HomeCropபசுமைக்குடில் பச்சைமிளகாய் சாகுபடி 

பசுமைக்குடில் பச்சைமிளகாய் சாகுபடி 

பச்சை மிளகாய் ஒரு வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல செடியாகும். செடியில் காய்கள் முதிர்ச்சியடைவதற்கு பல விதமான வானிலைகள் தேவைப்படும்.

பசுமைக்குடில் சாகுபடியின் நன்மைகள்

  1. பயிர்களுக்கு ஏற்படும் பாதகமான சுற்றுச்சூழல் நிலைமைகளிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.
  2. அதிக வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தை கட்டுப்படுத்த முடியும்.
  3. உற்பத்தியின் அளவு மற்றும் அதனின் தரத்தை அதிகப்படுத்தலாம்.
  4. செடியை தாக்கும் பூச்சியை சிறந்த முறையில் கட்டுப்படுத்தலாம்.
  5. குறைந்த இடத்திலிருந்து அதிக லாபத்தை பெறலாம்
  6. மிளகாய் செடிக்கு வழங்கப்படும் தண்ணீர் மற்றும் உரத்தின் அளவு குறையும்.

மண் மற்றும் தட்பவெப்பநிலை

பச்சை மிளகாய் சாகுபடிக்கு மண்ணைத் தேர்ந்தெடுப்பது, நீங்கள் பின்பற்றும் நீர்ப்பாசனத்தின் வகையைப் பொறுத்தது. நீங்கள் மானாவாரி பயிர்களை பயிரிட்டால், ஈரப்பதத்தை தக்கவைத்துக்கொள்வதற்கு கருப்பு மண் ஒரு நல்ல தேர்வாகும். 

நீங்கள் மற்ற நீர்ப்பாசன முறைகளை பின்பற்றினால், அதிக கரிம உள்ளடக்கம் கொண்ட நன்கு வடிகட்டிய மணல் களிமண் சிறந்தது.

பசுமைக்குடிலில், 20 – 25 டிகிரி வெப்பநிலை பச்சை மிளகாய் வளர்ச்சிக்கு சிறந்தது. வெப்பநிலை 37 டிகிரி அல்லது அதற்கு மேல் இருந்தால், மிளகாயின் வளர்ச்சி பாதிக்கப்படும். மேலும் பலத்த மழையினாலும் செடிகள் உதிர்ந்து அழுகும். காய்பிடிக்கும் தருணத்தில் வறட்சி வந்தாலும் பூ உதிர்வு ஏற்பட்டு மகசூல் குறையும். எனவே, மிளகாய் விவசாயத்திற்கும் அதிக லாபம் ஈட்டுவதற்கும் பசுமைக்குடில் ஒரு நல்ல வழி.

ஏற்ற பருவம் மற்றும் நடவு காலங்கள்:

பசுமைக்குடிலில் மிளகாய் சாகுபடிக்கு உகந்த நேரம் அக்டோபர் இறுதி முதல் நவம்பர் நடுப்பகுதி வரை ஆகும். பசுமைக்குடிலை 50% நிழல் வலையால் மூடிவிட்டு பிறகு, அல்லை பக்கங்களில்  நைலான் வலையைப் பயன்படுத்தி மூடவும். 

பிறகு நல்ல தரமான விதைகளை மேட்டுப்பாத்தியிலோ அல்லது குழி அட்டையிலோ விதைக்கலாம்.  மேலும் விதைத்த  30 முதல் 40 நாட்களில் நாற்றுகள் நடவு செய்ய தயாராக இருக்கும். 

பசுமைக்குடிலில், பச்சை மிளகாயை சம்பா மற்றும் குருவை பயிர்களாக நடவுசெய்யலாம். மேலும் அவை மற்ற காலங்களிலும் நடப்படுகின்றன. சம்பா பயிர்களுக்கு மே முதல் ஜூன் வரையிலும், குருவை பயிர்களுக்கு செப்டம்பர் முதல் அக்டோபர் வரையிலும் விதைக்கலாம். கோடை பயிர்களாக பயிரிடப்பட்டால், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்கள் உகந்தது.

நீர் நிர்வாகம்

மிளகாய் செடிகளுக்கு அதிகளவு தண்ணீர் தேங்கக்கூடாது. எனவே தேவைப்படும் போது மட்டுமே தண்ணீர் பாய்ச்ச வேண்டும். மிளகாய்ச் செடிகளுக்கு அதிகமாக நீர் பாய்ச்சினால் பூக்கள் உதிர்வு ஏற்படும். நீரின் அளவு மற்றும் தொடர் நீர்ப்பாசனத்தின் இடைவெளி, இவ்விரண்டும் காலநிலை நிலைகள் மற்றும் மண்ணின் வகை மற்றும் அதனின் தன்மையை பொறுத்தது.

பசுமைக்குடிலில் பச்சைமிளகாயின் இனப்பெருக்கம்

ஆரோக்கியமான மிளகாயை விளைவிக்க, நோய் தாக்காத, நல்ல தரமான விதைகளை தேர்ந்தெடுக்க வேண்டும். மழை மற்றும் கடுமையான குளிர் காலநிலை மிளகாய் நாற்றுக்கு ஏற்றது அல்ல. ஆனால் இந்த பசுமைக்குடிலைக் கொண்டு, அணைத்து காலநிலைகளிலும் எந்த ஒரு பாதிப்பும் இன்றி நம்மால் நடவு செய்யமுடியும். மேலும் ஒரு ஏக்கர் பசுமைக்குடிலில் நடவு செய்ய 2.5-3 கிலோ விதை தேவைப்படும்.

மிளகாய் நாற்றுகள் நடவு

மிளகாய் நாற்றுகளை வயலில் அல்லது பசுமைக்குடிலில் நடுவதற்கு முன், அவற்றை 0.5% சூடோமோனாஸ் ஃப்ளோரசன்ஸ் கரைசலில் சுமார் அரை மணி நேரம் வைத்து பிறகு நடவு செய்ய வேண்டும். மேலும் அவற்றை 45 சென்டிமீட்டர் இடைவெளியில் இருத்தல் அவசியமாகும். இதனால் மகசூல் அதிகரிக்கும்.

பூச்சி மற்றும் நோய் மேலாண்மை

பச்சை மிளகாய் பல்வேறு பூச்சிகள் மற்றும் நோய்களால் பாதிக்கப்படும். அவை அசுவினி, இலைப்புள்ளி நோய், வெள்ளை ஈ, இலைப்பேன் மற்றும் நுனி கருகல் நோய்.

இவைகள் பசுமைக்குடிலில் மிளகாயை தாக்கி, செடியின் மகசூலை முற்றிலுமாக குறைக்க கூடியவை. எனவே நீங்கள் நன்கு மக்கிய எருக்களை பயன்படுத்த வேண்டும். மேலும் நீங்கள் ஊடுபயிராக வெங்காயத்தை நடவு செய்தால் பூச்சியின் தாக்குதலை குறைக்கலாம். 

இதுபோலவே வேப்பங்கோட்டை சாறை பயன்படுத்தி பசுமைக்குடிலில் மிளகாய் செடியை தாக்கும் இலைப்பேன் மற்றும் அசுவினி பூச்சியை கட்டுப்படுத்தலாம்.

பசுமைக்குடில் மிளகாய் அறுவடை

பொதுவாக பச்சை மிளகாய் நடவு செய்த 90வது நாட்களில் இருந்து அறுவடை துவங்கும். மேலும் நன்கு முதிர்ந்த பச்சை மிளகாயை அறுவடை செய்யவேண்டும். முதல் அறுவடை சிறிது இளநிலையிலே செய்யவேண்டும். இதனால் உங்கள் செடியில் பூ பூக்கும் திறன் அடுத்து அதிகரிக்கும். இதனால் மகசூல் மற்றும் லாபம் உயரும்.

spot_img

மேலும் அறிய

தொடர்பில் இருக்க

அண்மை தகவல்களைப் பெற எங்களை சப்ஸ்கிரைப் பண்ணுங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்