HomeCropநெல் வயலை நடவுக்குத் தயார் செய்வது எப்படி? நெல் விதை நேர்த்தி செய்வது எப்படி?

நெல் வயலை நடவுக்குத் தயார் செய்வது எப்படி? நெல் விதை நேர்த்தி செய்வது எப்படி?

2021-2022 வருடத்தில் குருவைச் சாகுபடியில் மட்டும் இந்தியா 111.76 மில்லியன் டன் நெல் மணிகளை உற்பத்தி செய்துள்ளது. உலகின் நெல் உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. மேலும் கடந்த ஆண்டுகளில் இந்தியாவின் நெல் உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்தியாவில் மற்ற சாகுபடியைக்காட்டிலும் நெல் சாகுபடி மட்டுமே அதிக பரப்பளவில் செய்யப்படுகிறது.

சிரம நிலை:  கடினம்

விதைகள் தேர்வு

தற்போதைய நிலையில் இந்தியாவில் 10,000 நெல் ரகங்கள் உள்ளன. பாசுமதி, ஜோஹா, ஜோதி, நவரை, பொன்னி, பூசா, சோனா மசூரி, ஜெயா, கலாஜிரி (நறுமணம்), பொலி, பாலக்காடு மட்டா, கட்டமோடன், கைரளி, ஜோதி, பத்ரா, ஆஷா, ரக்தஷாலி  மேடும் தமிழ்நாட்டின் பூங்கார் போன்றவை இந்தியாவில் நடவு செய்யப்படும் முக்கிய நெல் ரகங்களாகும். கடந்த வருடத்தில் மட்டுமே ஏறத்தாழ 800 நெல் ரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

விதையை ஊறவைத்தல்

விதைகளை ஊறவைப்பதில் இரண்டு முறைகள் உள்ளது. முதன்மை கட்டம் மற்றும் முளைக்கும் முன் ஊறவைத்தல். முதன்மைக் கட்டத்தில் நெல் விதைகளை 4-8 மணி நேரம் ஊறவைத்து பிறகு அதனை விதைப்பதற்கு முன்பு நன்கு உலர வைத்து விதைக்க வேண்டும். முளைக்கும் முன் ஊறவைத்தலில் 12-24 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.

நெல் விதை நேர்த்தி

உயிரி விதை நேர்த்தி

பொதுவாக நெல் விதை நேர்த்தி செய்ய இரண்டு வழிகள் உள்ளன. இயற்கை மற்றும் ரசாயன முறை. இயற்கை முறையில் விதை நேர்த்தி செய்ய அசோஸ்பைரில்லம் என்ற மருந்தை 600 கிராம்/ எக்டேர் அல்லது அசோபாஸ் 1200 கிராம்  / எக்டேர் என்ற அளவில் கலந்து பயன்படுத்தலாம். மேலும் நெல்லுக்குக் கொடுக்கப்படும் உயிர் கட்டுப்பட்டு மருந்தை உயிர் உங்களுடன் கலந்து கொடுக்கலாம். மேலும் நெல் விதைகளை சூடோமோனாஸ் ப்ளோரசென்ஸ் என்ற மருந்தை 10 கிராம் / ஒரு கிலோ விதை என்ற அளவில் கலந்து, இதனை 1 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் எடுத்து விதைகளை இரவு முழுவதும்  ஊறவைக்கவேண்டும். மேலும் அதிகப்படியான தண்ணீரை வடிகட்டுவதனால் விதைகள் நன்கு முளைக்கும்.

ரசாயன நெல் விதை நேர்த்தி

ரசாயன மருந்துடன் உயிரி மருந்தைக் கலக்கக் கூடாது. ரசாயன விதை நேர்த்திக்கு பென்லேட் அல்லது மான்கோசெப் அல்லது அராசோன் சிவப்பு என்ற மருந்தை 3 கிராம்/ ஒரு கிலோ விதை/ ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் பயன்படுத்த வேண்டும். கார்பென்டாசிம் அல்லது பைரோகுலோன் அல்லது டிரைசைக்ளோசோல் கரைசல் என்ற மருந்தை 2 கிராம்/ 1 லிட்டர் தண்ணீர்/ ஒரு கிலோ விதை என்ற அளவில் கலந்து, விதை மூலம் பரவும் நோயினை கட்டுப்படுத்தலாம். பிறகு விதைகளைத் தண்ணீரில் 10 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதனால் நெற்பயிர் பூச்சி மற்றும் நோய் தாக்கத்திலிருந்து 40 நாட்கள் வரை பாதுகாப்பாக இருக்கும். மேலும் தண்ணீரில் ஊறவைத்த விதைகளைச் சணல் சாக்குகளில் 24 மணிநேரம் மூடிவைக்க வேண்டும். இதனால் விதைகள் முளைத்து விதைப்பிற்குத் தயாராகும்.

நெல்லுக்கு நாற்றங்கால் படுக்கைகள் தயாரித்தல்

பொதுவாக நெல்லுக்கு நாற்றங்கால் தயாரிக்கப் பல முறைகள் உள்ளன. நாற்றங்காலுக்கு 2.5 மீட்டர் படுக்கை அகலத்தில் 30 செ.மீ அகலத்தில் கால்வாய்கள் உள்ளவாறு தயாரிக்கவேண்டும். மேலும் படுக்கையைச் சுற்றியும் நன்கு வடிகால் வசதிகள் உள்ளவாறு இருக்கவேண்டும். மேலும் மண் மற்றும் நிலத்தின் தரத்தைப் பொறுத்து நாற்றங்காலின் அளவு மாறுபடும்.

நாற்றங்கால் போதுமான நீர் வசதி மற்றும் வடிகால் வசதி உள்ளவாறு இருக்கவேண்டும். நாற்றங்கால் பகுதியை நன்கு உழுது, 1 டன் நன்கு மக்கிய தொழு உரத்தை இடவேண்டும். வயலை நன்கு உழுத பிறகு அடுத்த 2 நாட்களுக்குத் தண்ணீரைத் தேக்கி வைக்கவேண்டும்.

சேறடிக்கும் பொழுது வயலில் 5-10 செ.மீ தண்ணீர் இருக்க வேண்டும். நிலத்தை சேற்றுழவு இரண்டு முறை எதிர்  திசையில் உழவேண்டும்.

நெல்லுக்கான மண் தேவைகள்

மணல் கலந்த களிமண் அல்லது கருப்பு களிமண்ணில் நெல் சிறப்பாக வளரும்.

மண்ணின் கார-அமிலத்தன்மை

நெல்லுக்குச் சற்று அமில மண் (pH 6) தேவைப்படும்.

நெல் நடவு வயல் தயாரித்தல்

நாற்றுகளை நடவு செய்வதற்கு 2-3 நாட்களுக்கு முன்பு நிலத்தைத் தயார் செய்திருக்க வேண்டும். நிலத்தை 2 முறை நன்கு உழவேண்டும். மேலும் இறுதி உழவின்போது 12.5 டன் நன்கு மக்கிய தொழு உரம் அல்லது பசுந்தாள் உரம் 6.25 டன்/எக்டர் என்ற அளவில் கொடுக்கவேண்டும்.மேலும் நடவு செய்யும்  10 நாட்களுக்கு முன்பு 22 கிலோ யூரியா/ எக்டேர் என்ற அளவில் கொடுக்கவேண்டும்.

முடிவுரை

நெல் சாகுபடி என்பது மிகுந்த கவனிப்பும் பராமரிப்பும் தேவைப்படும் பயிர்களில் ஒன்றாகும்.மேலும் இதனைப் பயிரிடுவது எளிதல்ல. இருப்பினும், அரிசி நமது நாட்டின் முக்கிய உணவாகும், எனவே அரிசிக்கான தேவை எப்போதும் இருக்கும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

  1. பிரபலமாக பயன்படுத்தப்படும் நெல் இரகங்கள் யாவை? 
மாநிலம்  பிரபலமான இரகங்கள் 
தமிழ்நாடு  குறுகிய கால வகைகள் ஐஆர் 64, கோ 47, எடிடி 36, எம்டியு  5, எஎஸ்டி 16  

மத்திய கால வகைகள் – ஐஆர் 20, கோ 43,  எடிடி 46, எம்டியு 3,4, வெள்ளை பொன்னி  

நீண்ட கால வகைகள் – பொன்மணி (சிஆர் 1009), பிபிடி 5204 

கலப்பின வகைகள்கோஆர்எச் 1, கோஆர்எச் 2, கோஆர்எச் 3 

கர்நாடக  மது, ஜோதி, ஜெயா, ஷக்தி, பிரகாஷ், பிரகதி. 
ஆந்திர பிரதேசம்  எம்டியு 1156, எம்டியு 1153, என்எல்ஆர் 34449, ஜ்யோதி, எடிடி 37, பிபிடி 5204, என்எல்ஆர் 3111, பிபிடி 2858 (சிகப்பு அரிசி), ஸ்வர்ண 
தெலுங்கானா  என்எல்ஆர் 145, என்எல்ஆர்28523, பிபிடி 3291, எம்டியு 5293, எம்டியு1156, எம்டியு1153, எம்டியு 1290, கோ 51, சூப்பர் அமன், தெலுங்கானா சோனா (ஆர்என்ஆர்), கேஎன்எம் 1638 (குணரம் வரி 2), ஜேஜிஎல் 1798 (ஜாகிட்டயால் சன்னலு) 
கேரளா  குறுகிய கால வகைகள்கட்டமொடன் – நெட்டை (பிடிபி 28), ரோகினி (பிடிபி 36), ஜ்யோதி (பிடிபி 39), ஸ்வர்ண பிரபா (பிடிபி 43), கைரளி (பிடிபி 49), காஞ்சனா (பிடிபி 50). 

மத்திய கால வகைகள்  – அஸ்வதி (பிடிபி 37), சபரி (பிடிபி 40), ஆத்திர (பிடிபி  51), ஐஸ்வர்யா (பிடிபி 52), ஆஷா எம்ஓ5 

நீண்ட கால வகைகள்ரேஷ்மி (பிடிபி 44), நிலா (பிடிபி 48), கருணா (பிடிபி 36), மகரம் (கேடிஆர் 2), கும்பம் (கேடிஆர்3) 

 

 2. நெல் வயலில் நாற்றுகளை நடவு செய்ய பிடுங்கும்போது வேர் முறிவதைத் தவிர்ப்பது எப்படி?

  • விதைகளை விதைத்து 25 நாட்களுக்குப் பிறகு நாற்றுகளை நடுவு செய்யவேண்டும் என்றால், 10 நாட்களுக்கு முன் டை அம்மோனியம் பாஸ்பேட் உரத்தை  2 கிலோ/சென்ட் அளவில்  இடவும். 
  • களிமண்ணில் வேர்கள் பிடுங்குவதில் சிக்கல் இருந்தால், விதை விதைத்த 10 நாட்களில் 4 கிலோ ஜிப்சம் மற்றும் டை அம்மோனியம் பாஸ்பேட் 1 கிலோ/சென்ட் அளவில் இடலாம். 

3. நெல் பயிரின் நாற்றுகளை நிறுவுவதற்கு உகந்த நடவு ஆழம் என்ன?

  • மேலாக நடவு (3 செ.மீ.) – பயிர்கள் விரைவில் வளரும் மற்றும் அதிக தூர் கட்டுகள் 
  • ஆழமான நடவு (> 5 செ.மீ) – பயிர்கள் தாமதமாக வளரும் மற்றும் குறைக்கப்பட்ட தூர் கட்டுகள். 
  1. நெல் வயலில் பசுந்தாள் உரத்தை எப்போது மற்றும் எவ்வளவு அளிக்க வேண்டும்?

இறுதி உழவின் போது பசுந்தாள் உரத்தை ஏக்கருக்கு 2.5 டன் அளிக்க வேண்டும். 

  1. நெல் விதைகளுக்கு விதை நேர்த்தி செய்வது எப்படி?

உயிரியல் விதை நேர்த்தி: 

  • நெல் விதைகளை குளிர்ந்த வெல்லம் கரைசலில் 10 மில்லி அசோஸ்பைரில்லியம் (சன் பயோ அசோஸ்) அல்லது பாஸ்போபாக்டீரியா (சன் பயோ ஃபோசி) உடன் விதை நேர்த்தி செய்யவும். விதை நேர்த்தி செய்த விதைகளை நிழலில் உலர்த்தி, அதே நாளில் விதைப்பதற்கு பயன்படுத்த வேண்டும்.  
  • நெல் விதைகளை ஒரு கிலோவிற்கு 10 கிராம் சூடோமோனாஸ் ஃப்ளோரசன்ஸ் (சோன்குல் சன் பயோ மோனஸ்) என்ற அளவில்  டால்க்-அடிப்படையிலும் விதை நேர்த்தி செய்யலாம். இதை 1 லிட்டர் தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைக்கவேண்டும். அதிகப்படியான தண்ணீரை வடிகட்டி, விதைகள் முளைப்பதற்கு  24 மணி நேரம் கால அவகாசம் கொடுத்த, பின்னர் விதைக்க வேண்டும். 

(குறிப்பு: உயிர்க்கட்டுப்பாட்டு காரணிகள் மற்றும் உயிர் உரங்களுடன் இணக்கமானவை. எனவே உயிர் உரங்கள் மற்றும் உயிர்க்கட்டுப்பாட்டு முகவர்கள் ஒன்றாக கலந்தும் பயன்படுத்தலாம்) 

இரசாயன விதை நேர்த்தி: 

1 கிலோ விதைகளுக்கு 2 கிராம்/லிட்டர்  என்ற அளவில் பாவிஸ்டின் (கார்பென்டாசிம் 50% WP) அல்லது பான் பூஞ்சைக் கொல்லியை (ட்ரைசைக்லசோல் 75% WP) 1 கிராம்/லிட்டர் அளவில் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். விதைகளை 10 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, அதிகப்படியான தண்ணீரை வடிகட்டவும். இந்த ஈர விதை நேர்த்தியானது நாற்றுகளுக்கு குலை நோய் போன்ற நோயிலிருந்து 40 நாட்கள் வரை பாதுகாப்பு அளிக்கும். உடனடியாக விதைப்பதற்கு விதைகள் தேவைப்பட்டால், ஊறவைத்த விதையை இருட்டு அறையில் வைத்து, கூடுதல் சாக்கு பைகளால் மூடி, 24 மணி நேரம் முளைக்க விடவும். பின்னர் அதை விதைப்பதற்கு பயன்படுத்தலாம். 

(குறிப்பு: பூஞ்சைக் கொல்லிகள் மற்றும் உயிர்க்கட்டுப்பாட்டு காரணிகள் பொருந்தாதவை. எனவே அவற்றை ஒன்றாகக் கலந்து பயன்படுத்த கூடாது) 

  1. நெல் பயிருக்கு பரிந்துரைக்கப்படும் உரத்தின் பொதுவான அளவு என்ன?

நெற்பயிருக்கான உரம் பரிந்துரை அளவு 49:24:24 கிலோ/ஏக்கர். அதன் வயலில் பயன்படுத்தக்கூடிய வணீக அளவு கீழே உள்ள அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ளது. 

ஊட்டச்சத்து  உரங்கள்  அளவு (ஒரு ஏக்கருக்கு) 
இயற்கை/கரிம  தொழு உரம்/உரம் (அல்லது)  5 டன் 
பசுந்தழை உரம்  2 – 3 டன் 
தழை சத்து  யூரியா (அல்லது)  106 கிலோ 
அம்மோனியம் சல்பேட்  239 கிலோ 
மணி சத்து  சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் (அல்லது))  150 கிலோ 
டபுள்  சூப்பர் பாஸ்பேட்  75 கிலோ  
சாம்பல் சத்து  மியூரேட் ஆஃப் பொட்டாஷ் (அல்லது)   40 கிலோ 
சல்பேட்  ஆஃப் பொட்டாஷ்  48 கிலோ 
ஜிங்க் (ஜிங்க் பற்றாக்குறை மண்) 

 

 ஜிங்க நுண்ணூட்ட உரம் (Z3)  இலைவழி தெளிப்பு: 0.5 – 1 கிராம்/லிட்டர் 

மண்ணுக்கானப் 

 பரிந்துரை: 10 கிலோ 

 

 

  1. நெல் வயலில் களை முளைப்பதற்கு முன்பு பயன்படுத்தப்படும் களைக்கொல்லி எது?

ஒரு ஏக்கருக்கு 500 மில்லி அளவில்  ப்ரீடிலாக்லர் 50% இசி (கிரேஸ் (அ) ரேசர்) அல்லது 80 கிராம் பைராசோசல்புரான் ஈத்தைல் (சாத்தி களைக்கொல்லி) என்ற களைக்கொல்லியை பயன்படுத்தவும். நடவு செய்த 3-4 நாட்களுக்குள் அவற்றைப் பயன்படுத்த வேண்டும். 

spot_img

மேலும் அறிய

தொடர்பில் இருக்க

அண்மை தகவல்களைப் பெற எங்களை சப்ஸ்கிரைப் பண்ணுங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்