HomeCropநீரியல் கடுகு சாகுபடி 

நீரியல் கடுகு சாகுபடி 

கடுகு “குருசிஃபெரே” குடும்பத்தைச் சேர்ந்தது மற்றும் இது இந்திய சமையலில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. கடுகு உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. கடுகு விதை காய்கறிகள் மற்றும் உணவு தயாரிப்பில் மசாலா பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் கடுகு புண்ணாக்கு கால்நடை தீவனமாக பயன்படுகிறது.

நீரியல் சாகுபடி முறை

மண் இல்லாமல் வளரும் கடுகு மிகவும் ஆரோக்கியமானது, ஏனெனில் அதற்கு பூச்சிக்கொல்லிகள் தேவையில்லை, மேலும் தீவிர கண்காணிப்பு அதிக மகசூலை அளிக்கிறது. 

நீரியல் சாகுபடி அமைப்பு என்பது மண்ணின்றி மகசூல் மற்றும் பசுமையை அதிகரிப்பதற்கான ஒரு முயற்சியாகும். மண்ணில்லா விவசாயம் என்பது, பயிர்கள் மண்ணுக்குப் பதிலாக ஊட்டச்சத்து கரைசலில் வளர்கிறது மற்றும் ஊட்டச்சத்துக்களால் செறிவூட்டப்படுகிறது.

நீரியல் முறையில் தாவரங்களை வளர்ப்பதற்கு செயற்கை அல்லது நேரடி சூரிய ஒளி ஏற்றது.

இந்த முறையில் கடுகை வளர்பதற்கு குறைந்த உள்ளீடுகளே தேவைப்படுகிறது. விரும்பத்தக்க வெப்பநிலையான 15°-25°C, பூச்சிகள் மற்றும் பூஞ்சைகளிடமிருந்து கடுகை பாதுகாக்கிறது.

நீங்கள் செடிகளை வேகமாக வளர்க்க விரும்பினால், வெப்பநிலையை அதிகரிக்கவும். நீரியல் சாகுபடி முறையில் அதிக மகசூலுக்கு வெப்பநிலையை விட ஒளி முக்கியமானது. வாடிவிடாமல் இருக்க போதுமான அளவு தண்ணீர் ஊற்றுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

 நீரியல் கடுகு சாகுபடியின் முக்கிய அங்கம்

  • வெப்பம்: 15°-25°C. 
  • சூரிய ஒளியின் நேரம்: 14 – 18 மணி நேரம்.
  • தண்ணீரின் கார-அமிலத்தன்மை: 5.5- 6.5
  • நடவு: முளைத்த விதைகளை நடவு செய்ய வேண்டும்.
  • பூச்சித்தாக்குதல்: குறைந்த அளவில் பூச்சி தாக்குதல் மட்டுமே இருக்கும். இலைத்தின்னும் புழுக்கள் காணப்படும்.
  • அறுவடை: அறுவடையை  நீங்கள் முழுவதுமாக செய்யக்கூடாது. ஒரு முறையில் 30% மட்டுமே அறுவடை செய்ய வேண்டும்.

நீரியல் கடுகு நடவு முறை

பொருள் மற்றும் உபகரணங்கள்

நீரியல் சாகுபடி அமைப்புக்கு பொருள் மற்றும் உபகரணங்கள் தயாரித்தல் அவசியம். அவை,

  • கடுகு விதை 
  • சாமான்கள் 
  • ராக்வுல் 
  • நீர் தெளிப்பு

முளைக்கும் செயல்முறையை துரிதப்படுத்த, விதைப்பதற்கு முன் 12-24 மணி நேரம் விதைகளை ஊற வைக்கவும்.

விளக்கு

T8 மற்றும் T5 ஒளிரும் விளக்குகள் செடிகளின் வளர்ச்சிக்கு ஏற்ற ஒளிவை தரும். T5 ஐ விட T8 மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும் மற்றும் அது T5 போலவே வேலை செய்கிறது.

நீரியல் கடுகு வளர்ப்பின் குறிப்புகள்

  • கடுகு கீரை வளர்ச்சியின் ஊடகமாக, ஒரு தட்டு அல்லது தொட்டியைத் தேர்ந்தெடுக்கவும்.
  • அதிக வளர்ச்சிக்கு தண்ணீரில் ஊட்டச்சத்துக்களை கலக்கவும்.
  • ஊட்டச்சத்துக்களுடன் நேரடித் தொடர்பில் இருந்து தாவரங்களைப் பிரிக்கவும், ஆதரிக்கவும் உதவும் மெத்து அல்லது குழாய்களைத் தயாரிக்கவும்.
  • நெல் உமி சாம்பலில் நடவு செய்து வளர்க்க ஆரம்பிக்கவும்.
  • பழைய நடவு ஊடகத்தை புதியதுடன் கலந்து, வேர்களை சென்றடையும்படி  செய்யவும்.
  • ஆழம் சுமார் 2 சென்டிமீட்டர் இருக்க வேண்டும்.
  • கடுகு கீரையின் முழு வளர்ச்சிக்கு சூரிய ஒளி அவசியம்.

அறுவடை

  • மண் இல்லாமல் வளரும் கடுகு பல்வேறு வகைகளை உற்பத்தி செய்வதனால் அவற்றின் முதிர்ச்சியும் வேறுபடுகிறது.
  • பொதுவாக 30 முதல் 50 நாட்களில் அறுவடை செய்ய தொடங்கலாம். 
  • கடுகு  கீரையை  நேரடியாக ராக்வூலில் இருந்து மெதுவாக வெளியே இழுக்க வேண்டும். ஒன்றன் பின் ஒன்றாக இழுப்பது மென்மையான மற்றும் இளம் கீரைகளுக்கு சாதகமானது. 
  • அவை 3-4 அங்குல உயரமாக இருந்தால் பயிர்களை வெட்டுங்கள். வெப்பமான காலநிலைக்கு முன் அறுவடை செய்ய வேண்டும்.
spot_img

மேலும் அறிய

தொடர்பில் இருக்க

அண்மை தகவல்களைப் பெற எங்களை சப்ஸ்கிரைப் பண்ணுங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்