HomeCropதக்காளி பயிரில் ஏற்படும் பின் பருவ இலைக்கருகலை கட்டுப்படுத்த கரிம கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்

தக்காளி பயிரில் ஏற்படும் பின் பருவ இலைக்கருகலை கட்டுப்படுத்த கரிம கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்

தக்காளி பின்பருவ இலை கருகல் என்பது தக்காளி மற்றும் உருளைக்கிழங்கு தாவரங்களைத் தாக்கக்கூடிய பேரழிவு கொண்ட நோயாகும். இது பைட்டோபதோரா இன்ஃபெஸ்டன்ஸ் என்ற பூஞ்சைக் கிருமியால் ஏற்படுகிறது. இது கடுமையான பயிர் இழப்புகளை ஏற்படுத்தக்கூடியது மற்றும் 1800’களில் நடுப்பகுதியில் ஐரிஷ் உருளைக்கிழங்கு பஞ்சத்திற்கு காரணமாக இருந்தது இந்நோயே. இந்த நோய் முதன்முதலில் 1845 இல் உருளைக்கிழங்கிலும், 1847 இல் பிரான்சில் தக்காளியிலும் கண்டறியப்பட்டது. பின்னர் 1863- இல் டி பாரி என்பவரால் பைட்டோஃப்தோரா இன்ஃபெஸ்டன்ஸ் என்ற அதே உயிரினத்தால் ஏற்பட்டது என்று உறுதிப்படுத்தப்பட்டது. இந்த நோய் 1840’களில் அமெரிக்காவிற்கும் மெக்சிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஏற்கனவே பாதிக்கப்பட்ட தக்காளிகள் மூலம் பரவியது. 1990’களில் நோய்க்கிருமியின் புதிய மற்றும் மிகவும் தீவிரமான விகாரங்கள் தோன்றின. இது உலகளவில் தக்காளி உற்பத்திக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.

  • தொற்று வகை: நோய்
  • பொதுவான பெயர்: பின் பருவ இலைக்கருகல்
  • அறிவியல் பெயர்: பைட்டோஃப்தோரா இன்ஃபெஸ்டன்ஸ்
  • தாவர நோய் வகை: பூஞ்சை நோய்
  • பரவும் முறை: பாதிக்கப்பட்ட நாற்றுகள், வித்திகளால் (காற்று அல்லது நீர் மூலம்) பரவுகிறது.
  • மிகவும் பாதிக்கப்பட்ட தாவர பகுதி: இலை, தண்டு மற்றும் பழம்
  • இந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்கள்: கர்நாடகா, மேற்கு வங்காளம், பஞ்சாப், உத்தரப் பிரதேசம் (ஹிமாச்சலப் பிரதேசத்தின் சிம்லா மாவட்டத்தில் தீவிரமாக உள்ளது)

நோய்  வளர்ச்சிக்கு சாதகமான சுற்றுச்சூழல் காரணிகள்

  • வெப்பநிலை: வித்திகள் உருவாக்கத்திற்கு 12-18°C வெப்பநிலையில் உகந்ததாக இருக்கும்.
  • சார்பு ஈரப்பதம்: 85-90% சார்பு ஈரப்பதத்தில் அதிக வித்திகள் காணப்படுகின்றன.

அறிகுறிகள்

அ. ஆரம்ப அறிகுறிகள்: இலைகள் ஒழுங்கற்ற வடிவத்திலும், நீரில் நனைந்த புண்கள் போன்றும், பெரும்பாலும் ஒரு இலகுவான ஒளிவட்டம் அல்லது வளையத்துடன் அவற்றைச் சுற்றி புண்கள் வேகமாக விரிவடைந்து முழு இலையும் கருகி விடுகிறது.

ஆ. கடுமையான அறிகுறிகள்: புண்கள் பெரிதாகி, இலைகள் பழுப்பு நிறமாகி, சுருங்கி பின்னர் இறந்து விடும். பின் பருவ இலைக்கருகல் பூஞ்சை தாவர வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் தக்காளி பழத்தைத் தாக்கும். கடுமையான தொற்று காரணமாக, பழங்களின் திசுக்களின் சிதைவு அழுகலுக்கு வழிவகுக்கிறது.

தக்காளி பின் பருவ இலைக்கருகலுக்கான உயிரியல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்

நோய்த்தடுப்பு

நோய்த்தடுப்பு மருந்தளவு/லிட். தண்ணீர் தெளிப்புகளின் எண்ணிக்கை  தெளிப்பு இடைவெளி பயன்படுத்தும் முறை
சைமோ BLT100 + ஜிமோ மேக்ஸ் ஸ்ப்ரெட் 2 கிராம் + 0.10 மிலி 1-2 3-5 வாரங்கள் இலை வழி தெளித்தல் 

நோய்க்கான தீர்வு

நோய்க்கான தீர்வு மருந்தளவு/லிட். தண்ணீர் தெளிப்புகளின் எண்ணிக்கை  தெளிப்பு இடைவெளி பயன்படுத்தும் முறை
சைமோ BLT100 + ஜிமோ  பயோகார்டு WLT6040 + சைமோ பயோலாஜிக்  2 கிராம் + 1 கிராம் + 2-3 கிராம் 2-3 5-7 நாட்கள் இலை வழி தெளித்தல் 

தயாரிப்பு விவரங்கள்

  1. சைமோ BLT100 : இது தூள் வடிவில் கிடைக்கிறது மற்றும் இது NON-GMO (மரபணு மாற்றம் செய்யப்படாத/அல்லாத உயிரினங்கள்), லைசிங் பயோகேடலிஸ்ட்கள், நிலைப்படுத்திகள் மற்றும் பையோ-என்ஹான்சர்களை கொண்டுள்ளது. இது ஒரு பரந்த நிறமாலை கொண்ட உயிரி-முகவர் ஆகும். இது முன்பருவ இலைக்கருகல் மற்றும் பின் பருவ இலைக்கருகல் நோய்களுக்கு எதிராக பரிந்துரைக்கப்படுகிறது.
  2. சைமோ மேக்ஸ் ஸ்பெரெட்: இது திரவ வடிவில் கிடைக்கிறது. இது தெளிக்கப்பட்ட பகுதிகளில் உயிர் பூச்சிக்கொல்லியை சீராகப் பரப்புவதற்கு உதவியாக இருக்கிறது. இதை அனைத்து பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். இது நீரின் மேற்பரப்பு பிணைப்பை உடைத்து, தெளிப்பு கரைசல் ஈரத்தின் பரவலை அதிகரிக்கிறது.
  3. ஜிமோ  பயோகார்டு WLT6040: இத்தயாரிப்பு தூள் வடிவில் கிடைக்கிறது மற்றும் இது NON-GMO (மரபணு மாற்றம் செய்யப்படாத/அல்லாத உயிரினங்கள்), புரோட்டியோலிடிக் பயோகேடலிஸ்ட்கள், நிலைப்படுத்திகள், பயோ-என்ஹான்சர்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது மண்ணின் நுண்ணுயிர் செயல்பாட்டை அதிகரிக்கிறது. வேர் மண்டலத்தில் நல்ல ஏரோபிக் நுண்ணுயிரிகளை போதுமான ஊட்டச்சத்துக்களுடன் பெருக்குகிறது மற்றும் காற்றில்லா நோய்க்கிருமிகளுக்கான உணவை தடுப்பதன் மூலம் இறுதியாக SAR- முறையான பெறப்பட்ட எதிர்ப்பினை தூண்டுகிறது.

தயாரிப்பு பற்றிய கூடுதல் விவரங்களுக்கு, பின்வரும் பக்கத்தைப் பார்வையிடவும்:

spot_img

மேலும் அறிய

தொடர்பில் இருக்க

அண்மை தகவல்களைப் பெற எங்களை சப்ஸ்கிரைப் பண்ணுங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்