HomeCropகோதுமை: நடவு மற்றும் பயிர் வளர்ப்பு நடைமுறைகளின் தொகுப்பு

கோதுமை: நடவு மற்றும் பயிர் வளர்ப்பு நடைமுறைகளின் தொகுப்பு

கோதுமை உலகில் பரவலாக நுகரப்படும் பிரதான உணவுப் பயிர் ஆகும். இது ஒரு குளிர்காலப் பருவ பயிர் மற்றும் வெப்பமண்டலத்தில் குளிர்காலத்தில் பயிரிடப்படுகிறது. பரப்பளவு மற்றும் உற்பத்தியின் அடிப்படையில் அனைத்து உணவு தானியங்களுக்கிடையில், இது முதலிடத்தில் உள்ளது. 

இந்தியாவில் மட்டும் இது அரிசிக்கு அடுத்தபடியாக இரண்டாவது முக்கியமான உணவுப் பயிராக  பயிரிடப்படுகிறது.

தாவரவியல் பெயர்: டிரிட்டிகம் ஏஸ்டிவம் எல்.

பொதுவான பெயர்: கெஹு (இந்தி), கனகா (பஞ்சாபி), கோதுமை (தமிழ்), கோதம்பு (மலையாளம்), கோதுமா (தெலுங்கு).

பயிர் பருவம்: ராபி (குளிர்கால) பருவம்

பயிர் வகை: வயல் பயிர்

வகைகள்/கலப்பினங்கள்: DBW 222, PBW-502, HD 3385, HD 3226, DDW 47

மண் தேவைகள்

பொதுவாக, கோதுமை பலதரப்பட்ட மண்ணில் குறிப்பாக நடுத்தர முதல் கனமான மண் வரையிலும் நன்றாக செழித்து வளரும். நன்கு வடிகால் வசதி கொண்ட களிமண், கோதுமை பயிரிடுவதற்கு மிகவும் சிறந்த மண் வகை  ஆகும்.

காலநிலை தேவைகள்

கோதுமை பயிர் வறண்ட மற்றும் குளிர்ந்த சுற்றுச்சூழலில் நன்றாக வளர்கிறது. இதன் விளைவாக, இது ஒரு குளிர்கால பயிர் என்று குறிப்பிடப்படுகிறது. வெப்பநிலை வரம்பு 16 முதல் 21.1˚C மற்றும் 750 முதல் 1000 மி.மீ வரையிலான வருடாந்திர மழைப்பொழிவு கோதுமையின் உகந்த வளர்ச்சிக்கு ஏற்றது.

கோதுமைக்கான பயிர் வளர்ப்பு நடைமுறைகள்

கோதுமைக்கு நிலம் தயாரித்தல்

பயிருக்கு சுத்தமான, நன்கு பொடியாக்கப்பட்ட, நுண்ணிய மற்றும் ஈரமான விதை படுக்கை தேவைப்படுகிறது. வயலில் ஈரப்பதம் குறைவாக இருந்தால், விதைப்பதற்கு முன் நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். பாசன நிலத்தில் பணிபுரியும் போது, முதலில் உழவை மண்ணைத்  திருப்பும் கலப்பை கொண்டும், பின்னர் மூன்று முதல் நான்கு உழவுகளை தொடர்ந்து பலகைகள் மூலமும் உழ வேண்டும்.

மானாவாரிப் பகுதிகளில், பருவமழையின் போது ஒவ்வொரு உற்பத்தி மழைக்குப் பிறகும் டிஸ்க் ஹாரோவிங் செய்யப்பட வேண்டும். மேலும், மண் கட்டியாதல் மற்றும் ஈரப்பதம் இழப்பைத் தடுக்க ஒவ்வொரு ஹாரோயிங்கிற்குப் பிறகு எப்போதும் பலகைகளைப் பயன்படுத்த வேண்டும்.

விதைப்பு நேரம்

கோதுமைக்கான உகந்த விதைப்பு நேரம் நவம்பர் முதல் பதினைந்து நாட்கள் முதல் டிசம்பர் முதல் பதினைந்து நாட்கள் வரை இருக்கும்.

விதை விகிதம் மற்றும் இடைவெளி

பொதுவாக, கோதுமை விதைகளை 22.5 செ.மீ x 10 செ.மீ இடைவெளியில் 100 முதல் 125 கிலோ/எக்டருக்கு என்ற விகிதத்தில் கோடுகளாக விதைக்க உகந்த விதை விகிதம் ஆகும். தாமதமாக விதைக்கும் பருவத்திற்கு ஹெக்டருக்கு 125 முதல் 140 கிலோ விதை விகிதம் பரிந்துரைக்கப்படுகிறது. விதை விதைத்த 20 முதல் 25 நாட்களுக்குப் பிறகு, சிறந்த தாவர எண்ணிக்கையை பராமரிக்க தின்னிங் என்ற செயல்முறையை பின்பற்ற வேண்டும்.

விதை நேர்த்தி

1 கிலோ கோதுமை விதைகளுக்கு 0.3 மில்லி என்ற விகிதத்தில் கான்ஃபிடர் சூப்பர் (இமிடாகுளோபிரிட் 30.5% SL) விதை நேர்த்தி செய்வதன் மூலம்  குருத்து ஈ தாக்குதலை கட்டுப்படுத்தலாம். கோதுமையின் உதிரி கரிப்பூட்டை நோயை பரவாமல் தடுக்க 6 மணிநேரத்திற்கு 3 கிராம்/1கிலோ விதைக்கு என்ற விகிதம்  “விட்டவாக்ஸ் பவர்” என்ற பூஞ்சைக்கொல்லியுடன் (கார்பாக்சின் 37 5% + திரம் 37.5% டிஎஸ்) விதை நேர்த்தி செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.

நீர்ப்பாசன அட்டவணை

ஒரு கோதுமை பயிருக்கு 300 முதல் 400 மி.மீ பாசன நீர் தேவைப்படும். நெருக்கடியான காலங்களில், கோதுமை பயிர் நீர் அழுத்தத்தால் மிகவும் பாதிக்கப்படும். கோதுமை பயிரில் நீர்ப்பாசனம் செய்வதற்கான மிக முக்கியமான நிலைகள் வேர் பிடிக்கும் நிலை, துர் பிடித்தல், பூக்கும் நிலை மற்றும் மணி பிடிக்கும் நிலை ஆகியவை ஆகும்.

உரங்கள் அட்டவணை

தேவையற்ற உரங்கள் வீணாவதைத் தவிர்க்கவும் மற்றும் லாபத்தை அதிகரிக்கவும், மண் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் உரங்களை வழங்க வேண்டும். நீர்ப்பாசன சூழலில் ஹெக்டேருக்கு 120:60:40 கிலோ என்ற விகிதத்தில் N, P மற்றும் K பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. தழைச்சத்தினில் பாதியை அடித்தள உரமாகவும், மீதமுள்ள பாதியை விதைத்த 30 முதல் 45 நாட்களில் முதல் நீர்ப்பாசனத்தின் போது இடவும்.

இடை சாகுபடி நடைமுறைகள் 

விதை விதைத்த 30 மற்றும் 45 நாட்களில் இரண்டு முறை கை களையெடுப்பு சிறப்பாகக் களைகளைக் கட்டுப்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டால், ஸ்டோம்ப் எக்ஸ்ட்ரா (பெண்டிமெத்தலின் 38.7% CS) மருந்தை ஏக்கருக்கு 600 மில்லி என்ற அளவிலும் மற்றும் களை முளைத்த பிறகு தெளிக்கும் “டோட்டல்” (சல்போசல்ஃப்யூரான் 75% + மெட்சல்பியூரான் 5% WG) என்ற களைக்கொல்லியை  ஏக்கருக்கு 16 கிராம் என்ற அளவில், விதை விதைத்த 30 முதல் 35 நாட்களுக்குப் பிறகு, களைகள் மீது தெளிக்கவும். களைகளை திறம்பட கட்டுப்படுத்த இம்முறை பரிந்துரைக்கப்படுகிறது.

பயிர் பாதுகாப்பு 

பூச்சி பாதுகாப்பு

பூச்சி அறிவியல் பெயர் அறிகுறிகள் மேலாண்மை
கோதுமை அசுவினி மேக்ரோசிபும் மிஸ்காந்தி * நிம்ஃப்கள் மற்றும் முதிர்ந்த அசுவினி

பூச்சிகள் கோதுமையிலிருந்து சாற்றை உறிஞ்சுகின்றன.

* தளிர்கள் உலர்ந்து போதல் மற்றும் வாடுதல் அறிகுறிகளைக் காட்டும்.

* கான்ஃபிடர் (இமிடாகுளோபிரிட் 17.8% SL) @  0.75 மில்லி/லிட்டர்  தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.

* போலிஸ் (ஃபிப்ரோனில் 40%+ இமிடாகுளோபிரிட் 40% WG) @ 0.2-0.6 கிராம்/லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.

படைப்புழு  மைதிம்னா செப்பரேட்டா * இலைகளின்  திசுக்களை முதலில் இளம் லார்வாக்கள் ஒரு பக்கத்திலிருந்து உட்கொள்ளும்.

* லார்வாக்களின்  இரண்டாவது அல்லது மூன்றாவது கட்டத்தில் இலைகளின் விளிம்பிலிருந்து உள்நோக்கி உட்கொள்ள தொடங்கி இலைகளில் துளைகளை ஏற்படுத்தும்.

* ப்ரோக்ளெய்ம் (எமாமெக்டின் பென்சோயேட் 5% SG) @ 80 கிராம் / ஏக்கருக்கு பயன்படுத்தவும்.

* ப்லித்தோரா (நோவலியுரான் 5.25% + எமாமெக்டின் பென்சோயேட் 0.9% SC) @ 1.5 மில்லி / லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.

குஜியா அந்துப்பூச்சி டானிமேகஸ் இண்டிகஸ் * வயது முதிர்ந்த  அந்துப்பூச்சி மட்டுமே சேதத்தை ஏற்படுத்துகின்றன.

* பயிர்களில் ஆரம்ப வளர்ச்சி காலக்கட்டத்தில் நாற்றுகளை வெட்டி  துளிர்களை உள்கின்றன.

* ப்ரோக்ளெய்ம் (எமாமெக்டின் பென்சோயேட் 5% SG) @ 80 கிராம்/ஏக்கருக்கு பயன்படுத்தவும்.

* ப்லித்தோரா (நோவலியுரான் 5.25% + எமாமெக்டின் பென்சோயேட் 0.9% SC) @ 1.5 மில்லி / லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.

கரையான்கள் ஓடோன்டெர்மஸ் ஒபிசிஸ் * கரையான் புற்றுக்களை உருவாக்குகின்றன.

* பயிர்கள் முற்றிலுமாக காய்ந்து விடும் மற்றும் குருத்தைப் பிடித்து இழுக்கும் போது எளிதாக கையோடு வந்துவிடும்.

* மியோகி 400 மில்லி /ஏக்கரில் (குளோரிபைரிஃபோஸ் 50% + சைபர்மெத்ரின் 5% EC) பயன்படுத்தவும்.
குருத்து ஈ அதெரிகோனா சொக்கட்டா * “குருத்து காய்தல்”

* புதர் அமைப்பு போன்ற தோற்றம்.

* கான்பிடார் சூப்பர் (இமிடாகுளோபிரிட் 30.5% SL) பூச்சிக்கொல்லியை @  0.3 மில்லி/ லிட்டர் தண்ணீரில் கலந்து பயன்படுத்தவும்.
இளஞ்சிவப்பு துளைப்பான் செசாமியா இன்ஃபரன்ஸ் * தாவரத்தின் ஆரம்ப வளர்ச்சி கட்டத்தில்குருத்து காய்தல்” தென்பட்டு, பின்பு பழுப்பு நிறமாக மாறி, சுருண்டு காய்ந்துவிடும்.

* “வெண்கதிர்” போன்ற அமைப்பு பூக்கும் கட்டத்தில் தோன்றும்.

* ஃபுளுபென்டமைடு 0.7% GR) @ 5 கிலோ/ ஏக்கர் வீதம் பயன்படுத்தவும்.

* ஃபெர்டெரா (குளோரான்ட்ரானிலிப்ரோல் 0.4% GR) @ 4 கிலோ/ ஏக்கர் என்ற விதம் பயன்படுத்தவும். 

நோய் பாதுகாப்பு

நோய் காரண உயிரினம் அறிகுறிகள் மேலாண்மை
கருப்பு அல்லது தண்டு துரு பக்சினியா கிராமினிஸ் ட்ரிட்டிசி * தண்டுகளில் துரு போன்ற கொப்புளங்கள் தோன்றும்.

* பின்னர் இந்த கொப்புளங்கள் கருமையாகவும் கருப்பாகவும் மாறும்.

* அமிஸ்ட்டர் டாப் (அசோக்ஸிஸ்ட்ரோபின் 18.2%+ டிஃபெனோகோனசோல் 11.4% SC) @ 1 மில்லி/லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் பயன்படுத்தவும்.

* அவஎன்சர் குளோ (அசோக்ஸிஸ்ட்ரோபின் 8.3%+ மேன்கோசெப் 66.7% WG) ஏக்கருக்கு 600 கிராம் என்ற அளவில் பயன்படுத்தவும்.

மஞ்சள் துரு பக்சினியா ஸ்ட்ரைஃபார்மிஸ் * மஞ்சள் நிற யூரிடோஸ்போர்ஸ் கொப்புளங்கள் இலையில் இடையிலுள்ள பகுதிகளை சேதப்படுத்துகிறது.

* இது ஒரு கோடு போன்ற தோற்றத்தை அளிக்கிறது.

* பென்மைன் (கார்பென்டாசிம் 50% DF) @  2 கிராம்/லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.

* நேட்டிவோ  (டெபுகனோசோல் 50% + ட்ரைஃபிளாக்சிஸ்டோருபின் 25% WG) @ 0.6 கிராம்/லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.

பழுப்பு அல்லது ஆரஞ்சு துரு பக்சினியா ரீகாண்டிட் * ஆரஞ்சு நிற கொப்புளங்கள் இலையில் தோன்றும்.

* அவை ஒழுங்கற்ற முறையில் பரவலாக காணப்படுகின்றன.

* கஸ்டோடியாவை (அசோக்ஸிஸ்ட்ரோபின் 11% + டெபுகோனசோல் 18.3% SC) @ 1.5 மில்லி/லிட்டர் தண்ணீருக்குப் பயன்படுத்தவும்.
கர்னல் பன்ட் நியோவோசியா இண்டிகா * பாதிக்கப்பட்ட செடிகளில் அழுகிய துர்நாற்றம் வீசும்.

* பாதிக்கப்பட்ட தானியங்கள் பொதுவாக கருப்பு சூட்டி தூள் போன்று  மூடப்பட்டிருக்கும்.

* லூனா எக்ஸ்பீரியன்ஸ் (ஃப்ளூபிராம் 17.7%+ டெபுகோனசோல் 17.7% SC) @ 1 மில்லி/லிட்டர்  தண்ணீர் என்ற விகிதத்தில் பயன்படுத்தவும்.
கோதுமை உதிரி கரிப்பூட்டை நோய் உஸ்டிலாகோ நியூடா ட்ரிடிசி * வெளிப்பட்ட கதிர்களில்  கருப்பு சூட்டி பூஞ்சானின் வித்திகள் தோன்றும். 

* கோதுமை தானியங்கள் மலட்டுத்தன்மை கொண்டதாக மாறும்.

* கோனிகா (கசுகாமைசின் 5% + காப்பர் ஆக்ஸி குளோரைடு 45% WP) @ 2 கிராம்/ லிட்டர் தண்ணீரில் கலந்து பயன்படுத்தவும்.

அறுவடை மற்றும் கதிரடித்தல்

பயிர் முற்றிலும் மஞ்சள் நிறமாக மாறி, வயலில் காய்ந்தவுடன் அரிவாள்களைப் பயன்படுத்தி அறுவடை செய்ய வேண்டும். மேலும், தானியங்கள் கதிரடிப்பதன் மூலம் பயிரின் கதிரிலிருந்து பிரிக்கப்படுகின்றன. அதைத் தொடர்ந்து காற்றில் தூற்றுதல் மற்றும் பேக்கிங் (packing) செய்யப்படுகிறது.

மகசூல்

கோதுமையின் மகசூல் சராசரியாக ஹெக்டருக்கு 3 முதல் 4 டன் வரை இருக்கும்.

spot_img

மேலும் அறிய

தொடர்பில் இருக்க

அண்மை தகவல்களைப் பெற எங்களை சப்ஸ்கிரைப் பண்ணுங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்