HomeCropமிளகாய் பயிரில் இலைப்பேன் மற்றும் சிலந்திப் பூச்சிகளின் மேலாண்மை

மிளகாய் பயிரில் இலைப்பேன் மற்றும் சிலந்திப் பூச்சிகளின் மேலாண்மை

இலைப்பேன் மற்றும் சிலந்திப் பூச்சிகள் மிளகாய் பயிர்களுக்கு குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தும் பொதுவான பூச்சிகள் ஆகும். பயிரின் மகசூல் மற்றும் தரத்தைப் பாதுகாக்க இந்தப் பூச்சிகளைக் கையாளுவது மிகவும் முக்கியம். இவை மிளகாய் பயிரை நாற்று நிலையிலிருந்து, இனப்பெருக்க நிலை வரை தாக்கும் சக்தி கொண்டது. பல்வேறு வகையான சிலந்திப் பூச்சிகளில், மஞ்சள் சிலந்தி பூச்சி பயிருக்கு அதிக அழிவை ஏற்படுத்துகிறது. இலைகள், தளிர்கள், மொட்டுகள் மற்றும் பழங்களில் இருந்து சாற்றை உறிஞ்சி மிளகாய் பயிருக்கு இலைப்பேன் மற்றும் சிலந்திப் பூச்சிகளின் வயது முதிர்ந்த மற்றும் நிம்ஃப் நிலை இரண்டும் சேதத்தை ஏற்படுத்துகின்றன. அவை பாதிக்கப்பட்ட தாவரங்களில் இலை சுருட்டு அறிகுறியையும் ஏற்படுத்துகின்றன.

பூச்சிகள் வெப்பமான மற்றும் வறண்ட காலநிலையில் செழித்து வளரும், பயிர் பூக்கும் மற்றும் பழம் காய்க்கும் நிலைகளில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தும். அதேசமயம், பயிர் வளர்ச்சியின் ஆரம்ப கட்டங்களில் இலைப்பேன் தாக்குதல்கள் மிகவும் கடுமையாக இருக்கும். சேதமானது ஒரு செடிக்கு பழங்களின் எண்ணிக்கையை குறைக்க வழிவகுக்குப்பதோடு அல்லாமல் பழத்தின் அளவுகளையும் குறைக்கும். இலைப்பேன் மற்றும் சிலந்திப் பூச்சிகளின் தாக்குதல் 20% முதல் 50% வரை மகசூல் இழப்பை மிளகாயில் ஏற்படுத்தும். அதுவே தாக்கம் அதிகமாக இருந்தால், 60-90% வரை மகசூல் இழப்பை ஏற்படுத்தும். இலைப்பேன் மற்றும் சிலந்திப் பூச்சிகள் “மிளகாயில் இலை சுருட்டு வைரஸைப்” பரப்பும் திசையனாக செயல்படுகிறது. இந்த பூச்சிகளை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்தாவிட்டால்,அவற்றின் தாக்குதலால் அவை முழு பயிருக்கும் அழிவை ஏற்படுத்தும்.

மிளகாய் பயிரில் இலைப்பேன் மேலாண்மை

இலைப்பேனின் அறிவியல் பெயர்: ஸ்கிருட்டோத்ரிப்ஸ் டார்சாலிஸ்  

மிளகாயில் இலைப்பேன் தாக்குதலின் அறிகுறிகள்

  • இவை இலையிலிருந்து சாற்றை உறிஞ்சி, இலைகளில் சுருக்கம் மற்றும் சுருட்டை ஏற்படுத்துகிறது.
  • இவை முக்கியமாக இலைகளின் அடிப்பகுதியில் காணப்படும்.
  • பாதிக்கப்பட்ட இலைகளில் நீளமான இலைக்காம்புகள் இருக்கும்.
  • அவை,இலையின் மேற்பரப்பை சிதைத்து “வெள்ளி அல்லது வெண்கல தோற்றத்தை” ஏற்படுத்துகின்றன.
  • பாதிக்கப்பட்ட பூ மொட்டுகள் உடையக்கூடியதாகவும், பின்னர் கீழே விழும் தன்மையுடனும் காணப்படும்.
  • தாக்குதலின் ஆரம்ப நிலையில் செடியின் வளர்ச்சி குன்றிவிடும்.
  • கடுமையான தொற்று ஏற்பட்டால், பூ உற்பத்தி மற்றும் பழங்கள் உற்பத்தி நிறுத்தி வைக்கப்படும். 
  • இலைப்பேன் வளரும் பழங்களை உண்கிறது. இதனால், மேற்பரப்பில் சிறிய வெளிர் பழுப்பு நிற வடுக்கள் உருவாகின்றன.

மிளகாயில் இலைப்பேனைக் கட்டுப்படுத்த தடுப்பு நடவடிக்கைகள்

  • மக்காச்சோளம்/சோளம் பயிரை ஊடுபயிராகப் பயிரிடுவது மிளகாய் பயிருக்கு நிழல் தருவதால், இலைப்பேன் வளர்ச்சியைக் குறைக்கிறது.
  • சோளம் சாகுபடிக்குப் பிறகு மிளகாய் வளர்ப்பதைத் தவிர்க்கவும். ஏனெனில், அது இலைப்பேன் தொற்றுக்கு ஆளாகும் நிலைமைகளை உருவாக்குகிறது.
  • இலைப்பேன் தாக்குதலைக் குறைக்க மிளகாய் மற்றும் வெங்காயத்தை கலப்புப் பயிராகும் பயிரிடுவதைத் தவிர்க்கவும்.
  • இலைப்பேனின் பெருக்கத்தை சரிபார்க்க, நாற்றுகளின் மேல் தண்ணீரை தெளிக்கவும்.
  • வயலில் இப்பூச்சியினால் அதிகமாக பாதிக்கப்பட்ட மிளகாய் செடிகளை அகற்றவும்.
  • நீலம் மற்றும் மஞ்சள் ஒட்டும் அட்டை பொறிகளை நிறுவுவது, இலைப்பேனை பெருமளவில் கட்டுப்படுத்த உதவும். 
  • பயிர் சேதத்தை குறைக்க வேப்ப எண்ணெய் தெளிக்கவும்.
  • சாமந்தி மற்றும் சூரியகாந்தி போன்ற பொறி பயிர்களை நடவு செய்து, முழுமையாக இப்பயிர்கள் இலைப்பேனால் தாக்கப்பட்டவுடன் அவற்றை அகற்றுவதால் இலைப்பேனால் ஏற்படும் சேதத்தை ஓரளவு குறைக்கலாம்.

பொருளாதார உச்சவரம்பு நிலை – ETL: 6 இலைப்பேன்/இலை அல்லது 10% பாதிக்கப்பட்ட பயிர்.

மிளகாயில் இலைப்பேன் மேலாண்மை

பொருளின் பெயர் தொழில்நுட்ப உள்ளடக்கம் அளவு (ஒரு லிட்டர் தண்ணீருக்கு)
இயந்திர மேலாண்மை
பாரிக்ஸ் மேஜிக் குரோமடிக் நீல அட்டை ஒட்டும் பொறி குரோமடிக் பொறி 8-10 தாள்கள்/ஏக்கர்
தபஸ் மஞ்சள் அட்டை ஒட்டும் பொறி 22 செ.மீ x 28 செ.மீ 6-8/ஏக்கர்
உயிரியல் மேலாண்மை
கேபீ த்ரிப்ஸ் ரேஸ் பூச்சிக்கொல்லி தாவரவியல் சாறுகள் 1-2 மில்லி/லிட்டர் தண்ணீர்
ஈகோனீம் பிளஸ் அசாடிராக்டின் 10000 ppm 3 மில்லி/லிட்டர் தண்ணீர்
கன்ட்ரோல் TRM உயிர்-பூச்சிக்கொல்லி தாவரவியல் சாறுகளுடன் கலந்து கரிம கலவை 1.5-2 மில்லி/லிட்டர் தண்ணீர்
இரசாயன மேலாண்மை
அக்டாரா பூச்சிக்கொல்லி தியாமெதோக்சம் 25% WG 0.5 கிராம்/லிட்டர் தண்ணீர்
டெலிகேட் பூச்சிக்கொல்லி  ஸ்பைனெட்டோரம் 11.7% SC 0.9 மில்லி/லிட்டர் தண்ணீர்
அலன்டோ பூச்சிக்கொல்லி தியாக்ளோபிரிட் 21.7% SC 1-2 மில்லி/லிட்டர் தண்ணீர்
பெனேவியா பூச்சிக்கொல்லி சயண்ட்ரானிலிப்ரோல் 10.26% OD 1.7-2 மில்லி/லிட்டர் தண்ணீர்
எக்ஸ்போனஸ் பூச்சிக்கொல்லி புரோஃபிரானிலைடு 300 G/L SC 0.2 மில்லி/லிட்டர் தண்ணீர்
ட்ரேசர் பூச்சிக்கொல்லி ஸ்பினோசாட் 44.03% SC 0.3-0.4 மில்லி/லிட்டர் தண்ணீர்
EM-1 பூச்சிக்கொல்லி எமாமெக்டின் பென்சோயேட் 5% SG 0.4 கிராம்/லிட்டர் தண்ணீர்
தகாஃப் பூச்சிக்கொல்லி டயஃபென்தியூரான் 47% + பைஃபென்த்ரின் 9.4% SC 1.25-1.5 மில்லி/லிட்டர்  தண்ணீர்
காத்யாயனி IMD-178 இமிடாக்ளோபிரிட் 17.8% SL 0.5 மில்லி/லிட்டர் தண்ணீர்
மொவன்டோ பூச்சிக்கொல்லி ஸ்பைரோடெட்ராமேட் 15.31% OD 2 மில்லி/லிட்டர் தண்ணீர்
பிரைம் கோல்டு பூச்சிக்கொல்லி  அசிட்டாமாபிரிட் 20% SP 0.1-0.2 கிராம்/லிட்டர் தண்ணீர்
ஷின்சென் பிளஸ் பூச்சிக்கொல்லி ஃபிப்ரோனில் 5% SC 1.6-2 மில்லி / லிட்டர் தண்ணீர்
கோத்ரேஜ் கிரேசியா பூச்சிக்கொல்லி ஃப்ளூஆக்சாமெட்டமைடு 10% EC 1 மில்லி/ லிட்டர் தண்ணீர் அல்லது 

160 மில்லி/ஏக்கர் 

தனுகா டிசைடு பூச்சிக்கொல்லி ஈடோஃபென்ப்ராக்ஸ் 6% + டயாஃபென்தியூரான் 25% WG 2.5 மில்லி/லிட்டர்  தண்ணீர்

இலைப்பேன் பற்றி மேலும் அறிய:  மிளகாயில் கருப்பு இலைப்பேனை எவ்வாறு நிர்வகித்து அதிக லாபம் பெறுவது என்பதை கிளிக் செய்யவும்.

குறிப்பு: பயிரில் இலைப்பேன் மற்றும் சிலந்திப் பூச்சிகள் இரண்டும் இருந்தால் ‘ட்ரேசர் பூச்சிக்கொல்லியை’ (ஸ்பினோசாட்) தெளிக்க வேண்டாம்.

மிளகாய் பயிரில் சிலந்திப் பூச்சிகள் மேலாண்மை

மஞ்சள் சிலந்தி பூச்சியின் அறிவியல் பெயர்: பாலிஃபேகோடார்ஷனாமஸ் லேட்டஸ் 

மிளகாயில் பூச்சி தாக்குதலின் அறிகுறிகள்

  • மிளகாய் இலைகள் கீழ்நோக்கி சுருண்டு சுருங்கும் தோற்றத்துடன் காணப்படும்.
  • இலைகள் உடையக்கூடியதாகி, இலைகளின் கீழ் மேற்பரப்பில் கொப்புளத் திட்டுகள் போன்றவை தோன்றும்.
  • பாதிக்கப்பட்ட இலைகள் தலைகீழான படகு வடிவ தோற்றத்தைக் காட்டுகின்றன.
  • சில சந்தர்ப்பங்களில், பாதிக்கப்பட்ட இலைகளின் இலைக்காம்பு நீண்டு காணப்படும். இது பெரும்பாலும் “எலி வால்” அறிகுறி என்று குறிப்பிடப்படுகிறது.
  • சில சந்தர்ப்பங்களில், பாதிக்கப்பட்ட இலைகள் அடர் பச்சை நிறத்தில் தோன்றும்.
  • கடுமையான தொற்று ஏற்பட்டால் வளர்ச்சி முனைகள் உலர்ந்து போதல், மொட்டுகள் உதிர்தல் மற்றும் இலைகள் உதிர்தல் போன்றவை ஏற்படும்.
  • தாவரத்தின் வளர்ச்சி குன்றி, அதன் இறப்புக்கு வழிவகுக்கிறது.

மிளகாயில் சிலந்திப் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதற்கான தடுப்பு நடவடிக்கைகள்

  • மிளகாய் பயிரில் 3-4 வரிசை மக்காச்சோளத்தை எல்லை பயிராக வைக்கலாம். இதன் மூலம் சிலந்தி பூச்சியின் வளர்ச்சியைக் குறைக்கலாம்.
  • பயிர் எச்சங்கள் மற்றும் களைகளை அகற்றி அழிப்பதன் மூலம் வயல் சுகாதாரத்தை பராமரிக்கவும்.
  • நீர் அழுத்தம் மற்றும் நீர் தேங்கும் சூழ்நிலைகளைத் தவிர்க்கவும்.
  • பாதிக்கப்பட்ட இலைகளை சரியான நேரத்தில் கத்தரித்தல் அல்லது அறிகுறிகளுடன் உள்ள தாவரங்களை அகற்றுதல்.
  • தெளிப்பான்கள் மூலம் மேல்நிலை நீர்ப்பாசனத்தை மேற்கொள்ளுங்கள்.
  • இரசாயனங்களின் அதிகப்படியான பயன்பாட்டைக் குறைக்கவும்.
  • பயிறுவகை பயிர்கள் மற்றும் வெள்ளரி போன்ற புரவலன் அல்லாத பயிர்களுடன் பயிர் சுழற்சியை மேற்கொள்ளுங்கள்.
  • தாக்குதலை ஆரம்பத்திலேயே கண்டறிய பயிரை தொடர்ந்து கண்காணித்தல் அவசியமாக இருக்கிறது.
  • வேப்ப விதை சாறு (NSKE) அல்லது வேப்ப எண்ணெயை 10 நாட்கள் இடைவெளியில் தெளிக்கவும்.
  • வேட்டையாடும் பூச்சி, ‘ஆம்பிலிசியஸ் ஓவாலிஸ்’ போன்ற இயற்கை வேட்டையாடும் பூச்சிகளைப் பயன்படுத்தவும்.

பொருளாதார உச்சவரம்பு நிலை – ETL: 5-10 சிலந்திப் பூச்சிகள்/இலை

மிளகாய் பயிரில் சிலந்திப் பூச்சிகள் மேலாண்மை

பொருளின் பெயர் தொழில்நுட்ப உள்ளடக்கம் அளவு (ஒரு லிட்டர் தண்ணீருக்கு)
உயிரியல் மேலாண்மை
ஈகோனீம் உயிர் பூச்சிக்கொல்லி அசாடிராக்டின் 3000 ppm 2.5-3 மில்லி/லிட்டர் தண்ணீர்
R மைட் பயோ அகாரிசைட் தாவர சாறுகள் 1-2 மிலி / லிட்டர் தண்ணீர்
டெர்ரா மைட் தாவர சாறுகள் 3-7 மில்லி/லிட்டர் தண்ணீர்
கிரீன் பீஸ் நீமோல் (10000 ppm) உயிரி வேப்ப எண்ணெய் பூச்சிக்கொல்லி வேப்ப எண்ணெய் சாறு (அசாட்ராக்டின்) 1-2 மில்லி/லிட்டர்  தண்ணீர்
நீம் – அசாடிராக்டின் 1500 ppm (0.15%) EC-பூச்சிக்கொல்லி அசாடராக்டின் 1500 ppm (0.15%) EC 2-2.5 மில்லி/லிட்டர்  தண்ணீர்
இரசாயன மேலாண்மை
ஓபரான் பூச்சிக்கொல்லி ஸ்பைரோமெசிஃபென் 240 SC (22.9% w/w) 0.3 மில்லி/லிட்டர் தண்ணீர்
மெய்டன் பூச்சிக்கொல்லி ஹெக்ஸிதியாசாக்ஸ் 5.45% EC 0.8-1 மில்லி/லிட்டர்

தண்ணீர்

EMA கோல்டு பூச்சிக்கொல்லி எமாமெக்டின் பென்சோயேட் 5% SG 0.5 கிராம்/லிட்டர் தண்ணீர்
ஷோகு பூச்சிக்கொல்லி டயாஃபென்தியூரான் 50% WP 0.8-1.2 மில்லி/லிட்டர் தண்ணீர்
கோத்ரேஜ் ஹனபி பைரிடாபென் 20% w/w WP 1 கிராம்/லிட்டர் தண்ணீர்
செட்னா பூச்சிக்கொல்லி ஃபென்பைராக்ஸிமேட் 5% SC 1-1.5 மில்லி/லிட்டர் தண்ணீர்
ஃபுளோட்டிஸ் பூச்சிக்கொல்லி புப்ரோஃபெசின் 25% SC 0.5-1.2 மில்லி/லிட்டர் தண்ணீர்
இன்ட்ரிபிட் பூச்சிக்கொல்லி  குளோர்ஃபெனாபைர் 10% SC 1.5-2 மில்லி/லிட்டர் தண்ணீர்
குனோய்ச்சி பூச்சிக்கொல்லி சைனோபிராஃபென் 30% SC 0.5-0.6 மில்லி/லிட்டர் தண்ணீர்
கீஃபுன் பூச்சிக்கொல்லி டோல்ஃபென்பைரைட் 15% EC 2 மில்லி/லிட்டர் தண்ணீர்
ஓமைட் பூச்சிக்கொல்லி ப்ராப்பர்கைட் 57% EC 3 மில்லி/லிட்டர் தண்ணீர்
மீத்ரின் பூச்சிக்கொல்லி ஃபென்ப்ரோபாத்ரின் 30% EC 0.5 மில்லி/லிட்டர் தண்ணீர்
மாஜிஸ்டர் பூச்சிக்கொல்லி ஃபெனாசாக்வின் 10% EC 2 மில்லி/லிட்டர் தண்ணீர்

முடிவுரை

மிளகாய் பயிர்களில் இலைப்பேன் மற்றும் சிலந்திப் பூச்சிகள் குறிப்பிடத்தக்க பூச்சிகளாகும். இந்த பூச்சிகளை திறம்பட நிர்வகிப்பதால் மிளகாயின் மகசூல் மற்றும் தரத்தை பராமரிக்க, நோய் பரவும் அபாயத்தை குறைக்க, பூச்சி சேதத்தின் பொருளாதார தாக்கத்தை குறைக்க உதவும். ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை நடைமுறைகளைக் கடைப்பிடிப்பது அவற்றின் மக்கள் தொகையை நிர்வகிக்கவும், மிளகாய் பயிர்களில் இந்தப் பூச்சிகளால் ஏற்படும் மகசூல் இழப்பைக் குறைக்க  உதவும்.

குறிப்பு

பொருளாதார வரம்பு நிலை (ETL) – அதிகரித்து வரும் பூச்சிகளின் எண்ணிக்கையைத் தடுக்க கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீர்மானிக்கப்பட வேண்டிய மக்கள்தொகை அடர்த்தி எண்ணிக்கை ஆகும்.

வயலில் ETL அளவைச் சரிபார்ப்பதன் மூலம், பூச்சியைக் கட்டுப்படுத்தவும், பூச்சியின் அபாயத்தைக் குறைக்கவும், எதிர்காலத்தில் பயிர் இழப்பைக் குறைக்கவும், மேலே குறிப்பிட்ட பூச்சி மேலாண்மை அணுகுமுறைகளை மேற்கொள்ளலாம்.

spot_img

மேலும் அறிய

தொடர்பில் இருக்க

அண்மை தகவல்களைப் பெற எங்களை சப்ஸ்கிரைப் பண்ணுங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்