HomeCropமிளகாயில் உள்ள வெட்டுப்புழு மேலாண்மை

மிளகாயில் உள்ள வெட்டுப்புழு மேலாண்மை

வெட்டுப்புழுக்கள் வழுவழுப்பாகவும் அதன் புழுக்கள் கருமை நிறத்திலும் ஓரங்களில் பழுப்பு நிற குறுக்கு கோடுகளைக் கொண்டு காணப்படுவதால் தனித்தன்மை உடையதாக உள்ளது. இவை பொதுவாக மண்ணில் காணப்படும். இருப்பினும் ஒரு சில சிற்றினங்கள் புதிதாக நடப்பட்ட நாற்றுகள் மற்றும் மண்ணின் மேற்பகுதியில் காணப்படக்கூடிய சிறு செடிகளையும் உண்ணும்.

மிளகாய் வெட்டுப்புழு தாக்குதலின் அறிகுறிகள்

  • இளம் நாற்றுக்கள் அல்லது சிறு செடிகளின் வேர் மற்றும் இலைகளை இது முதன்மை உணவாக உட்கொள்ளும்..
  • பயிர்கள் வளர்ச்சி அடையும் போது இந்த வெட்டுப் புழுக்கள் செடிகளின் மென்மையான பகுதிக்குச் சென்று தாக்குகிறது. இவ்வகையான தாக்குதல் பெரும்பாலும் கோடை காலங்களில் நடைபெறுகிறது.
  • இந்த வகையான வெட்டுப் புழுக்கள் பெரும்பாலும் இரவிலேயே செடிகளின் இலைகளை உண்கின்றது. அதனால் பகல் பொழுதில் நம்மால் இந்த புழுக்களை பார்க்க முடிவதில்லை.

கட்டுப்படுத்தும் முறை

  • வயலை நன்கு உழுது மண்ணில் புதைந்துள்ள கூட்டுப் புழுக்களை வெளிக்கொணர்ந்து அழிக்க வேண்டும்.
  • இளம் நாற்றுகளை வயலில் ஓரிரு வாரங்கள் கழித்து நடவு செய்வதன் மூலம் இப்புலுக்களுக்கு தேவையான உணவு தடை செய்யப்படுகிறது. குறிப்பாக இலையுதிர் காலங்களில் இம்முறையை பின்பற்றலாம். ஏனெனில் இதன் முட்டைகள் இப்பருவத்தில் தான் குஞ்சு பொரிக்கும்.
  • குருதித்தூளை (blood meal) செடியை சுற்றி விடுவதன் மூலம் இவ்வகையான புழுக்கள் விரட்டப்படுகின்றன.
  • இரவு நேரங்களில் புழு கூட்டங்கள் மற்றும் முட்டை குவியல்களை விளக்கு ஒளியின் வெளிச்சத்தைப் பயன்படுத்தி சேகரித்து, சோப்பு நீரில் அமிழ்த்தி அழிக்கவும்.
  • வெட்டுப்புழுக்களுக்கு இயற்கையிலேயே எதிரான விளக்குப் பூச்சி போன்றவற்றை வளர்க்கலாம்.
  • இனக்கவர்ச்சி பொறி மற்றும் விளக்கு பொறி வைத்து பூச்சிகளை கவரலாம்.

செயற்கை முறையில் கட்டுப்படுத்துதல்

  • EM 1 பூச்சிக்கொல்லி என்பது கரையக்கூடிய மற்றும் சிறுமணி வடிவில் உள்ள பல்நோக்கு பூச்சிக்கொல்லியாகும். இதில் எமாமெக்டின் பென்சோயேட் 5% SG உள்ளது. இது இலைகளின் அடிப்பகுதியை தாக்கக்கூடிய புழுக்களுக்கு எதிராக செயல்படும் டிரான்ஸ்லமினார் செயலைக் கொண்டுள்ளது. இது தெளித்த 2 மணி நேரத்திற்குள் வேலை செய்கிறது மற்றும் 4 மணி நேரம் வரை மழை பெய்தாலும் தாங்கும் திறன் கொண்டது. ஏக்கருக்கு 80 கிராம் என்ற அளவில் இதனை பயன்படுத்தவும்.
  • கோரஜன் பூச்சிக்கொல்லி என்பது ஒரு பரந்த-ஸ்பெக்ட்ரம் பூச்சிக்கொல்லியாகும். இதிலுள்ள வேதியியல் கூறு குளோரான்ட்ரானிலிப்ரோல் 18.5% ஆகும், இது நீண்ட கால பாதுகாப்பையும் வழங்குகிறது. இந்த செறிவூட்டப்பட்ட திரவத்தை 0.4 மிலி/லிட்டர் அல்லது 60 மிலி/ஏக்கருக்கு உபயோகப்படுத்தலாம்.
  • அலிகா பூச்சிக்கொல்லி என்பது லாம்ப்டா சைஹாலோத்ரின் (9.5%) ZC மற்றும் தியாமெதோக்சம் (12.6%) ஆகியவற்றின் கலவையாகும், இது சாறு உறிஞ்சும் பூச்சிகளுக்கு எதிராக வேலை செய்கிறது. இது தொடர்பு மற்றும் செயல்பாட்டு போன்ற இரண்டு முறைகளிலும் செயல்படுகிறது. இந்த செறிவூட்டப்பட்ட திரவத்தை 0.5 மிலி/லிட்டர் அல்லது 80 மிலி/ஏக்கருக்கு உபயோகப்படுத்தலாம்.
  • ராயல் லார்வென்ட் என்பது ஒட்டுண்ணி நுண்ணுயிரிகளாலும், உயிருள்ள என்டோமோபதோஜெனிக் நூற்புழுக்களாலும் உருவாக்கப்பட்ட ஒரு மக்கும் பச்சை பூச்சிக்கொல்லியாகும். ஆரம்பத்தில் 7-10 நாட்களுக்கு ஒரு முறை இலைத் தெளிப்பானாகவும், பிறகு, ஒரு மாதத்திற்கு ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி என்ற விகிதத்தில் 1-2 முறையும் பயன்படுத்தவும்.

குறிப்பு: பயிர்கள் தொடர்பான அனைத்து வகையான தகவல்களையும் பெற, எங்கள் வலைத்தளமான https://kisanvedika.bighaat.com/ta ஐப் பார்வையிடவும் அல்லது எங்கள் கட்டணமில்லா எண்ணான 1800 3000 2434-ஐ பயன்படுத்தவும்.

spot_img

Read More

Stay in Touch

Subscribe to receive latest updates from us.

Related Articles