HomeCropதாவர நிலையில் தக்காளி பயிரைத் தாக்கும் நோய்கள்

தாவர நிலையில் தக்காளி பயிரைத் தாக்கும் நோய்கள்

தாவர நிலையில், தக்காளி செடிகள் இலைகள் மற்றும் தண்டுகளை வளரும் போது, அவை பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றன. விடாமுயற்சியுடன் கவனித்துக்கொண்டாலும், உங்கள் தக்காளி பயிர்களை பாதிக்கும் இந்த நோய்களின் அபாயத்தை முற்றிலுமாக உங்களால் அகற்ற முடியாது. 

இந்த கட்டுரையில், தாவர நிலையின் போது தக்காளி பயிர்களை பாதிக்கக்கூடிய சில நோய்களைப் பற்றி விவாதிப்போம் மற்றும் அவற்றைக் கட்டுப்படுத்த சிறந்த முறைகளை உங்களுக்கு வழங்கவிருக்கிறோம். எனவே, ஆரோக்கியமான அறுவடையை உறுதிப்படுத்த, உங்கள் தக்காளி செடிகளை இந்த நோய்களிலிருந்து பாதுகாக்கவும்!

தாவர நிலையின் போது உங்கள் தக்காளி செடிகளை பாதிக்கும் பொதுவான நோய்கள்

நாற்றழுகல் அல்லது கழுத்து அழுகல்

நோய்க்காரணி: பித்தியம் அஃப்னிடெர்மாட்டம்

அறிகுறிகள்

  • வெளிப்படும் முன் அறிகுறி

நாற்றுகள் மண்ணிலிருந்து வெளிவருவதற்கு முன்பே அவை முழுவதுமாக சிதைந்துவிடும் (குறிப்பாக ஈரமான நிலையில்).

  • வெளிப்படுவதற்கு பிந்தைய அறிகுறி: 

நாற்றுகள் தோன்றியவுடன், கழுத்துப்பகுதி அல்லது தரை மட்டத்தைச் சுற்றியுள்ள பாதிக்கப்பட்ட திசுக்கள் மென்மையாகவும், நீரில் நனைந்ததாகவும் காணப்படும். இது நாற்றுகளின் இறுதியில், அதன் இறப்புக்கு வழிவகுக்கும்.

கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்

  • விதைகளை விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன் 2 மில்லி/கிலோ என்ற விகிதத்தில் ‘மெட்டாலாக்சில்- M’ உடன் விதை நேர்த்தி செய்யவும்.
  • பிளிட்டாக்ஸ் (காப்பர் ஆக்ஸி குளோரைடு 50% WP) ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2-3 கிராம் (அல்லது)
  • ஆலியட் (ஃபோசெடைல் AI 80% WP)  ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2.5 கிராம் என்ற விகிதத்தில் கலந்து மண்ணில் ஊற்றவும்.

முன்பருவக் கருகல்

நோய்க்காரணி: ஆல்டர்நேரியா சொலானி

அறிகுறிகள்

  • இளம் இலைகளில் சிறிய கருப்பு புண்கள் தோன்றும். இவை அதிக ஈரப்பதம் மற்றும் சூடான வெப்பநிலையின் போது நெக்ரோடிக் திசுக்களாக உருவாகலாம்.
  • பாதிக்கப்பட்ட இலைகள் இறுதியில் உதிர்ந்துவிடும். மேலும், தண்டு மெலிந்து, செடி பலவீனமாகும்.

கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்

அமிஸ்டர் டாப் (அசோக்ஸிஸ்ட்ரோபின் 18.2%+ டைபெனோகோனசோல் 11.4% SC) ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1-1.25 மில்லி அல்லது மெலோடி டியோ (இப்ரோவேலிகார்ப் 5.5% + பிரோபினெப் 66.75% WP) ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் என்ற அளவில் தெளிக்கவும்.

இலை சுருட்டு நோய்

நோய்க்காரணி: தக்காளி இலை சுருட்டு வைரஸ்

திசையன்: வெள்ளை ஈ (பெமிசியா டபாகி)

அறிகுறிகள்

  • இளம் இலைகள் மஞ்சள் நிறமாற்றம் அடைந்து சுருண்டு காணப்படும். இது கீழ்நோக்கி சுருண்டு மற்றும் சுருக்கத்துடன் காணப்படும்.
  • பாதிக்கப்பட்ட தாவரங்களின் இலைகள் கடுமையாக வளர்ச்சி குன்றியதை போல் வெளிப்படுத்துகின்றன.
  • முதிர்ச்சி அடைந்த இலைகள் கடினமாகவும், உடையக்கூடியதாகவும் மாறும். மேலும் பாதிக்கப்பட்ட தாவரங்கள் வெளிர் நிறம் மாறி புதர் போன்று  கிளைகள் தோன்றமளிக்கும்.

கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்

  • ஜியோலைஃப் நோ வைரஸ் (ஆர்கானிக் வைரிஸைடு) ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி என்ற அளவில் தெளிக்கவும். (அல்லது)
  • ஈக்கோ ஒட்டும் பொறி போன்ற ஒட்டும் பொறிகளை வைத்து, ஒரு ஏக்கருக்கு 8-10 பொறிகள் வீதம் நோயைப் பரப்பக்கூடிய வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்தவும்.

உங்கள் தக்காளி செடிகளைப் பொதுவான நாற்று நிலையில் நோய்களுக்கு எதிராக பாதுகாப்பது, ஆரோக்கியமான அறுவடைக்கு மிகவும் முக்கியமானது. நாற்றழுகல் அல்லது கழுத்து அழுகல், முன்பருவக் கருகல் மற்றும் இலை சுருட்டு வைரஸ் போன்ற நோய்கள் உங்கள் பயிர்களுக்கு கணிசமான சேதத்தை ஏற்படுத்தும். பரிந்துரைக்கப்பட்ட பூஞ்சைக் கொல்லிகள் அல்லது வைரிசைடுகளைக் கொண்டு, இந்த நோய்களை நீங்கள் திறம்படக் கட்டுப்படுத்தலாம். 

உங்கள் செடிகளை உன்னிப்பாகக் கண்காணித்து, நோயின் முதல் அறிகுறிகளிலேயே உடனடி நடவடிக்கை எடுக்க நினைவில் கொள்ளுங்கள். சரியான கவனிப்பு மற்றும் கவனத்துடன், பயிர் செய்யப்படும் தக்காளி செழித்த, ஏராளமான அறுவடையை தந்து, உங்களுக்கு வெகுமதியை அளிக்கும்.

spot_img

Read More

Stay in Touch

Subscribe to receive latest updates from us.

Related Articles