HomeCrop ManagementAgri Hacksமுட்டைக்கோஸ் விளைச்சலை அதிகரிக்க 15 வழிமுறைகள் 

முட்டைக்கோஸ் விளைச்சலை அதிகரிக்க 15 வழிமுறைகள் 

முட்டைக்கோஸ் வருடம் முழுவதும் உலகமெங்கும் செய்யப்படும் முக்கிய பயிராகும். முட்டைக்கோஸ், பச்சை, சிவப்பு, ஊதா மற்றும் வெள்ளை ஆகிய வண்ணங்களில்  விளையப்படுகின்றன. 

வெள்ளை மற்றும் சிவப்பு நிற முட்டைக்கோஸ் குறைவாகவே கிடைக்கிறன. ஆனால் பச்சை மற்றும் ஊதா முட்டைக்கோஸ் உலகம் முழுவதும் காணப்படுகிறன.

முட்டைக்கோஸ் ஆண்டு முழுவதும் விளையக்கூடிய இலை தாவரமாகும். உருளைக்கிழங்குக்குப் பிறகு, முட்டைக்கோஸ் இரண்டாவது பெரிய காய்கறி பயிராகும்.

மண் மற்றும் தட்பவெப்பநிலை

மணல், மற்றும் நீர் தேக்கத்தை நீக்கும் கனமான மண் முட்டைக்கோஸ் செடிகளுக்கு ஏற்றது. அதிக மகசூல் தரக்கூடிய முட்டைக்கோஸ் வளர உரங்கள், கரிமப் பொருட்கள், மக்கிய உரம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் தேவை. ஆரம்ப கட்டத்தில் ஈரப்பதத்துடன் லேசான மண்ணை விரும்புகிறது, மற்றும் கடைசி நிலையில் கனமான மண் இதற்கு உகந்தது.

மண்ணின் சத்துக்கள், வளர்ச்சி விகிதம் மற்றும் நுண்ணுயிரிகளின் செயல்பாடு ஆகியவற்றைப் பாதிக்காத அளவில் மண்ணின் கார-அமிலத்தன்மை இருக்கவேண்டும்.

மண் மற்றும் நிலம் தயாரித்தல்

நீங்கள் காலிஃபிளவர், ப்ரோக்கோலி மற்றும் முட்டைக்கோஸ் நடவு செய்யாத நிலத்தில் மட்டுமே இதனை நடவு செய்யவேண்டும். ஏனெனில் அவ்வாறு நடவு செய்தால் உங்கள் செடியை நோய் தாக்கத்திலிருந்து பாதுகாக்கலாம். 

வயலை நன்கு வடிகால் வசதியுடன் தயார் செய்ய வேண்டும். மேலும் நன்கு மக்கிய உரம் மற்றும் நுண்ணூட்டத்தை அடியுரமாகக் கொடுக்கவேண்டும். இதனால் ஆரம்பக்கட்டத்தில் முட்டைகோஸ் நன்கு செழிப்பாக வளரும். 

ரகங்கள்

சவோய், சிவப்பு மற்றும் பச்சை என மூன்று வகையான முட்டைக்கோஸ் உள்ளன. சவோய் முட்டைக்கோஸ் ரகம் அதிக மகசூல் கொண்ட மஞ்சள்-பச்சை நிறத்தில் இருக்கும். பச்சை முட்டைக்கோஸ் ரகம் வெளிர்-அடர் பச்சை கலவையாகும், மற்றும் சிவப்பு முட்டைக்கோஸ் மென்மையான அமைப்புடன் கருஞ்சிவப்பு-ஊதா நிறமாக இருக்கும். 

நடவு செய்ய ஏற்ற காலம்

முட்டைக்கோஸ் சாகுபடிக்குத் தட்பவெப்ப நிலை, நடவு செய்யும் முறை, முட்டைக்கோஸ் ரகங்கள், ஏற்ற பருவம் மற்றும் விவசாயத்தின் பரப்பளவு ஆகியவை தீர்மானிக்கின்றன. சமவெளிகளில், ஜூலை-நவம்பர் வசதியானது மற்றும் ஏப்ரல்-ஆகஸ்ட் மலை பாங்கான பகுதிகளுக்கு ஏற்றது.

முட்டைகோஸ் வார்ப்பு

முட்டைக்கோஸ் நடவு செய்வதற்கு முன், நிலத்தை  5-7 செ.மீ.க்கு நன்கு மக்கிய தொழு உரம் மற்றும் இயற்கை உரம் கொண்டு மூடவேண்டும். மண்ணின் கார-அமிலத்தன்மை 6.5-6.8 இடையில் இருக்க வேண்டும்.  நோய் தாக்கத்தைக் குறைக்க, மண்ணில் கூடுதல் சுண்ணாம்பு சேர்த்து கார-அமிலத்தன்மையை 7ஆக வைக்கவும்.

மணல் மண் உள்ள பகுதிகளில் பருத்தி விதை அல்லது நைட்ரஜன் நிறைந்த உணவை பூமியில் விடுவதனால் முட்டைக்கோஸ் செடியின் வளர்ச்சி மற்றும் இலைகளை அதிகரிக்கலாம்.

விதையளவு மற்றும் செடியின் இடைவெளி

செடி நடும்பொழுது 1/4-1/2 இன்ச் என்ற அளவில் செடியின் வேர் மண்ணிற்குள் இருக்குமாறு நடவு செய்ய வேண்டும். இவ்வாறு நடும்பொழுது செடி அதிக மகசூலை கொடுக்கும். மேலும் விதைக்க ஒரு ஏக்கருக்கு  300-500 கிராம் விதைகள் தேவைப்படும்.

நடவு குறிப்புகள்

முட்டைகோஸ் முழு வளர்ச்சியைப் பெறக் குளிர்ந்த காலநிலையில் நன்கு வடிகட்டிய மண்ணில் முட்டைக்கோஸ் செடியை வளர்க்க வேண்டும்.

வயது முதிர்ந்த உரத்தில் உள்ள வளமான ஊட்டச்சத்துக்கள் வளரும் போது நோய் மற்றும் பூச்சிகளை எதிர்த்துப் போராடும் திறனைச் செடிக்கு வழங்கும்.

உரமேலாண்மை

முட்டைகோஸ் செடிக்கு நடவு முதல் முட்டைகோஸ் உருவாகும் வரை அதிக ஊட்டச்சத்து தேவைப்படும்.

மண் பரிசோதனை அறிக்கையின்படி ஒரு அடிப்படை அளவு உரங்களை மட்டும் பயன்படுத்த வேண்டும். உரங்களைச் செடிகளுக்குத் தெளிப்பதைத் தவிர்க்கவும். ஏனெனில் அவை இலையின் தரத்தைச் சேதப்படுத்தும் மற்றும் கைமுறையாக உரங்களை இடுவது முட்டைக்கோசுக்கு ஏற்றது.

முட்டைக்கோஸ் செடி நாம் கொடுக்கும் உரம் கிடைப்பதற்காக  வயல்களுக்குத் தொடர்ந்து நீர் பாய்ச்ச வேண்டும். மேலும் முட்டைகோஸ் உருவாகும் தருணத்தில் உரம் கொடுப்பதைத் தவிர்க்கவும். அது முட்டைகோஸில் வெடிப்பை ஏற்படுத்தும்.

தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்கள்:

நைட்ரஜன், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை மண் ஊட்டச்சத்து மற்றும் முட்டைக்கோஸ் செடியின் வளர்ச்சிக்குச் சிறந்த முகவர்கள்.

மண் தயாரிப்பின் போது, ​​ஒரு ஏக்கருக்கு 12 டன் மக்கிய உரம் அல்லது தொழு உரம் கொடுக்க வே

ண்டும். தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்களை 36:36:36 கிலோ/ஏக்கர் என்ற அளவில் கலந்து கொடுக்க வேண்டும்.

நடவு செய்த 30-45 நாட்களுக்குப் பிறகு மூன்றில் ஒரு பங்கு தழைச்சத்தைக் கொடுக்க வேண்டும்.

கால்சியம் நிலத்தடி நீரை உறிஞ்சி இலை வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் ஊட்டச்சத்துக் குறைபாடு இலைகளை கசப்பான, கடினமாக மற்றும் வெளிர் நிறமாக மாற்றும்.

முட்டைகோஸ் சிறியதாக வர காரணம்

முட்டைகோஸ் சிறியதாகவும், தளர்வான இலைகள், நிறம் மாறிய இலைகள் மற்றும் வீங்கியவாறு வருவதற்கு நான்கு முக்கிய காரணங்கள் உள்ளன. அவை, 

உயர் வெப்பநிலை

அதிகமாகவோ அல்லது குறைவாகவோ உரம் கொடுத்தல்.

போதிய அளவு நீர்ப்பாசனம் இல்லாமை 

அதிகப்படியான அல்லது குறைவான தழைச்சத்து.

எப்பொழுதும் செடிக்கு உரம் மற்றும் தண்ணீர் கொடுப்பதற்கு முன்பு மண்ணை சரிபார்க்க வேண்டும்.

செடி பாதுகாப்பு:

இலைவெட்டுப் புழு:

அறிகுறிகள்: 

இவை செடியின் இலைகளைச் சாப்பிட்டு, பெரிய சேதத்தை ஏற்படுத்தும்.

செடி முழுவதும் இலைகள் ஓட்டையாகத் தென்படும்.

கட்டுப்படுத்தும் முறை:

 இதனைக் கட்டுப்படுத்த பேசில்லஸ் த்ருன்ஜெனிசிஸ் (BT)  எனப்படும் உயிரி பூஞ்சையைத் தெளிக்க வேண்டும்.

முட்டைக்கோஸ் வாடல் நோய்:

அறிகுறிகள்

வயலில் பாதிக்கப்பட்ட செடிகள் முற்றிலுமாக வாடியதைப்போல் காட்சியளிக்கும்.

கட்டுப்படுத்தும் முறை

வயலுக்கு அதிக அளவில் தண்ணீர் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.

காப்பராக்சி குளோரைடு என்ற மருந்தை 1 கிலோ/ ஒரு ஏக்கர் என்ற அளவில் கலந்து பாசனத்தில் கொடுக்கவேண்டும்.

நீர் நிர்வாகம்

முட்டைக்கோசிற்குத் தொடர்ச்சியாக நீர் வேண்டும். ஆனால் நீர் தேங்கக்கூடாது. 

நடவு செய்யும் முன்னர் நீர் பாய்ச்சவேண்டும். நடவு செய்த பிறகு தொடர்ந்து 5 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்சவும்.

களைக் கட்டுப்பாடு மற்றும் பின்செய் நேர்த்தி

நடவுக்கு முன்பு களைக்கொல்லிகளைப் பயன்படுத்தி களைகளைக் கட்டுப்படுத்தலாம். 

மேலும் செடிகளுக்கு 3 முறையாவது ஆட்கள் கொண்டு களைகளை அகற்றவேண்டும்.

மேலும் களை எடுக்கும் தருணத்தில் வேர்கள் அடிப்படாதவாறு செய்யவேண்டும்.

அறுவடை

முட்டைக்கோஸ் நடவு செய்த 75 நாட்களில் அறுவடைக்குத் தயாராகும்.

முட்டைக்கோஸை கீழே உள்ள 2 அல்லது 3 இலைகளுடன் அறுவடை செய்யவேண்டும்.

 

spot_img

மேலும் அறிய

தொடர்பில் இருக்க

அண்மை தகவல்களைப் பெற எங்களை சப்ஸ்கிரைப் பண்ணுங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்