HomeCropநெற்பயிரை தாக்கும் முக்கிய பூச்சிகள்

நெற்பயிரை தாக்கும் முக்கிய பூச்சிகள்

உலக மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு அரிசி பிரதான உணவாக உட்கொள்கின்றனர். பூச்சித் தாக்குதலால் விளைச்சல் இழப்பு, விளைச்சலின் தரம் மற்றும் அளவு குறைகிறது. நெல்லில் சராசரியாக 22% மகசூல் இழப்பு பூச்சித் தாக்குதலால் ஏற்படுகிறது. பூச்சிகள் நெல் பயிரின் வளர்ச்சியின் வெவ்வேறு நிலைகளை உணவாக உட்கொண்டு, அவற்றின் வாழ்நாளை நிறைவு செய்கின்றன. பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பூச்சிகளில் பிரவுன் பிளாண்ட் ஹாப்பர் (புகையான்), இலை சுருட்டு புழு, இலை தத்துப்பூச்சி, தண்டு துளைப்பான், இலைப்பேன் மற்றும் கதிர் நாவாய்/குண்டி பூச்சிகள் ஆகியவை நெல் உற்பத்திக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன.

அறிவியல் பெயர்: ஒரைசா சட்டைவா 

நெற்பயிரை தாக்கும் முக்கிய பூச்சிகள்

  1. நெல் தண்டு துளைப்பான்

நெல் தண்டு துளைப்பான் நெல்லின் மிக முக்கியமான பூச்சிகளில் ஒன்றாகும். ஏனெனில் இது முன்கூட்டியே முதிர்ச்சி அடையும் வகை நெற்பயிர்களில் 20% மகசூல் இழப்பையும், பின் முதிர்ச்சி அடையும் வகை நெற்பயிர்களில் 80% மகசூல் இழப்பையும் ஏற்படுத்துகிறது. இது மானாவாரி சதுப்பு நில நெற்பயிர் வயல்களுக்கு அதிக அழிவை ஏற்படுத்துகிறது. 6 வகையான தண்டு துளைப்பான்கள் நெற்பயிரை தாக்குகின்றன. அதில், மஞ்சள் தண்டு துளைப்பான் நெற்பயிருக்கு மிக  அதிக சேதத்தை ஏற்படுத்துகிறது.

அறிவியல் பெயர்: சிர்போபேகா இன்ஸெர்டுலஸ் 

பூச்சி தாக்கும் நிலைகள்: நாற்றங்கால், தாவர மற்றும் இனப்பெருக்க நிலை

சேதத்தை ஏற்படுத்தும் பூச்சி நிலை: லார்வா

அறிகுறிகள்

  • நெற்பயிரின் தூர்களைத் தாக்கி  தண்டுகளை உட்கொள்வதால், அதன் நடுப்பகுதி காய்ந்துவிடுகிறது. இதுவே “குருத்து காய்தல்” எனப்படுகிறது.
  • தாக்கிய நெற்பயிரில் ‘வெண்கதிர்’ அல்லது ‘இறந்த கதிர்’ போன்ற தோற்றத்தை இனப்பெருக்கம் காலத்தில் ஏற்படுத்துகிறது.

நெற்பயிரில் தண்டு துளைப்பான் தாக்குதலுக்கு சாதகமான சூழ்நிலை

அதிக நைட்ரஜன் உரமிடுதல், தாமதமாக நடப்பட்ட பயிர் மற்றும் முந்தைய பருவத்தின் எஞ்சிய குச்சிகள் போன்றவை தண்டுத் துளைப்பான்களின் பெருக்கத்திற்குச் சாதகமானது.

பொருளாதார வரம்பு நிலை (ETL)

10% குருத்து காய்ந்தல் (தாவர நிலையில்); 2% வெள்ளை கதிர் (பூக்கும் காலத்தில்).

நெல் தண்டு துளைப்பானைக் கட்டுப்படுத்துவதற்கான தீர்வுகள்

பொருளின் பெயர் தொழில்நுட்ப உள்ளடக்கம்
விர்டகோ பூச்சிக்கொல்லி குளோரான்ட்ரானிலிப்ரோல் 0.5% + தியோமெதாக்சம் 1% GR
கால்டன் பூச்சிக்கொல்லி கார்டாப் ஹைட்ரோகுளோரைடு 50% SP
கொரண்டா பூச்சிக்கொல்லி குளோர்பைரிஃபோஸ் 50% + சைபர்மெத்ரின் 5% EC
அலன்டோ பூச்சிக்கொல்லி தியாக்ளோபிரிட் 21.7% SC

நெற்பயிரில் தண்டுத்துளைப்பான் மேலாண்மை பற்றி மேலும் அறிய : நெற்பயிரில் தண்டு துளைப்பான் மேலாண்மை

  1. பிரவுன் பிளாண்ட் ஹாப்பர் – புகையான்

அறிவியல் பெயர்: நிலபர்வட்டா லூகன்ஸ்

பூச்சி தாக்கும் நிலைகள்: இனப்பெருக்க நிலை

சேதத்தை ஏற்படுத்தும் நிலை: நிம்ஃப் மற்றும் வயது முதிர்ந்த பூச்சி

திசையன் (வெக்டர்) : புல்தழை குட்டை நோய், காய்ந்த குட்டை நோய், வாடிய குட்டை நோய்

அறிகுறிகள்

  • பாதிக்கப்பட்ட நெற்பயிர் காய்ந்து, ‘ஹாப்பர் பர்ன்’ எனப்படும், கருகிய தோற்றத்தை ஏற்படுத்துகிறது.
  • தேன் போன்ற திரவம் சுரப்பதால் அடிப்பகுதியில் சூட்டி அச்சு பூஞ்சான் காணப்படுகிறது.

நெற்பயிரில் BPH தாக்குதலுக்கு சாதகமான சூழ்நிலைகள்

தொடர்ச்சியாக நீரில் மூழ்கி இருக்கும் நிலை, அதிக நிழல், அதிக ஈரப்பதம், அதிக நைட்ரஜன் உரமிடுதல், மிக அடர்த்தியாக விதைக்கப்பட்ட பயிர் போன்றவை புகையான் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு சாதகமான சூழ்நிலைகள்.

பொருளாதார வரம்பு நிலை (ETL)

வேட்டையாடும் சிலந்தி இல்லாத நிலையில் 1 ஹாப்பர்/கதிர், சிலந்திப்பூச்சி இருக்கும் நிலையில் 2 ஹாப்பர்கள்/ஹில்.

புகையான் மேலாண்மைக்கான தீர்வுகள்

பொருளின் பெயர் தொழில்நுட்ப உள்ளடக்கம்
டோக்கன் பூச்சிக்கொல்லி டைனோட்ஃபுரான் 20% SG
பெக்சலோன் பூச்சிக்கொல்லி டிரிஃப்ளூமெசோபைர்ம் 10% SC
காத்யாயனி BPH சூப்பர் பைமெட்ரோசின் 50% WG
உலாலா பூச்சிக்கொல்லி  ஃபிளோனிகாமிட் 50% WG

பிரவுன் பிளாண்ட் ஹாப்பரின் மேலாண்மை பற்றி மேலும் அறிய: BPH மேலாண்மை 

  1. இலை தத்துப்பூச்சி

அறிவியல் பெயர்: நெப்போடெட்டிக்ஸ் விரிசன்ஸ் 

பூச்சி தாக்கும் நிலைகள்: நாற்றங்கால், தாவர மற்றும் இனப்பெருக்க நிலை

சேதத்தை ஏற்படுத்தும் நிலை: நிம்ஃப் மற்றும் வயது முதிர்ந்த பூச்சி

திசையன் (வெக்டர்): ரைஸ் துங்ரோ வைரஸ் (RTV), நெற்பயிர் மஞ்சள் மற்றும் இடைநிலை மஞ்சள் நோய் 

அறிகுறிகள்

  • பாதிக்கப்பட்ட தாவரங்களின் இலைகள் நுனியிலிருந்து கீழ்நோக்கி மஞ்சள் நிறமாக மாறத் தொடங்கும்.
  • இப்பூச்சி தாக்குதல் காரணமாக “ஹாப்பர் பர்ன்” அறிகுறி காணப்படும்.

நெற்பயிரில் இலை தத்துப்பூச்சி தாக்குதலுக்கு சாதகமான சூழ்நிலை

அவை மானாவாரி மற்றும் நீர்ப்பாசன சதுப்பு நிலங்களில் அதிகம் காணப்படுகின்றன. தன்னார்வத் தாவரங்கள், குச்சிகள், தாவரத்தின் ஆரம்ப வளர்ச்சி நிலைகள் போன்றவை இலை தத்துப்பூச்சி தாக்குதலுக்கு சாதகமான சூழ்நிலைகள்.

பொருளாதார வரம்பு நிலை (ETL)

60 பூச்சிகள்/ 25 துடைத்தல் (நாற்றங்கால்); 5 பூச்சிகள்/ஹில் (தாவர நிலை); 10 பூச்சிகள்/ஹில் (மலரும் நிலையில்); 2 பூச்சிகள்/ஹில் 

இலை தத்துப்பூச்சி தாக்குதலுக்கான மேலாண்மை தீர்வுகள்

பொருளின் பெயர் தொழில்நுட்ப உள்ளடக்கம்
செஸ் பூச்சிக்கொல்லி பைமெட்ரோசின் 50% WDG
லாரா 909 பூச்சிக்கொல்லி குளோரோபைரிபாஸ் 50% + சைபர்மெத்ரின் 5% EC
அன்ஷுல் லக்ஷ் பூச்சிக்கொல்லி லாம்டாசைக்லோத்திரின்  5% EC
அனந்த் பூச்சிக்கொல்லி தியாமெதோக்சம் 25% WG

இலை தத்துப்பூச்சி மேலாண்மை பற்றி மேலும் அறிய: இலை தத்துப்பூச்சி மேலாண்மை

  1. நெற்பயிர் இலை சுருட்டுப்புழு

அறிவியல் பெயர்: நேப்ஃபாலோகுரோஸிஸ் மெடினாலிஸ் 

பூச்சி தாக்கும் நிலைகள்: தாவர மற்றும் இனப்பெருக்க நிலை

சேதத்தை ஏற்படுத்தும் பூச்சி நிலை: லார்வா

அறிகுறிகள்

  • லார்வாக்கள் இலையை மடிப்புகளாக சுருட்டி, இலைக்குள் தங்கி உணவு உட்கொள்கிறது.
  • லார்வாக்கள் சுரண்டுவதன் காரணமாக வெளிப்படை, நீளமான வெண்மையான கோடுகள் இலைகளில் காணப்படும்.

இலை சுருட்டுப்புழு தாக்குதலுக்கு சாதகமான சூழ்நிலை

அதிக தழைச்சத்து உரமிடுதல், அதிக ஈரப்பதம், நிழலான பகுதி, நெல் வயலில் களைகள் இருப்பது போன்றவை இப்பூச்சியின் தாக்குதலுக்கு சாதகமான சூழ்நிலைகள்.

பொருளாதார வரம்பு நிலை (ETL)

10% சேதமடைந்த இலைகள் (தாவர நிலை); 5% சேதமடைந்த இலைகள் (பூக்கும் நிலை).

இலை சுருட்டுப் புழு தாக்குதலின் மேலாண்மைக்கான தீர்வுகள்

பொருளின் பெயர் தொழில்நுட்ப உள்ளடக்கம்
டகுமி ஃப்ளூபென்டியாமைடு 20% WG
டல்ஸ்டார் FMC பூச்சிக்கொல்லி பிஃபென்த்ரின் 10% EC
ரிலான் பூச்சிக்கொல்லி எமாமெக்டின் பென்சோனேட் 5% SG
ஹிபிகி பூச்சிக்கொல்லி குளோர்பைர்பாஸ் 50% EC

இலை சுருட்டுப்புழு மேலாண்மை பற்றி மேலும் அறிய: இலை சுருட்டுப் புழு மேலாண்மை

  1. கதிர் நாவாய் பூச்சி/ குண்டி பூச்சி

அறிவியல் பெயர்: லெப்டோகெரரிசா அக்யூட்டா

பூச்சி தாக்கும் நிலைகள்: இனப்பெருக்க நிலை

சேதத்தை ஏற்படுத்தும் பூச்சி நிலை: நிம்ஃப் மற்றும் வயது முதிர்ந்த பூச்சி

அறிகுறிகள்

  • இப்பூச்சியால் பாதிக்கப்பட்ட தானியங்கள்  விதையற்று பதராக மாறும்.
  • பாதிக்கப்பட்ட தானியங்களில் பூச்சி உட்கொண்ட துளைகளில் கருப்பு நிறப் புள்ளிகள் காணப்படும்.

இப்பூச்சி தாக்குதலுக்கான சாதகமான சூழ்நிலைகள்

களைகளின் எண்ணிக்கை, நிலைகுலைந்த நடவு, வெப்பமான வானிலை, அடிக்கடி பெய்யும் மழை ஆகியவை கதிர் நாவாய் பூச்சிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு சாதகமான சூழ்நிலைகள். இவை பொதுவாக மானாவாரி மற்றும் மேட்டுநில நெற்பயிர்களில் காணப்படும்.

பொருளாதார வரம்பு நிலை (ETL)

5 பூச்சிகள்/100 பேனிகல்கள் (பூக்கும் நிலை); 16 பூச்சிகள்/100 பேனிகல்கள் (பால் நிலை)

கதிர் நாவாய் பூச்சி தாக்குதலுக்கான தீர்வுகள்

பொருளின் பெயர் தொழில்நுட்ப உள்ளடக்கம்
கிரீன்பேஸ் நீமோல் வேப்ப எண்ணெய் சாறு (அசார்டிராக்டின்) – 10000 ppm
அக்டாரா பூச்சிக்கொல்லி தியாமெதோக்சம் 25% WG
பிரிடேட்டர் பூச்சிக்கொல்லி  குளோரோபைர்போஸ் 50% EC
வோலியம் ஃபிளெக்சி பூச்சிக்கொல்லி தியாமெதாக்சம் 17.5% + குளோரான்ட்ரானிலிப்ரோல் 8.8%

கதிர் நாவாய் பூச்சி பற்றி மேலும் அறிய – கதிர் நாவாய் பூச்சி மேலாண்மை

  1. இலைப்பேன்

அறிவியல் பெயர்: ஸ்டென்கீட்டோதிரிப்ஸ் பைபார்மிஸ்Stenchaetothrips biformis

பூச்சி தாக்கும் நிலைகள்: நாற்றங்கால்

சேதத்தை ஏற்படுத்தும் நிலை: லார்வாக்கள் மற்றும் வயது முதிர்ந்த பூச்சி

அறிகுறிகள்

  • சேதமடைந்த இலைகளில் வெள்ளிக்கோடுகள் காணப்படும்.
  • இலைகள் விளிம்பிலிருந்து நடுப்பகுதியை நோக்கிச் சுருண்டு இருக்கும்.

நெற்பயிரில் இலைப்பேன் தாக்குதலுக்கு சாதகமான சூழ்நிலைகள்

வறண்ட காலங்களில் மிகவும் தீவிரமான பூச்சியாகும். வறண்ட காலநிலை, களைகளின் எண்ணிக்கை மற்றும் நெல் வயலில் தண்ணீர் தேங்காமல் இருப்பது ஆகியவை இலைப்பேன் தாக்குதலுக்கான சாதகமான சூழ்நிலைகள்.

பொருளாதார வரம்பு நிலை (ETL)

60 எண்கள்/12 வெட் ஹேண்ட் ஸ்வீப்ஸ் (நாற்றங்கால்)

இலைப்பேன் தாக்குதலுக்கான தீர்வுகள்

பொருளின் பெயர் தொழில்நுட்ப உள்ளடக்கம்
காத்யாயனி Imd-178 இமிடாக்ளோபிரிட் 17.8 % SL
லாரா-909 பூச்சிக்கொல்லி குளோரோபைர்பாஸ் 50% + சைபர்மெத்ரின் 5% EC
ஓஷீன் பூச்சிக்கொல்லி டைநோட்டிஃப்யூரான் 20% SG
பெகாசஸ் பூச்சிக்கொல்லி டயாஃபென்தியூரான் 50% WP

(குறிப்பு: பொருளாதார வரம்பு நிலை (ETL) – பெருகிவரும் பூச்சிகளின் எண்ணிக்கையைத் தடுக்க கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீர்மானிக்கப்பட வேண்டிய மக்கள்தொகை அடர்த்தி ஆகும்.)

spot_img

மேலும் அறிய

தொடர்பில் இருக்க

அண்மை தகவல்களைப் பெற எங்களை சப்ஸ்கிரைப் பண்ணுங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்