HomeCropசாமந்திப்பூ சாகுபடி: வெற்றிகரமான மலர்ச்சிக்கான முழுமையான வழிகாட்டி

சாமந்திப்பூ சாகுபடி: வெற்றிகரமான மலர்ச்சிக்கான முழுமையான வழிகாட்டி

சாமந்தி மிகவும் பிரபலமான, வருடாந்திர, சுலபமாக பூக்கும் மற்றும் குறுகிய கால பூக்கும் பயிர்களில் ஒன்றாகும். இந்த மலர்கள் அவற்றின் துடிப்பான ஆரஞ்சு மற்றும் மஞ்சள் பூக்களுக்காக பிரபலமாக அறியப்படுகின்றன. இவை தோட்டங்கள் மற்றும் நிலப்பரப்புகளுக்கு ஒரு மகிழ்ச்சியான தோற்றத்தை அளிக்கின்றது. இந்தியாவில், தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா ஆகியவை சாமந்திப்பூ வளர்க்கும் முக்கிய மாநிலங்களாகும். பல்வேறு மத மற்றும் கலாச்சார விழாக்களில் பயன்படுத்துவதற்காகவும், இவை பரவலாக வளர்க்கப்படுகின்றன. இவற்றின் அலங்கார மதிப்புக்காகவும் கூடுதலாக, சாமந்தி பூக்கள் அவற்றின் மருத்துவ மற்றும் சமையல் பயன்பாடுகளுக்காகவும் அறியப்படுகின்றன. பொதுவாக பயிரிடப்படும் சாமந்தி இனங்கள் ஆப்பிரிக்க சாமந்தி (உயரமான ரகம்) மற்றும் பிரெஞ்சு சாமந்தி (குள்ள ரகம்). இந்தியாவில் உள்ள பல விவசாயிகளுக்கு சாமந்திப்பூ சாகுபடி ஒரு முக்கிய வருமான, ஆதாரமாக உள்ளது.

இந்தியாவில் சாமந்தி பூவின் உள்ளூர் அல்லது வட்டாரப் பெயர்கள்

கெண்டா (இந்தி), பந்தி புவ்வு (தெலுங்கு), சாமந்தி (தமிழ்), செண்டு ஹூவு (கன்னடம்), ஜமந்தி (மலையாளம்), கைண்டா (பெங்காலி), ஜெண்டு (மராத்தி)

காலநிலை மற்றும் மண்

சாமந்திப்பூவின் அதிக வளர்ச்சி மற்றும் பூக்கும் திறனுக்கு ஒரு மிதமான காலநிலை தேவைப்படுகிறது. அதன் வளர்ச்சிக்கான உகந்த வெப்பநிலை வரம்பு 18-20°C. அதிக வெப்பநிலை (>35 °C) தாவர வளர்ச்சியைத் தடுக்கலாம். இது பூக்களின் அளவு மற்றும் எண்ணிக்கை குறைவதற்கு வழிவகுக்கும். குளிர்காலத்தில் கடுமையான உறைபனி காரணமாக தாவரங்களும், பூக்களும் சேதமடையலாம்.

சாமந்திப்பூ பல்வேறு மண்ணின் நிலைமைகளுக்கு ஏற்றது என்பதால், பரந்த அளவிலான மண்ணில் வளர்க்கலாம். இருப்பினும், 7-7.5 pH நன்கு வடிகால் வசதி கொண்ட களிமண் சிறந்ததாகக் கருதப்படுகிறது. அமில மற்றும் கார மண்ணில் சாமந்தி சாகுபடியைத் தவிர்க்கவும்.

வகைகள்

வகைகள் பிக்ஹாட்டில் கிடைக்கும் விதைகள்
ஆப்பிரிக்க சாமந்திப்பூ ஆப்பிரிக்க சாமந்தி இரட்டை ஆரஞ்சு விதைகள், NS ஆப்பிரிக்க சாமந்தி விதைகள், NS ஆப்பிரிக்க சாமந்தி F1 வெண்ணிலா வெள்ளை, NS ஆப்பிரிக்க சாமந்தி கம்பீரமான மஞ்சள் விதைகள், ஆப்பிரிக்க இரட்டை மஞ்சள் சாமந்தி விதைகள், NS ஆப்பிரிக்க சாமந்தி F1 இன்கா கலவை.
பிரெஞ்சு சாமந்திப்பூ பிரெஞ்சு சாமந்தி, சர்பன் கலப்பின பிரெஞ்சு சாமந்தி (SFR), IRIS கலப்பின மலர் பிரெஞ்சு சாமந்தி கருஞ்சிவப்பு விதைகள்.

மேலும் சாமந்தி விதைகள் வேண்டும் எனில் இங்கே கிளிக் செய்யவும்

விதைப்பு நேரம்

சாமந்திப்பூவினை ஆண்டு முழுவதும் வளர்க்கலாம்.

நடவு பருவம் விதைப்பு நேரம் நடவு செய்யும் நேரம்  பூக்கும் நேரம் கருத்துக்கள்
கோடை ஜனவரி-

பிப்ரவரி

பிப்ரவரி-மார்ச் மே நடுப்பகுதி-ஜூலை அதிக வெப்பநிலை காரணமாக பூக்களின் அளவு சிறியதாக இருக்கும். அதிக தேவை ஏற்படும் பொழுது நல்ல வருமானம் கிடைக்கும்.
மழைக்காலம் ஜூன் நடுப்பகுதி ஜூலை நடுப்பகுதி செப்டம்பர் நடுப்பகுதி – நவம்பர்  சந்தையில் தேவை அதிகமாக இருப்பதால், பயிர்களுக்கு நல்ல விலை கிடைக்கிறது.
குளிர் காலம் செப்டம்பர் நடுப்பகுதி அக்டோபர் நடுப்பகுதி ஜனவரி நடுப்பகுதி அதிக அளவில் பூக்கும், சிறந்த தரமான பூக்கள், குறைந்த நிலத்தில் அதிக மகசூல், ஆனால் குறைந்த சந்தை விலை.

விதை விகிதம்

ஏக்கருக்கு 500-800 கிராம்.

நாற்றங்கால் தயாரிப்பு

சாமந்தி பொதுவாக விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. விதைப்பதற்கு முன், குளிர்ந்த வெல்லக் கரைசலில் 10 மில்லி அசோஸ்பைரில்லம் கலந்து விதை நேர்த்தி செய்யவும். வசதியான நீளம், 75 செ.மீ அகலம், 10-20 செ.மீ உயரம் கொண்ட நாற்றங்கால் பாத்திகளைத் தயார் செய்து, நன்கு மட்கிய தொழு உரத்தைப் போதுமான அளவு இட்டு, 5 செ.மீ இடைவெளி விட்டு வரிசையாக விதைகளை விதைக்க வேண்டும். விதைப்பு ஆழம் 2-3 செ.மீ. விதைகளை தொழு உரம் அல்லது மெல்லிய மணலால் மூடி, பின்னர் ரோஜா வாளி மூலம் லேசான நீர்ப்பாசனம் கொடுக்கவும். விதைத்த 4-5 நாட்களுக்குள் விதைகள் முளைக்கும். விதைத்த ஒரு மாதத்திற்குப் பிறகு நாற்றுகள் நடவுக்கு தயாராகிவிடும்.

பிரதான களம் தயாரித்தல் மற்றும் நடவு செய்தல்

வயலை நன்றாக உழவு செய்து, ஒரு ஏக்கர் வயலுக்கு 10 டன் தொழு உரம் அளிக்க வேண்டும். விதைப்பதற்கு முன் வயலில் நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். நாற்றுகளை விதைத்த ஒரு மாதத்திற்குப் பிறகு அல்லது 4-5 இலைகள் இருக்கும் போது நடவு செய்ய பயன்படுத்தலாம். ஆப்பிரிக்க சாமந்திப்பூ வகைக்கு வரிசைக்கு இடையே 45 செ.மீ. மற்றும் வரிசைக்குள் 45 செ.மீ. இடைவெளியும், பிரெஞ்சு சாமந்திப்பூ வகைக்கு வரிசைக்கு இடையே 30 செ.மீ. வரிசைக்குள் 30 செ.மீ. என்ற அளவில் இடைவெளியுடன் முகடுகளின் ஒரு பக்கத்தில் பிரதான வயலில் நாற்றுகளை நடவு செய்யவும்.

(குறிப்பு: ஒப்பீட்டளவில் வெப்பநிலை குறைவாக இருக்கும் போது மாலையில் இடமாற்றம் செய்யலாம்)

உர அட்டவணை

சாமந்திப்பூவிற்கான உரத்தின் பொதுவான NPK அளவு 36:36:30 கிலோ/ ஏக்கருக்கு .

ஊட்டச்சத்து உரம் மருந்தளவு (ஒரு ஏக்கருக்கு) பயன்படுத்தும் நேரம்
கரிம உரம் மட்கிய தொழு உரம் 10 டன் கடைசி உழவின் போது
காத்யாயனி செயல்படுத்தப்பட்ட ஹ்யூமிக் அமிலம் (ஊட்டச்சத்துக்கள் மற்றும் நுண்ணிய தனிமங்கள் உறிஞ்சுவதை மேம்படுத்துகிறது) ஃபோலியார்: 

1 கிராம்/லிட்டர் தண்ணீர்

முதல் தெளிப்பு: விதைத்த 15 நாட்களுக்குப் பிறகு, 10-12 நாட்கள் இடைவெளியில் பூக்கும் வரை தொடர்ந்து தெளிக்கவும்.
தழைச்சத்து-N யூரியா  39 கிலோ அடியுரம் 
39 கிலோ மேலும் (நடவு செய்த 45 நாட்களுக்குப் பிறகு)
மணிச்சத்து-P சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் (SSP) 225 கிலோ அடியுரம் 
K- சாம்பல் சத்து முயூரேட் ஆஃப் பொட்டாஷ் (MOP) 50 கிலோ அடியுரம் 
தேவையான ஊட்டச்சத்துக்கள் (முதன்மை இரண்டாம் நிலை மற்றும் நுண்ணூட்ட சத்துக்கள்) மல்டிபிளக்ஸ் ஃபிளவர் பூஸ்டர் (பூக்களின் அளவையும், எண்ணிக்கையும் அதிகரிக்கிறது) ஃபோலியார்: 

4 கிராம்/லிட்டர் தண்ணீர்

முதல் தெளிப்பு: நடவு செய்த 25-30 நாட்களுக்குப் பிறகு.

20 நாட்கள் இடைவெளியில் இரண்டு முதல் மூன்று முறை தெளிக்க வேண்டும்.

கடல்பாசி சாறு பயோபிரைம்ஸ் ப்ரைம் 7525 (இலை வளர்ச்சியை ஊக்குவிக்கிறது மற்றும் பூப்பிடிக்கும் திறன் அதிகரிக்கும்) ஃபோலியார்: 

2 மில்லி/லிட்டர் தண்ணீர்

முதல் தெளிப்பு: முதல் முறை பூப்பிடிக்கும் தருணத்தில்.

15-20 நாட்கள் இடைவெளியில் இரண்டு முதல் மூன்று முறை தெளிக்க வேண்டும்.

நீர்ப்பாசனம்

நடவு செய்த உடனேயே நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். தாவர வளர்ச்சியின் போது நீர் பற்றாக்குறையைத் தவிர்க்கவும். ஏனெனில் இது தாவர வளர்ச்சியைத் தடுக்கலாம் மற்றும் அதன் விளைவாக பூக்கும் திறன் குறையும். நீர்ப்பாசனத்தின் இடைவெளிக்காலம் முக்கியமாக மண்வகை மற்றும் பருவத்தைப் பொறுத்தது. 

குளிர்காலத்தில், 8-10 நாட்கள் இடைவெளியில் நீர்ப்பாசனம் செய்யலாம். கோடை காலத்தில், 4-5 நாட்கள் இடைவெளியில் நீர்ப்பாசனம் செய்யலாம். தண்ணீர் தேங்குவதைத் தவிர்க்க வேண்டும். நீர் அழுத்தத்தைத் தவிர்க்க மொட்டு உருவானது முதல் அறுவடைக் கட்டம் வரை ஈரப்பதத்தை தொடர்ந்து வழங்க வேண்டும்.

பயிர் வளர்ப்பு நடைமுறைகளுக்கு இடையேயான நடைமுறைகள்

  1. மண் அணைத்தல்

நடவு செய்த 3-4 வாரங்களுக்குப் பிறகு, தாவரத்தின் உறுதித்தன்மையை மேம்படுத்தவும், சிறந்த வடிகால் வசதியை மேம்படுத்தவும், களைகளின் வளர்ச்சியைத் தடுக்கவும் பொதுவாக மண் அணைத்தல் செய்ய வேண்டும்.

  1. களை மேலாண்மை

செடிகள் அதிக அளவில் வளர வயலை களை இல்லாத நிலையில் பராமரிக்க வேண்டும். தேவைக்கேற்ப களைகளை எடுக்க வேண்டும். பொதுவாக, வளர்ச்சிக் காலத்தில் 4-6 கைமுறை களையெடுப்பது அவசியம்.

  1. கிள்ளுதல்

இது நுனி மொட்டுகளை அகற்றுவதை உள்ளடக்கியது. இது பக்கவாட்டு கிளைகளைத் தூண்டுவதற்கு மற்றும் அதிக பூக்களுடன் கூடிய புதர் மற்றும் கச்சிதமான தாவரத்தை உருவாக்குகிறது. இது பூப்பதை தாமதப்படுத்துகிறது. ஆனால் அதிக எண்ணிக்கையிலான பூக்களை உற்பத்தி செய்கிறது. 

நடவு செய்த 40 நாட்களுக்குப் பிறகு கிள்ளுதல் பரிந்துரைக்கப்படுகிறது. அதை கட்டைவிரல் மற்றும் ஆள்காட்டி விரல் இடையில் கிள்ளுவதன் மூலமோ அல்லது கூர்மையான கத்தி அல்லது கத்தரிக்கோலால் அகற்றுவதன் மூலமோ நுனி மொட்டுகளை அகற்றலாம்.

  1. ஸ்டேக்கிங் அல்லது முட்டுக் கொடுத்தல்

பூக்களின் எடை அல்லது பலத்த காற்றின் காரணமாக உயரமான சாமந்தி தாவரங்கள் வீழ்வதைத் தடுக்க அவற்றிற்கு முட்டுக் கொடுக்க வழங்குவதை உள்ளடக்கியது. ஆபிரிக்க வகை சாமந்தியின் உயரமான செடிகளை மூங்கில் குச்சிகளால் முட்டுக் கொடுத்தல் வேண்டும்.

தாவர பாதுகாப்பு நடைமுறைகள்

சாமந்தி பூவைத் தாக்கும் பூச்சிகள்

முக்கிய பூச்சிகள் சேதத்தின் அறிகுறிகள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்
மாவுப்பூச்சி
  • இளம் தளிர்கள், தண்டு மற்றும் இலைகளில் வெள்ளையாக பருத்தி போன்ற பூச்சிகள் காணப்படும்.
  • தேன் போன்ற ஒட்டும் திரவச் சுரப்பி காணப்படும், இதன் மூலம் தாவரங்களின் சூட்டி அச்சு பூஞ்சான் வளர்ச்சி உருவாகும்.
  • சுருங்கிய இலைகள்.
  • தளிர்களின் நுனிப்பகுதிகளின் பின்னடைவு வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது.
பாதிக்கப்பட்ட தாவர பாகங்களை அகற்றவும்.

ஒரு லிட்டர் தண்ணீருக்கு 25 கிராம் மீன் எண்ணெய் ரோசின் சோப்பை தெளிக்கவும்.

கேபி மீலி ரேஸ் உயிர் பூச்சிக்கொல்லி மருந்தை 1-2 மில்லி/லிட்டர் என்ற அளவில் தெளிக்கவும்.

இரசாயன கட்டுப்பாடு:

அக்டாரா பூச்சிக்கொல்லி மருந்தை 0.5 கிராம்/லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.

சிவந்தோ பேயர் பூச்சிக்கொல்லியை 2 மில்லி/ லிட்டர் தண்ணீரில்

கலந்து தெளிக்கவும்.

அசுவினி 
  • அவை சாற்றை உறிஞ்சி இலைகளை சுருட்டி உருக்குலைக்கிறது.
  • பாதிக்கப்பட்ட இலைகள் மஞ்சள் நிறமாக மாறி வாடிவிடும்.
  • தேன் சுரப்பு காரணமாக கருப்பு சூட்டி பூஞ்சை வளர்ச்சி காணப்படும்.
  • இலைகளின் அடிப்பகுதியில் அல்லது தண்டுகளில் சிறிய, கொத்தாகப் பூச்சிகள் (அசுவினி) இருப்பது தெரியும்.
பயிர் சுழற்சி முறையை பின்பற்றவும்.

வயல் சுகாதாரத்தை பராமரிக்கவும்

மக்காச்சோளம், பீன்ஸ் அல்லது பூண்டுடன் ஊடுபயிர் பயிரிடவும்.

ஒரு ஏக்கருக்கு 4-6 டபாஸ் மஞ்சள் ஒட்டும் பொறிகளை வைக்கவும்.

0.3% வேப்ப எண்ணெயை 2.5-3 மில்லி/லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.

சாம்பல் மற்றும் மஞ்சள் தூள் சம விகிதத்தில் கலந்து செடியின் மீது தெளிக்கலாம்.

இரசாயன கட்டுப்பாடு:

மார்ஷல் பூச்சிக்கொல்லி மருந்தை 2.5 மில்லி/லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.

ஸ்டார்தேன் பூச்சிக்கொல்லி மருந்தை 1.7-2.5 கிராம்/லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.

சிவப்பு சிலந்திப் பூச்சி
  • அவை இலைகளிலிருந்து சாற்றை உறிஞ்சி, சிறிய, சிவப்பு அல்லது பழுப்பு நிற புள்ளிகளை இலை மேற்பரப்பில் உருவாக்குகிறது.
  • இலைகள் மற்றும் பூக்களை உள்ளடக்கிய செடியில் நுண்ணிய வலைகூண்டுகள் இருக்கும்.
  • பிந்தைய நிலைகளில் பாதிக்கப்பட்ட இலைகள் உடையக்கூடிய மற்றும் சிவப்பு மற்றும் பழுப்பு (வெண்கலம்) நிறமாக மாறும்.
  • இலைகள் முன்கூட்டியே உதிர்ந்து விடும் மற்றும் வளர்ச்சி குன்றி காணப்படும்.
தாவரத்திலிருந்து பூச்சிகளை அகற்ற உயர் அழுத்த நீர் தெளிப்பைப் பயன்படுத்தவும்.

வேப்ப எண்ணெய் சாற்றை 1-2 மில்லி/லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து தெளிக்கவும்.

ராயல் கிளியர் மைட் 2 மில்லி/ லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.

தண்ணீரில் நீர்த்த பசுவின் சிறுநீரை கலந்து தெளிக்கவும் (1:20).

இரசாயன கட்டுப்பாடு:

ஓபரான் பூச்சிக்கொல்லி மருந்தை 0.3 மில்லி/லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்  

அல்லது

மெய்டன் பூச்சிக்கொல்லி மருந்தை 1 மில்லி/லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.

வண்டுகள் மற்றும் அந்துப்

பூச்சிகள்

  • அவை இளம் இலைகள் மற்றும் மென்மையான தளிர்களை உண்கின்றன.
  • இலைகளில் துளைகளை உருவாக்கி அவற்றை  மென்று கந்தலான, சீரற்ற தோற்றம் அளிக்கும்.
  • செடியின் வளர்ச்சி குன்றியிருக்கும்.
வேப்ப எண்ணெய் சாற்றை 1-1.5 மில்லி/லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.

மெட்டாரியம் அனிசோப்லியா 

10 மில்லி/லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.

இரசாயன கட்டுப்பாடு:

கராத்தே பூச்சிக்கொல்லியை 

1.5-1.7 மில்லி/லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.

டானிடோல் பூச்சிக்கொல்லி மருந்தை 1.5-2 மில்லி/லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.

இலை தத்துப்பூச்சி 
  • இவை தாவரங்களின் பசுமையான பாகங்களில் சேதத்தை ஏற்படுத்துகின்றன, குறிப்பாக மழைக்காலத்தில்.
  • பாதிக்கப்பட்ட இலைகள் மஞ்சள் அல்லது பழுப்பு நிறமாக மாறும்.
  • பாதிக்கப்பட்ட இலைகள் உருள் மற்றும் சுருண்டு தளிர்கள் வாடிவிடும்.
  • பிரெஞ்ச் வகை சாமந்திப்பூ அதிக பாதிப்புக்குள்ளாகும்
ஒரு ஏக்கருக்கு 10 பாரிக்ஸ் மேஜிக் ஸ்டிக்கர் குரோமடிக்  மஞ்சள் ஒட்டும் பொறிப் பயன்படுத்தவும்.

நிம்பெசிடின் 6 மில்லி/லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.

இரசாயன கட்டுப்பாடு:

டாடாமிடா SL பூச்சிக்கொல்லியை 1-2 மில்லி/

லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.

போலீஸ் பூச்சிக்கொல்லியை 0.2-0.3 கிராம்/லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.

கீஃபுன் பூச்சிக்கொல்லி மருந்தை 2  மில்லி/லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.

இலைப்பேன் 
  • பாதிக்கப்பட்ட இலைகளின் சிதைவுண்டு காணப்படும்.
  • இலைகளில் வெள்ளி புள்ளிகள் வடுக்கள் காணப்படும்.
  • மலர் இதழ்களில் தழும்புகளை வெளிப்படுத்தி, அவற்றின் அழகியலைக் குறைக்கும். 
  • இவை வளரும் மொட்டுகளை உண்கின்றன, இதன் விளைவாக சிதைந்த பூக்கள் உருவாகின்றன.
1 ஏக்கர் வயலுக்கு 6-8 மஞ்சள் ஒட்டும் பொறிகளை பயன்படுத்தவும்.

கே பீ த்ரிப்ஸ் ரேஸ் பூச்சிக்கொல்லி மருந்தை 1-2 மில்லி/லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.

0.15% வேப்ப எண்ணெயை 2-2.5 மில்லி/லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.

கற்றாழையுடன் வேப்பம் பிண்ணாக்கு கலந்து அரைக்கவும். அவற்றை 10 நாட்கள் தண்ணீரில் ஊறவைத்த பின்னர் வடிகட்டியைப் பயன்படுத்தி வடித்து தெளிப்பதற்குப் பயன்படுத்தவும்.

இரசாயன கட்டுப்பாடு:

பெனேவியா பூச்சிக்கொல்லி மருந்தை 1.7-2 மில்லி/லிட்டர்  தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.

அனந்த் பூச்சிக்கொல்லியை 0.3-0.5 கிராம்/லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.

இலை சுரங்கப் பூச்சிகள்
  • இலைகளில் வெள்ளை அல்லது வெள்ளிப் பாதைகள் காணப்படும்.
  • இலையில் சிறிய பழுப்பு நிற புள்ளிகள் தோன்றும்.
  • பாதிக்கப்பட்ட இலைகள் சுருங்கி அல்லது சிதைந்துவிடும்.
  • இலைகள் முன்கூட்டியே உதிர்ந்து விடும்.
ஒரு ஏக்கருக்கு 4 – 6 டபஸ் மஞ்சள் ஒட்டும் பொறிகளை பயன்படுத்தவும்.

டெர்ரா மயிட்  உயிர் பூச்சிக்கொல்லி 3-7 மில்லி/லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.

ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 மில்லி பியூவேரியா பாசியானா/ப்ராங்நியார்டி என்ற மருந்தை தெளிக்கவும்.

இரசாயன கட்டுப்பாடு:

எக்காலக்ஸ் பூச்சிக்கொல்லி மருந்தை 2 மில்லி/லிட்டர்  தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.

சிவந்தோ பேயர் பூச்சிக்கொல்லி மருந்தை 2 மில்லி/லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்

சாமந்தி செடியை பாதிக்கும் நோய்கள்

முக்கிய நோய்கள் சேதத்தின் அறிகுறிகள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்
நாற்றழுகல் நோய்
  • நாற்று நிலையின் போது அதிகமாகக் காணப்படும்.
  • இளம் நாற்றுகளில் நெக்ரோடிக் வளையங்கள் அல்லது புள்ளிகள் தோன்றும்.
  • கடுமையான சந்தர்ப்பங்களில், பாதிக்கப்பட்ட நாற்றுகள் மண்ணிலிருந்து வெளிவருவதற்கு முன்பே சரிந்து இறக்கக்கூடும்.
1 கிலோ விதைகளை 10 கிராம் சூடோமோனாஸ் ஃப்ளோரசன்ஸ்  10 மில்லி/லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து விதை நேர்த்தி செய்யவும்.

நாற்றங்கால் படுக்கைகளை 10 கிராம்/லிட்டர் தண்ணீரில் எகோடெர்மா உயிர் பூஞ்சைக் கொல்லியை மண்ணில் ஊற்றவும்.

இரசாயன கட்டுப்பாடு:

மேட்கோ பூஞ்சைக் கொல்லியை 4 கிராம்/லிட்டர் தண்ணீர் கலந்து மண்ணில் ஊற்றவும்.

ஹைஃபீல்ட் ரிடோமெட் 35 பூஞ்சைக் கொல்லியை 1.5 கிராம்/லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.

சாம்பல் நோய் 
  • இலைகளின் தண்டுகள் மற்றும் பூக்களில் வெள்ளை அல்லது சாம்பல் தூள் வளர்ச்சியின் தோற்றம் காணப்படும்.
  • பாதிக்கப்பட்ட இலைகள் மஞ்சள் நிறமாக மாறி, முன்கூட்டியே விழும்.
  • குறைந்த பூக்கும் திறனுடன் காணப்படும்.
கே பீ ஃபங்கோ ரேஸை 1-2 மில்லி/ லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து தெளிக்கவும்.

2 கிலோ மஞ்சள் தூள் மற்றும் 8 கிலோ மர சாம்பல் கலவையை இலைகளின் மேல் தூவவும்.

இரசாயன கட்டுப்பாடு:

அமிஸ்டார் டாப் பூஞ்சைக் கொல்லியை 1 மில்லி/லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.

ரோகோ பூஞ்சைக் கொல்லியை 0.5-1 கிராம்/லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.

சுல்தாஃப் பூஞ்சைக் கொல்லியை 2 கிராம்/லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.

வாடல் மற்றும்

தண்டு அழுகல்

  • பாதிக்கப்பட்ட தாவரங்களின் இலைகள் தளர்வாகவும், துளிர்விடாமலும், மண் ஈரமாக இருந்தாலும் வாடியதாகவும் தோன்றும்.
  • பாதிக்கப்பட்ட தண்டுகள் மென்மையான மெலிதான பழுப்பு நிறமாக நிறமாற்றம் அடைந்த பின்னர் சிதைவு ஏற்படும்.
  • செடியின் வளர்ச்சி குன்றி காணப்படும்.
சூடோமோனாஸ் ஃப்ளோரசன்ஸ் 10 மில்லி/லிட்டர் தண்ணீரில் கலந்து மண்ணில் ஊற்றவும்.

100 கிலோ தொழுவுரத்தில்  2 கிலோ அன்ஷுல் ட்ரைகோமாக்ஸ் கலந்து 1 ஏக்கர் நிலத்தில் பரப்பவும். 

இரசாயன கட்டுப்பாடு:

ரிடோமில் கோல்டை 1-1.5 கிராம்/லிட்டர் தண்ணீரில் கலந்து  மண்ணை நனைக்கவும்.

கழுத்து அழுகல்
  • அடர் பழுப்பு அல்லது கருப்பு புண்கள் தண்டின் அடிப்பகுதியில் தோன்றும்.
  • தாவரத்தின் காலர் பகுதி அழுகுவதால் மென்மையாகவும், அழுக்காகவும் மாறும்.
  • பின்னர், தாவரத்திற்கு மரணம் ஏற்படும்.
தாவரங்களுக்கு அதிக நீர்ப்பாசனம் செய்வதைத் தவிர்க்கவும்.

பயிர் சுழற்சியைப் பின்பற்றவும்.

நாற்றங்கால் படுக்கைகளை 10 கிராம்/லிட்டர் தண்ணீர் என்ற அளவில் எகோடெர்மா உயிரி பூஞ்சைக் கொல்லியைக் கொண்டு நனைக்கவும்.

டிரைக்கோடெர்மா விரிடி 6 மில்லி/கிலோ என்ற அளவில் கலந்து விதை நேர்த்தி செய்யவும்.

இரசாயன கட்டுப்பாடு:

2.5 கிராம்/கிலோ விதைக்கு சிக்ஸர் பூஞ்சைக் கொல்லியைக் கொண்டு விதை நேர்த்தி செய்யவும்.

தனுஸ்டின் பூஞ்சைக் கொல்லியை 0.5-0.7 கிராம் / லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.

பிளிடாக்ஸ் பூஞ்சைக் கொல்லியை 3 கிராம்/லிட்டர்  தண்ணீரில் கலந்து மண்ணை நனைக்கவும்.

இலைப்புள்ளி  மற்றும் அழுகல் நோய் 
  • பாதிக்கப்பட்ட இலைகளில் சிறிய பழுப்பு நிற நெக்ரோடிக் புள்ளிகள் உருவாகின்றன.
  • பிந்தைய நிலைகளில், இந்த புள்ளிகள் ஒன்றிணைந்து, இலைகள் மஞ்சள் நிறமாக மாறக்கூடும் மற்றும் முன்கூட்டியே உதிர்ந்து விடும்.
  • முடிவில் மோசமான தாவர வளர்ச்சியை ஏற்படுத்துகிறது.
சூடோமோனாஸ் ஃப்ளோரசன்ஸ் மற்றும் பேசிலஸ் சப்டிலிஸ் 

5 கிராம்/லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து தெளிக்கவும்.

இரசாயன கட்டுப்பாடு:

கான்டாஃப் பிளஸ் பூஞ்சைக் கொல்லியை 2 மில்லி/லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து தெளிக்கவும்.

இண்டோஃபில் M-45 பூஞ்சைக் கொல்லியை 0.8-1 கிராம்/லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.

பூ மொட்டு அழுகல்
  • இளம் பூ மொட்டுகளில் நோய் தொற்று ஏற்படுகிறது. 
  • பாதிக்கப்பட்ட பூ மொட்டுகள் சுருங்கி அடர் பழுப்பு நிறமாக மாறி பின்னர் காய்ந்துவிடும்.
  • நோய்க்கிருமி இலைகளைத் தோன்றுவதன் மூலமும் அழுகலை ஏற்படுத்தலாம். இதன் விளைவாக பழைய இலைகளின் ஓரங்களில் பழுப்பு நிற நெக்ரோடிக் புள்ளிகள் தோன்றும்.
இரசாயன கட்டுப்பாடு:

டைத்தேன் M-45 பூஞ்சைக் கொல்லியை 2-2.5 கிராம்/லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.

ப்ளூ காப்பர் பூஞ்சைக் கொல்லியை 2.5 கிராம்/லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.

போட்ரிடிஸ் அழுகல் / சாம்பல் அச்சு நோய் 
  • பூக்கள் நீரில் நனைந்து அழுகியது போல் தோன்றும் மற்றும் நோய் தீவிரமடையும் போது பழுப்பு அல்லது சாம்பல் நிறமாக மாறும்.
  • பூக்கள் மற்றும் இலைகளில் சாம்பல் நிறத்தில் தெளிவற்ற அச்சு வளர்ச்சி தோன்றும்.
  • தண்டுகள் அழுகி, தாவரங்களின் சரிவுக்கு வழிவகுக்கும்.
வயல் சுகாதாரத்தை பராமரிக்கவும்.

ஆம்பிலோமைசஸ் 5-10 மில்லி/ லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.

இரசாயன கட்டுப்பாடு:

ஆனந்த் அக்ரோ நானோ ஷீல்டு 2 மில்லி/லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.

லத்திஃபா பூஞ்சைக் கொல்லியை 0.5 மில்லி/லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.

 

அறுவடை

சாமந்தி பூக்கள் அவற்றின் முழு அளவை அடைந்ததும், அறுவடைக்கு தயாராக இருக்கும். இது பொதுவாக நடவு செய்த நாளிலிருந்து சுமார் 2.5 மாதங்களுக்குப் பிறகு அறுவடை செய்ய தயாராகிறது. முதல் அறுவடைக்குப் பிறகு, செடி மேலும் 2-2.5 மாதங்களுக்கு பூக்கள் பூக்கும் திறன் கொண்டது. மகசூலை மேம்படுத்த 3 நாட்களுக்கு ஒருமுறை பூக்களை பறிக்க வேண்டும். நாளின் குளிர்ச்சியான நேரத்தில், அதாவது காலை அல்லது மாலையில் அறுவடை செய்ய வேண்டும். பூக்களை தண்டு பகுதியுடன் சேர்த்து அறுவடை செய்ய வேண்டும். அறுவடைக்குப் பிறகு சாமந்தி பூக்களின் ஆயுளை நீடிக்க, பூக்களை அறுவடை செய்வதற்கு முன் வயலுக்கு நீர்ப்பாசனம் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் அதிகப்படியான நீர்ப்பாசனம் தடுக்கப்பட வேண்டும். ஏனெனில், இது பூக்கள் கனமாகவும், மென்மையாகவும் மாற்றிவிடும். இதனால் அவை சேதத்திற்கு ஆளாகின்றன.

உள்ளூர் சந்தை போக்குவரத்துக்காக, புதிய சாமந்தி பூக்களை மூங்கில் கூடைகள் அல்லது சாக்கு பைகளில் அடைக்கப்பட வேண்டும்.

மகசூல்

பூக்களின் மகசூல் பருவகாலம், மண் வளம் மற்றும் பயிரிடப்படும் வகையைப் பொறுத்தது.

ஆப்பிரிக்க சாமந்தி: 3-4 டன்/ஏக்கர்

பிரெஞ்சு சாமந்தி: 4.5-7 டன்/ஏக்கர்

spot_img

மேலும் அறிய

தொடர்பில் இருக்க

அண்மை தகவல்களைப் பெற எங்களை சப்ஸ்கிரைப் பண்ணுங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்