிழங்குகளை 30 கிராம் ‘கார்பன் டைசல்பைடில்’ 10 லிட்டர் தண்ணீரில் ஊறவைக்கவும் அல்லது 100 கிலோ கிழங்குகளை ‘மெத்தாக்ஸி எத்தில் மெர்குரிக் குளோரைடில்’ 50 கிராம் என்ற விகிதத்தில் 10 லிட்டர் தண்ணீரில் இரண்டு முதல் ஐந்து நிமிடங்கள் வரை  ஊற வைக்கவும்.

விதை விகிதம் மற்றும் இடைவெளி

உருளைக்கிழங்கு கிழங்குகளை வரிசைக்கு வரிசை 50 செ.மீ இடைவெளியிலும், செடிக்கு செடி 20 செ.மீ இடைவெளியிலும் விதைக்கப்படுகிறது. பொதுவாக உருளைக்கிழங்கு சாகுபடியில் 1 ஏக்கர் நிலத்தில் விதைப்பதற்கு 600 முதல் 800 கிலோ கிழங்குகள் தேவைப்படும்.

உண்மையான உருளைக்கிழங்கு விதை

உண்மையான உருளைக்கிழங்கு விதைகளைப் பயன்படுத்துவதன் மூலம், விதைக் கிழங்குகளின் விலையையும் மற்றும் நோய்கள் பரவுவதையும் வெகுவாகக் குறைக்கலாம். HPS 1/13, HPS 11/13 மற்றும் HPS 24/111 ஆகியவை ‘மத்திய உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிறுவனத்தால்’ CPRI உருவாக்கப்பட்டது. இவை உண்மையான விதைகளை உருவாக்கக்கூடிய உருளைக்கிழங்கு வகைகளாகும். விதைத்த 30 நாட்களுக்குப் பிறகு நாற்றுகள் இடமாற்றம் செய்யப்படும். மேலும், இது மற்ற காய்கறிகளைப் போலவே நாற்றங்கால் படுக்கைகளில் வளர்க்கப்படுகின்றன. ஒரு ஹெக்டேர் பயிரிட 100 கிராம் விதை தேவைப்படும்.

உருளைக்கிழங்கின் முதன்மை வயல் தயாரிப்பு

உருளைக்கிழங்கு வயலில் பயிரிட ஒன்று முதல் இரண்டு ஆழமான உழவுகள் மூலம் நன்கு பொடியாக்க வேண்டும், மேலும் இரண்டு முதல் நான்கு  பலுகுகள் கொண்டு நிலத்தின் மேற்பரப்பை சமன் செய்ய வேண்டும் மற்றும் முகடுகளுக்கு இடையே 45 செ.மீ இடைவெளியில் முகடு மற்றும் சால்களை அமைக்க வேண்டும்.

நீர்ப்பாசன அட்டவணை

உருளைக்கிழங்கு நீர்ப்பாசனம் செய்வதற்கான மிகவும் பிரபலமான சிறந்த முறை ‘சொட்டு நீர்ப்பாசனம்’ ஆகும். நீர்ப்பாசனத்தின் இடைவெளி மண் மற்றும் காலநிலை பொருத்து மாறுபடுகிறது. உருளைக்கிழங்கு  நடவு செய்த 7 முதல் 10 நாட்களுக்குப் பிறகு பயிர்களுக்கு நீர் பாய்ச்ச வேண்டும். 

கிழங்கு உருவாகும் கட்டத்தில் நீர் அழுத்தம் பயிர்களின் உற்பத்தியில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். பொதுவாக, உருளைக்கிழங்கு பயிரிடும் விவசாயிகள் முகடு மற்றும் சால் முறையைப் பயன்படுத்தி பயிருக்கு நேரடியாக சால்களில் நீர் வழங்குகின்றனர்.

உர அட்டவணை

உருளைக்கிழங்கிற்கு பரிந்துரைக்கப்படும் உரம் மற்றும் உரங்களின் அளவு ஓவ்வொரு மாநிலத்திற்கு, அதன் வகைகளின் வளர்ச்சி மற்றும் உற்பத்தியைப் பொறுத்து மாறுபடும். பொதுவாக, கடைசி உழவின் போது ஏக்கருக்கு 10 முதல் 15 டன் தொழு உரம் இட வேண்டும். கடைசி உழவின் போது 40 கிலோ யூரியா, 150 கிலோ SSP மற்றும் 30 கிலோ MOP ஆகியவற்றை அடிப்படை உரமாக கடைசி உழவின் போது பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. 

மேலும், உருளைக்கிழங்கு சாகுபடியில் 30 மற்றும் 50 DAS என்ற அளவில் யூரியாவை ஏக்கருக்கு 40 கிலோ மற்றும் 20 கிலோ என்ற அளவில் பரிந்துரைக்கப்படுகிறது.

இடை சாகுபடி நடைமுறைகள் 

களையெடுத்தல்

வயலில் களைகள் இல்லாமல் இருக்க களையெடுப்பை தொடர்ந்து செய்ய வேண்டும். முந்தய களைக்கொல்லியான ‘சென்கோர்’ (மெட்ரிபுசின் 70% டபிள்யூபி) ஏக்கருக்கு 250-300 கிராம் என்ற விகிதத்தில் நிலத்தில் பயன்படுத்தவும் அல்லது பிந்தைய களைக்கொல்லியான ‘அஜில்’ (ப்ரோபாக்விசாஃபாப் 10% இசி) @ 2 மில்லி/லிட்டர் தண்ணீர் அல்லது 400 மில்லி/ ஏக்கருக்குப் பயன்படுத்தவும். மேற்கூறிய இரண்டு களைக்கொல்லிகளும் களையை கட்டுப்படுத்த சிறந்த தேர்வுகளாகும்.

மண் அணைத்தல்

முப்பது நாட்களுக்குப் பிறகு, மூன்று முதல் நான்கு முறை உருளைக்கிழங்கு செடியின் வேரைச் சுற்றி மண் அணைப்பு செய்ய வேண்டும். இல்லையெனில் உருளைக்கிழங்கின் நிறம் பச்சை நிறமாக மாறும், இது உருளைக்கிழங்கின் தரம் குறைவதற்கு வழிவகுக்கிறது.

பயிர் பாதுகாப்பு

பூச்சிகள்

a) கிழங்கு அந்துப்பூச்சி (தோரிமோயா ஒப்பர்குலெல்லா)

அறிகுறிகள்

  • லார்வாக்கள் இலைகளில் சுரண்டி சேதத்தை ஏற்படுத்துகின்றன மற்றும் அதன் தண்டு பலவீனமடைந்து, அவை உடைந்து விடுகின்றன.

மேலாண்மை

  • ஆழமற்ற மண்ணில் கிழங்குகளை நடவு செய்வதைத் தவிர்க்கவும். கிழங்குகளை 10 முதல் 15 செ.மீ ஆழத்தில் நடவும்.
  • ஒரு ஹெக்டடருக்கு 20 என்ற அளவில்  இனக்கவர்ச்சி பொறிகளை நிறுவவும்.
  • உருளைக்கிழங்கு அந்துப்பூச்சி, வெளியே தெரிகின்ற கிழங்குகளில் முட்டைகளை இடுவதைத் தவிர்க்க, நடவு செய்த 60 நாட்களுக்குப் பிறகு மண் அணைத்தலை செய்ய வேண்டும்.
  • இலை சேதத்தை கட்டுப்படுத்த NSKE 5% அல்லது குயினால்போஸ் 20 இ சி @ 2 ml/lit (ETL 5% இலை சேதம்) தெளிக்கவும்.
  • 100 கிலோ கிழங்குகளுக்கு 1 கிலோ என்ற அளவில் ‘குயினால்பாஸ்’ பூச்சிக்கொல்லி தூசியினை விதைக் கிழங்குகளுக்குத் தூவ வேண்டும்.

b) உருளைக்கிழங்கு வெட்டுப் புழு (அக்ராட்டில் இப்சிலான்)

அறிகுறிகள்

பகலில், வெட்டுப்புழு லார்வாக்கள் தாவரத்தின் அடிப்பகுதியில் மண்ணில் புதைந்திருக்கும். இவற்றுள், சில இனங்கள் இரவில் உருளைக்கிழங்கின்  இளஞ்செடிகளின் தண்டுகளை வெட்டும், மற்றவை செடிகளில் ஏறி அவற்றின் இலைகளை உட்கொள்கின்றன. முதிர்ச்சி அடைந்த லார்வாக்கள், எப்போதாவது உருளைக்கிழங்கு தண்டுகளை சுரண்டி தாவர வளர்ச்சியை சீர்குலைக்கின்றன. அத்தகைய சந்தர்ப்பங்களில் தரையின் மேற்பரப்புக்கு அருகில் உள்ள கிழங்குகள் சேதமடையலாம். ஒரு லார்வா ஒரே இரவில் பல உருளைக்கிழங்குச் செடிகளை அழிக்கும்.

மேலாண்மை

  • கோடை காலத்தில், வயது முதிர்ந்த அந்துப்பூச்சிகளை ஈர்க்கும் வகையில் ஒளிப்பொறியை அமைக்கவும்.
  • ஒரு தெளிப்பான் நீர்ப்பாசன முறையை நிறுவி, பகல் நேரத்தில் வயலுக்கு நீர்ப்பாசனம் செய்யுங்கள், இதன் மூலம் லார்வாக்களைப் பறவைகள் வேட்டையாடும்.
  • நடவு செய்த ஒரு நாள் கழித்து, தாவரத்தின் தண்டு மண்ணில் படும் பகுதியில் ‘குளோர்பைரிஃபோஸ் 50% + சைபர்மெத்ரின் 5% (BASF-ADEXAR)’ என்ற விகிதத்தில் 1 மில்லி/லிட்டர் தண்ணீரில் கலந்து நனைக்கவும்.

c) வெள்ளை வேர்ப்புழு (ஹோலோட்டிரைக்கியா ஸ்பீசிஸ் )

 அறிகுறிகள்

உருளைக்கிழங்கில் துளைகள் காணப்படும். ஒரு கிழங்கில் இரண்டுக்கும் மேற்பட்ட துளைகள் தென்படும். வெள்ளைப் புழுக்கள் கிழங்குகளுக்குள்  ஆழமாக நுழைவாதில்லை, ஆனால் அங்கேயே வசிக்கும், இதனால் தான்  கிழங்குகளில் துளைகள் ஆழமாக இருப்பதில்லை.

மேலாண்மை

  • பூப்பாக்கள் மற்றும் முதிர்ச்சி அடைந்த புழுக்களை வெளிப்படுத்த கோடை உழவு செய்ய வேண்டும்.
  • ஒளிப்பொறிகளை நிறுவவும், இரவு 7 மணி முதல் இரவு 9 மணி வரை செயலில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். 
  • ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில், மூன்றாவது இன்ஸ்டார் புழுக்களை சேகரித்து அழிக்கவும்.
  • இலையுதிர் காலத்தில், ஃபோரேட் 10G @ 25 கிலோ/ஹெக்டருக்கு பூச்சி தாக்குதல் உள்ள பகுதிகளில் (ஆகஸ்ட் – அக்டோபர்) இட வேண்டும்.

நோய்கள்

a) பின் கருகல் நோய் (பைட்டோபதோரா  இன்பேஸ்டன்ஸ்)

அறிகுறிகள்

உருளைக்கிழங்கு இலைகள் மற்றும் தண்டுகளின் மேற்பரப்பில் கரும் பச்சை, பழுப்பு மற்றும் கருப்பு புள்ளிகள் குறிப்பாக நீர் அல்லது பனித் தேங்கும் முனைகள் அல்லது விளிம்புகளுக்கு அருகில் தோன்றும். இலைகளின் கீழ் மேற்பரப்பில், வெள்ளை நிறத்தில் பூசணம் தோன்றும். கருகல் ஏற்பட்ட உருளைக்கிழங்கில், கிழங்குகளின் மேற்பரப்பில் வெள்ளை பூசணம் காணப்படும்.

மேலாண்மை

  • நோய்த்தொற்றுக்கான ஆதாரமாக இருக்கும் களைகளை அகற்றவும்.
  • நடவு செய்த 45, 60 மற்றும் 75 நாட்களில் ‘மான்கோசெப்’ @ 2 கிராம் / லிட்டர் தண்ணீர் அல்லது ‘குளோரோதலோனில்’ @ 2 கிராம் / லிட்டர் தண்ணீரில் தெளிக்கவும்.
  • ‘குஃப்ரி ஜோதி, குஃப்ரி மலர் மற்றும் குஃப்ரி தங்கம்’ போன்ற பின் கருகல் நோயை எதிர்க்கும் ரகங்களை வளர்க்கவும்.

b) முன் இலைக்கருகல் (ஆல்டர்னேரியா சொலானி)

அறிகுறிகள்

பாதிக்கப்பட்ட இலைகள் 0.12 முதல் 0.16 அங்குலம் (3-4 மிமீ) வரையிலான வட்டம் வடிவத்திலிருந்து கோண வடிவத்தில் அடர் பழுப்பு நிறப் புண்கள் தோன்றும். கடுமையாக பாதிக்கப்பட்ட இலைகள் மஞ்சள் நிறமாக மாறி விடும். பாதிக்கப்பட்ட கிழங்குகளில் பழுப்பு நிறமாக மாறி, உலர்ந்து  அழுகும். 

மேலாண்மை

c) பழுப்பு அழுகல் (ரால்ஸ்டோனியா சொலனேசியரம்)

அறிகுறிகள்

முதல் அறிகுறி ‘வாஸ்குலர் வளையத்தின் பழுப்பு நிற கறை’ (எனவே, “பழுப்பு” அழுகல் என அழைக்கப்படும்). கிழங்கு உருவாகும் நேரத்தில் வாடல் அறிகுறி முக்கிய சிறப்பியல்பு அறிகுறியாகும். பாதிக்கப்பட்ட கிழங்கின் மேற்பரப்பில் ‘பாக்டீரியா’ கசிந்து துர்நாற்றத்தை வெளியிடும்.

மேலாண்மை

  • பழுப்பு அழுகல் நோய் இல்லாத கிழங்குகளைத் தேர்ந்தெடுக்கவும்.
  • போதுமான வடிகால் வழங்கவும்.
  • ‘ஸ்ட்ரெப்டோசைக்ளின் சல்பேட் 90% + டெட்ராசைக்ளின் ஹைட்ரோகுளோரைடு 10%’ @ 6 கிராம்/30 லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்கவும்.

அறுவடை, பதப்படுத்துதல் மற்றும் தரப்படுத்துதல்

தாவரங்கள் மஞ்சள்-பழுப்பு நிறமாக மாறி உலரத் தொடங்கும் போது அறுவடை செய்யப்படுகிறது. கிழங்கு அறுவடைக்காக நிலத்தை தோண்டும்போது கிழங்குகளுக்கு காயம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அறுவடைக்கு ஒரு வாரத்திற்கு முன்பு நீர்ப்பாசனம் செய்யக்கூடாது. கிழங்குகளை அறுவடை செய்த பிறகு 10-15 நாட்களுக்கு காற்றில் உலர்த்த வேண்டும். உருளைக்கிழங்குகளை 15°C-20°C வெப்பநிலையில் காற்றோட்டமான இடத்தில் நிழலின் கீழ் குவிப்பதன் மூலம் சரியாக பதப்படுத்தும் செயல்முறை செய்யப்படுகிறது. உயர்தர கிழங்குகளின் சீரான தரத்தை உறுதி செய்வதற்கும், ஊதிய வருமானத்தைப் பெறுவதற்கும், அவை அந்தந்த அளவுகளுக்கு ஏற்ப தரப்படுத்தப்பட வேண்டும். விதை அளவு உருளைக்கிழங்கு, பெரிய அளவு கிழங்குகள் மற்றும் சேட் வகை கிழங்கு (விதை அளவு கிழங்குகளை விட சிறிய உருளைக்கிழங்கு) என தரப்படுத்தப்படுகிறது. விதை அளவு கிழங்குகளைப் பிரித்து, அவற்றின் ஆரோக்கியத் தரத்தைப் பொறுத்து விதைக்காக சேமிக்க வேண்டும்.

மகசூல்

விளைச்சல் வகையைப் பொறுத்து மாறுபடும். இருப்பினும், முன் முதிர்ச்சி அடையும் இரகங்கள் சராசரி மகசூல் எக்டருக்கு 20 டன் ஆகும். அதே சமயம் பின் முதிர்ச்சி அடையும் இரகங்கள் எக்டருக்கு 30 டன் மகசூல் தருகின்றன.

வகைகள்/ கலப்பினங்கள்

குஃப்ரி அலங்கர், குஃப்ரி ஆனந்த், குஃப்ரி அசோகா, குஃப்ரி பாட்ஷா, குஃப்ரி பஹர், குஃப்ரி சிப்சோனா-1, குஃப்ரி சிப்சோனா-2, குஃப்ரி சிந்துரி, குஃப்ரி சட்லெஜ்.

spot_img

மேலும் அறிய

தொடர்பில் இருக்க

அண்மை தகவல்களைப் பெற எங்களை சப்ஸ்கிரைப் பண்ணுங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்