கரும்பு பயிரானது, விவசாயிகளுக்கு பணப்பயிர் மட்டுமல்ல, வெள்ளைப் படிகச் சர்க்கரையின் முக்கிய ஆதாரமாகவும் இருக்கிறது. கரும்பு உற்பத்தியைப் பாதிக்கும் பல பிரச்சினைகள் கடுமையான நஷ்டத்திற்கு வழிவகுக்கும். பூஞ்சை, பாக்டீரியா, வைரஸ் மற்றும் பைட்டோபிளாஸ்மா நோய்க்கிருமிகளால் ஏற்படும் பல்வேறு நோய்கள், கரும்பு சாகுபடிக்கு கடுமையான சவால்களை ஏற்படுத்துகிறது. இரசாயனங்களின் கண்மூடித்தனமான பயன்பாடு பயிர்களில் இரசாயனத்தின் எஞ்சிய விளைவுக்கு வழிவகுக்கும் மற்றும் நோய்க்கிருமிகள் ரசாயனத்திற்கு எதிராக எதிர்ப்பு சக்தியைப் பெறலாம். இந்த சிக்கலைச் சமாளிக்க, உயிர் பூச்சிக்கொல்லிகள் இதற்கு சிறந்த தீர்வாகும்.
நோய்களின் பட்டியல்
- செவ்வழுகல் நோய்
- துரு நோய்
- வாடல் நோய்
1.செவ்வழுகல் நோய்
அறிவியல் பெயர்: குலோமெரெல்லா டுகுமெனன்சிஸ்
மிகவும் பாதிக்கப்பட்ட தாவர பகுதி: தண்டுகள் மற்றும் இலைகளின் நடுப்பகுதி
செவ்வழுகல் நோயின் அறிகுறிகள்
- பாதிக்கப்பட்ட கரும்புகளில் மூன்றாவது அல்லது நான்காவது இலையில், பச்சை நிறத்தில் இருந்து ஆரஞ்சு நிறமாகவும், இறுதியாக மஞ்சள் நிறமாகவும் மாறி, சோகைகள் கீழே இருந்து மேல் வரை காயத் தொடங்கும்.
- பூஞ்சை வித்திகள் அதன் வழியாக இலை உறைக்குள் ஊடுருவிச் செல்லும் போது இலையின் நடுப்பகுதியின் எதிர் பக்கமும் சிவப்பு நிறக் கோடுகளைக் கொண்டிருக்கும்.
- நோய்த்தொற்றைத் தொடர்ந்து கரும்பு முழுவதும் காய்வதற்கு இன்னும் பத்து நாட்கள் ஆகும். மேலும் 16 முதல் 21 நாட்களுக்கு வெளிப்புற அறிகுறிகள் தென்படாது.
- பாதிக்கப்பட்ட கரும்பை பிளந்து பார்க்கும் போது, அதன் உட்புறப் பகுதி சிவப்பு நிறத்திலும், இவற்றிற்கு குறுக்காக நீளமாக வெள்ளை நிறங்களும் காணப்படும்.
- எப்போதாவது, கரும்புக்குள் இருக்கும் திசுக்களில் ஒரு திரவம் இருக்கும், அது அடர் பழுப்பு நிறத்திலும், ஆல்கஹால் போன்ற வாசனையுடன் இருக்கும்.
கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் (உயிரியல்)
நோய்த்தடுப்பு
நோய்த்தடுப்பு | அளவு / லிட்டர் தண்ணீர் | தெளிப்புகளின் எண்ணிக்கை | இடைவெளி | பயன்பாட்டு முறை |
ஜிமோ பயோகார்டு WLT6040 + ஜிமோ மேக்ஸ் ஸ்பெரெட் | 1 கிராம் + 0.10 மில்லி | 1-2 | 3-5 வாரங்கள் | ஃபோலியார் ஸ்ப்ரே (இலைவழித் தெளித்தல்) |
நோய்க்கான தீர்வு
நோய்க்கான தீர்வு: | அளவு / லிட்டர் தண்ணீர் | தெளிப்புகளின் எண்ணிக்கை | இடைவெளி | பயன்பாட்டு முறை |
ஜிமோ பயோகார்டு WLT6040 | 1 கிராம் + 2-3 கிராம் | 2-3 | 5-7 நாட்கள் | மண்ணில் ஊற்றுதல் |
-
வாடல் நோய்
அறிவியல் பெயர்: ஃபுஸேரியம் சக்காரி
மிகவும் பாதிக்கப்பட்ட தாவர பகுதி: தண்டுகள் மற்றும் இலைகளின் நடுப்பகுதி
வாடல் நோயின் அறிகுறிகள்
- நான்கு முதல் ஐந்து மாதங்கள் செடி வளர்ந்த பிறகு, நோயின் ஆரம்ப அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கும்.
- அடுத்து, இலைகள் படிப்படியாக மஞ்சள் நிறமடைந்து, காய்ந்து, கரும்புகள் சுருங்கி வாடத் தொடங்குகின்றன.
- பாதிக்கப்பட்ட கரும்புகள் வெட்டப்பட்டு ஆய்வு செய்யப்படும் போது தரையில் படும் கரும்பில், திசுக்கள் அடர் சிவப்பு அல்லது பழுப்பு நிறமாக மாறுதல், சுருங்குதல் மற்றும் இடைக்கணுக்களின் நடுவில் படகு வடிவ குழிகள் ஆகியவை நோயின் அறிகுறிகளாகும்.
- ஒரு விரும்பத்தகாத வாசனையும் இந்த நோயுடன் தொடர்புடையது.
- பித் பகுதியில், ஒரு பஞ்சு போன்ற வெள்ளை மைசீலியம் காணப்படுகிறது.
கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் (உயிரியல்)
நோய்த்தடுப்பு
நோய்த்தடுப்பு | அளவு / லிட்டர் தண்ணீர் | தெளிப்புகளின் எண்ணிக்கை | இடைவெளி | பயன்பாட்டு முறை |
சைமோ பயோகார்டு WLT6040 | 2 கிராம் | 1-2 | 3-5 வாரங்கள் | மண்ணில் ஊற்றுதல் |
நோய்க்கான தீர்வு
நோய்க்கான தீர்வு: | அளவு / லிட்டர் தண்ணீர் | தெளிப்புகளின் எண்ணிக்கை | இடைவெளி | பயன்பாட்டு முறை |
ஜிமோ பயோகார்டு WLT6040 | 1 கிராம் + 1-2 கிராம் | 2-3 | 5-7 நாட்கள் | மண்ணில் ஊற்றுதல் |
-
துரு நோய்
அறிவியல் பெயர்: பக்ஸீனியா இரியான்த்தி
மிகவும் பாதிக்கப்பட்ட தாவர பகுதி: தண்டுகள் மற்றும் இலைகளின் நடுப்பகுதி
துரு நோயின் அறிகுறிகள்
- இருப்புற இலை பரப்புகளிலும் தெரியும் சிறிய, நீளமான மஞ்சள் நிற புள்ளிகள் ஆரம்ப அறிகுறிகளாகும்.
- இந்த புள்ளிகள் நீளமாக வளர்ந்து பழுப்பு நிறத்தில் இருந்து ஆரஞ்சு-பழுப்பு அல்லது சிவப்பு-பழுப்பு நிறமாக மாறும்.
- இறுதியில், அவை ஒன்றிணைந்து பெரிய, ஒழுங்கற்ற நெக்ரோடிக் பகுதிகளை உருவாக்குகின்றன. இது இலைக்கு துருப்பிடித்த தோற்றத்தை அளிக்கிறது.
- இறுதியில், இது முன்கூட்டியே இலைகளின் இறப்பிற்கு வழிவகுக்கிறது.
கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் (உயிரியல்)
நோய்த்தடுப்பு
நோய்த்தடுப்பு | அளவு / லிட்டர் தண்ணீர் | தெளிப்புகளின் எண்ணிக்கை | இடைவெளி | பயன்பாட்டு முறை |
ஜிமோ தைமோக்ஸ் + ஜிமோ மேக்ஸ் ஸ்பெரெட் | 1-2 கிராம் + 0.10 மில்லி | 1-2 | 3-5 வாரங்கள் | ஃபோலியார் ஸ்ப்ரே (இலைவழித் தெளித்தல்) |
நோய்க்கான தீர்வு
நோய்க்கான தீர்வு: | அளவு / லிட்டர் தண்ணீர் | தெளிப்புகளின் எண்ணிக்கை | இடைவெளி | பயன்பாட்டு முறை |
சைமோ பயோகார்டு WLT6040 + ஜிமோ தைமோக்ஸ் + ஜிமோ மேக்ஸ் ஸ்பெரெட் | 1 கிராம் + 1-2 கிராம் + 0.10 மில்லி | 2-3 | 5-7 நாட்கள் | ஃபோலியார் ஸ்ப்ரே (இலைவழித் தெளித்தல்) |
ஊட்டச்சத்து: சைமோ பயோஃபெர்ட் | 1-2 மில்லி | 2-3 | 5-7 நாட்கள் | ஃபோலியார் ஸ்ப்ரே (இலைவழித் தெளித்தல்) மற்றும் மண்ணில் ஊற்றுதல் |
தயாரிப்புகள்
வழக்கமான பூச்சிக்கொல்லிகளை விட உயிர் பூச்சிக்கொல்லிகள் சுற்றுச்சூழல் நட்புடன் உள்ளன. ஏனெனில் அவை நுண்ணுயிரிகள், தாவரங்கள், எண்ணெய்கள் மற்றும் தாதுக்கள் போன்ற இயற்கை மூலங்களிலிருந்து பெறப்படும் பூச்சிக்கொல்லிகள். செயற்கை பூச்சிக்கொல்லிகளை விட அவை பாதுகாப்பானவை, குறிப்பிட்டவை மற்றும் மக்கும் தன்மை கொண்டவை. பரந்த நிறமாலை கொண்ட பூச்சிக்கொல்லிகளை போலல்லாமல், இவை பொதுவாக இலக்கு பூச்சி மற்றும் நெருங்கிய தொடர்புடைய உயிரினங்களை மட்டுமே பாதிக்கின்றன. வழக்கமான அல்லது செயற்கை பூச்சிக்கொல்லிகள் உயிரினங்கள் மற்றும் பறவைகள், பூச்சிகள் மற்றும் பாலூட்டிகளுக்கு தீங்கு விளைவிக்கும். கரும்பு பயிர்களுக்கு, பல்வேறு பூச்சிகளைக் கட்டுப்படுத்த உயிர் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தலாம். உயிரி பூச்சிக்கொல்லிகள் மண்ணின் தரம் மற்றும் கரும்பு பயிர் உற்பத்தித்திறனை மேம்படுத்தும். UAL பிராண்டின் சிறந்த ஆர்கானிக் பொருட்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளன.
1.ஜிமோ பயோகார்டு WLT6040: இத்தயாரிப்பு தூள் வடிவில் கிடைக்கிறது மற்றும் அதில் மரபணு மாற்றம் செய்யப்படாத உயிரிகள், புரோட்டியோலிடிக் உயிரி துரிதப்படுத்திகள், நிலைப்படுத்திகள் மற்றும் பயோஎன்ஹான்சர்கள் போன்றவை உள்ளன.
- மண்ணின் நுண்ணுயிர் செயல்பாட்டை அதிகரிக்கிறது. வேர் மண்டலத்தில் போதுமான ஊட்டச்சத்துக்களுடன் நல்ல ஏரோபிக் நுண்ணுயிரிகளைப் பெருக்குகிறது மற்றும் காற்றில்லா நோய்க்கிருமிகளுக்கான உணவை மறுத்து இறுதியாக SAR (முறையான வாங்கிய எதிர்ப்புத் திறனை) தூண்டுகிறது.
- ஜிமோ பயோகார்டு WLT6040 + ஜிமோ மேக்ஸ் ஸ்பெரெட் வாடல் நோய்க்கு 2 கிராம்/ லிட்டர் என்ற அளவில் ஒரு தடுப்பு முறையாகப் பின்பற்றப்படுகிறது. நோய்த்தொற்று கடுமையாக இருந்ததால் 3-5 வார இடைவெளியில் மீண்டும் ஒரு முறை தெளிக்க வேண்டும்
- ஜிமோ பயோகார்டு WLT6040 + ஜிமோ மேக்ஸ் ஸ்பெரெட் + சைமோ பயோலாஜிக் ஆகியவற்றை, இதே நோய்க்கு எதிராக உடனடித் தீர்வாகப் பயன்படுத்தப்படுகிறது, தேவைப்பட்டால் 5-7 நாட்கள் இடைவெளியில் 2-3 முறை தெளிக்கவும்.
- ஜிமோ தைமோக்ஸ்: இது ஒரு செறிவூட்டப்பட்ட பரந்த நிறமாலை கொண்ட கரிம பூஞ்சை மற்றும் பாக்டீரியா கட்டுப்படுத்தும் முகவர்.
- இத்தயாரிப்பு தாவரவியல் சாறுகள் செறிவு, தாவர எண்ணெய்கள், நிலைப்படுத்திகள் மற்றும் துணைப்பொருட்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட கலவையைக் கொண்டுள்ளது.
- ஜிமோ தைமோக்ஸ் + ஜிமோ மேக்ஸ் ஸ்பெரெட் தடுப்பு மற்றும் நோய் தீர்க்கும் நடவடிக்கையாக தெளிக்கப்படுகிறது. நோய் தீவிரமான நிலையில் இருந்தால் 5-7 நாட்கள் இடைவெளியில் 1-2 மில்லி / லிட்டருக்கு 2-3 முறை தெளிக்க வேண்டும்.
- ஜிமோ மேக்ஸ் ஸ்பெரெட்: இது திரவ வடிவில் கிடைக்கிறது. இது தெளிக்கப்பட்ட பகுதிகளில் உயிர் பூச்சிக்கொல்லியை சீரான முறையில் பரப்ப உதவுகிறது மற்றும் இது அயனி அல்லாத ஆர்கனோசிலிகான் & துணைப் பொருளைக் கொண்டது.
- இதை அனைத்து பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். இது நீரின் மேற்பரப்பு பிணைப்பை உடைத்து, தெளிப்பு கரைசலின் ஒட்டும் தன்மையையும், அதன் பரவலையும் அதிகரிக்கிறது.
- சைமோ மேக்ஸ் ஸ்பெரெட்-ஐ கரும்பின் செவ்வழுகல் மற்றும் துரு நோய்களை கட்டுப்படுத்த 0.10 மில்லி/லிட்டர் என்ற விகிதத்தில் பயன்படுத்தலாம்.
- சைமோ பயோஃபெர்ட்: இது தூள் வடிவில் கிடைக்கும் நுண்ணூட்டச் சத்து. இத்தயாரிப்பில் தூண்டுதலை ஏற்படுத்தும் உயிரிகள், மண் சீரமைப்பாளர்கள் மற்றும் உயிர் சார்ந்த கனிமங்கள் போன்றவை உள்ளன.
- சைமோ பயோஃபெர்டின் முக்கிய நன்மையாக, இது தாவரத்தின் முக்கியமான வளர்ச்சிக் கட்டமான விதை முளைப்பு மற்றும் வளர்ச்சியை அதிகரிக்கிறது. மேலும் மண்ணின் அயனி பரிமாற்றும் திறனை அதிகரிக்கிறது. பாஸ்பரஸ் உறிஞ்சுதலை அதிகரிப்பது மற்றும் பொட்டாசியம் அயனிகளை உறிஞ்சி சேமித்து வைப்பதன் மூலம் மண்ணின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
- இது விரும்பத்தக்க மண் நுண்ணுயிரிகள், பாசிகள் மற்றும் ஈஸ்ட் ஆகியவற்றின் வளர்ச்சியையும் பெருக்கத்தையும் தூண்டுகிறது.
- சைமோ பயோஃபெர்ட் பயிர்களின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு ஊட்டச்சத்து நிரப்பியாக பரிந்துரைக்கப்படுகிறது.
- ஜிமோ கேன்மேக்ஸ்: இது ஒரு தூள் வடிவ தயாரிப்பு ஆகும். இது கரும்பு பயிர்கள் வளர்க்கப்படும் பகுதிகளில் மண் மேம்பாட்டாளராகப் பயன்படுத்தப்படுகிறது. இது மரபணு மாற்றம் செய்யப்படாத மண் புரோபயாடிக்குகள், ப்ரீபயாடிக்குகள், நிலைப்படுத்திகள், பேரூட்டம் & நுண்ணூட்டச்சத்துக்கள் போன்ற மண் மேம்பாட்டாளர்களைக் கொண்டுள்ளது.
- இது மண்ணில் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.
- இது கரிமப் பொருட்களின் சிதைவை துரிதப்படுத்துகிறது.
- இது மண்ணில் உள்ள ஹியூமஸ்/ கார்பனின் அளவை அதிகரிக்கிறது.
சான்றிதழ்: UAL என்பது தொலைநோக்கு மற்றும் பணி சார்ந்த நிறுவனமாகும். இது புதுமை, கற்பனை மற்றும் வேறுபட்ட வாடிக்கையாளர் சேவை மூலம் அதன் இலக்குத் துறைகளுக்கு, சுற்றுச்சூழல்-நிலையான உயிர்-தீர்வுகளை வழங்குவதன் மூலம் மிகவும் போற்றப்படும் உலகளாவிய நிறுவனங்களில் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நோக்கமாகக் கொண்டுள்ளது. EU, JAS, NOP மற்றும் NPOP போன்ற கரிம வேளாண்மைக்கான பல்வேறு சர்வதேச மற்றும் தேசிய தரநிலைகளால் சான்றளிக்கப்பட்டு, ZYMO® மற்றும் XYMO® தொடர்களின் பிராண்ட் பெயர்களின் கீழ் கரிம உயிர் தீர்வுகளை UAL தயாரித்து சந்தைப்படுத்துகிறது. UAL தயாரிப்புகள் பாதுகாப்பானவை, இயற்கையானவை மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை என்பதை உறுதிசெய்து, கரிம வேளாண்மையின் முக்கியமான தேவைகளைப் பூர்த்தி செய்கிறது.