இந்தியாவின் பிரதான உணவுப் பட்டியலில் அரிசி முதன்மையாக உள்ளது. இப்பயிரை சுலபமாக அனைத்து பூச்சிகளும் தாக்குகின்றது. இதனால் நெல் சாகுபடியில் அதிக இழப்புகள் ஏற்படுகிறது.
இயற்பியல், இயந்திர, உயிரியல் மற்றும் இரசாயன தடுப்பு முறைகளைப் பயன்படுத்தி நெல் சாகுபடியைக் காப்பாற்றுவதற்கான தடுப்பு நடவடிக்கைகள் பற்றிப் படிப்போம்.
தண்டுத் துளைப்பான்: சிர்போபேகா இன்ஸெர்டுலஸ்
தாக்குதலின் அறிகுறிகள்
- புழுக்கள் செடியில் உள்ள தண்டு பகுதியை உட்கொள்ளும். இதனால் அவை வென்கதிராக தென்படும்.
- மேலும் வெண்கதிரை பிடித்து இழுத்தால் கையேடு வரும்.
கட்டுப்படுத்தும் முறை
- நடவு செய்த பின் சீரான இடைவெளியில் மற்றும் அளவில் தழைச்சத்து உரங்களை இடவும்.
- நடவு செய்வதற்கு முன், நெல் பயிரின் வேர்களை அரை நாள் குளோரோபைரிபாஸில் நனைத்து வைக்கவும்.
- இந்த புழுவை கட்டுப்படுத்த ஃப்லூபென்டாமைட் 20% டபிள்யு.ஜீ (Flubendiamide 20% WG) @ 7கிராம்/ 10 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் தெளிக்கவும்.
ஆனைக் கொம்பன் ஈ: ஆர்சியோலியா ஒரைசா
அறிகுறிகள்
- புழுக்கள் நன்கு செழிப்பாக வளர்ந்து வரும் தூர்களை சேதப்படுத்தும்.
- இவை தாக்கப்பட்ட தூர்களில் நெற்கதிர்கள் வராது. பயிர்கள் வளர்ச்சி குன்றியதை போலவே இருக்கும்.
- இந்த பூச்சி தாக்கப்பட்ட பயிர் வெங்காயத்தின் இலைபோன்று காட்சியளிக்கும்.
கட்டுப்பாடு முறை
- அதிக அளவில் தழைசத்துக்களை பயன்படுத்த கூடாது.
- விளக்கு பொறியை வைத்து பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.
- பிளாட்டிகேஸ்டர் ஒரைசா எனப்படும் ஒட்டுண்ணியை 7/ஏக்கர் என்ற அளவில் வைக்கவும்.
- மேலும் இதனை கட்டுப்படுத்த குளோரோபைரிபாஸ் 50% இ.சி (chlorpyrifos 50% EC) @ 30 மில்லி/ 10 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் தெளிக்கவும்.
நெல் ஸ்கிப்பர்: பெலோப்பிடாஸ் மேத்தியாஸ்
தாக்குதலின் அறிகுறிகள்
- இலையின் நுனியை கீழ்நோக்கி சுருட்டி ஒரு கூடு போன்று உருவாக்கப்பட்டிருக்கும்.
- வயலை பார்க்கும்போது வெள்ளை நிறம் போன்று காட்சி அளிக்கும்.
- புழுக்கள் உள்ளிருந்து, இலைகளின் பச்சையத்தை சுரண்டி உண்ண ஆரம்பிக்கும்.
கட்டுப்படுத்தும் முறை
- இந்த புழுவை கட்டுப்படுத்த எம்மாமெக்ட்டின் பென்சோயேட் 5% எஸ்.ஜி (Emamectin benzoate 5% SG) @ 10 கிராம் மற்றும் குளோரோபைரிபாஸ் 50% இ.சி (chlorpyrifos 50% EC) @ 30 மில்லி/ 10 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் தெளிக்கவும்.
புகையான்: நிலபர்வட்டா லூகன்ஸ்
அறிகுறிகள்
- தாக்கப்பட்ட பயிர் முற்றிலுமாக காய்த்து காணப்படும்.
- முதிர்ச்சியடைந்த பயிர்கள் காய்ந்து வட்டமான திட்டுகளாகக் காணப்படும்.
கட்டுப்படுத்தும் முறை
- தேவைக்கு அதிகமான தழைச்சத்து உரங்களை பயன்படுத்துவதை தவிர்த்தல் வேண்டும்.
- டிநோட்பியூரான் 20% எஸ்.ஜி (Dinotefuran 20% SG) @ 8 கிராம் / 10 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் தெளிக்கவும்.
- வயலில் ஒட்டுண்ணிகளை அதிகப்படுத்துவதன் மூலம், இந்த பூச்சியின் தாக்குதலை குறைக்கலாம்.
வெள்ளை தத்துப் பூச்சி: சோகடெல்லா ப்ரூசிஃபெரா | |
தாக்குதலின் அறிகுறிகள்:
கட்டுப்பாடு முறை: |
- இதனை கட்டுப்படுத்த டிநோட்பியூரான் 20% எஸ்.ஜி (Dinotefuran 20% SG) @ 8 கிராம் / 10 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் தெளிக்கவும்.
கதிர் நாவாய்ப் பூச்சி – லெப்டோகெரரிசா அக்யூட்டா
அறிகுறிகள்
- பால் பருவத்திலிருக்கும் நெல் மணிகளிலிருந்து சாறை உறிஞ்சி சேதப்படுத்தும்.
- இதனால் செடியின் மகசூல் குறையும்.
- நெல் மணிகளில் பூச்சி உட்கொண்ட துளைகளில் கருப்பு நிறப் புள்ளிகள் காணப்படும்
கட்டுப்படுத்தும் முறை
- இந்த பூச்சியையோ கட்டுப்படுத்த டைமீதோயேட் 30% இ.சி ( Dimethoate 30% EC) @ 30 மில்லி/ 10 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் தெளிக்கவும்.
இலைப்பேன்: ஸ்டெஃங்கீட்டோத்ரிப்ஸ் பைபார்மிஸ்
அறிகுறிகள்
- இவை இளம் இலைகளை சுரண்டி, சாற்றை உறிஞ்சக்கூடியவை.
- பாதிக்கப்பட்ட நாற்றுக்கள் மஞ்சள் அல்லது வெளிர் நிறத்தில் கோடுகள் தென்படும்.
- தாக்கப்பட்ட இலைகளின் நுனி சுருண்டு இறுதியில் வாடிவிடும்.
கட்டுப்படுத்தும் முறை
- இதனை கட்டுப்படுத்த தியோமீதோக்சம் 25% டபிள்யு.ஜீ (Thiamethoxam.25% WG) @ 12 கிராம்/15லிட்டர் தண்ணீர் என்ற அளவில் தெளிக்கவும்.