உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், பீகார் மற்றும் குஜராத் போன்ற இந்தியாவின் வடக்குப் பகுதிகளில் கோதுமை அதிகமாகப் பயிரிடப்படுகிறது. 2021 – 22 ஆம் ஆண்டில் மட்டும் 7,239,366.80 மெட்ரிக் டன் கோதுமை நம் நாட்டிலிருந்து 15,840.31 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
கோதுமை ஒரு குருவைச் சாகுபடி (குளிர் கால) பயிர் ஆகும். இது முக்கியமாக மணல் கலந்த களிமண்ணில் நன்கு விளைகிறது. கோதுமை ஒரு உலர்ந்த பயிர், எனவே இதற்கு நல்ல காற்றோட்டம் அவசியம்.
சிரம நிலை: கடினம்
விதை நேர்த்தி மற்றும் விதை தேர்வு
விதை தேர்வு செய்ய பல்வேறு வகையான கோதுமை வகைகள் உள்ளன. உள்ளூர் வகைகள், கலப்பின வகைகள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட வகைகள் உள்ளன. பிரபலமான வகைகளில் DBW 222, DBW 252, DDW 47, DBW 187, DBW 173, HD 2851, HD 2932, PBW 1 Zn, Unnat PBW 343, PDW 233, WHD 943, TL 2908 ஆகியவை அடங்கும். DBW 222 வகை பஞ்சாப், ஹரியானா, டெல்லி, உத்திர பிரதேசம், உத்தரகாண்ட், ஹிமாச்சலப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானின் சில பகுதிகளுக்கு உகந்தது. இந்த ரகம் துரு நோய் எதிர்ப்புத் திறனைக் கொண்டுள்ளது. DBW 252 ரகம் உத்திர பிரதேசம், பிஹார், ஜார்க்கண்ட், ஒடிசா, வங்காள தேசம், அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் சமவெளிப் பகுதிகளுக்கு ஏற்றது.
விதைகளை முன்கூட்டியே ஊறவைத்தல்
கோதுமை விதைகளை அதிகம் ஊறவைக்கத் தேவையில்லை. எட்டிலிருந்து 12 மணி நேரம் ஊற வைப்பது போதுமான அளவு ஆகும். அதிக நேரம் ஊற வைப்பதால் புஞ்சை வளர்ச்சியை ஏற்படுத்தி விதைகள் அழுகிப் போகும். பயிரிடுவதற்கு ஏற்றதாக இருக்காது.
விதை நேர்த்தி
இடம், தட்பவெப்ப நிலை, மண்ணின் நிலை போன்றவற்றைப் பொறுத்து பல்வேறு வகையான கோதுமை விதை நேர்த்தி செய்யப்படுகிறது. பொதுவாக சில விதைகள் பூஞ்சைக்கொல்லிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகளைக் கொண்டு விதை நேர்த்தி செய்யப்படுகிறது. ஈரப்பதம் உள்ள இடங்களில் அழுகல், கருகல் மற்றும் கரிப்பூட்டை போன்ற நோய்கள் விதைகளைத் தாக்க வாய்ப்பு உள்ளது. கோதுமை உதிரி கரிப்பூட்டை நோய்க்கு, விதையை டெபுகோனசோல் 1 கிராம்/கிலோ விதை அல்லது பாவிஸ்டின் 2.5 கிராம்/கிலோ கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும். ஒரு ட்ரம் பயன்படுத்தி விதை நேர்த்தி செய்யலாம்.. டிரைக்கோடெர்மா விரிடி ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் அளவு பயன்படுத்தினால் துரு நோயின் தீவிரத்தைக் கட்டுப்படுத்தலாம்.
கோதுமைக்கான நாற்றங்கால் படுக்கை தயாரித்தல்
கோதுமைக்கு அரிசி போன்ற நாற்றங்கால் அவசியம் இல்லை. நேரடி விதைப்பு பெரும்பாலும் நடைமுறையில் உள்ளது. கோதுமைக்காக வயல் தயார் செய்யப்பட்டு விதைகள் பொதுவாக நேரடியாக உழுத நிலத்தில் வீசப்படும். இருப்பினும், சமீபகாலமாக வழக்கத்திற்கு மாறான வரி விதைப்பு முறையும் நடைமுறையில் உள்ளது.
கோதுமைக்கான நில தயாரிப்பு முறை
நிலத்தை இரண்டு முறை இரும்பு கலப்பை கொண்டும், மூன்று முறை உழவு இயந்திரம் கொண்டும் நேர்த்தியாக உழவு செய்ய வேண்டும். கடைசியாக உழவு செய்யும் போது 12 டன் பண்ணை எருவை 5 கிலோ உயிர் உரம், 5 கிலோ டிரைக்கோடெர்மா மற்றும் 5 கிலோ சூடோமோனாஸ் ஒரு ஹெக்டேருக்கு சேர்க்கவும்.
கோதுமைக்கு உகந்த மண் வகை
கோதுமைக்குக் களிமண் அல்லது நல்ல அமைப்பு மற்றும் மிதமான நீர் தேக்கும் திறன் கொண்ட களிமண் தேவைப்படுகிறது. மிகவும் நுண்துளைகள் மற்றும் அதிகப்படியான வடிகால் கொண்ட மண்ணைத் தவிர்ப்பது நல்லது.
முடிவுரை
கோதுமை நாடு முழுவதும் பயிரிடப்படும் கடினமான பயிர். கோதுமை ஒரு முக்கிய பிரதான பயிராகும், இது விவசாயிகளுக்கு அதிக லாபத்தை அளிக்கிறது.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
- பிரபலமாக பயன்படுத்தப்படும் கோதுமை இரகங்களைப் பரிந்துரைக்கவும்?
மாநிலம் | கோதுமை இரகங்கள் |
உத்தர பிரதேசம் | டிபிடபல்யூ 16, டிபிடபல்யூ 17, டிபிடபல்யூ 252, பிபிடபல்யூ 502, பிபிடபல்யூ 343, டபல்யூஎச் 542, யுபி 2554, பிடிடபல்யூ 291, ஜிடபல்யூ 366, எச்ஐ 8381, எச்டி 8627. |
ராஜஸ்தான் | ராஜ் 1482, ராஜ் 3077, ராஜ் 3765, ராஜ் 3777, ராஜ் 4037, ராஜ் 4083, ராஜ் 4079, டிபிடபல்யூ 222, டிபிடபல்யூ 296, டிபிடபல்யூ 327 |
பஞ்சாப் | உன்னட் பிபிடபல்யூ 343, உன்னட் பிபிடபல்யூ 550, பிபிடபல்யூ 725, பிபிடபல்யூ 677, எச்டி 3086, பிபிடபல்யூ 660, டிபிடபல்யூ 222 |
ஹரியானா | டிபிடபல்யூ 222, டிபிடபல்யூ 47, கரண் வந்தன ( டி பிடபல்யூ 187), டபல்யூபி 2, டிபிடபல்யூ 110 |
- கோதுமை விதைகளை எவ்வளவு நேரத்திற்கு முன் ஊறவைக்க வேண்டும்?
விதைகளை 8-12 மணி நேரம் ஊற வைக்கலாம்.
- கோதுமைக்கு விதை நேர்த்தி செய்வது எப்படி?
விதைகளை விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன், ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் என்ற அளவில் கார்பன்டாசிம் அல்லது திராம் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
- கோதுமைக்கு பரிந்துரைக்கப்படும் உரங்களின் அளவு என்ன?
கோதுமைக்கான உர பரிந்துரை அளவு 32:16:16 கிலோ/ஏக்கர். வயலில் பயன்படுத்த கூடிய அளவு கீழே உள்ள அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ளது.
ஊட்டச்சத்து | உரங்கள் | அளவு (ஒரு ஏக்கருக்கு) |
இயற்கை/கரிம | தொழு உரம்/உரம் | 5 டன் |
தழை சத்து | யுரியா (அல்லது) | 70 கிலோ |
அமோனியம் சல்பேட் | 155 கிலோ | |
மணி சத்து | சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் (அல்லது)) | 101 கிலோ |
டபுள் சூப்பர் பாஸ்பேட் | 51 கிலோ | |
சாம்பல் சத்து | மியூரேட் ஆஃப் பொட்டாஷ் (அல்லது) | 27 கிலோ |
சல்பேட் ஆஃப் பொட்டாஷ் | 32 கிலோ | |
ஜிங்க் (ஜிங்க் பற்றாக்குறை மண்)
|
அன்ஷுல் ஜிங்க் EDTA-FS (ZN 12%) நுண்ணூட்டச் சத்து | இலைவழி தெளிப்பு: 0.5 – 1 கிராம்/லிட்டர்
மண்ணுக்கானப் பரிந்துரை: 10 கிலோ |
- களை முளைப்பதற்கு முன்பு எந்த களைக்கொல்லி கோதுமை பயிருக்கு பயன்படுத்தலாம்?
BACF PLOD களைக்கொல்லி (பெண்டிமெத்தலின் 30% EC) என்னும் களைக்கொல்லியை விதை விதைத்து 0-3 நாட்களுக்கு பிறகு 1000 மில்லி/ஏக்கர் அளவில் தெளிக்கவும்.