HomeCropபருத்தி: நடவு மற்றும் பயிர் வளர்ப்பு நடைமுறைகளின் தொகுப்பு

பருத்தி: நடவு மற்றும் பயிர் வளர்ப்பு நடைமுறைகளின் தொகுப்பு

நார்ச்சத்து பெற பயிரிடப்படும் பணப்பயிரில் ‘பருத்தி’ மிகவும் முக்கியமானது. வெதுவெதுப்பான மற்றும் ஈரப்பதமான சுற்றுச்சூழலில் கருப்பு பருத்தி மண்ணில் பயிரிடப்படுகிறது. இது “வெள்ளை தங்கம்” என்றும் பிரபலமாக அழைக்கப்படுகிறது.

பருத்தி பயிர்

தாவரவியல் பெயர்: காசிபியம் ஸ்பீசியஸ்

பொதுவான பெயர்: கபாஸ் (ஹிந்தி). கபஹா (பஞ்சாபி), பருத்தி (தமிழ்), பருதி: (மலையாளம்), பத்தி: (தெலுங்கு).

பயிர் பருவம்: காரீப் மற்றும் ராபி பருவம் (இலையுதிர் காலம் மற்றும் குளிர்காலம்)

பயிர் வகை: பணப்பயிர்

மண் தேவைகள்

பொதுவாக,  பருத்தி பரந்த அளவிலான மண்ணில் நன்றாக செழித்து வளரும். குறிப்பாக, நடுத்தர முதல் கனமான மண் வரை நன்கு வளரும். பருத்தி சாகுபடிக்கு கருப்பு பருத்தி மண் மிகவும் ஏற்ற மண்வகையாகும். மேலும், இது 5.5 முதல் 8.5 வரையிலான கார அமில அளவை பொறுத்துக்கொள்ளும் தன்மையுடையது.

காலநிலை தேவைகள்

பருத்தி பயிர் வெப்பமான மற்றும் ஈரப்பதமான சுற்றுச்சூழலில் நன்றாக வளரும். 21 முதல் 27˚C வரையிலான வெப்பநிலை மற்றும் 500 முதல் 700 மி.மீ வரையிலான ஆண்டு மழைப்பொழிவு பருத்தியின் உகந்த வளர்ச்சிக்கு ஏற்றது.

பருத்திக்கான பயிர் வளர்ப்பு நடைமுறைகளின் தொகுப்பு

பருத்திக்கு நிலம் தயாரித்தல்

மண்ணின் வகையைப் பொறுத்து, வயலை 15 முதல் 20 செ.மீ ஆழம் வரை வளைப்பலகைக் கலப்பையின் மூலம் நன்கு உழுது, பின்னர் இரண்டு அல்லது மூன்று முறை நன்கு பலுகுகள் கொண்டு உழ வேண்டும். வயலில் குச்சிகளை விடக்கூடாது. விதைப்புக்கு முன் நீர்ப்பாசனம் செய்வது, பயிர் சிறப்பாக அமைய மிகவும் அவசியம்.

விதைப்பு நேரம்

காரிஃப் பாசனப் பயிர்  (இலையுதிர் காலம்) : ஏப்ரல் முதல் மே வரை

காரீஃப் மானாவாரிப் பயிர்: ஜூன் முதல் ஜூலை வரை

கலப்பினங்கள்: ஜூலை முதல் ஆகஸ்ட் வரை

ராபி பருவம் பயிர் (குளிர்காலம்): செப்டம்பர் முதல் அக்டோபர் வரை

கோடை காலப்பயிர்: பிப்ரவரி முதல் மார்ச் வரை

வகைகள்/கலப்பினங்கள்

தேசி பருத்தி: அரவிந்த், ஸ்ரீ நந்தி, யாகந்தி, காஞ்சன், கிருஷ்ணா, LK 861, திக்விஜய்.

அமெரிக்க பருத்தி: F-320, லக்ஷ்மி, F-414.

கலப்பினங்கள்: H-4, சவிதா, சூர்யா, DCH 32, ஓம் சங்கர்.

விதை விகிதம் மற்றும் இடைவெளி

பொதுவாக, பருத்தி விதைகளை பின்வருமாறு வரிகளில் விதைக்க வேண்டும்.

இனங்கள் விதை விகிதம் (கிலோ/எக்டர்) இடைவெளி (செ.மீ.)
கோசிபியம் ஹிர்சுட்டம் 12 முதல் 15 வரை 60 செ.மீ x 30 செ.மீ
தேசி பருத்தி 8 முதல் 12 வரை 60 செ.மீ x 15 செ.மீ
கலப்பினங்கள் 2 முதல் 4 வரை 120 செ.மீ x 60 செ.மீ

விதை நேர்த்தி

விதையை கந்தக அமிலத்துடன் 100 மில்லி/கிலோ விதைக்கு என்ற விகிதத்தில் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். பிசிறு பருத்தி நார்கள் எரிக்கப்பட்டு, அதன் பஞ்சு இழைகள் நீக்கப்பட்ட விதையை தண்ணீரில் நன்கு கழுவி நிழலில் உலர்த்த வேண்டும்.

நீர்ப்பாசன அட்டவணை

பருத்தி பயிர் தண்ணீர் தேங்குவதற்கு அதிக உணர்திறன் கொண்டது. நீர்ப்பாசனத்திற்கான மிக முக்கியமான நிலைகள் சதுர நிலை, பூக்கும் நிலை மற்றும் காய் வளர்ச்சி நிலை.  பொதுவாக, காரீஃப் மற்றும் ராபி பருவங்களில் 2-3 மற்றும் 6-7 நீர்ப்பாசன முறைகள் சிறந்த பருத்தி பயிர் வளர்ச்சிக்கு மற்றும் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.

உர அட்டவணை

தேவையற்ற உரங்கள் வீணாவதைத் தவிர்க்கவும் மற்றும் லாபத்தை அதிகரிக்கவும், மண் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் உரங்களை வழங்க வேண்டும். கலப்பினங்கள் மற்றும் அமெரிக்க பருத்திக்கு 120:60:60 கிலோ/எக்டர் என்ற விகிதத்தில் தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து பரிந்துரைக்கப்படுகிறது. அதேசமயம், தேசி பருத்திக்கு ஒரு ஹெக்டேருக்கு 40:20:20 கிலோ தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து ஆகியவற்றை சமச்சீராகப் பயன்படுத்த வேண்டும்.

இடை சாகுபடி நடைமுறைகள்

பருத்தியில், விதைத்த முதல் 50 முதல் 60 நாட்கள் வரை பயிருக்கும்-களைக்கும் ஊட்டச்சத்து போட்டிக்கான மிக முக்கியமான நேரம். 

முந்தய களைக்கொல்லியான ‘ஸ்டோம்ப் எக்ஸ்ட்ராவை‘ (பெண்டிமெத்தலின் 38.7 % CS) @ 600 மில்லி/ஏக்கருக்கு பயன்படுத்தவும் மற்றும்  அகன்ற இலைகளைக் கொண்ட களைகளைக் கட்டுப்படுத்த பிந்தைய களைக்கொல்லியான ‘ஹிட்வீட்டை‘ (பைரிதியோபாக் சோடியம் 10% EC) @ 1 மில்லி/லிட்டர் தண்ணீர்  என்ற அளவில்  பயன்படுத்தவும். பருத்தியில் குறுகிய இலைகள் கொண்ட புற்களை திறம்பட கட்டுப்படுத்த ஏக்கருக்கு 400 மில்லி ‘தர்கா சூப்பர்’ (குயிசாலோஃபாப் எத்தில் 5% EC) பரிந்துரைக்கவும்.

பயிர் பாதுகாப்பு (பூச்சிகள் மற்றும் நோய்கள்) 

பூச்சி பாதுகாப்பு

பூச்சி அறிவியல் பெயர் அறிகுறிகள் மேலாண்மை
புள்ளி காய்ப்புழு ஈரியாஸ் வைட்டெல்லா  * மத்திய தளிர் வாடி, உலர்ந்து, கீழே விழுந்துவிடும்.

* பின்னர், பூ மொட்டுகள் மற்றும் உருண்டைகளில் துளைகளை ஏற்படுத்தி, பின் துண்டாக்குகிறது.

* கியூராக்ரான் (புரோஃபெனோஃபோஸ் 50% EC) @ 1000 மில்லி/ ஏக்கருக்கு  பயன்படுத்தவும்.

* மார்க்கர் (பைஃபென்த்ரின் 10 % EC) @  325 மில்லி ஒரு ஏக்கருக்கு பயன்படுத்தவும்.

அமெரிக்கன் காய்ப்புழு ஹெலிகோவர்பா ஆர்மிஜீரா * தாள்களின் முனைப்பகுதிகள் எரித்தது போன்ற அறிகுறியைக் காட்டும்.

* காய்களில் துளைகளுக்குள் சிறுமணி மலத் துகள் போன்ற எச்சம் காணப்படும்.

* 2 மில்லி/லிட்டர் தண்ணீரில் ‘ப்ளேதோரா’ (நோவலுரான் 5.25%+ இன்டாக்ஸாகார்ப் 4.5% SC) பயன்படுத்தவும்.

* ஏக்கருக்கு 400 மிலி  ‘எக்காலக்ஸ்’ (குயினால்பாஸ் 25% EC) பயன்படுத்தவும்.

இளஞ்சிகப்பு காய் புழு பெக்டினோபோரா கோசிபியெல்லா * பருத்தி காய்களில் துளைகள் காணப்படும்.

* பூக்கள் முதிர்ச்சி அடையாமலேயே விழுந்து விடும்.

* பூக்கள் சுருள்          (ரோஸ்ட்டி) போன்ற அமைப்புடன் காணப்படும்.

* பஞ்சில்   கறை படிந்திருக்கும்.

* 88 கிராம்/ஏக்கரில் ‘ப்ரோக்ளைம்’ (எமாமெக்டின் பென்சோயேட் 5% SG) பயன்படுத்தவும்.

* ஆம்ப்லிகோ (குளோரான்ட்ரானிலிப்ரோல் 9.3%)+ லாம்ப்டாசிஹாலோத்ரின் 4.6% ZC) @ 100 மில்லி/ ஏக்கருக்கு பயன்படுத்தவும்.

புகையிலைப் புழு ஸ்போடோப்டெரா லிட்டுயூரா * ஒழுங்கற்ற துளைகள்.

* இலைகளில் எலும்புக்கூடு போன்ற அமைப்பை  ஏற்படுத்துதல்.

* கடுமையான இலையுதிர்தல்.

* ‘ப்ளேதோரா’ (நோவலூரான் 5.25%+ இன்டோக்சாகார்ப் 4.5% SC) @  2 மில்லி /லிட்டர்  தண்ணீரில் கலந்து தெளிக்கவும்

* குந்தர்  (நோவலூரான் 5.25% + எமாமெக்டின் பென்சோயேட் 0.9% SC) @ 2 மில்லி/ லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்

வெள்ளை ஈ பெமிசியா டபாசி  * இலைகளிலிருந்து சாற்றை உறிஞ்சுகிறது.

* தரமற்ற பஞ்சு.

* கடுமையான தாக்குதலில் காய் உதிர்தல் ஏற்படுகிறது.

* கான்ஃபிடர் (இமிடாகுளோபிரிட் 17.8% SL) @ 1 மில்லி/லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.

* ‘லான்சர் கோல்டு’ (அசிபேட் 50% + இமிடாக்ளோபிரிட் 1.8% SP) @ 400 கிராம் ஒரு ஏக்கருக்கு தெளிக்கவும்.

பருத்தி அசுவினி ஏபிஸ் கோசிபி * நிஃம்ப்ஸ் மற்றும் முதிர்ந்த அசுவினி ஆகிய  இரண்டும் இலைகளிலிருந்து சாற்றை உறிஞ்சுகிறது.

* தேன் போன்ற திரவத்தைச் செடியின் மீது  சுரப்பதால் பளபளப்பான தோற்றத்துடன் காணப்படும்.

* கான்ஃபிடர் (இமிடாகுளோபிரிட் 17.8% SL) @ 1 மில்லி/லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.

* ‘லான்சர் கோல்டு’ (அசிபேட் 50% + இமிடாக்ளோபிரிட் 1.8% SP) ஒரு ஏக்கருக்கு 400 கிராம் தெளிக்கவும்.

பருத்தி மாவு பூச்சி பீனோகாக்கஸ் சோலெனோப்சிஸ் * தளிர்கள் புதர் போல தோற்றம்.

* பயிர் முன்கூட்டியே முதிர்ந்து விடும்.

* சூட்டி அச்சு பூஞ்சை உருவாக்கம் காணப்படும்.

* கான்ஃபிடர் (இமிடாகுளோபிரிட் 17.8% SL) @ 1 மில்லி/லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.

* ‘லான்சர் கோல்டு’ (அசிபேட் 50% + இமிடாக்ளோபிரிட் 1.8% SP) @ 400 கிராம் ஒரு ஏக்கருக்கு தெளிக்கவும்.

நோய் பாதுகாப்பு

நோய் காரண உயிரினம் அறிகுறிகள் மேலாண்மை
ஃபியூ சேரியம் வாடல் நோய்  ஃபியூசேரியம் ஆக்சிஸ்போரம் * செடி வாடுதல் .

* வாஸ்குலர் திசுக்கள் அழுகி கருப்பு நிறமாக மாறும்.

* வளர்ச்சி குன்றிருக்கும்.

* ‘பென்மைன்’ (கார்பென்டாசிம் 50% DF) @ 2 கிராம்/லிட்டர் தண்ணீரில் கலந்து மண்ணில் நனைக்கவும்.
வேர் அழுகல் ரைசோக்டோனியா பட்டாடிக்கோலா * செடியை எளிதாக வெளியே இழுக்க முடியும்.

* தாவரம் இறந்து விடும்.

* தளிர் வாடுதல்.

*‘பிளிடாக்ஸ்’ (காப்பர் ஆக்ஸி குளோரைடு 50% WP) @ 2 கிராம்/லிட்டர் தண்ணீரில்  வேர்ப்பகுதியை நனைக்கவும்.
ஆந்த்ராக்னோஸ் (அழுகல்)  கொல்லட்டோடிரைக்கம்  கோசிபி * காய்களில் கருப்பு நிற புள்ளிகள் காணப்படும்.

* பஞ்சு அதன் தரத்தை இழந்து கருப்பு நிறத்தில்  தென்படும்.

* கேப்ரியோ டாப் (மெட்டிராம் 55%+ பைராக்ளோஸ்ட்ரோபின் 5% WG) ஏக்கருக்கு 600 கிராம் செடியின் மீது தெளிக்கவும்.
ஆல்டர்னேரியா இலைக்கருகல் நோய் ஆல்டர்னேரியா மேக்ரோஸ்போரா * வட்ட வடிவத்தில் சிறிய ஒழுங்கற்ற புள்ளிகள் காணப்படும்.

* பின்னர் அந்த புள்ளிகள் ஒன்றிணைந்து கருகிவிடுகின்றன.

* ‘கேப்ரியோ டாப்’ (மெட்டிராம் 55% + பைராக்ளோஸ்ட்ரோபின் 5% WG) @ 1500 கிராம் ஒரு ஹெக்டருக்கு தெளிக்கவும்.

* ‘அமிஸ்டார் டாப்’ (அசோக்ஸிஸ்ட்ரோபின் 18.2% + டிஃபெனோகோனசோல் 11.4% SC) @  200 மில்லி/ ஏக்கருக்கு தெளிக்கவும்.

அறுவடை

பயிர் முதிர்ச்சியடையும் போது, பருத்தி பெரும்பாலும் கைமுறையாக அறுவடை செய்யப்படுகிறது. பருத்தி பயிர்கள் ஒத்திசைவான முதிர்ச்சியை வெளிப்படுத்தாததால், காய்கள் முழுமையாக வளர்ந்தவுடன் காலையில் அறுவடை செய்ய வேண்டும். பருத்தியின் மகசூல் பொதுவாக பாசன சூழலியலில் சராசரியாக ஹெக்டேருக்கு 2 முதல் 3 டன் மற்றும் கலப்பினங்களுக்கு 3.5 முதல் 4 டன் வரை ஒரு ஹெக்டேருக்கு கிடைக்கும்.

spot_img

மேலும் அறிய

தொடர்பில் இருக்க

அண்மை தகவல்களைப் பெற எங்களை சப்ஸ்கிரைப் பண்ணுங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்