பாக்டீரியா இலைக் கருகல்
அறிகுறிகள்
- இந்நோய் வந்தால் இலைகளில் ஒழுங்கற்ற பழுப்பு நிறப் புள்ளிகள் தோன்றும்.
- இலைக்காம்புகளில் அடர் பழுப்பு நிற கோடுகள் மற்றும் பூப்பகுதிகளில் காய்ந்தும் காணப்படும்.
கட்டுப்படுத்தும் முறைகள்
இந்த நோயை கட்டுப்படுத்த கலப்பு மருந்து (காசுகமைசின் 5% + காப்பர் ஆக்சி குளோரைடு 45% டபிள்யு.பி) @ 30 கிராம்/ 10 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் தெளிக்கவும்.
கேரட் அழுகல் நோய்
அறிகுறிகள்
- கேரடின் மேற்புற திசுக்கள் அனைத்தும் அழுகி காணப்படும்.
- அழுகிய பாகங்கள் சாம்பல் நிறத்தில் காணப்படும். பிறகு வயலில் கெட்ட வாடை வீசும்.
கட்டுப்பட்டு முறைகள்
- இந்த நோயை கட்டுப்படுத்த கலப்பு மருந்து (மெட்டலாக்சைல் 8% + மேன்கோசெப் 64% டபிள்யு.பி) (Metalaxyl 8% WP + Mancozeb 64%) @ 1500 கிராம்/ ஏக்கர் என்ற அளவில் கலந்து வயலுக்கு பாசனத்தில் கொடுக்கவும்.
இலைப்புள்ளி நோய்
அறிகுறிகள்
- இலைகளில் முதலில் நீளமான கருப்பு நிற புள்ளிகள் காணப்படும்.
- இலைக்காம்புகளில் அடர் நிறப் புள்ளிகள் தோன்றும். சில சமயங்களில் பிளவுப்பட்டு காணப்படும். முடிவில் இலைகள் மடிந்துவிடும்
கட்டுப்படுத்தும் முறைகள்
- கலப்பு மருந்து (காசுகமைசின் 5% + காப்பர் ஆக்சி குளோரைடு 45% டபிள்யு.பி) @ 30 கிராம்/ 15 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் தெளிக்கவும்.
அடிச்சாம்பல் நோய்
அறிகுறிகள்
- இலையில் மேற்புறம் மஞ்சள் நிற புள்ளிகள் தென்படும்.
- இலையின் அடிபுறம் சாம்பல் போன்று பூஞ்சை வளர்ச்சி தென்படும்.
கட்டுப்படுத்தும் முறை
- செடிகளை சரியான இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.
- இந்த நோயை சரிசெய்ய கலப்பு மருந்து (கார்பென்டேசிம் 12% + மேன்கோசெப் 63% டபிள்யு.பி) @ 40 கிராம்/ 10 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் தெளிக்கவும்.
கேரட் செடியை தாக்கும் பூச்சிகள்
அசுவினி
- இவை பச்சை மற்றும் மஞ்சள் நிற பூச்சிகள் தண்டுகள் மற்றும் இலைகளில் இருக்கும்.
- பாதிக்கப்பட்ட செடியின் இலையில் வேளிர்ந்த மஞ்சள் நிற புள்ளிகள் தென்படும்.
கட்டுபாட்டு முறை
- வேப்பெண்ணை 30 மில்லி/ 10 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து தெளிக்கலாம்.
- தியோமீதோக்சம் 25% டபிள்யு.ஜீ (Thiamethoxam.25% WG) @ 12 கிராம்/15லிட்டர் தண்ணீர் என்ற அளவில் தெளிக்கவும்.
கேரட் துரு பூச்சி
- கேரட்டில் அதிக அளவில் துளைகள் காணப்படும்.
- செடிகள் வாடியதை போல் காட்சி தரும்.
கட்டுப்படுத்தும் முறை
அறுவடை செய்தவுடன் கேரட்டை மூடிவைக்கவேண்டும். இல்லையெனில் அவற்றில் முட்டையிட்டு அதிக சேதப்படுத்தும்.
கேரட் கூன் வண்டு
- பாதிக்கப்பட்ட செடிகளின் இலைகள் மஞ்சள் நிறத்தில் காணப்படும்.
- இவை கேரட்டை துளை இட்டு முற்றிலுமாக சேதப்படுத்தும்.
கட்டுப்படுத்தும் முறை
- இந்த வண்டை கட்டுப்படுத்த குளோரோபைரிபாஸ் என்ற மருந்தை 1 கிலோ/ ஏக்கர் என்ற அளவில் கலந்து பாசனத்தில் கொடுக்கவும்.
நூற்புழுக்கள்
- பாதிக்கப்பட்ட செடியில் உள்ள கேரட் பிளந்து காணப்படும். மேலும் கேரட்டில் கிளைகள் முளைத்தவாறு காணப்படும்.
- இவை கேரட்டில் 40 % வரை மகசூலை குறைத்துவிடும்.
கட்டுப்படுத்தும் முறை
- நடவுக்கு முன்பு வயலை நன்கு உழுவதால் இதனை கட்டுப்படுத்தலாம்.