ஜிங்கிபெரேசியே இஞ்சி தாவரத்தின் அசல் குடும்பமாகும். இஞ்சி ஓரியண்டல் இனத்தைச் சேர்ந்தது என்று அறியப்படுகிறது.
தாவரத்தின் சிறந்த நறுமணம் மிகவும் தனித்துவமானது, மேலும் இஞ்சி இந்திய உணவு வகைகளில் பெரிதும் பங்களிக்கிறது. இது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் அதிக மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது.
இஞ்சியை பாதிக்கும் நோய்கள்
பாக்டீரியா வாடல் நோய்
- இது மிகவும் கொடிய நோயாகும்.
- இதன் அறிகுறிகளை ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் காணலாம்.
- பாதிக்கப்பட்ட செடியின் இலை ஓரங்கள் வெண்கலமாக மாறி பின்நோக்கி சுருண்டுவிடும்.
- முழு தாவரங்களும் வாடி இறந்துவிடும்.
கட்டுப்படுத்தும் முறை
- நல்ல தரமான நோயற்ற விதை கிழங்கை தேர்வு செய்ய வேண்டும்.
- காப்பர் ஆக்ஸி குளோரைடு என்ற மருந்தை செடியின் வேர் பகுதியில் கொடுக்கவும்.
மென்மை அழுகல் நோய்
- இது ஒரு தீவிர விதை மற்றும் மண்ணில் பரவும் நோயாகும்.
- இதன் அறிகுறிகள் ஜூலை மாதத்திலிருந்து தெரியும்.
- இலைகளின் மஞ்சள் நிறமானது முதலில் கீழ் இலைகளில் தோன்றி பின்பு மேல் இலைகளுக்கு செல்லும்.
கட்டுப்படுத்தும் முறை
- தண்ணீர் தேங்குவதை தவிர்க்கவும்.
- விதைப்பு நேரத்தில், வேர்த்தண்டுக்கிழங்கை டிரைக்கோடெர்மா @ 8-10 கிராம்/லிட்டர் தண்ணீருடன் நேர்த்தி செய்ய வேண்டும்.
- காப்பர் ஆக்ஸி குளோரைடு என்ற மருந்தை செடியின் வேர் பகுதியில் கொடுக்கவும்.
இலைப்புள்ளி நோய்
- சிறிய கருமை நிற புள்ளிகள் புதிய தளிர்களில் தென்படும்.
- பிறகு புள்ளிகள் பெரியதாகி, இலைகள் முற்றிலும் காய்ந்து போகும்.
- இது செடியின் ஒளி சேர்க்கையை முற்றிலுமாக குறைத்துவிடும்.
கட்டுப்படுத்தும் முறை
- இந்த நோயை கட்டுப்படுத்த கார்பென்டாசிம் என்ற மருந்தை 2 கிராம்/ ஒரு லிட்டர் தெளிக்கவும்.
பூச்சி மேலாண்மை
கருப்பு வண்டு
- இந்த பூச்சி சில நேரங்களில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தும்.
- புழுக்கள் வேர்கள் மற்றும் புதிதாக உருவாகும் வேர்த்தண்டுக்கிழங்குகளை உட்கொள்ளும்.
- பொதுவாக ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் நோய்த்தாக்குதல் அதிகமாக இருக்கும்.
கட்டுப்படுத்தும் முறை
- இதனை கட்டுப்படுத்த செடிகளுக்கு வேப்பம்புண்ணாக்கு 50 கிலோ/ ஏக்கர் என்ற அளவில் கொடுக்கலாம்.
தண்டு துளைக்கும் புழு
- இந்த புழு செடியின் தண்டு பகுதியை துளைத்து உள்ளே இருக்கும் திசுக்களை உண்ணும்.
- பாதிக்கப்பட்ட செடி வாடியதை போல் காட்சியளிக்கும்.
கட்டுப்படுத்தும் முறை
- ஃப்லூபென்டாமைட் 39.35% எஸ்.சி (Flubendiamide 39.35% SC)@ 7 மில்லி/ 10 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் தெளிக்கவும்.
தண்டு துளைக்கும் வண்டு
- இந்த வண்டு செடியின் தண்டு பகுதியை துளைத்து சேதப்படுத்தும்.
- பாதிக்கப்பட்ட செடி வாடியதை போல் காட்சியளிக்கும்.
கட்டுப்படுத்தும் முறை
- ஃப்லூபென்டாமைட் 39.35% எஸ்.சி (Flubendiamide 39.35% SC)@ 7 மில்லி/ 10 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் தெளிக்கவும்.
- காட்டு மஞ்சள் மற்றும் ஏலக்காய் போன்ற மாற்றுத் தாவரங்களை அகற்றவும்.