HomeCropதக்காளிப் பயிர்களை பூக்கும் கட்டத்தில் தாக்கும் பூச்சிகள் மற்றும் மேலாண்மை!

தக்காளிப் பயிர்களை பூக்கும் கட்டத்தில் தாக்கும் பூச்சிகள் மற்றும் மேலாண்மை!

தக்காளி சாகுபடி செய்து சிறந்த மகசூல் பெற, அவற்றைப் பூச்சிகளிடம் இருந்து காப்பது மிகவும் முக்கியமான ஒன்று. நாம் பயிர்களை என்னதான் கவனமாகப் பார்த்துக்கொண்டு வந்தாலும், அவற்றுக்கு முழுமையான பூச்சி பாதுகாப்பு வழங்குவது என்பது மிகவும் கடினமானது. எனவே இங்குத் தக்காளி பயிரைப் பூக்கும் கட்டத்தில் தாக்கும் பூச்சிகள், அவற்றின் அறிகுறிகள், தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மேலாண்மை குறித்துப் பார்ப்போம்.

பூக்கும் கட்டத்தில் உங்கள் தக்காளி பயிர்களை பாதிக்கக்கூடிய பொதுவான பூச்சிகள்

இலைப்பேன்

நோய்க்காரணி: த்ரிப்ஸ் தபாசி

அறிகுறிகள்

  • இந்த சிறிய பூச்சிகள் உங்கள் தக்காளி செடிகளின் இலைகள் மற்றும் பழங்களை உண்கின்றன.
  • அவை உங்கள் தாவரங்களுக்கு கூடுதல் தீங்கு விளைவிக்கும் தக்காளி புள்ளிகள் கொண்ட வாடல் நோய் வைரஸை (TOSPO) பரப்பலாம்.

கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்

  • டெலிகேட் பூச்சிக்கொல்லியை (ஸ்பைனெட்டோரம் 11.7% SC) ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1 மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்கவும் (அல்லது)
  • ஒரு லிட்டர் தண்ணீருக்கு 0.4 முதல் 0.6 மில்லி என்ற விகிதத்தில் அட்மியர் பூச்சிக்கொல்லியை (இமிடாகுளோபிரிட் 70% WG) பயன்படுத்தவும் (அல்லது)
  • ஒரு லிட்டர் தண்ணீருக்கு 0.5 முதல் 0.8 மில்லி என்ற விகிதத்தில் கிரேசியா பூச்சிக்கொல்லியை (ஃபுளூக்சாமெட்டமைடு 10% EC) பயன்படுத்தலாம்.

அசுவினி

நோய்க்காரணி: மைசஸ் பெர்சிகே, ஏபிட்ஸ் காசிபி

அறிகுறிகள்

  • இப்பூச்சிகள் தக்காளி செடிகளின் மென்மையான இலைகளிலிருந்து சாற்றை உறிஞ்சும்.
  • சாற்றை உறிஞ்சுவதன் விளைவாக, அவை சிதைந்த மற்றும் குன்றிய இலைகளை உருவாக்குகின்றன.

கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்

  • ரோகோர் பூச்சிக்கொல்லியை (டைமெத்தோயேட் 30% EC) ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1 முதல் 2 மில்லி என்ற அளவில் கலந்து பயன்படுத்தவும் (அல்லது)
  • ஒரு லிட்டர் தண்ணீருக்கு 0.75 முதல் 1 மில்லி என்ற விகிதத்தில் கான்ஃபிடர் சூப்பர் பூச்சிக்கொல்லியை (இமிடாக்ளோபிரிட் 30.5% SC) தெளிக்கவும் (அல்லது)
  • மூவென்டோ எனர்ஜி பூச்சிக்கொல்லியை (ஸ்பைரோடெட்ராமேட் 11.01%+ இமிடாக்ளோபிரிட் 11.01% SC) ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1 முதல் 2 மில்லி என்ற அளவில் பயன்படுத்தவும்.

சிவப்பு சிலந்திப் பூச்சிகள்

நோய்க்காரணி: டெட்ரானிக்கஸ் ஸ்பீசியஸ்.

அறிகுறிகள்

  • இந்த பூச்சிகள் இலைகளில் இருந்து சாற்றை உறிஞ்சி, கீழ் இலை மேற்பரப்பில் சிவப்பு-பழுப்பு மற்றும் வெண்கல நிற திட்டுகளுக்கு வழிவகுக்கும்.
  • இதன் கடுமையான தாக்குதலில் இலைகள், பூக்கள் மற்றும் பழங்களில் வலைகளை பின்னுகின்றன. இதன் விளைவாக அவை வாடிய, உலர்ந்த தோற்றத்துடன் இருக்கும்.

கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்

  • ஒரு லிட்டர் தண்ணீருக்கு 0.5 முதல் 1 மில்லி என்ற விகிதத்தில் ஃப்ளோராமைட் பூச்சிக்கொல்லியை (பைஃபெனசேட் 240 SC) பயன்படுத்தவும் (அல்லது)
  • பைரோமைட் பூச்சிக்கொல்லியை (ஃபென்பைராக்சிமேட் 5% EC) ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1 முதல் 1.25 மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்கவும் (அல்லது)
  • மாஜிஸ்டர் பூச்சிக்கொல்லியை (ஃபெனாசாகுவின் 10% EC) ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1 மில்லி என்ற அளவில் பயன்படுத்தவும்.

வெள்ளை ஈ

நோய்க்காரணி: பெமிசியா தபாசி

அறிகுறிகள்

  • வெள்ளை ஈக்கள் தக்காளி செடிகளுக்கு குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தும். இதன் விளைவாக சிதைந்த மற்றும் ஒழுங்கற்ற வடிவ இலைகள் உருவாகின்றன.
  • இலைகள் கீழ்நோக்கிச் சுருண்டு, காய்ந்து, செடிகள் குட்டையாகி, குறுகலான இடைக்கணுக்களுடன் புதர்போல் ஆகலாம்.

கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்

  • ஒரு லிட்டர் தண்ணீருக்கு 0.5 முதல் 0.75 கிராம் என்ற அளவில் பெகாசஸ் பூச்சிக்கொல்லியை (டயாஃபென்தியூரான் 50% WP) தெளிக்கவும் (அல்லது)
  • லான்சர்கோல்டு பூச்சிக்கொல்லியை (அசிபேட் 50% + இமிடாக்ளோபிரிட் 1.8% SP) ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1.5 முதல் 2 கிராம் என்ற அளவில் பயன்படுத்தவும் (அல்லது)
  • ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1 மில்லி என்ற விகிதத்தில் கான்ஃபிடார் பூச்சிக்கொல்லியை (இமிடாகுளோபிரிட் 17.8% SL) பயன்படுத்தவும்.

மாவுப்பூச்சி

நோய்க்காரணி: ஃபெர்ரோசியா விர்கேட்டா

அறிகுறிகள்

  • மாவுப்பூச்சி சிறிய பூச்சிகள் ஆகும். அவை தக்காளி செடியின் கிளைகள் மற்றும் இலைகளில் வெள்ளையாக பஞ்சு போன்ற பொருளை உருவாக்குகின்றன.
  • இவை ஒரு தேன்பனி போன்ற திரவத்தை சுரக்கின்றன. இது எறும்புகள் போன்ற பிற பூச்சிகளை ஈர்க்கிறது மற்றும் தாவரத்தில் கரும்பூஞ்சான் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
  • இவை தக்காளிச் செடியின் சாற்றையும் உண்பதால் அவற்றை மேலும் வலுவிழக்கச் செய்கின்றன.

கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்

  • டிரான்ஸ்ஃபார்ம் பூச்சிக்கொல்லியை (சல்போக்ஸாஃப்ளோர் 21.8% SC) ஒரு லிட்டர் தண்ணீருக்கு 0.75 மில்லி என்ற அளவில் தெளிக்கவும் (அல்லது)
  • டான்டோட்சு பூச்சிக்கொல்லியை (க்ளோதியனிடின் 50% WDG) ஒரு லிட்டர் தண்ணீருக்கு 0.5 கிராம் என்ற அளவில் தெளிக்கவும் (அல்லது)
  • ஜம்ப் பூச்சிக்கொல்லியை (ஃபிப்ரோனில் 80% WG) ஒரு லிட்டர் தண்ணீருக்கு 0.3 கிராம் என்ற அளவில் தெளிக்கவும்.

ஊசி துளைப்பான்

நோய்க்காரணி: டியூட்டா அப்சல்யூட்டா

அறிகுறிகள்

  • இந்த ஊசி துளைப்பான்கள், இலைகள் மற்றும் தண்டுகளை, தக்காளி செடிகளின் மேற்பரப்பு திசுக்கள் மற்றும் பூக்களில் உள்ளவற்றை சுனண்டுவதன் மூலம் தாக்குகின்றன.
  • இவை இலைகளின் அடிப்பகுதியில் முட்டையிடும்.
  • இவற்றால் ஏற்படும் சேதம், மேல் மற்றும் கீழ் இலை மேற்பரப்புகளுக்கு இடையே சுரண்டிய வழிப்பாதையையும், இப்புழுவின் கழிவுகளைக் கொண்டு நிரப்பப்பட்ட தெளிவான திட்டுகளை ஏற்படுத்துகிறது.
  • இவை தண்டுகளையும் துளையிட்டு சேதப்படுத்துகின்றன.

கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்

  • பெல்ட் எக்ஸ்பர்ட் பூச்சிக்கொல்லியை (ஃப்ளூபென்டியாமைடு 19.92% + தியாகலோபிரிட் 19.92% SC) ஒரு லிட்டர் தண்ணீருக்கு 0.3 முதல் 0.5 மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்கவும் (அல்லது)
  • வாயேகோ பூச்சிக்கொல்லியை (டெட்ரானிலிப்ரோல் 200 கிராம்/லி SC) ஒரு லிட்டர் தண்ணீருக்கு 0.5 மில்லி என்ற அளவில் தெளிக்கவும் (அல்லது)
  • ஒரு ஏக்கருக்கு 25 மில்லி என்ற அளவில் எக்ஸ்போனஸ் பூச்சிக்கொல்லியை (ப்ரோப்லானிலைடு 300 G/L SC) தெளிக்கவும்.

இலை துளைப்பான்

நோய்க்காரணி: லிரியோமைசா ட்ரைஃபோலி

அறிகுறிகள்

  • இலை துளைப்பான் தக்காளி செடியின் இலைகளைத் தாக்கி, முறுக்கப்பட்ட புழு போன்ற தாக்குதலின் அறிகுறியை உருவாக்குகின்றன.
  • இவற்றால் இலைகள் சுருண்டு, காய்ந்து, இறுதியில் உதிர்ந்துவிடும்.

கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்

  • சான்வெக்ஸ் SP பூச்சிக்கொல்லியை (கார்டாப் ஹைட்ரோகுளோரைடு 50% SP) ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1.5 முதல் 2 கிராம் என்ற அளவில் தெளிக்கவும் (அல்லது)
  • ஆம்ப்லிகோ பூச்சிக்கொல்லியை (குளோரான்ட்ரானிலிப்ரோல் 10%+ லாம்ப்டாசிஹாலோத்ரின் 5% ZC) ஒரு லிட்டர் தண்ணீருக்கு 0.5 முதல் 0.6 மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்கவும் (அல்லது)
  • வோலியம் டார்கோவை (குளோரான்ட்ரானிலிப்ரோல் 4.3% + அபாமெக்டின் 1.7% w/w sc) ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1 மி.லி. என்ற விகிதத்தில் தெளிக்கவும்.

வேர் முடிச்சு நூற்புழுக்கள்

நோய்க்காரணி: மெலாய்டோகைனே இன்காக்னிடா

அறிகுறிகள்

வேர் முடிச்சு நூற்புழுக்கள் தாவரத்தின் வேர்களில் ஊடுருவி, வேர் முடிச்சுகள் , குன்றிய வேர் வளர்ச்சி மற்றும் ஊட்டச்சத்து குறைவை ஏற்படுத்துகின்றன. இறுதியில் இது தாவரத்தின் மரணத்திற்கு வழிவகுக்கும்.

கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்

  • நடவு செய்த 55 முதல் 60 நாட்களில் ஒரு ஏக்கருக்கு 250 முதல் 500 மில்லி வீதம் வேலம் பிரைம் நெமட்டிசைடை (ஃப்ளூபிரம் 34.48% SC) பயன்படுத்தவும் (அல்லது)
  • மாற்றாக, உயிர்-பூச்சிக்கொல்லிகளால் தொழு உரத்தை செறிவூட்டி மண்ணில் இடுவது நன்மை பயக்கும்.

உயிர் பூச்சிக்கொல்லிகளின் அளவு:

  • பேசிலோமைசஸ் லிலாசினஸ் 2 முதல் 3 கிலோ/டன் தொழு உரம் (அல்லது)
  • சூடோமோனாஸ் ஃப்ளோரசன்ஸ் 2 முதல் 3 கிலோ/டன் தொழு உரம் (அல்லது)
  • டிரைக்கோடெர்மா ஹார்சியானம் அல்லது டிரைக்கோடெர்மா விரிடு 2 முதல் 3 கிலோ/டன் தொழு உரம்

மேலே குறிப்பிட்டுள்ள உயிர் பூச்சிக்கொல்லிகளை தொழு உரத்துடன் கலந்து 15 நாட்களுக்கு 25-30% ஈரப்பதத்தில் நிழலில் உலர வைக்கவும். இதனால் நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் பெருகும். தக்காளி நாற்றுகளை நடவு செய்வதற்கு முன் இந்த கலவையைப் பயன்படுத்துங்கள்.

குறிப்பு:  தக்காளி செடிகளின் வெற்றிகரமான சாகுபடி வளர்ச்சிக்கு பூக்கும் கட்டத்தில் பூச்சிகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பது மிகவும் முக்கியமானது. பூச்சி சேதத்தின் அறிகுறிகளை கண்டறிய, தாவரங்களை தவறாமல் கண்காணித்து, பரிந்துரைக்கப்பட்ட பூச்சிக்கொல்லிகளை உடனடியாக பயன்படுத்த வேண்டும். தயாரிப்பு லேபிள்களில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும், பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தும்போது தகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் நினைவில் கொள்ளுங்கள்.

முடிவுரை

வெற்றிகரமான தக்காளி சாகுபடி அறுவடைக்கு பூக்கும் கட்டத்தில் பயனுள்ள பூச்சி கட்டுப்பாடு முக்கியமானது. நிபுணர்களால் பரிந்துரைக்கப்பட்ட இந்த உத்திகளைச் செயல்படுத்துவதன் மூலமும், மருந்தளவு வழிமுறைகளை கவனமாகப் பின்பற்றுவதன் மூலமும், நீங்கள் உங்கள் தக்காளி செடிகளை பாதுகாத்து ஆரோக்கியமான வளர்ச்சியை உறுதி செய்யலாம்.

spot_img

Read More

Stay in Touch

Subscribe to receive latest updates from us.

Related Articles