இந்தியா 2021 ஆம் ஆண்டில் மட்டும் ரூ.2,302.16 கோடி மதிப்பிலான 263,075.67 மெட்ரிக் டன் திராட்சையை ஏற்றுமதி செய்துள்ளது. நெதர்லாந்து, வங்க தேசம், ரஷ்யா, யு.கே., ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகியவை முக்கிய ஏற்றுமதி நாடுகளாகும். இந்தியா முக்கியமாகச் சாப்பிடுவதற்காக மட்டுமே திராட்சையை உற்பத்தி செய்கிறது. ஆனாலும் உலகில் திராட்சை உற்பத்தியில் இந்தியா ஏழாவது இடத்தில் உள்ளது. இந்த திராட்சை மது உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுவதில்லை. இந்தியாவில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா, மற்றும் மிசோரம் ஆகியவை திராட்சை பயிரிடும் முக்கிய மாநிலங்களாகும். திராட்சை பொதுவாக வெப்பமான மற்றும் வறண்ட காலநிலையில் வளரும்.
சிரம நிலை: கடினம்
விதைகளின் தேர்வு
திராட்சைகள் மொத்தம் நான்கு வகைகளாக உள்ளன. அவை வெள்ளை, சிவப்பு நிற திராட்சை மற்றும் அதே நிறங்களில் உள்ள விதை மற்றும் விதையில்லா திராட்சை வகைகள். பெங்களூர் ப்ளூ, குலாபி, பியூட்டி சீட்லெஸ் மற்றும் ஷரத் சீட்லெஸ், அனாப்-இ-ஷாஹி, தில்குஷ், பெர்லெட், பூசா சீட்லெஸ், தாம்சன் சீட்லெஸ், டாஸ்-ஏ-கணேஷ், சோனகா, மஸ்கட், பச்சத்ராக்ஷா, அர்கா ஷியாம், அர்கா காஞ்சன், அர்கா ஹான்ஸ், மாணிக் சமன், சோனகா, ஃபிளேம் சீட்லெஸ் மற்றும் மாணிக் சமன் போன்ற பிரபலமான திராட்சை வகைகளில் சில.
திராட்சை விதை நேர்த்தி செய்தல்
திராட்சை பொதுவாக மொட்டு வெட்டுதல் (clipping) மற்றும் திடத்தன்மை கொண்ட தண்டு வெட்டுதல் (Hardwood cutting) மூலம் பரப்பப்படுகிறது. தண்டை வெட்டி அதை திரம் என்னும் பூஞ்சை கொல்லியுடன் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 3 கிராம் கலந்து நேர்த்தி செய்து, பின்னர் அதை ஒரு பாலிதீன் பையில் நட்டு அதனை நிழலில் வைக்க வேண்டும்.
திராட்சைக்கான நில தயாரிப்பு முறை
திராட்சை பொதுவாகக் கடின மர துண்டுகளை வெட்டுவதன் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றது. நிலத்தை மூன்று நான்கு முறை உழுது டிராக்டர் மூலம் சமன் செய்ய வேண்டும். அனாப்-இ-ஷாஹி மற்றும் பெங்களூர் ப்ளூ போன்ற பரந்த வகைகளுக்கு 1.2 மீ X 1.2 மீ இடைவெளியில் குழிகள் தோண்டப்படுகிறது. அதுபோக தாம்சன் சீட்லெஸ், பெர்லெட் மற்றும் பியூட்டி சீட்லெஸ் போன்ற சிறிய வகைகளுக்கு 90 X 90 செ.மீ இடைவெளி குழிகள் போதுமானது. அடி உரமாக 5-10 டன் தொழு உரம் பயன்படுத்தலாம் அல்லது தொழு உரம் 5-10 கிலோ, யூரியா 100 கிராம், 80 கிராம் பாஸ்பரஸ் மற்றும் 300 கிராம் பொட்டாசியம் ஆகியவை ஒவ்வொரு கொடி/செடிக்கும் பயன்படுத்தினால் நல்லது.
திராட்சைக்கு ஏற்ற மண் வகை
திராட்சை வறண்ட நிலையில் மிதமான காலநிலையில் வளரும். எனவே நீர் தேங்குவதைத் தவிர்க்க மண்ணில் நல்ல வடிகால் இருக்க வேண்டும். திராட்சைக்கு நல்ல வடிகால் வசதி கொண்ட வளமான களிமண் மண் தேவைப்படுகிறது. அதுபோக அந்த வறண்ட மண்ணின் கார அமிலத்தன்மை 6.5-7.0 ஆக இருக்க வேண்டும்.
முடிவுரை
திராட்சைக் கொடி வளர்ந்த பிறகுச் சரியான முறையில் கவாத்து செய்ய வேண்டும். திராட்சை பயிரிடக் கடினமான பயிராகும். இருப்பினும், அதற்கான தேவையும் அதிகமாக இருக்கிறது. இந்தியாவில் திராட்சை உற்பத்தியும் அதிகரித்து வருகிறது. எதிர்காலத்தில் திராட்சை அதிக லாபம் ஈட்டி தரக்கூடிய பயிராக இருக்கும்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
- பிரபலமாக பயிரிடப்படும் திராட்சை இரகங்களைப் பரிந்துரைக்கவும்?
மாநிலம் | திராட்சை இரகங்கள் |
மகாராஷ்டிரா, வட கர்நாடகா, தெலுங்கானா | தாம்சன் சீட்லெஸ்/ விதையில்லாதது, சோனகா, மாணிக் சமன், ஷரத் சீட்லெஸ்/விதையில்லாதது, க்ரிம்சன் சீட்லெஸ்/விதையில்லாதது. |
தெற்கு உட்புற கர்நாடகா | தாம்சன் சீட்லெஸ்/விதையில்லாதது , சோனகா, ஃபிளேம் சீட்லெஸ்/விதையில்லாதது , ஷரத் சீட்லெஸ்/விதையில்லாதது , க்ரிம்சன் சீட்லெஸ் /விதையில்லாதது, ரெட் க்ளோப். |
தமிழ்நாடு | தாம்சன் சீட்லெஸ்/விதையில்லாதது , குலாபி, பெங்களூர் ப்ளூ் |
வட இந்தியா | ஃபிளேம் சீட்லெஸ்/விதையில்லாதது, பெர்லெட், பியூட்டி சீட்லெஸ்/விதையில்லாதது. |
- திராட்சையை எவ்வாறு பயிர்ப்பெருக்க செய்வது?
திராட்சையை முதிர்ந்த தண்டுத்துண்டுகள் மூலம் பயிர்பெருக்கம் செய்யலாம்.
- திராட்சை சாகுபடிக்கு உகந்த வளர்ச்சி நிலை என்ன?
திராட்சை வறண்ட மிதமான காலநிலையில் வளரும். எனவே, நீர் தேங்காமல் இருக்க மண்ணில் நல்ல வடிகால் வசதி இருக்க வேண்டும். இதற்கு நல்ல வடிகால் வசதியுள்ள வளமான இருபொறை மண் தேவைப்படுகிறது. வருட மழைப்பொழிவு 900 மி.மீ க்கு மிகாமல் இருக்கும் இடங்கள் இதன் சாகுபடிக்கு ஏற்றது.
- திராட்சைக்கான உரம் பரிந்துரை அளவு என்ன?
சீட்லெஸ்/ விதையில்லாதது திராட்சைக்கான உரம் பரிந்துரை அளவு 121:121:242 கிலோ/ஏக்கர். அதன் வணிக பயன்பாட்டிற்கான அளவு கீழே உள்ள அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ளது..
ஊட்டச்சத்து | உரங்கள் | அளவு (ஒரு ஏக்கருக்கு) |
இயற்கை/கரிம | தொழு உரம்/உரம் | 50 கிலோ/கொடி |
எலும்பு உரம் | 3 கிலோ/கொடி | |
ஆமணக்கு கட்டி | 3 கிலோ/கொடி | |
தழை சத்து | யூரியா | 263 கிலோ |
அம்மோனியம் சல்பேட் | 583 கிலோ | |
மணி சத்து | சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் (அல்லது) | 759 கிலோ |
டபுள் சூப்பர் பாஸ்பேட் | 380 கிலோ | |
சாம்பல் சத்து | மியூரேட் ஆஃப் பொட்டாஷ் (அல்லது) | 405 கிலோ |
சல்பேட் ஆஃப் பொட்டாஷ் | 486 கிலோ |
- பழங்களின் மொட்டுகளை துளிர்க்கச்செய்ய திராட்சையில் பயன்படுத்தப்படும் தாவர வளர்ச்சி உக்கி எது?
பின்வரும் பரிந்துரையில் விதை முளைத்த 30 – 35 நாட்களுக்குப் பிறகு லிஹோசின் வளர்ச்சி ஊக்கியை (குளோர்மெக்வாட் குளோரைடு) தெளிக்கவும்.
செடிகளுக்கு தெளிப்பு | நேரம் | அளவு (மில்லி/ஏக்கர்) |
1st தெளிப்பு | ஏப்ரலில் கவாத்து செய்தல் | 405 |
2nd தெளிப்பு | ஏப்ரலில் கவாத்து செய்தல் | 809 |
3rd தெளிப்பு | அக்டோபரில் கவாத்து செய்தல் | 202 |
(குறிப்பு – கவாத்து என்பது பக்க கிளைகளை வெட்டி ஒழுங்குபடுத்தும் முறையாகும்)
- திராட்சையின் பல்வேறு பயிர்ப்பெருக்க முறைகள் யாவை?
திராட்சை பயிர்ப்பெருக்கதில் முதிர்ந்த தண்டுத்துண்டுகள், பச்சை தண்டுத்துண்டுகள், ஒட்டுக்கட்டுதல், பதியம் உருவாக்குதல் மற்றும் விதைகள் (வணிக ரீதியாக பயன்படுத்தப்படவில்லை) ஆகியவை அடங்கும்.
(ஓட்டுக்கட்டுதல் – இது ஒரு தோட்டக்கலை நுட்பமாகும், இதன் மூலம் தாவரங்களின் திசுக்கள் ஒன்றிணைந்து அவற்றின் வளர்ச்சியைத் தொடரும். இணைந்த தாவரத்தின் மேல் பகுதியை ‘சியோன்’ என்றும், கீழ் பகுதியை ‘ஆணிவேர்/ரூட்ஸ்டாக்’ என்றும் அழைக்கப்படுகிறது.)
- திராட்சை சாகுபடிக்கு ஏற்ற பருவம் எது?
பொதுவாக மழைக்காலத்தில் திராட்சை நடுவு செய்வது தவிர்க்கப்படும். வட இந்தியாவில் பிப்ரவரி – மார்ச், தீபகற்ப இந்தியாவில் நவம்பர் – ஜனவரி, தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் டிசம்பர் – ஜனவரியில் நடவு செய்ய சிறந்த நேரம்.