HomeCropபருத்தி சாகுபடி செய்ய நிலத்தைத் தயார் செய்வது எப்படி?

பருத்தி சாகுபடி செய்ய நிலத்தைத் தயார் செய்வது எப்படி?

உலகின் மிகப்பெரிய பருத்தி உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. இந்தியா 1.7 மில்லியன் ஹெக்டருக்கு மேல் பருத்தி செகுபடி செய்கிறது. மேலும் இந்தியா 159 நாடுகளுக்கு 5.5 மில்லியன் பொதிகள் பருத்தியை ஏற்றுமதி செய்கிறது. 2022-2023 ஆண்டிற்கான பருத்தியின் மொத்த தேவையாக 351 லட்சம் பேல்களாக உள்ளது. குஜராத், பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு, ஒரிசா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் பருத்தி அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. மேலும் இந்தியாவில் பருத்தி உற்பத்தியில் குஜராத் மாநிலம் முதல் இடத்தில் உள்ளது.

சிரம நிலை:நடுத்தரம்

விதைகள் தேர்வு

இந்தியாவில் 150திற்கும் மேற்பட்ட பருத்தி ரகங்கள் உள்ளன. அவற்றில் பிரபலமாக ராசி 773, ராசி 776, அங்கூர் 555, பேயர் 7172, பேயர் 7272, யுஎஸ் 51, நுசிவீடு 9013, நுசிவீடு பால்வான், ஸ்ரீராம் 6588, கொல்டி 333, புரி 1007, ஏ.கே.எச். 081 மற்றும் டி.எச்.ஒய். 286. ராசி 773 போன்ற ரகங்கள் மிதமான செடி வளர்ச்சியுடன் அதிக மற்றும் பெரிய காய்களை உற்பத்தி செய்யும். மேலும் இந்த ரகங்கள் சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தாக்கத்தை தாங்கி வளரும் தன்மை கொண்டுள்ளது.

விதைகளை ஊறவைத்தல்

பூர்வீக நாட்டு பருத்தி ரக விதைகளை குறைந்தபட்சம் இரண்டு முதல் மூன்று மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவேண்டும் மற்றும் இறக்குமதி ரகங்களுக்கு, அதாவது வெளிநாட்டு ரகங்களுக்கு நான்கு முதல் ஆறு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

பருத்தி விதை நேர்த்தி

பருத்தி விதை நேர்த்தி செய்யும் முன்பு, விதைகளை தண்ணீர்,சேறு, மாட்டு சாணம் ஆகியவற்றின் கலவையில் ஊற வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதனால் செடிகள் ஒன்றின்போல் அனைத்தும் முளைக்க உதவும்.

பருத்தி ரசாயன விதை நேர்த்தி

பருத்தி விதை மேல் இருக்கும் பஞ்சை நீக்குவது விதை நேர்த்தி செய்ய அவசியமானதாகும். பருத்தி விதை மேல் இருக்கும் பஞ்சை நீக்க ஒரு பிளாஸ்டிக் வாளியில் 1 கிலோ விதையை எடுத்து, இதனுடன் 100 மில்லி சல்பியூரிக் அமிலம் சேர்க்க வேண்டும்.  இதனை 2-3 நிமிடம் ஒரு மரக்குச்சியயை கொண்டு நன்கு கலக்கவேண்டும். விதைகள் சுமார் 3 நிமிடத்தில் பருத்தி விதைகள் காப்பி கோட்டையின் நிறத்தில் தென்படும்போது உடனடியாக அதனை வெளியே எடுத்து 4-5 முறை குளிர்ந்த தண்ணீரில் நன்கு கழுவ வேண்டும். அனைத்து விதைகளையும் கழுவிய பிறகு மீதம் உள்ள அமிலத்தை நீக்க விதைகளை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பின்னர் விதைகளில் மீதம் உள்ள சல்பியூரிக் அமிலத்தை முழுமையாக அகற்ற 10 – 15 நிமிடங்களுக்கு 0.5% கால்சியம் குளோரைடு கரைசலில் விதைகளை கழுவ வேண்டும். இவ்வாறு கழுவும்போது நன்கு மூல்கும் விதைகளை மட்டுமே நடவுக்கு பயன்படுத்த வேண்டும்.

மேலும் இந்த விதைகளை 3 கிராம் மென்கோசெப் என்ற மருந்தை 1 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்த கரைசலில் ஊற வைத்து விதைக்கலாம். இவ்வாறு செய்வதனால் விதைமூலம் பரவும் நோயை கட்டுப்படுத்தலாம். மேலும் விதைகளை 2 கிராம்  கேப்டான் மருந்தை 5 மில்லி தண்ணீர் என்ற அளவில் கலந்த கரைசலில் கலந்து பிறகு விதைக்கலாம்.

பாக்டீரியா விதை நேர்த்தி

எக்டருக்கு 34 முதல் 247 கிலோ அசோடோபாக்டர் சேர்ப்பது மண்ணில் தழைச்சத்தை சேர்க்க உதவும். மேலும் அசோடோபாக்டர் போலவே அசோஸ்பைரில்லம் என்ற உயிரி பாக்டீரியாவும் காற்றில் உள்ள தழைச்சத்தை மண்ணில் சேர்க்க உதவும். அசோஸ்பைரில்லம்  வயலின் தழைச்சத்தின் தேவையை 25-30% குறைக்கும்.

பருத்திக்கான மண் வகை

மணல் கலந்த களிமண்

மண்ணின் கார-அமிலத்தன்மை

சற்று அமிலத்தன்மை கொண்டுள்ளதாக இருக்கவேண்டும்.

பருத்தி நிலம் தயாரித்தல் 

நிலத்தை இரண்டு முறை நன்கு எதிர் திசையில் உழவேண்டும். பிறகு இதனை தொடர்ந்து சட்டி கலப்பையை கொண்டு உழவேண்டும். இதனால் மண் நன்கு தளர்ந்த காணப்படும். மேலும் நிலத்தின் அடி மட்டத்தை உடைக்க உளிக்கலப்பை கொண்டு 0.5மீட்டர் இடைவெளியில் உழவேண்டும்.

பிறகு வயலுக்கு உழும்பொழுது நான்கு மக்கிய தொழு உரத்தை 10 டன்/ ஏக்கர் என்ற அளவில் கொடுக்க வேண்டும். இதனுடன் விதைகளை அசோஸ்பைரில்லம் 3 பாக்கெட் (600 கிராம்/எக்டேர்), பாஸ்போபாக்டீரியா 3 பாக்கெட் (600 கிராம்/எக்டேர்) மற்றும் 6 பாக்கெட் அசோபாஸ் (1200 கிராம்/எக்டேர்).

முடிவுரை

பருத்தியானது  நாடு முழுவதும் பயிரிடப்படும் ஒரு பண பயிராகும். இது 2022-2023 ஆம் ஆண்டிற்க்கான சிறந்த வருமானத்தை கொடுக்கவல்லதாகும். இதனால் இதற்க்கு மற்ற பணப்பயிர்களைப் போல், அதிக பராமரிப்பு தேவைப்படுவதில்லை. இதனால் அனைத்து விவசாயிகளும் பருத்தி சாகுபடி செய்ய ஏற்றதாகும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

  1. பிரபலமாக பயன்படுத்தப்படும் பருத்தி இரகங்களைப் பரிந்துரைக்கவும்? 
மாநிலம்  இரகங்கள் / கலப்பின வகைகள் 
கர்நாடக 

 

அம்ருத் பருத்தி கிரோவ்  (பருத்திக்கான வளர்ச்சி ஊக்கி), EZEE பருத்தி – மூலிகை பயிர் ஆரோக்கிய மேம்பாட்டு, சிசிஎச் 999 பிஜி-II கலப்பின பருத்தி, மஹிகோ தன்தேவ் + எம்ஆர்சி 7373 பிஜி-II பருத்தி 
தமிழ்நாடு 

 

 

அம்ருத் பருத்தி கிரோவ் (பருத்திக்கான வளர்ச்சி ஊக்கி), பருத்திக்கான மல்டிபிளக்ஸ் பிடிசி, மஹிகோ தன்தேவ் + எம்ஆர்சி 7373 பிஜி-II பருத்தி 
ஆந்திர பிரதேசம்  அம்ருத் பருத்தி கிரோவ் (வளர்ச்சி ஊக்கி), மஹிகோ ஜங்கி பருத்தி, மல்டிபிளக்ஸ் பிடிசி பருத்தி நுண்ணூட்டச்சத்து, நவநீத் பருத்தி (என்சிஎஸ்929), EZEE பருத்தி- மூலிகை பயிர் ஆரோக்கிய மேம்பாடு 
தெலுங்கானா 

 

யுஎஸ் 7067 பிஜி II (SWCH 4749 பிஜி II) பருத்தி, சிசிஎச் 999 பிஜி II கலப்பின பருத்தி, மஹிகோ தன்தேவ் + எம்ஆர்சி 7373 பிஜி-II பருத்தி, மஹிகோ ஜங்கி பருத்தி, அம்ருத் பருத்தி கிரோவ் 
மகாராஷ்டிரா    அம்ருத் பருத்தி கிரோவ், யுஎஸ் 7067 பிஜி II (SWCH 4749 பிஜி II) பருத்தி, மஹிகோ தன்தேவ் + எம்ஆர்சி 7373 பிஜி-II பருத்தி, EZEE பருத்தி- மூலிகை பயிர் ஆரோக்கிய மேம்பாட்டு, ஆர்சிஎச் 659 பிஜி II பருத்தி 

 

  1. பருத்தி சாகுபடிக்கு ஏற்ற மண் வகை எது?

இரும்பொறை சார்ந்த மணல் கலந்த மண் பருத்தி சாகுபடிக்கு மிகவும் ஏற்றது. 

  1. பருத்தி விதைகளுக்கு விதை நேர்த்தி செய்வது எப்படி?

அமில முறையில் பஞ்சு நீக்கப்பட்ட  விதைகளை கார்பென்டாசிம் (பாவிஸ்டின் 50% WP) அல்லது திரம் அல்லது கேப்டானை 2 கிராம்/கிலோ விதைகள் என்ற அளவில் விதை நேர்த்தி செய்யவேண்டும் . 24 மணி நேரத்திற்கு பிறகு விதைகளை விதைக்கவும். விதை நேர்த்திக்கான மற்ற முறையாக அமில முறையில் பஞ்சு நீக்கப்பட்ட விதைகளை 10 மில்லி  அசோஸ்பைரில்லியம் (சன் பயோ அசோஸ்) அல்லது பாஸ்போபாக்டீரியா (சன் பயோ ஃபோசி) உடன், குளிர்ந்த வெல்லக் கரைச்சலை விதையுடன் கலக்க வேண்டும். இவை விதைப்பதற்கு முன் நிழலில் உலர்த்தி, அதே நாளில் பயன்படுத்தவும். 

(குறிப்பு: உயிர் உரம் மற்றும் பூஞ்சைக் கொல்லி ஆகியவை பொருந்தாது. எனவே அவற்றை ஒன்றாகக் கலந்து பயன்படுத்த கூடாது.) 

4. பருத்திக்கான உரம் பரிந்துரையின் அளவு என்ன? 

மானாவாரி பருத்திக்கான  உரம் பரிந்துரை அளவு – 20:10:10  கிலோ/ஏக்கர்; நீர்ப்பாசனம் பருத்திக்கான  உரம் பரிந்துரை அளவு – 40:20:20 கிலோ/ஏக்கர்  

அதன் வயலில் பயன்படுத்தக்கூடிய அளவு கீழே உள்ள அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ளது. 

 

ஊட்டச்சத்து  உரங்கள்  மானாவாரி பருத்திக்கான அளவு (ஒரு ஏக்கருக்கு)  நீர்ப்பாசன பருத்திக்கான அளவு (ஒரு ஏக்கருக்கு) 
இயற்கை/கரிம  தொழு உரம்/உரம்  (அல்லது)  5 டன்  5 டன் 
மண்புழு உரம்  1 டன்  1 டன் 
தழை சத்து  யூரியா (அல்லது)   35 கிலோ  69 கிலோ 
அம்மோனியம் சல்பேட்  78 கிலோ  156 கிலோ 
மணி சத்து  டை அம்மோனியம் பாஸ்பேட்  22 கிலோ  43 கிலோ 
சாம்பல் சத்து  மியூரேட் ஆஃப் பொட்டாஷ் (அல்லது)   17 கிலோ  33 கிலோ 
சல்பேட்  ஆஃப் பொட்டாஷ்  20 கிலோ  40 கிலோ 
ஜிங்க் (ஜிங்க் பற்றாக்குறை மண்) 

 

அன்ஷுல் ஜிங்க் இடிடீஎ-எப்எஸ்  (ZN 12%) நுண்ணூட்டச் சத்து  இலைவழி தெளிப்பு: 0.5 – 1 கிராம்/லிட்டர் 

மண்ணுக்கான 

 பரிந்துரை: 10 கிலோ 

இலைவழி 

தெளிப்பு: 

 0.5-1கிராம்/லிட்டர் 

 மண்ணுக்கான 

 பரிந்துரை: 10 கிலோ 

மெக்னீசியம் (மெக்னீசியம் குறைபாடுள்ள மண்ணுக்கு)  மல்டிபிளக்ஸ் மல்டி  மேக் (மெக்னீசியம் சல்பேட்)  இலைவழி தெளிப்பு: 3-4 கிராம்/லிட்டர் 

மண்ணுக்கான 

 பரிந்துரை: 20 – 25 கிலோ 

இலைவழி தெளிப்பு: 3-4 கிராம்/லிட்டர் 

மண்ணுக்கான 

 பரிந்துரை: 20 – 25 கிலோ 

 

5. பருத்தியுடன் ஊடுபயிராக பயிரிட ஏற்ற பயிர்களை பரிந்துரைக்கவும்?

குறுகிய கால மற்றும் விரைவாக வளரும் பருப்பு வகைகளான உளுந்து, பச்சைப்பயறு, சோயாபீன், காராமணி மற்றும் காய்கறிகள் (அதாவது கிழங்கு, வெங்காயம், மிளகாய்) ஆகியவை பருத்தியோடு கூடிய  ஊடுபயிர்களாக உள்ளது. 

  1. பருத்தி வயலில் களை முளைப்பதற்கு முன்பு பயன்படுத்தப்படும் களைக்கொல்லி எது? 

பாசிப்  பிளாட் (BACF PLOD) களைக்கொல்லி (பென்டிமெத்தலின் 30% இசி)  1000 மில்லி/ஏக்கர் என்ற அளவில் விதை விதைத்து 3 நாட்களுக்குப் பிறகு, தெளிப்பானைப் பயன்படுத்தி தெளிக்கவும். 

spot_img

மேலும் அறிய

தொடர்பில் இருக்க

அண்மை தகவல்களைப் பெற எங்களை சப்ஸ்கிரைப் பண்ணுங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்