இந்தியா, பல்வேறு தட்பவெப்ப காலநிலைகளைக் கொண்ட நாடாக இருப்பதால், விவசாயத்தில் பல பருவங்கள் உள்ளன. பயிர்களின் நடவு நேரம் ஆனது, பயிர் வகை, பருவங்கள், பகுதி மற்றும் காலநிலை ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும். இந்தியாவில், பயிர்கள் பொதுவாக கரீஃப், ரபி மற்றும் ஜெய்த் என்று மூன்று பருவங்களாக வகைப்படுத்தப்படுகின்றன. கரீஃப் பருவம் என்பது மழைக்காலப் பருவம் எனவும் அழைக்கப்படுகிறது. இது பொதுவாக ஜூன் மாதத்தில் தொடங்கி செப்டம்பரில் முடிவடையும். ரபி பருவம் அல்லது குளிர்காலப் பருவம் அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலத்தைக் குறிக்கிறது. ஜெய்த் அல்லது கோடைக்கால பயிர்ச்செய்கை மார்ச் முதல் ஜூன் வரையிலான பருவகாலத்தைக் கொண்டது. இந்தியாவில் விவசாயத்தின் வெவ்வேறு பருவங்களால் ஆனது, விவசாயிகள் தங்கள் பயிர்கள் மற்றும் வருமான ஆதாரங்களை பல்வகைப்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. இது நாட்டின் ஒட்டுமொத்த விவசாய வளர்ச்சிக்கு பங்களிக்கிறது.
2017-18 ஆம் ஆண்டில் 29.71 லட்சம் ஹெக்டேர்களாக இருந்த கோடை அல்லது ஜெயித் பயிர்களின் சாகுபடி பரப்பளவு படிப்படியாக 2.7 மடங்கு அதிகரித்து 2020-21 ஆம் ஆண்டில் 80.46 லட்சம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது. சரியான மேலாண்மை, தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலமும் மற்றும் சரியான பயிரில் மூலதனத்தை உபயோகப்படுத்துவதன் மூலமும், விவசாயிகள் தங்களின் மகசூலை மற்றும் கோடை காலத்தில் லாப வரம்புகளையும் அதிகரிக்கலாம்.
ஜெய்த்(Zaid) அல்லது கோடைக்காலப் பயிர் பருவம்
ஜெய்த் பயிர்கள் மார்ச் முதல் ஜூன் வரையிலான கோடை காலத்தில் பயிரிடப்படும் பயிர்கள். அவை குறுகிய காலப் பயிர்களாகும். பெரும்பாலும் இந்தக் காலத்தில் கலப்பின வகைகளையே பயிரிடுகின்றனர். சூடான மற்றும் வறண்ட கால நிலைக்கு உகந்த கோடைகாலப் பயிர்களே இந்த பருவத்தில் பயிரிடப்படுகிறது. ஒரு சில பயிர்களுக்கு, அதன் தாவர வளர்ச்சிக்கு வெப்பமான காலநிலையும் மற்றும் இனப்பெருக்க வளர்ச்சிக்கு நீண்ட நாள் பருவமும் (அதிக நேரம் சூரிய ஒளி) தேவைப்படுகிறது. அவ்வகையான பயிர்கள் வெள்ளரிக்காய், தர்பூசணி, முலாம்பழம், வெண்டைக்காய், பாகற்காய், கத்தரி, உளுந்து, பச்சைப்பயறு, பூசணிக்காய் மற்றும் தக்காளி போன்றவை ஆகும்.
ஜெய்த் பயிர்களை வளர்ப்பது ஏன் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும் என்பதை ஆராயுங்கள்
ஜெய்த்/கோடை காலத்தில் வளர்க்கப்படும் பயிர்களின் சில அம்சங்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளன.
- கோடை கால பயிர்கள் குறுகிய வளரும் காலத்தைக் கொண்டவை மற்றும் விதைத்த 60-90 நாட்களுக்குள் அறுவடை செய்யலாம். இதன் மூலம் விவசாயிகள் ஒரு வருடத்தில் பல பயிர்களைப் பயிரிட்டு, அவர்களின் வருமானத்தை அதிகரிக்க முடியும். இந்த பயிர்கள் கோடைக் காலத்தின் வெப்பம் மற்றும் வறண்ட நிலைகளை தாங்கும் மற்றும் பொதுவாக இருக்கும் வறட்சி மற்றும் வெப்ப அழுத்தத்தை தாங்கும் திறன் கொண்டது.
- காரிஃப் மற்றும் ராபி பயிர்களை விட ஜெய்த்/கோடைக் காலப் பயிர்களுக்கு குறைந்த நீரே தேவைப்படுகிறது. இதனால் குறைந்த நீர் இருப்பு உள்ள பகுதிகளில் சாகுபடி செய்ய ஏற்றது.
- குறுகிய காலமே இருக்கும்போதிலும், சரியான மேலாண்மை நடைமுறைகளைப் பின்பற்றினால் பயிர்கள் அதிக மகசூலைத் தரும்.
- கரிஃப் மற்றும் ராபி பருவங்களுக்கு இடையில், கோடைக் காலப் பயிர்களால் குறைந்த காலத்தில் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானத்தை வழங்க முடியும்.
- ஜெய்த்/கோடைக் காலப் பயிர்கள் பூச்சிகள் மற்றும் நோய்களால் பாதிக்கப்படுவது குறைவு. ஏனெனில், கோடை காலத்தின் வறண்ட நிலைகள் பூச்சிகள் மற்றும் நோய்களுக்கு செழித்து வளர கடினமானதாக இருக்கும்.
- தர்பூசணி மற்றும் முலாம்பழம் போன்ற ஜெய்த்/கோடைக் காலப் பயிர்களுக்கு கோடை காலத்தில் சந்தையில் அதிக (கிராக்கி) தேவை உள்ளது. இது விவசாயிகளுக்கு நல்ல லாபத்தை அளிக்கும்.
- கோடை பயிர்களைப் பயிரிடுவது மண்ணின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. உதாரணமாக, பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் போன்ற பயிர்கள் மண்ணைப் பண்படுத்துகிறது.
- இந்தப் பயிர்களை வளர்ப்பது ஒற்றைப் பயிரை சார்ந்திருப்பதைக் குறைப்பதன் மூலம் விவசாயத்தைப் பல்வகைப்படுத்த உதவுகிறது. இது காலநிலை மாற்றம், பூச்சிகள் மற்றும் நோய் தாக்குதல் போன்ற காரணங்களால் ஏற்படும் பயிர் தோல்வியின் அபாயத்தைக் குறைக்க உதவும்.
- விவசாயிகள் காரீஃப் மற்றும் ராபி பருவங்களில் அதிக மழையினால் ஏற்படும் இழப்பை கோடைப் பயிர்களைப் பயிரிடுவதன் மூலம் ஈடுசெய்யலாம்.
- மேலும் ஜெயித்/கோடைக் காலப் பயிர்களான தர்பூசணி, வெள்ளரிக்காய், முலாம்பழம், பூசணிக்காய் மற்றும் பாகற்காய் போன்ற பயிர்களில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இதனால் அவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளும் பொழுது, ஊட்டச்சத்து கூடுதலாக கிடைக்கும்.
- மக்காச்சோளம் மற்றும் சோயாபீன் போன்ற கோடைக்காலப் பயிர்கள் கால்நடை தீவனமாக பயன்படுத்தப்படுகின்றன.
கீழே கொடுக்கப்பட்டுள்ள கலப்பின விதைகளைப் பயன்படுத்தி உங்கள் கோடை பயிர்களின் மகசூலை அதிகரிக்கவும்
முடிவுரை
உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், பல பிராந்தியங்களில் உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை ஆதரிப்பதிலும் கோடைப் பயிர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தண்ணீர் பற்றாக்குறை மற்றும் அதிக வெப்பநிலை போன்ற சவால்கள் கோடைகாலப் பயிர் சாகுபடியை கடினமாக்கும். அதே வேளையில், சரியான பயிர்களைத் தேர்ந்தெடுப்பது, சரியான விதைகள் மற்றும் சாகுபடி நுட்பங்களளைப் பயன்படுத்துவதால், விளைச்சலை அதிகரிக்கவும் மற்றும் லாபத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. ஜெயித் /கோடைக்காலப் பயிர்களான தர்பூசணி, வெள்ளரிக்காய் மற்றும் முலாம்பழம் போன்றவை விவசாயிகளின் வருமானத்தை பல்வகைப்படுத்தவும், நிலையான விவசாய முறைகளை பின்பற்றவும் வழிவகை செய்கிறது. கூடுதலாக, சரியான வகை அல்லது கலப்பின விதைகளை வாங்குவதால், உகந்த மகசூலை உறுதி செய்து கோடைகாலப் பயிர் வளர்ச்சியை லாபகரமாகவும் மாற்ற உதவுகிறது.