HomeCropதக்காளி பயிரில் ஒரு ஊடுருவும் பூச்சியான டியூட்டா அப்சல்யூட்டா-வை எதிர்த்து போராடுதல்

தக்காளி பயிரில் ஒரு ஊடுருவும் பூச்சியான டியூட்டா அப்சல்யூட்டா-வை எதிர்த்து போராடுதல்

டியூட்டா அப்சல்யூட்டா, பொதுவாக அமெரிக்கன் பின்வார்ம் (அமெரிக்கன் ஊசி துளைப்பான்) என்று அழைக்கப்படுகிறது. இது தக்காளி செடிகளைத் தாக்கும்  குறிப்பிடத்தக்க பூச்சியாகும். இதன் வாழ்க்கைச் சுழற்சி முழுவதும் தக்காளி பயிர்களுக்கு அதிக சேதம் விளைவிக்கும் தன்மை காரணமாக இது பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. தக்காளிப் பயிர்களில் டியூட்டா அப்சல்யூட்டா நோய்த்தாக்கத்தின் தாக்கம் கடுமையாக இருக்கும். பெரும்பாலும் கணிசமான பயிர் இழப்புகளை விளைவிக்கும். இந்த பூச்சியின் தாக்குதலால் 60 முதல் 100% வரை மகசூல் இழப்பு ஏற்படும். உயிரியல் கட்டுப்பாட்டு முகவர்கள், கலாச்சார நடைமுறைகள் மற்றும் நியாயமான பூச்சிக்கொல்லி பயன்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை உத்திகள் டியூட்டா அப்சல்யூட்டா தொற்றுகளை நிர்வகிப்பதற்கும், பயிர் இழப்புகளைக் குறைப்பதற்கும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

அமெரிக்க ஊசி துளைப்பானால் பாதிக்கப்படும் புரவலன் தாவரங்கள்

டியூட்டா அப்சல்யூட்டா முதன்மையாக தக்காளி செடிகளை (முக்கிய புரவலன்) பாதிக்கிறது. இருப்பினும், உருளைக்கிழங்கு, கத்தரி, புகையிலை மற்றும் மிளகு போன்ற சோலனேசி குடும்பத்தைச் சேர்ந்த மற்ற தாவரங்களையும் தாக்குகிறது.

அது எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்துகிறது?

  • டியூட்டா அப்சல்யூட்டா-வின் லார்வாக்கள் இலை திசுக்களை உண்கின்றன மற்றும் இலை அடுக்குகளை சுரண்டுகின்றன.
  • அவை இலைகளில் ஒழுங்கற்ற, நெக்ரோடிக் பிளாட்ச் – வகை சுரங்கங்களால் வகைப்படுத்தப்படுகின்றன.
  • இது பழங்களைச் சுற்றி, சிறிய ஊசி முனை அளவிலான துளைகளை உருவாக்குகிறது. எனவே இது ‘பின்வார்ம் – ஊசித் துளைப்பான்’ என்று குறிப்பிடப்படுகிறது.
  • கடுமையான தொற்று, ஒளிச்சேர்க்கை செயல்பாடு குறைவதற்கு வழிவகுக்கும். இது தாவரங்களை மிகவும் பலவீனமாக்கும் மற்றும் பாதிக்கப்பட்ட தாவர பாகங்களை உலர்த்தும்.
  • பழங்களின் மேற்பரப்பில் லார்வாக்கள் நுழைந்த இடத்தில், துளையிட்ட அடையாளங்களாக, அசாதாரண பழ வடிவம் மற்றும் லார்வாக்கள் வெளியேறும் துளைகளைக் காட்டுகிறது.
  • இந்த துளைகள் பழ அழுகலை ஏற்படுத்தும் நோய்க்கிருமி தொற்றுக்கான இரண்டாம் ஆதாரமாக செயல்படலாம்.
  • சுரங்கங்கள் அல்லது சேதமடைந்த பழங்களில் லார்வாக்கள், அவற்றின் கழிவு பொருட்களுடன் (மலத்துடன்) இருப்பதைக் காணலாம்.

தடுப்பு நடவடிக்கைகள்

  • டியூட்டா அப்சல்யூட்டா-வின் வாழ்க்கைச் சுழற்சியை சீர்குலைக்க, தக்காளி பயிர்களை பருப்பு வகைகள், முட்டைக்கோஸ், காலிஃபிளவர் அல்லது இலைக் காய்கறிகள் போன்ற சோலனேசியஸ் அல்லாத பயிர்களுடன் சுழற்சி முறையில் பயிரிடலாம்.
  • தாக்கப்பட்ட இலைகள் மற்றும் பழங்களை அகற்றி அழிக்கவும்.
  • கோடை மாதங்களில் வயலை உழுது பியூபாவை வெளிக்கொணர்ந்து அழிக்கவும்.
  • ஒரு ஏக்கருக்கு 8 – 10 டெல்டா இன கவர்ச்சி பொறி/தண்ணீர் பொறியுடன் தபாஸ் பின்வார்ம் பெரோமோன் லூரை அமைக்கவும்.
  • பூச்சிகளின் எண்ணிக்கையை கண்காணிக்க ஏக்கருக்கு 4-6 மஞ்சள் ஒட்டும் பொறிகளை நிறுவவும்.
  • ஒவ்வொரு 10-12 நாட்கள் இடைவெளியில் 5 மில்லி/லிட்டர் தண்ணீரில் வேப்ப எண்ணெயை கலந்து தெளிக்கவும்.
  • மாற்று புரவலன் பயிர்களுக்கு அருகில் தக்காளி பயிர்களை வளர்ப்பதை தவிர்க்கவும்.

இரசாயன மேலாண்மை

பொருளின் பெயர் தொழில்நுட்ப உள்ளடக்கம் மருந்தளவு
பெனேவியா பூச்சிக்கொல்லி சயண்ட்ரானிலிப்ரோல் 10.26% OD 2 மில்லி / லிட்டர் தண்ணீர்
டகுமி பூச்சிக்கொல்லி ஃப்ளூபென்டியாமைடு 20% WG 0.5 கிராம் / லிட்டர் தண்ணீர்
லான்சர் கோல்டு பூச்சிக்கொல்லி அசிபேட் 50% + இமிடாக்ளோபிரிட் 1.8% SP 2 கிராம் / லிட்டர் தண்ணீர்
சிவந்தோ பேயர் பூச்சிக்கொல்லி ப்ளூபைரடிஃப்யூரோன் 17.09% SL 2 மில்லி / லிட்டர் தண்ணீர்
எக்காலக்ஸ் பூச்சிக்கொல்லி குயினால்பாஸ் 25% EC 2 மில்லி / லிட்டர் தண்ணீர்
சின்ஜெண்டா வோலியம் டார்கோ குளோரான்ட்ரானிலிப்ரோல் 4.3% + அபாமெக்டின் 1.7% SC 1 மில்லி / லிட்டர் தண்ணீர்
கீஃபுன் பூச்சிக்கொல்லி டோல்ஃபென்பைரைட் 15% EC 2 மில்லி / லிட்டர் தண்ணீர்

(குறிப்பு: இந்த இரசாயனங்களை நுணுக்கமாகப் பயன்படுத்தவும் மற்றும் பூச்சிகள் மீண்டும் எழுவதைத் தவிர்க்க பரிந்துரைக்கப்பட்ட அளவை மட்டுமே பின்பற்றவும். சரியான நேரத்தைப் பயன்படுத்த தயாரிப்பு லேபிளைப் பார்க்கவும்.)

spot_img

மேலும் அறிய

தொடர்பில் இருக்க

அண்மை தகவல்களைப் பெற எங்களை சப்ஸ்கிரைப் பண்ணுங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்