HomeCropகரும்பு பயிருக்கான நிலத்தயாரிப்பு முறைகள்

கரும்பு பயிருக்கான நிலத்தயாரிப்பு முறைகள்

பிரேசிலுக்கு அடுத்தபடியாக கரும்பு உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. 2021-ம் ஆண்டில் மட்டும், உத்தரப்பிரதேச மாநிலத்தில் சுமார் 177 மில்லியன் டன்கள் கரும்பு உற்பத்தி செய்யப்பட்டது. கரும்பு ஒரு பல்துறை பயிர் ஆகும். இது சர்க்கரை, வெல்லப்பாகு மற்றும் காகிதம் போன்ற பல்வேறு பொருட்கள் தயாரிக்கப் பயன்படுத்தலாம். இந்தியாவில் கரும்பு உற்பத்தி செய்யும் முக்கிய மாநிலங்களாக உத்தரப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் ஒரிசா உள்ளிட்ட மாநிலங்கள் உள்ளன.

கடின நிலை:  நடுத்தரம்

விதை தேர்வு

கரும்பு விவசாயம் செய்ய விதைகள் கிடையாது. கரும்பு கரனைத் தான் விதையாகப் பயன்படுத்தப்படும். கரும்பு நடவு என்பது தட்பவெப்ப நிலை, நீர் இருப்பு மற்றும் சரியான ரகங்களைத் தேர்ந்தெடுப்பது ஆகியவற்றைப் பொறுத்தது. இன்றைய சந்தையில் தேர்வு செய்ய பல்வேறு வகையான கரும்புகள் உள்ளன. அவற்றுள் பீமா, நயனா, பிரபா, கல்யாணி, பவானி, உத்தரா, சரயு, மோதி, கிருஷ்ணா, ரசீலி, கந்தக், பிரமோத், ஹரியானா, ராஜ்போக், ராஸ்பரி, ஷிமா மற்றும் ஸ்வேதா ஆகியவை பிரபலமானவை. சந்தையில் உள்ள இனிப்பு கரும்புகளில் நயனா ரகமும் ஒன்றாகும். இதன் ரசத்தில் 20.1% சுக்ரோஸ் உள்ளது. நயனா எக்டருக்கு சுமார் 104 டன் மகசூல் கொடுக்கும். இது மட்டும் இல்லாமல் நயனா ரகம் கரிப்பூட்டை, சிவப்பு அழுகல் நோய்களுக்கு எதிர்ப்புத் திறனையும், வறட்சியைத் தாங்கும் தண்மையையும் மற்றும் சிறந்த மறுதாம்பு பயிராகவும் உள்ளது. அதேபோல் கல்யாணி ரகம் கரிப்பூட்டை, சிவப்பு அழுகல் நோய்களுக்கு எதிர்ப்புத் திறனையும் மற்றும் வறட்சியையும், நீர் தேங்கி இருக்கும் தண்மையையும் தாங்கும் சக்தியைக் கொண்டுள்ளது.

விதை நேர்த்தி

கரும்புக்கான விதை நேர்த்தியானது கரும்பில் உள்ள காய்ந்த இலைகளை அகற்றுவதன் மூலம் மொட்டுக்கு ஏற்படக்கூடிய சேதத்தைத் தவிர்க்கும் வகையில் தொடங்குகிறது. மொட்டு கரும்புகள் பொதுவாக 30 முதல் 40 செமீ நீளமுள்ள மூன்று மொட்டு கட்டை கரும்புகளாக வெட்டப்படுகின்றன. இந்த கரும்பு விதைகளை 0.1% கார்பன்டாசிம் (1 கிராம்/லிட்டர் தண்ணீர்) அல்லது அரேடன் மற்றும் அகலோல் 4 கிராம்/லிட்டர் தண்ணீரில் 0.5 சதவீத கரைசலில் 10 நிமிடம் நடுவதற்கு முன் நனைத்து விதை நேர்த்தி செய்யப்படுகிறது. கரும்பு விதைகளைச் சூடான காற்றிலும் (50ºC 2-2.5 மணி நேரம்) சிகிச்சை செய்யலாம். விதை மூலம் பரவும் நோய்க்கிருமிகளைத் தடுக்க கரும்புக்கான மிகவும் பயனுள்ள விதை நேர்த்திகளில் இதுவும் ஒன்றாகும்.

கரும்புக்கான நில தயாரிப்பு முறை

கரும்பு வயல்கள் 50-60 செ.மீ ஆழத்தில் டிராக்டருடன் இணைக்கப்பட்ட வட்டு கலப்பை அல்லது வெற்றிக் கலப்பை மூலம் 2 முதல் 4 முறை உழவு செய்து தயார் செய்யப்படுகின்றன. பின்னர் நிலத்தை 12-15 செ.மீ ஆழத்தில் வெட்டி, டிஸ்க் ஹாரோ அல்லது ரோட்டாவேட்டர் மூலம் கட்டிகளை நசுக்க வேண்டும். இதன் மூலம் கட்டியாக உள்ள மண்ணை தூளாக்கி மென்மையாக்குகிறது. இதன் பிறகு நிலத்தை சமன் செய்ய வேண்டும். ஏனென்றால் சீரான பயிர் நிலையைப் பெறுவதற்கு, நீர் பாசன இயக்கம் எளிதானதாக இருக்க வேண்டும். அதற்கு நிலத்தைச் சமன் செய்வது மிகவும் முக்கியம். டிராக்டரில் இயக்கப்படும் லெவலரைப் பயன்படுத்தி லெவலிங் செய்யலாம்.

கடைசி உழவுக்கு முன் எக்டருக்கு 12.5 டன் தொழு உரம் அல்லது 25 டன் மட்கும் உரம் அல்லது எக்டருக்கு 37.5 டன் என்ற அளவில் வடிகட்டி அழுத்திய சேற்றை அடி உரமாக இடவும். பிறகு கரும்பு குப்பை மற்றும் சேற்றை 1:1 என்ற விகிதத்தில் இடவும். இதைத் தொடர்ந்து ராக் பாஸ்பேட், ஜிப்சம் மற்றும் யூரியா 2:2:1 என்ற விகிதத்தில் பயன்படுத்த வேண்டும். இந்தக் கலவையை மாட்டுச் சாணக் குழம்பு அல்லது தண்ணீருடன் ஈரப்பதத்திற்காக சேர்த்துக் கொள்ளலாம். பாஸ்பரஸ் இல்லாத மண்ணாக இருந்தால் 37.5கிலோ/ஹெக்டருக்கு சூப்பர் பாஸ்பேட்டை மண்வெட்டி மூலம் பாத்திகளில் இடவும். ஜின் (Zn) மற்றும் இரும்பு (Fe) குறைபாடுள்ள மண்ணில் வேலை செய்யும் போது, 37.5 கிலோ ஜிங்க் சல்பேட்/எக்டரையும், 100 கிலோ இரும்பு சல்பேட்டையும் இடவும். விதைக் கரும்புகள் 30 – 45 செ.மீ இடைவெளியில் சால்களில் நடப்படும். 3 அல்லது 4 வது நாளில் நீர்ப்பாசனம் செய்யப்படுகிறது.

கரும்புக்கு உகந்த மண் வகை

மண் நடுநிலை pH அல்லது சற்று காரத்தன்மையுடன் (pH 6.5 முதல் 7.5 வரை) நன்கு வடிகட்டிய களிமண் மண்ணாக இருக்க வேண்டும்.

முடிவுரை

நாட்டின் அனைத்து நீர்ப்பாசன பகுதிகளிலும் கரும்பு பயிரிடலாம். தண்ணீர் தேவையைத் தவிர, அதிக பராமரிப்பு தேவையில்லாத எளிதில் கையாளக்கூடிய பயிர் கரும்பு. இது அதிக லாபம் தரக்கூடியது. சந்தையில் அதிக தேவை உள்ள பயிராகவும் உள்ளது.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

1.பிரபலமாக பயிரிடப்படும் கரும்பு இரகங்களைப் பரிந்துரைக்கவும்? 

மாநிலம்   கரும்பு இரகங்கள் 
தமிழ்நாடு  கோ க 671, கோ 62175, கோ 7704, கோ 6304, கோ க 85061, கோ 8001, கோ 86032, கோ க 92061 
கர்நாடக  கோ 7704,கோ 62175, கோ 8014, கோ 8011, கோ க 671, கோ 86032, கோ 85002 
ஆந்திர பிரதேசம்    கோ 6907, கோ டி 8201, கோ 8013, கோ 62175, கோ 7219, கோ 8014, கோ 8001 
உத்தர பிரதேசம்  யுபி 9530, கோ சி 96436, கோ 09022, கோ 05009 (கரன் 10) 
மகாராஷ்டிரா  கோ 06027, கோ எஸ்என்கே  05104, கோ 0403 (சம்ரிதி) 

 

  1. இந்தியாவில் கரும்பு நடவு செய்வதற்கான முக்கிய பருவங்கள் யாவை?

நான்கு முக்கிய பருவங்கள் உள்ளன; 

  • வசந்த காலம்: ஜனவரி – பிப்ரவரி (12 மாதப் பயிருக்கு – முக்கிய பருவம்) 
  • இலையுதிர் காலம்: செப்டம்பர் – அக்டோபர் (13-15 மாத கரும்பு வகை ஆரம்பகால நொறுக்கு சர்க்கரையை வழங்குகிறது .) 
  • அட்சாலி: ஜூலை – ஆகஸ்ட் (16-18 மாதங்கள், மகசூல் அதிகரிப்பு மற்றும் சர்க்கரை மீட்பு) 
  • பின்பட்டம்: மார்ச் மாதத்திற்கு பிறகு (கால அளவு மற்றும் மகசூல் குறைதல் சார்ந்த வகை கரும்பு.) 
  1. கரும்பு பயிருக்கான உர பரிந்துரையின் அளவு என்ன?

கரும்பு பயிருக்கான உர பரிந்துரை அளவு 121:40:81  கிலோ/ஏக்கர். அதன் வயலில் பயன்படுத்தக்கூடிய அளவு கீழே உள்ள அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ளது. 

ஊட்டச்சத்து  உரங்கள்  அளவு (ஒரு ஏக்கருக்கு) 
இயற்கை/கரிம  தொழு உரம் (அல்லது)  5 டன் 
உரம் (அல்லது)  10 டன் 
ஆலை அழுக்கு  15 டன் 
தழை சத்து  யூரியா (அல்லது)  265 கிலோ 
அம்மோனியம் சல்பேட்  592 கிலோ 
மணி சத்து  சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் (அல்லது)  253 கிலோ 
டபுள்  சூப்பர் பாஸ்பேட்  127 கிலோ  
சாம்பல் சத்து  மியூரேட் ஆஃப் பொட்டாஷ் (அல்லது)   135 கிலோ 
சல்பேட்  ஆஃப் பொட்டாஷ்  162 கிலோ 
ஜிங்க் (ஜிங்க் பற்றாக்குறை மண்) 

 

ஆனந்த் அக்ரோ இன்ஸ்டா சீல் ஜிங்க் 12% நுண்ணூட்டச்சத்து  இலைவழி தெளிப்பு: 0.5 – 1 கிராம்/லிட்டர் 

மண்ணுக்கானப்  பரிந்துரை: 10 கிலோ   

 

இரும்பு (இரும்புச்சத்து குறைபாடுள்ள மண்ணுக்கு)  ஷாம்ராக் இரும்பு செலேட்டட் நுண்ணூட்டச்சத்து 

 

இலைவழி தெளிப்பு: 1 கிராம்/லிட்டர் 

மண்ணுக்கானப்  பரிந்துரை: 10 கிலோ 

 

  1. கரும்பில் விதைக்கரணை நேர்த்தி செய்வது எப்படி?
  • உயிர் உர கரணை நேர்த்தி: அசோஸ்பைரில்லம் (சன் பயோ அசோ – 10 மில்லி/லிட்டர்) கலவையை தயார் செய்து, நடவு செய்வதற்கு முன் விதை கரணைகளை 15 நிமிடம் அதில் ஊற வைக்கவும். 
  • இரசாயன கரணை நேர்த்தி: விதை கரணைகளை 100 லிட்டர் தண்ணீரில், 2 கிராம் பாவிஸ்டின் (கார்பென்டாசிம்), 250 மில்லி சைட்னியன் (மாலத்தியான் 50% இசி) மற்றும் 1 கிலோ யூரியாவுடன் கரைத்து 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். 
  1. கரும்பு விதைக்கரணை என்றால் என்ன? ஒரு சிறந்த விதைக்கரணை எப்படி இருக்கவேண்டும்?

கரும்பு விதைக்  கரணை என்பது கரும்புத் தண்டுகளின் பகுதிகளாகும், அவை பயிர்ப்பெருக்கத்திற்குப் பயன்படுத்தப்படும் மொட்டுகள் ஆகும். 2-3 மொட்டுகள் கொண்ட கரணைகள் நடவு செய்வதற்கு சிறந்ததாகக் கருதப்படுகின்றன. ஏனெனில் அவை அதிகம் அல்லது குறைவான மொட்டுகளைக் கொண்ட கரணைகளை விட சிறந்த முளைப்பு மற்றும் விளைச்சலைத் தருகிறது. 

  1. கரும்பு வயலில் களை முளைப்பதற்கு முன்பு பயன்படுத்தப்படும் களைக்கொல்லி எது?

நடவு செய்த 3வது நாளில் விசைத் தெளிப்பான் அல்லது மின்கலத் தெளிப்பானை  பயன்படுத்தி, அட்ராட்டாஃப் (அட்ராசின் 50 WP) 1 – 2 கிராம்/லிட்டர் அல்லது டாடா மெட்ரி களைக்கொல்லியை (70% WP மெட்ரிபுசின்) ஏக்கருக்கு 100 – 120 கிராம் என்ற அளவில் தெளிக்கவும். 

  1. கரும்புடன் ஊடுபயிராக பயிரிடக்கூடிய சில பயிர்களைப் பரிந்துரைக்கவும்?

கரும்பில் ஊடுபயிராக சணப்பு மற்றும் தக்கைப் பூண்டு போன்ற பசுந்தாள் உரப்பயிர்கள் பயிரிடுவதால், மண்ணில் தழை சத்தை சேர்க்கும். மேலும், கரும்பு மகசூலை  ஏக்கருக்கு 4 – 6 டன் அதிகரிக்கும். 

spot_img

மேலும் அறிய

தொடர்பில் இருக்க

அண்மை தகவல்களைப் பெற எங்களை சப்ஸ்கிரைப் பண்ணுங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்