HomeCropமாங்காய் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை

மாங்காய் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை

மாம்பழமானது அனகார்டியாசியே குடும்பத்தைச் சேர்ந்தது, இது உலகின் மிக முக்கியமான வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல பழங்களில் ஒன்றாகும். அதன் ஊட்டச்சத்து மதிப்பு, அட்டகாசமான மணம், சுவை மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் குணங்கள் ஆகியவற்றின் காரணமாக இது பழங்களின் ராஜா என்று அழைக்கப்படுகிறது.

பூச்சி மேலாண்மை

மாங்காய் தத்துப்பூச்சி

  • தத்துப்பூச்சி நாடு முழுவதும் மிகவும் தீவிரமான மற்றும் பரவலான பூச்சியாகக் கருதப்படுகின்றன.
  • இந்த பூச்சி செடிகளில் உள்ள சாறை உரிந்து குடிக்கும்.
  • கடுமையாக  துளையிடுதல் மற்றும் சாறு தொடர்ந்து வடிவத்தால், பாதிக்கப்பட்ட இலைகள் சுருண்டு காணப்படும்.

கட்டுப்படுத்தும் முறை

  • இந்த பூச்சியை கட்டுப்படுத்த 0.04% மோனோக்ரோடபாஸ்  என்ற மருந்தை தெளிக்க வேண்டும்.
  • பேனிகல் உருவாகும் ஆரம்ப கட்டத்தில் முதல் தெளிப்பு கொடுக்கப்பட வேண்டும். இரண்டாவது ஸ்ப்ரே பேனிகல்களின் முழு நீள நிலையில் மற்றும் பின்னர் மூன்றாவது தெளிப்பு காய்கள் அமைக்கப்பட்ட பிறகு.

மாவுப்பூச்சி

  • இது உங்கள் செடியில் வெள்ளை கம்பளமா இருக்கும். 
  • இலைகளில் சாறை உரிந்து குடித்து உயிர் வாழும்.
  • இது பூக்கள் மற்றும் காய்களை பாதிக்கும்.

கட்டுப்படுத்தும் முறை

  • இந்த பூச்சியை கட்டுப்படுத்த பப்ரோஃபெசின் 70% டி.எஸ் @ 12 கிராம்/ 10 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் செடி நன்கு நனையும்படி தெளிக்கவும்.

பழ ஈக்கள்

  • இந்த பூச்சி உங்கள் செடியில் உள்ள காய்களில் துளையிட்டு சாற்றை உரிந்து சேதப்படுத்தும். 
  • பாதிக்கப்பட்ட காய்கள் இளநிலையில் பழுக்க துவங்கும். இறுதியில் அழுகிவிடும்.
  • அதிக மகசூல் சேதங்களை உருவாக்கும்

கட்டுப்படுத்தும் முறை

  • இந்த பூச்சியை கட்டுப்படுத்த குயினால்பாஸ் 30 மில்லி மற்றும் நாட்டுச்சக்கரை 50 கிராம் கலந்து தெளிக்கவும்.
  • 100 மிலி மீத்தைல் யூஜினால் (0.1%) கொண்ட தொங்கும் பொறிகள் வைத்து கட்டுப்படுத்தலாம்.

தண்டு துளைப்பான்

  • உச்சியில் உள்ள கிளைகள்/தண்டுகளில் மேலிருந்து கீழ்நோக்கி வலை பின்னியிருக்கும்.
  • கிளைகள் குட்டை வளர்ச்சியுடன் பார்பதற்கு நுனியில் கொத்தாக தோற்றமளிக்கும்.

கட்டுப்படுத்தும் முறை

  • தாக்கப்பட்ட தளிர்களை வெட்டி அழிக்கலாம். 
  • கார்பரில் தெளித்தல் (0.2%) 7 நாட்கள் இடைவெளியில் 2 முறை தெளிக்கவும்.

பட்டைத்துளைப்பான்

  • கம்பளிப்பூச்சி மா மரத்தின் மீது பழுப்பு நிற பட்டு வலையை சுழற்றுகிறது, அதில் அவற்றின் கழிவுகள் மற்றும் மரத் துகள்கள் தென்படும்.
  • தண்டுக்கலில் துளைகள் தென்படும்.
  • மரப்பட்டைகளின் இடுக்கில் புழுக்கள் இருக்கும்.

கட்டுப்படுத்தும் முறை

  • இதை கட்டுப்படுத்த மோனோக்ரோடாபாஸ் என்ற மருந்தை 0.05% தெளிக்கவும்.

தண்டு துளைக்கும் வண்டு

  • மாமரத்தின்  தண்டுகளை துளைத்து, முழு மரத்தையும் சேதப்படுத்தும்.
  • கவனமாக இல்லாவிடில் முழு மரமும் இறக்க நேரிடும்.

கட்டுப்படுத்தும் முறை

  • எதிர்ப்பு திறன் கொண்ட ரகங்களை தேர்வு செய்ய வேண்டும்.
  • கார்போபீயூரான் என்ற குருணை மருந்தை வண்டுகள் துளையிட்ட துளைகளில் 5- 10 கிராம் எபிட்ரா அளவில் இட்டு, பிறகு அந்த துளையை அடைத்து விட வேண்டும்.

நோய் கட்டுப்பாடு

சாம்பல் நோய்

  • பாதிக்கப்பட்ட செடியின் இலைகளில் வெள்ளை நிற பூஞ்சானின் வளர்ச்சி தென்படும்.
  • பாதிக்கப்பட்ட காய்கள் வளர்ச்சியடையாமல் பிஞ்சிலே கொட்டிவிடும்.

கட்டுப்படுத்தும் முறை

  • இந்த நோயை கட்டுப்படுத்த கார்பென்டாசிம் என்ற மருந்தை 2 கிராம்/ ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து தெளிக்கவும்.

ஆந்த்ரக்னோஸ்

  • இலைகளில் சிறு சிறு கொப்பளங்கள் தென்படும்.
  • இளம் இலைகள் வாடி உதிர்ந்து விடும்.
  • பாதிக்கப்பட்ட பழங்களில் கருப்பு நிற புள்ளிகள் தோன்றும்.

கட்டுப்படுத்தும் முறை

  • சூடோமோனாஸ் ப்ளுரசென்ஸ் என்ற மருந்தை 5 கிராம்/1 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்கவேண்டும்.

பூக்கள் உருக்குலைவு நோய்

  • சிறு தளிர்கள் தடித்தும், இலைகள் சுருங்கியும் தோன்றும். சிறு தளிர்கள் வளர்ச்சி குன்றியும் குறுகியும் தோன்றும்.
  • பூக்கள் கொத்து கொத்தாக தென்படும்.மேலும் கருப்பு நிற பூஞ்சை உண்டாகும்.

கட்டுப்படுத்தும் முறை

  • நோயுற்ற தாவரங்களை அளிக்கவும்.
  • இதை தொடர்ந்து கார்பென்டாசிம் (0.1%) தெளிக்க வேண்டும்.

துரு நோய்

  • பாதிக்கப்பட்ட இலைகளில் சிகப்பு நிற சிறு புள்ளிகள் காணப்படும்.
  • இலைகள் வெள்ளை நிறமாக மாறிவிடும்.

கட்டுப்படுத்தும் முறை

  • இதை கட்டுப்படுத்த காப்பர் ஆக்ஸி கிளோரைடு என்ற மருந்தை 2 கிராம்/ லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.

 

spot_img

மேலும் அறிய

தொடர்பில் இருக்க

அண்மை தகவல்களைப் பெற எங்களை சப்ஸ்கிரைப் பண்ணுங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்