HomeCropUAL கரிம அடிப்படையிலான பொருட்களைப் பயன்படுத்தி மிளகாய் பயிரில் பூச்சி மேலாண்மை

UAL கரிம அடிப்படையிலான பொருட்களைப் பயன்படுத்தி மிளகாய் பயிரில் பூச்சி மேலாண்மை

மிளகாய் என்பது உணவு, மருந்து மற்றும் சுவையூட்டி போன்ற பல பயன்களைக் கொண்ட ஒரு பல்வகைப் பயிர். ஆனால், விளைச்சலைக் குறைக்கும் பூச்சிகளால் இதன் உற்பத்தி தடைப்படுகிறது. இலைப்பேன், சிலந்திப் பூச்சிகள், புழுக்கள் மற்றும் வெள்ளை ஈக்கள் போன்றவை மிளகாய் செடிகளை நாற்று நிலையிலிருந்து அறுவடை நிலை வரை தாக்கி, கடுமையான சேதத்தை ஏற்படுத்துகின்றன. இந்த பூச்சிகளைக் கட்டுப்படுத்த விவசாயிகள் இரசாயன பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துகின்றனர். ஆனால் இது சுற்றுச்சூழல் மற்றும் பிற உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கும். எனவே, பாதுகாப்பான, நம்பகமான, சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் செலவு குறைந்த உயிர் பூச்சிக்கொல்லிகள் போன்ற மாற்று தீர்வுகள் தேவை. உயிர் பூச்சிக்கொல்லிகள் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதிலும் பயிர் வளர்ச்சியை மேம்படுத்துவதிலும் திறம்பட செயல்படுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

மிளகாய் பயிரைத் தாக்கும் பூச்சிகளின் பட்டியல்

  1. இலைப்பேன் 
  2. சிலந்திப் பூச்சிகள் 
  3. இலை உண்ணும் கம்பளிப்பூச்சி
  4. வெள்ளை ஈக்கள்

1. இலைப்பேன்

அறிவியல் பெயர்: சிர்டோத்ரிப்ஸ் டார்சாலிஸ்

மிகவும் பாதிக்கப்பட்ட தாவர பகுதி: இலை மற்றும் பழம்

இலைப்பேன் சேதத்தின் அறிகுறிகள்

  • இலைப்பேன் என்பது சாறு உறிஞ்சும் பூச்சியாகும். இது இலைகளில் சாற்றை உறுஞ்சுவதால், இலைகள் சுருக்கப்பட்டு மேல்நோக்கி சுருண்டு, இலைக்காம்புகள் நீளமாக மாறுகின்றன.
  • பாதிக்கப்பட்ட மொட்டுகள் உடையக்கூடியதாகி, உதிர்ந்துவிடும்.
  • ஆரம்பகால தாக்குதலில் தாவரங்களின் வளர்ச்சி குன்றி காணப்படும். பூ உற்பத்தி மற்றும் பழங்கள் உருவாவது குறைகின்றன.

கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் (உயிரியல்)

தடுப்பு/முற்காப்பு
தடுப்பு  மருந்தளவு/ லிட்டர் தண்ணீர்  தெளிப்புகளின் எண்ணிக்கை  இடைவெளி  பயன்படுத்தும் முறை 
சைமோ பக்ட்ரோல் + ஜிமோ மேக்ஸ் ஸ்ப்ரெட் 1.5 மில்லி+ 0.10 மில்லி  1-2 3-5 வாரங்கள்  ஃபோலியார் ஸ்ப்ரே (இலைவழித் தெளித்தல்) 
நோய்க்கான தீர்வு
தீர்வு மருந்தளவு/ லிட்டர் தண்ணீர்  தெளிப்புகளின் எண்ணிக்கை  இடைவெளி  பயன்படுத்தும் முறை 
சைமோ பக்ட்ரோல் + சைமோ அல்ட்ரா ஸ்பெக்ட்ரம் + ஜிமோ மேக்ஸ் ஸ்ப்ரேட் 1.5 மில்லி+ 1-2 மில்லி+ 0.10 மில்லி  2-3 5-7 நாட்கள்  ஃபோலியார் ஸ்ப்ரே (இலைவழித்தெளித்தல்)
  1. சிலந்திப் பூச்சிகள்

அறிவியல் பெயர்: பாலிஃபேகோடார்சோநீமஸ் லேட்டஸ் 

மிகவும் பாதிக்கப்பட்ட தாவர பகுதி: இலை மற்றும் பழம்

சேதத்தின் அறிகுறிகள்

  • சிலந்திப் பூச்சிகளும் தாவர சாறுகளை உறிஞ்சும். இதனால் இலைகள் கீழ்நோக்கி சுருண்டு படகு வடிவத்தை காட்டுகிறது.
  • பாதிக்கப்பட்ட இலைகள் உடையக்கூடியதாகி, இலைகளின் கீழ் மேற்பரப்பில் கொப்புளத் திட்டுகள் காணப்படும்.
  • பூச்சிகள் இலைகளை உண்ணும் போது, இலைக்காம்பு நீண்டு எலி வால் போல் இருக்கும்.
  • கடுமையான தாக்குதலின் போது தாவரங்கள் வளர்ச்சி குன்றி விரைவில் இறந்துவிடும்.

கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் (உயிரியல்)

தடுப்பு/முற்காப்பு
தடுப்பு  மருந்தளவு/ லிட்டர் தண்ணீர்  தெளிப்புகளின் எண்ணிக்கை  இடைவெளி  பயன்படுத்தும் முறை 
சைமோ பக்ட்ரோல் + ஜிமோ மேக்ஸ் ஸ்ப்ரெட் 1.5 மில்லி+ 0.10 மில்லி  1-2 3-5 வாரங்கள்  ஃபோலியார் ஸ்ப்ரே (இலைவழித்தெளித்தல்) 
நோய்க்கான தீர்வு
தீர்வு மருந்தளவு/ லிட்டர் தண்ணீர்  தெளிப்புகளின் எண்ணிக்கை  இடைவெளி  பயன்படுத்தும் முறை 
சைமோ பக்ட்ரோல் + சைமோ அல்ட்ரா ஸ்பெக்ட்ரம் + ஜிமோ மேக்ஸ் ஸ்ப்ரேட் 1.5 மில்லி + 1-2 மில்லி + 0.10 மில்லி  2-3 5-7 நாட்கள்  ஃபோலியார் ஸ்ப்ரே (இலைவழித் தெளித்தல்)
  1. இலை உண்ணும் கம்பளிப்பூச்சி

அறிவியல் பெயர்: ஹெலிக்கோவெர்பா ஆர்மிஜெரா

மிகவும் பாதிக்கப்பட்ட தாவர பகுதி: இலை மற்றும் பழம்

இலை உண்ணும் கம்பளிப்பூச்சி சேதத்தின் அறிகுறிகள்

  • ஆரம்பத்தில் இளம் பருவ புழுக்கள் இலைகளை உண்ணும்.
  • வளர்ந்த லார்வாக்கள் முக்கியமாக பழங்களை உண்கின்றன. இவை உண்ணும்போது தலையை உள்ளே திணித்துக்கொண்டு, இதன் உடல் வெளியில் நீட்டிக்கொண்டு இருக்கும்.
  • பழங்களில் உள்ள மலப் பொருட்கள் இந்த பூச்சியின் ஒரே அறிகுறியாகும்.

கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் (உயிரியல்)

தடுப்பு/முற்காப்பு
தடுப்பு  மருந்தளவு/ லிட்டர் தண்ணீர்  தெளிப்புகளின் எண்ணிக்கை  இடைவெளி  பயன்படுத்தும் முறை 
சைமோ பக்ட்ரோல் + ஜிமோ மேக்ஸ் ஸ்ப்ரெட் 1.5 மில்லி + 0.10 மில்லி  1-2 3-5 வாரங்கள்  ஃபோலியார் ஸ்ப்ரே (இலைவழித் தெளித்தல்) 
நோய்க்கான தீர்வு
தீர்வு மருந்தளவு/ லிட்டர் தண்ணீர்  தெளிப்புகளின் எண்ணிக்கை  இடைவெளி  பயன்படுத்தும் முறை 
சைமோ பக்ட்ரோல் + சைமோ அல்ட்ரா ஸ்பெக்ட்ரம் + ஜிமோ மேக்ஸ் ஸ்ப்ரேட் 1.5 மில்லி + 1-2 மில்லி + 0.10 மில்லி  2-3 5-7 நாட்கள்  ஃபோலியார் ஸ்ப்ரே (இலைவழித் தெளித்தல்)
  1. வெள்ளை ஈக்கள்

அறிவியல் பெயர்: பெமீசியா டபாசி 

மிகவும் பாதிக்கப்பட்ட தாவர பகுதி: இலை

வெள்ளை ஈக்கள் சேதத்தின் அறிகுறிகள்

  • இது ஒரு சாறு உறிஞ்சும் பூச்சியாகும். இவை தாவர சாறு மற்றும் புளோயம் திசுக்களை உண்ணும்.
  • நிம்ஃப் மற்றும் பெரிய பூச்சிகள் தேன்பனி போன்ற ஒரு பொருளை சுரக்கின்றன. இதனால் கரும்பூஞ்சான் வளரும். இது ஒளிச்சேர்க்கையைத் தடுக்கிறது.
  • வெள்ளை ஈக்கள் இலை சுருட்டு, ஜெமினி மற்றும் மொசைக் வைரஸ்களின் திசையன்களாகச் செயல்படுகிறது.

கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் (உயிரியல்)

தடுப்பு/முற்காப்பு
தடுப்பு  மருந்தளவு/ லிட்டர் தண்ணீர்  தெளிப்புகளின் எண்ணிக்கை  இடைவெளி  பயன்படுத்தும் முறை 
சைமோ பக்ட்ரோல் + ஜிமோ மேக்ஸ் ஸ்ப்ரெட் 1.5 மில்லி + 0.10 மில்லி  1-2 3-5 வாரங்கள்  ஃபோலியார் ஸ்ப்ரே (இலைவழித் தெளித்தல்) 
நோய்க்கான தீர்வு
தீர்வு மருந்தளவு/ லிட்டர் தண்ணீர்  தெளிப்புகளின் எண்ணிக்கை  இடைவெளி  பயன்படுத்தும் முறை 
சைமோ பக்ட்ரோல் + சைமோ அல்ட்ரா ஸ்பெக்ட்ரம் + ஜிமோ மேக்ஸ் ஸ்ப்ரேட் 1.5 மில்லி + 1-2 மில்லி + 0.10 மில்லி  2-3 5-7 நாட்கள்  ஃபோலியார் ஸ்ப்ரே (இலைவழித் தெளித்தல்)

தயாரிப்புகள்

  1. சைமோ பக்ட்ரோல் 
  2. சைமோ அல்ட்ரா ஸ்பெக்ட்ரம்
  3. ஜிமோ மேக்ஸ் ஸ்ப்ரெட்

இரசாயன அல்லது வேதியியல் மூலம் பெறப்பட்ட பூச்சிக்கொல்லிகளுடன் ஒப்பிடும்போது, உயிர் பூச்சிக்கொல்லிகள் பொதுவாக மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதுகாப்பானவை. விவசாயத்தில் பூச்சி மேலாண்மையில் உயிர் பூச்சிக்கொல்லிகளின் முதன்மையான நன்மையே, அவற்றின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் புரவலன் தனித்தன்மை ஆகும். இதனுடன் ஒரு பரப்பும் அல்லது ஒட்டும் திரவம் மற்றும் நுண்ணூட்டச்சத்தினைக் கலந்து தெளிப்பதால், தெளிக்கப்பட வேண்டிய உடலில், கரைசலை சரியாகப் பரப்ப உதவுகிறது மற்றும் இது தாவர வளர்ச்சி மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது.

  1. சைமோ பக்ட்ரோல்: இது திரவ வடிவில் கிடைக்கிறது. இது தாவரவியல் சாறுகள் / தாவர எண்ணெய்கள், நிலைப்படுத்திகள் மற்றும் துணைப்பொருட்களின் தனித்துவமான கலவையாகும்.
  • சைமோ பக்ட்ரோலின் முக்கிய நன்மைகள் என்னவென்றால், இது அனைத்து வகையான பூச்சிகளை கட்டுப்படுத்துவதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மற்றும் இது ஒரு பரந்த அளவிலான பூச்சிக் கொல்லியாக செயல்படுகிறது. இந்த உயிர் பூச்சிக்கொல்லி அனைத்து பயிர்களுக்கும் பரிந்துரைக்கப்படுகிறது மற்றும் குறிப்பாக வண்டுகள் மற்றும் உறிஞ்சும் பூச்சிகளை குறிவைத்து அழிக்கிறது.
  • இதன் செயல் முறை நரம்பு மண்டலத்தை செயலிழக்கச் செய்கிறது மற்றும் பூச்சியின் இயக்கம், பறக்கும் திறன் மற்றும் உணவு உட்கொள்வதைத் தடுக்கிறது. பரிந்துரைக்கப்பட்ட அளவு 1.5 மில்லி/ லிட்டர் தண்ணீர்.
  • சைமோ பக்ட்ரோல் + சைமோ மேக்ஸ் ஸ்பெரெட் ஒரு நோய்த்தடுப்புக் கட்டுப்பாட்டாகத் தெளிக்கப்படலாம், அதேசமயம் சைமோ அல்ட்ரா ஸ்பெக்ட்ரம் + சைமோ பக்ட்ரோல் + சைமோ மேக்ஸ் ஸ்பெரெட் ஆகியவற்றை பூச்சியின் தொற்று ஏற்பட்டவுடன் உடனடியாகப் பயன்படுத்தலாம். தொற்று கடுமையாக இருந்தால், 5-7 நாட்கள் இடைவெளியில் மற்றொரு முறை தெளிப்பதன் மூலம் மிளகாயில் உள்ள அனைத்து சாறு உறிஞ்சும் பூச்சிகளையும் கட்டுப்படுத்தலாம்.
  1. சைமோ அல்ட்ரா ஸ்பெக்ட்ரம்: இது திரவ நிலையில் கிடைக்கிறது. இது தாவரவியல் சாறுகள்/தாவர எண்ணெய்கள், நிலைப்படுத்திகள் மற்றும் துணை பொருட்கள் ஆகியவற்றின் கலவையாகும்.
  • புழுக்களுக்கு எதிராக அனைத்து பயிர்களுக்கும் இந்த உயிர் பூச்சிக்கொல்லி மருந்து பரிந்துரைக்கப்படுகிறது.
  • இது முக்கியமாக பூச்சிகளின் லார்வா கட்டத்தை குறிவைத்து அழிக்கிறது. பூச்சிகளின் நரம்பு மண்டலத்தை முடக்கி, பறக்கும் திறன் மற்றும் உண்ணும் இயக்கத்தைத் தடுக்கிறது.
  • சைமோ அல்ட்ரா ஸ்பெக்ட்ரம்-ன் பரிந்துரைக்கப்பட்ட அளவு 1-2 மில்லி/லிட்டர் தண்ணீர்.
  • சைமோ அல்ட்ரா ஸ்பெக்ட்ரம் மற்றும் சைமோ மேக்ஸ் ஸ்பெரெட் ஆகியவற்றை இலை உண்ணும் கம்பளிப்புழு மேலாண்மைக்கான தடுப்புக் கட்டுப்பாட்டு நடவடிக்கையாக, அதன் தாக்குதலுக்கு முன்பே தெளிக்கலாம்.
  • பூச்சி தாக்குதலுக்குப் பிறகு, சைமோ அல்ட்ரா ஸ்பெக்ட்ரம் + சைமோ பக்ட்ரோல் + சைமோ மேக்ஸ் ஸ்பெரெட் ஆகியவற்றைக் கலந்து தெளிப்பதன் மூலம், மிளகாயில் உள்ள அனைத்து சாறு உறிஞ்சும் பூச்சிகள் மற்றும் புழுக்களையும் கட்டுப்படுத்தலாம். தொற்று கடுமையாக இருக்கும் போது, இரண்டாவது முறை, 5-7 நாட்கள் இடைவெளியில், தெளிக்க வேண்டும். 
  1. சைமோ மேக்ஸ் ஸ்பெரெட்: இது திரவ வடிவில் கிடைக்கிறது. இது தெளிக்கப்பட்ட பகுதிகளில் உயிர் பூச்சிக்கொல்லியை சீரான முறையில் பரப்ப உதவுகிறது. இதை அனைத்து பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். இது நீரின் மேற்பரப்பு பிணைப்பை உடைத்து, தெளிப்பு கரைசலின் ஒட்டும் தன்மையையும், அதன் பரவலையும் அதிகரிக்கிறது.
  • சைமோ மேக்ஸ் ஸ்பெரெட்-ஐ UAL -இன் பிற தயாரிப்புகளுடன் இணைந்து பயன்படுத்தலாம். இது விவசாயத்தில் பயன்படுத்தப்படும் ஒரு அருமையான பரவலன். இது அனைத்து தெளிப்பு கரைசல்கள் மற்றும் மண்ணில் பயன்படுத்தப்படும் கரைசல்களின் செயல்திறனை அதிகரிக்கவும் செய்கிறது.
  • இது இயற்கையில் அயனி அல்லாதது மற்றும் கரிமமானது. இது ஒரு இந்திய NPOP – ஆல் அங்கீகரிக்கப்பட்ட உள்ளீடு. எனவே கரிம வேளாண்மையிலும் இதனை பயன்படுத்தலாம்.
  • சைமோ மேக்ஸ் ஸ்பெரெட் மருந்தின் அளவு, பயன்பாட்டு முறையைப் பொறுத்தது. தொட்டி கலவை தீர்வுக்கு, 0.10 மிலி/லி தண்ணீர் (அதாவது 10 மிலி/100 லிட்டர் தண்ணீர்) பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. சொட்டு நீர் பாசனத்திற்கு, ஏக்கருக்கு 25 மில்லி/ 200 லிட்டர் தண்ணீருக்கு பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.

சான்றிதழ்: UAL தயாரிப்புகள் விவசாயம், மீன்வளர்ப்பு, மற்றும் கால்நடை தீவனம் மற்றும் பண்ணை துறைகளுக்கு ஆக்கப்பூர்வமான மற்றும் சுற்றுச்சூழல்-நிலையான தீர்வுகளை வழங்குகிறது. மேலும் UAL தயாரிப்புகள் OMRI மற்றும் ECOCERT ஆகியவற்றால் சான்றளிக்கப்பட்டுள்ளன. இவை உலகின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் முகவர்கள். OMRI, EU, JAS, NOP மற்றும் NPOP போன்ற கரிம வேளாண்மைக்கான பல்வேறு சர்வதேச மற்றும் தேசிய தரங்களால் சான்றளிக்கப்பட்ட, ZYΜΟ® மற்றும் XYMO® தொடர்களின் பிராண்ட் பெயர்களின் கீழ் கரிம உயிரியல் தீர்வுகளை UAL தயாரித்து சந்தைப்படுத்துகிறது. இந்த சான்றிதழ் மூலம் தயாரிப்புகள் பாதுகாப்பானது, இயற்கையானது மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்தது மற்றும் இயற்கை விவசாயத்தின் முக்கியத் தேவைகளை பூர்த்தி செய்கிறது என்பதை உறுதிப்படுத்துகிறது.

spot_img

மேலும் அறிய

தொடர்பில் இருக்க

அண்மை தகவல்களைப் பெற எங்களை சப்ஸ்கிரைப் பண்ணுங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்