பரப்பளவு மற்றும் உற்பத்தி ஆகிய இரண்டிலும் நிலக்கடலைக்கு அடுத்து முக்கியத்துவம் வாய்ந்த நாட்டின் இரண்டாவது இடத்தில் உள்ள பயிர் கடுகு ஆகும். வட இந்தியாவில், கடுகு எண்ணெய் மனித நுகர்வுக்கு பயன்படுத்தப்படுகிறது. கூடுதலாக, இது முடி வளர்ச்சிக்கு உகந்த மருந்து மற்றும் எண்ணெய்களைத் தயாரிக்கப் பயன்படுகிறது.
இது சோப்புத் தொழிலில் உயவூட்டுவதற்கு கனிம எண்ணெய்களுடன் பயன்படுத்தப்படுகிறது. கால்நடைகளுக்கு பச்சை தீவனமாக, இதனுடைய பச்சை தண்டுகள் மற்றும் இலைகளைப் பயன்படுத்தப்படுகிறது. இதில் எண்ணெய் எடுத்த பிறகு பிண்ணாக்கு வடிவில் கால்நடைகளுக்கு கொடுக்கப்படுகிறது.
கடுகு பயிர்
தாவரவியல் பெயர்: பிராசிக்கா ஜன்சியா
பொதுவான பெயர்: சரசன் (இந்தி), ராய் (பஞ்சாபி), கடுகு (தமிழ்), கடுக் (மலையாளம்), அவளு (தெலுங்கு).
பயிர் பருவம்: ராபி பருவம் (குளிர்கால பயிர்கள்)
பயிர் வகை: வயல் பயிர்
வகைகள்/கலப்பினங்கள்: பூசா மெஹெக், வருணா, NRC HB 101, RH 749, கிரிராஜ்.
மண் தேவைகள்
பொதுவாக, கடுகு பலதரப்பட்ட மண்ணில் நன்றாக செழித்து வளரும் தன்மையுடையது. குறிப்பாக நடுத்தர முதல் கனமான மண் வரையிலும் நன்றாக வளரும், மணல் கலந்த களிமண் மண் என்பது கடுகு சாகுபடிக்கு மிகவும் உகந்த மண் வகைப்பாடு ஆகும்.
காலநிலை தேவைகள்
கடுகு பயிர் வறண்ட மற்றும் குளிர்ச்சியான சுற்றுச்சூழல் நிலைகளில் நன்றாக வளர்கிறது. இதன் விளைவாக, இது ரபி பயிர் (குளிர் பருவகால பயிர்) என்று குறிப்பிடப்படுகிறது. 10°C முதல் 25°C வரையிலான வெப்பநிலையில் மற்றும் 625 முதல் 1000 மிமீ வரையிலான ஆண்டு மழைப்பொழிவு கடுகுக்கு உகந்த வளர்ச்சிக்கு ஏற்றது. மேலும், இது உறைபனி சேதத்திற்கு மிகவும் உணர்திறன் கொண்டது.
நிலம் தயாரித்தல்
பயிருக்கு சுத்தமான, நன்கு பொடியாக்கப்பட்ட, நுண்ணிய மற்றும் ஈரமான விதை படுக்கை தேவைப்படுகிறது. வயலில் ஈரப்பதம் குறைவாக இருந்தால், விதைப்பதற்கு முன் நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். பாசன நிலத்தில் பணிபுரியும் போது, முதலில் உழவை மண்ணைத் திருப்பும் கலப்பை கொண்டும், பின்னர் மூன்று முதல் நான்கு உழவுகளை தொடர்ந்து பலகைகள் மூலமும் உழ வேண்டும்.
மானாவாரிப் பகுதிகளில், பருவமழையின் போது ஒவ்வொரு உற்பத்தி மழைக்குப் பிறகும் டிஸ்க் ஹாரோவிங் செய்யப்பட வேண்டும். மேலும், மண் கட்டியாதல் மற்றும் ஈரப்பதம் இழப்பைத் தடுக்க ஒவ்வொரு ஹாரோயிங்கிற்குப் பிறகு எப்போதும் பலகைகளைப் பயன்படுத்த வேண்டும்.
விதைப்பு நேரம்
அக்டோபர் 10 ஆம் தேதி முதல் அக்டோபர் 25 ஆம் தேதி வரை கடுகுக்கு உகந்த விதைப்பு நேரமாகும், மறுபுறம், நெற்பயிர்களுக்கான நடவு காலம் பொதுவாக நவம்பர் முதல் வாரத்தில் இருந்து டிசம்பர் 15 ஆம் தேதி வரை நீடிக்கிறது. விதைக்கும் போது வெப்பநிலை 32°C -க்கு மேல் இருக்கக்கூடாது. மானாவாரி பகுதிகளில், வெப்பநிலை 32°C அதிகமாக இருந்தால் விதைப்பை ஒத்திவைப்பது நல்லது.
விதை விகிதம் மற்றும் இடைவெளி
பொதுவாக, கடுகு விதைகளை 45cm x 15cm இடைவெளியில் வரிசையாக விதைக்க வேண்டும். உகந்த விதை வீதம் 3.5-5 கிலோ/எக்டர் விதைகளை மணலில் அல்லது சாம்பலில் கலந்து விதைக்க பயன்படுத்தலாம். உவர் நிலத்தில், மேடு மற்றும் சால் அணுகுமுறையைப் பயன்படுத்துவது சாதகமானது.
விதைத்த மூன்று வாரங்களுக்குப் பிறகு, மெலிந்து விடுதல், அதாவது வரிசையில் அதிகப்படியான தாவரங்களை அகற்றுவதன் மூலம் சிறந்த தாவரங்களின் எண்ணிக்கையை பராமரிக்க முடியும்.
விதை நேர்த்தி
வெள்ளை துரு மற்றும் அடிச்சாம்பல் ஆகிய நோய்கள் கடுகில் மகசூல் இழப்பை ஏற்படுத்தலாம். இதை ரிடோமில் கோல்டு (மெட்டாலாக்சில் 4%+ மான்கோசெப் 64%) @ 6 கிராம்/கிலோ விதைக்கு விதை நேர்த்தி செய்வதன் மூலம் குறைக்கலாம். இதேபோல், டிரைக்கோடெர்மா நுண்ணுயிர் பூஞ்சானை 6 கிராம்/கிலோ விதைக்கு விதை நேர்த்திக்கு பயன்படுத்துவதன் மூலம் மண் மூலம் பரவும் பூஞ்சான நோய்களை கட்டுப்படுத்த முடியும். இருப்பினும், விதைகளை 1 கிலோ விதைகளுக்கு 1 மில்லி என்ற விகிதத்தில் காண்பிடார் (Imidacloprid 17.8% SL) கொண்டு விதை நேர்த்தி செய்வது பல விதை மூலம் பரவும் பூச்சி தாக்குதல்களைத் தடுக்க உதவுகிறது.
நீர்ப்பாசன அட்டவணை
ஒரு கடுகு பயிருக்கு 190 முதல் 400 மி.மீ பாசன நீர் தேவைப்படும். நீர் அவசியமாக தேவைப்படக்கூடிய நெருக்கடியான காலங்களில், பயிர் நீர் அழுத்தத்தால் மிகவும் பாதிக்கப்படும். கடுகு பாசனத்தின் மிக முக்கியமான நிலைகள் பூக்கும் முன் நிலை மற்றும் சிலிக்கா என்னும் காய் உருவாகும் நிலை ஆகும்.
உர அட்டவணை
தேவையற்ற உரங்களை உட்கொள்வதைத் தவிர்க்கவும், லாபத்தை அதிகரிக்கவும், மண் பரிசோதனையின் முடிவுகளின் அடிப்படையில் உரங்களை வழங்குவது நன்று. சரியான நேரத்தில் விதைப்பதற்கு ஹெக்டேருக்கு 80:40:40 கிலோ மற்றும் தாமதமாக விதைப்பதற்கு 100:50:50 கிலோ/எக்டர் என்ற விகிதத்தில் N, P மற்றும் K ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். அத்துடன் 40 கிலோ/எக்டருக்கு சல்பர், 25 கிலோ என்ற விகிதத்தில் ஜிங்க் சல்பேட்/எக்டர் மற்றும் போராக்ஸ் 10 கிலோ/எக்டர் என்ற விகிதத்தில் பரிந்துரைக்கப்படும். நீர்ப்பாசனப் பகுதிகளில், தழைச்சத்தில் பாதியை அடித்தள உரமாகவும், மீதி பாதியை விதைத்த 30 முதல் 45 நாட்களில் முதல் நீர்ப்பாசனத்தின்போதும் பயன்படுத்தவும். மானாவாரி பகுதிகளில், நடவு செய்யும் போது பரிந்துரைக்கப்பட்ட ஊட்டச்சத்துக்களின் அளவு முழுவதையும் பயன்படுத்தவும்.
இடை சாகுபடி நடைமுறைகள்
விதைத்த 15-20 மற்றும் 35-40 நாட்களில் கை மண்வெட்டியைப் பயன்படுத்தி இரண்டு முறை களை எடுக்க அறிவுறுத்தப்படுகிறது. இதேபோல், பென்டிமெத்தலின் 1 கிலோ/எக்டர் என்ற விகிதத்தில் களைகள் முளைப்பதற்கு முன் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. பயிர் சுழற்சி மற்றும் ஸ்பாட் பயன்பாடு அல்லது பாதுகாக்கப்பட்ட களைக்கொல்லி தெளிப்பு பாராகுவாட் @ 2.5 மி.லி/லிட்டர் தண்ணீர் பயன்படுத்துவதன் மூலம், முறையே ஓரோபாஞ்சியை வெற்றிகரமாக கட்டுப்படுத்த முடியும்.
பயிர் பாதுகாப்பு
பூச்சிகள்
1. அசுவினி
அறிகுறிகள்
- நிம்ஃப்கள் மற்றும் பெரிய பூச்சிகள் இரண்டும் இலைகள் மற்றும் பூக்களின் பாகங்களில் இருந்து சாற்றை உறிஞ்சப்பட்டு இலைகள் சுருண்டு அவற்றை சிதைக்கிறது.
- தீவிர தாக்குதலின் போது, இலைகள் கருகிய தோற்றத்தில் கரும்புகை பூசணம் ஏற்படுவதற்கு வழிவகுக்கும்.
மேலாண்மை
பூக்கும் நிலையில் ரோகோரை (டைமெத்தோயேட் 30% EC) @ 1.5 மி.லி/லிட்டர் தண்ணீர் என்ற அளவில் தெளிக்கவும்.
2. வைரமுதுகு அந்துப்பூச்சி
அறிகுறிகள்
- இலையின் மேற்பரப்பு திசுக்களை இளம் புழுக்களால் சுரண்டி உண்ணப்பட்டு, வெள்ளை நிறத் திட்டுகளை ஏற்படுத்தும்.
- இப்பூச்சியின் தாக்குதலின் ஆரம்ப காலத்தில், இலைகள் வாடி காணப்படும்.
- இப்பூச்சியின் எண்ணிக்கை அதிகரிக்கும் சமயத்தில், இலைகள் முழுவதும் புழுக்கள் உண்டு சேதப்படுத்தும்.
- வளர்ச்சியடைந்த புழுக்களால் காய்களில் ஊடுருவி வளரும் விதைகளை உண்ணும்.
மேலாண்மை
லார்வா வளர்ச்சியைக் கட்டுப்படுத்த, ஏக்கருக்கு 80 கிராம் என்ற அளவில் ப்ரோக்ளைம் (எமாமெக்டின் பென்சோயேட் 5% SG) தெளிக்கவும்.
3. இலை வலைப்பின்னல் புழு
அறிகுறிகள்
- ஆரம்பத்தில் குஞ்சு பொரித்த இளம் லார்வாக்கள் இளம் இலைகளின் பச்சையத்தை உட்கொள்வதற்கு முன், பழைய இலைகள், மொட்டுகள் மற்றும் காய்களுக்குச் சென்று, அவை வலைகளை உருவாக்கி வசிக்கின்றன.
- கடுமையாக சேதமடைந்த தாவரங்களில் இலை உதிர்தலை ஏற்படுகிறது.
- காய்களில் உள்ள விதைகளையும் உட்கொள்கின்றன.
மேலாண்மை
டாடாஃபென்(ஃபென்வலேரேட் 20 EC) @ 2.5 மிலி/லிட்டர் தண்ணீரில் தெளிக்கவும்.
4. வர்ணமயமான நாவாய்பூச்சி
அறிகுறிகள்
- தாக்கப்பட்ட செடிகள் வாடி காய்ந்து விடும்.
- கடுக்கை சேதப்படுத்த நாவாய்பூச்சி காயின் மேல் பசை போன்ற திரவத்தைச் சுரக்க செய்கிறது.
மேலாண்மை
ஆம்ப்லிகோ (குளோரான்ட்ரானிலிப்ரோல் 9.3% + லாரப்டா-சைஹாலோத்ரின் 4.6% ZC) @ 0.4 மிலி/லிட்டர் தண்ணீரில் தெளிப்பது பயனுள்ளதாக இருக்கும்.
5. கடுகு குளவி
அறிகுறிகள்
- லார்வாக்கள் இலைகளை உண்டு, துளைகளை ஏற்படுத்தி, பின்னர் இலைகளை எலும்புக்கூடு போன்ற அமைப்பாக மாற்றும்.
- தீவிர தாக்குதலின் போது, இலை உதிர்தலை ஏற்படுகிறது.
மேலாண்மை
எக்காலக்ஸ் (குயினோல்பாஸ் 25% EC) @ 2 மிலி/லிட்டர் தண்ணீர் என்ற அளவில் பயிர்களுக்கு தெளிக்கவும்.
நோய்கள்
1. வெள்ளை துரு நோய்
அறிகுறிகள்
- இலைகளின்அடிப்பரப்பில் வெண்மையான துரு துகள்கள் தோன்றும்.
- இந்த துகள்கள் ஒன்றிணைந்து இலையில் திட்டுகள் போன்ற தோற்றத்தை உருவாக்குகின்றன.
- ஸ்டேக் ஹெட் (stag head) உருவாக்கம், இந்த நோயின் சிறப்பியல்பு அறிகுறியாகும்.
மேலாண்மை
கான்டாஃப் (ஹெக்ஸகோனசோல் 5% SC) @ 2 மில்லி/லிட்டர் தண்ணீரில் அல்லது டில்ட் (புரோபிகோனசோல் 25% EC) @ 1 மில்லி/லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.
2. சாம்பல் நோய்
அறிகுறிகள்
இலைகளின் இருபுறங்களிலும் மற்றும் கடுகு செடியின் அனைத்து பகுதிகள் குறிப்பாக இலைகள், தண்டுகள் மற்றும் பழங்கள் மீது சாம்பல் நோய்யால் பாதிக்கப்படும்.
பாதிக்கப்பட்ட கடுகு பழம் சிறியதாக மற்றும் சுருக்கத்துடன் காணப்படும்.
மேலாண்மை
மெரிவோன் (ஃப்ளூக்சாபைராக்ஸாட் 250 G/L + பைராக்ளோஸ்ட்ரோபின் 250 G/L SC) @ 0.4 மில்லி/லிட்டர் தண்ணீர் அல்லது லூனா (ஃப்ளூபிராம் 17.7% + டெபுகோனசோல் 17.7% SC) @ 1 மில்லி/லிட்டர் என்ற விகிதத்தில் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.
3. ஆல்டர்னேரியா இலைப்புள்ளி
அறிகுறிகள்
- இலைகள், தண்டு மற்றும் காய் மீது சிறிய சாம்பல் புள்ளிகள் தோன்றும்.
- புள்ளிகள் பெரிதாகி, பலகை வடிவ மையத்தைக் காட்டுகின்றன.
மேலாண்மை
- ஸ்பார்ஷ் (மான்கோசெப் 75% WP) @ 2 கிராம்/லிட்டர் தண்ணீரில் கலந்து பொதுவாக பத்து நாட்கள் இடைவெளியில் தெளிக்கவும்.
- தீவிர தாக்குதலின் போது, நேட்டிவோ (டெபுகோனசோல் 50% + ட்ரைஃப்ளோக்ஸிஸ்ட்ரோபின் 25% WG) @ 0.5 கிராம்/லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.
அறுவடை மற்றும் கதிரடித்தல்
75% காய்கள் தங்க மஞ்சள் நிறமாக மாறியவுடன் அறுவடை செய்ய வேண்டும். சிதறல் இழப்பை குறைக்க, முந்தைய இரவின் பனியில் இருந்து காய்கள் ஈரமாக இருக்கும்போது, அதிகாலையில் அறுவடை செய்வது நல்லது. அறுவடை செய்த கடுக்கை ஒன்றாக சேர்த்து 5-6 நாட்கள் வெயிலில் உலர வைக்கவும். பின் உலர்ந்த கடுகு செடிகளைக் குச்சியால் அடிக்க வேண்டும்.
மகசூல்
சராசரியாக எக்டருக்கு 400 கிலோ மகசூலை எதிர்பார்க்கலாம். சாகுபடி மற்றும் மேலாண்மை நடைமுறைகளைப் பொறுத்து, மகசூல் 1000 கிலோ ஹெக்டேர் வரை அடையலாம்.