தர்பூசணி குக்குர்பிடேசியே குடும்பத்தைச் சேர்ந்தது. கடந்த நூற்றாண்டில் மட்டும், தர்பூசணியின் வெள்ளை தோலின் உள் அதிகபட்ச சிவப்பு நிறமும் மற்றும் சாறும் இருக்கும் வகையில் முறையாக பயிரிடப்படுகின்றன. இந்தியாவில் 2020-2021 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 31 மில்லியன் டன் தர்பூசணி உற்பத்தி செய்யப்பட்டது. இந்தியாவின் முன்னணி தர்பூசணி உற்பத்தியாளர்கள் உத்தரப் பிரதேசம், கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், ஒரிசா, மேற்கு வங்காளம், மத்தியப் பிரதேசம், ஹரியானா, மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களே ஆகும்.
சிரம நிலை: நடுத்தரம்
விதைகளின் தேர்வு
தர்பூசணியில் பல்வேறு வகைகள் இருக்கின்றன அதில் பலவிதமான நிறங்கள் உள்ளன, விதையுள்ள பழங்கள், விதைகள் இல்லா பழங்கள், வெவ்வேறு அளவுகள் மற்றும் வடிவங்களில் கூட உள்ளன. அர்கா மானிக், துர்காபூர் கேசர், அர்கா ஜோதி, ஸ்பெஷல் நம்பர் 1, அசாஹி யமடோ, சுகர் பேபி, மாதுரி 64, பிளாக் மேஜிக், மேம்படுத்தப்பட்ட ஷிப்பர், பூசா பெடனா, துர்காபுரா மீத்தா, வருண், விமல், லேகா, பிளாக் தண்டர், அர்கா ஆகாஷ், சுவர்னிமா மற்றும் அர்கா முத்து ஆகியவை பிரபலமான சில வகைகள்.
தர்பூசணி விதை நேர்த்தி
தர்பூசணி விதைகளை டிரைக்கோடெர்மா விரிடி ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் அல்லது சூடோமோனாஸ் ஃப்ளோரசன்ஸ் ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் அல்லது கார்பன்டிசிம் 2 கிராம்/கிலோ விதைகளுடன் நேர்த்தி செய்ய வேண்டும். இது அதிக பாதிப்பை உண்டாக்கும் மற்றும் மண்ணின் மூலம் பரவும் பூஞ்சை தொற்றுநோயைத் தடுக்கும்.
தர்பூசணிக்கு நாற்றங்கால் படுக்கை தயாரித்தல்
தர்பூசணி நர்சரியை, 200 காஜ் மொத்தமுள்ள, 10 செமீ விட்டம் மற்றும் 15 செமீ உயரம் கொண்ட பாலித்தீன் பைகளைத் தேர்ந்தெடுத்து, அதில் ஒரு பாலிபேக்கிற்கு 1:1:1 விகிதத்தில் சிவப்பு மண், மணல் மற்றும் பண்ணை எரு கலவையை பைகளில் நிரப்பவும். நாற்றுகளை வளர்ப்பதற்கு 98 செல்கள் கொண்ட ப்ரோட்ரேவையும்(Pro-tray) பயன்படுத்தலாம். பிறகு 15 நாட்கள் வயதுடைய நாற்றுகளை பிரதான வயலில் இடமாற்றம் செய்யவும்.
தர்பூசணிக்கான நில தயாரிப்புகள்
நிலத்தை நன்றாக உழவு செய்ய வேண்டும். நிலத்தை உழவு செய்த பிறகு, 20 டன் தொழு உரம், அசோஸ்பைரில்லம் 5 கிலோ/எக்டருக்கும், பாஸ்போபாக்டீரியா 5 கிலோ/எக்டருக்கும், சூடோமோனாஸ் 5 கிலோ/எக்டருக்கும், தொழு உரம் 50 கிலோ மற்றும் வேப்பம் புண்ணாக்கு 100 கிலோவுடன் கடைசி உழவுக்கு முன் இட வேண்டும். பின்னர் விதைப்பதற்கு 1.2 மீ அகலம் மற்றும் 30 செ.மீ உயரம் கொண்ட பாத்திகளை உருவாக்க வேண்டும். நாற்றுகள் குறைந்தபட்சம் 6 அங்குல இடைவெளியில் வைக்கப்பட வேண்டும் மற்றும் ஒவ்வொரு கால்வாயும் குறைந்தது 2.5 மீ இடைவெளியில் இருக்க வேண்டும். உயர்த்தப்பட்ட பாத்தி கால்வாய்கள் ஒவ்வொன்றும் சொட்டு நீர் பாசனத்துடன் சீரமைக்கப்பட்டால் மகசூல் அதிகமாகும்.
தர்பூசணிக்கான மண் வகை தேவைகள்
தண்ணீர் தேங்காமல் இருக்கும் நல்ல வடிகால் வசதியுள்ள மணல் கலந்த களிமண் மண்ணில் தர்பூசணி நன்றாக வளரும். தர்பூசணிக்கு உகந்த கார அமிலத்தன்மை 6.5-7.5 ஆகும்.
முடிவுரை
தர்பூசணி மற்ற கொடி வகைகள் போலல்லாமல் குறைந்த வாழ் நாளிலேயே அறுவடை செய்ய கூடியது. ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் தர்பூசணி விதைப்பதால் கோடைக் காலங்களில் அறுவடை செய்து அதிக விலைக்கு விற்கலாம்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
- தர்பூசணி பழத்தின் பிரபலமான இரகங்கள் யாவை?
- தர்பூசணிக்கான நாற்றங்கால் படுக்கையை எவ்வாறு தயாரிப்பது?
தர்பூசணிக்கான நாற்றங்காலை 200-கேஜ், 10 செ.மீ விட்டம் மற்றும் 15 செ.மீ உயரம் கொண்ட பாலிதீன் பைகள் அல்லது பாதுகாக்கப்பட்ட நாற்றங்காலில் பிரோட்ராய்ஸ் மூலம் தயாரிக்கலாம். ஒரு பாலிபேக் இல், 1:1:1 விகிதத்தில் சிவப்பு மண், மணல் மற்றும் தொழுவுரம் கலவையை பைகளில் நிரப்பவும். நாற்றுகளை வளர்ப்பதற்கு 98 செல்களைக் கொண்ட பிரோட்ராய்ஸ் பயன்படுத்தவும். 15 நாட்கள் பிறகு நாற்றுகளை வயலில் நடவு செய்யவும்..
- தர்பூசணி சாகுபடிக்கு நிலத்தை எவ்வாறு தயார் செய்வது?
நிலத்தை நன்றாக உழுது, 2.5 மீ இடைவெளியில் நீண்ட கால்வாயை அமைக்கவும். பின்னர் வயலில் உயர்த்தப்பட்ட படுக்கைக்களைத் தயார் செய்து விதைப்பதற்கு 1.2 மீ அகலமும் 30 செ.மீ உயரமும் கொண்டதாக அமைக்க வேண்டும்.
- தர்பூசணி விதைக்கு எவ்வாறு விதை நேர்த்தி செய்வது?
ஒரு ஏக்கருக்கு தேவையான விதைகளை பயனியர் அக்ரோ டிரைகோடெர்மா விரிடி – 250 மில்லி அல்லது பெவிஸ்டின் (கார்பென்டாசிம் 50% EC) – 2கிராம்/லிட்டர் என்ற அளவில் விதை நேர்த்தி செய்யவும். விதையை விதைப்பதற்கு முன் ஹைஃபீல்ட் ஏஜி ரிடோமெட் 35 -1.5 கிராம்/லிட்டர் + பிளாண்டோமைசின் 0.5 கிராம்/லிட்டர்+ஹ்யுமேட்சு ஹ்யூமிக் அமிலம் 5 – 10 மில்லி/கிலோ கலவையிலும் ஊறவைத்து விதை நேர்த்தி செய்யலாம்.
- தர்பூசணி பயிரிட ஏற்ற நேரம் எது?
ஜனவரி – பிப்ரவரி
- தர்பூசணி பழங்களை அறுவடை செய்ய ஏற்ற நேரம் எது?
கோடை மாதங்களில் அறுவடை செய்தால் அதிக விலை கிடைக்கும்.
- தர்பூசணிக்கு பொதுவான பரிந்துரைக்கப்படும் உரம் அளவு என்ன?
தர்பூசணிக்கான உரம் பரிந்துரை அளவு 22:22:22 கிலோ/ஏக்கர். வயலில் பயன்படுத்த கூடிய அளவு கீழே உள்ள அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ளது.
ஊட்டச்சத்து | உரங்கள் | அளவு (ஒரு ஏக்கருக்கு) |
இயற்கை/கரிம | தொழு உரம்/உரம் | 8 டன் |
வேப்பம் பிண்ணாக்கு | 40 கிலோ | |
தழை சத்து | கால்சியம் நைட்ரேட் | 142 கிலோ |
மணி சத்து | சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் (அல்லது)) | 139 கிலோ |
டபுள் சூப்பர் பாஸ்பேட் | 70 கிலோ | |
சாம்பல் சத்து | மியூரேட் ஆஃப் பொட்டாஷ் (அல்லது) | 37 கிலோ |
சல்பேட் ஆஃப் பொட்டாஷ் | 45 கிலோ | |
உயிர் உரம் | அசோஸ்பைரில்லம் (பயனியர் அக்ரோ) மற்றும் பாஸ்போபாக்டீரியம் (பாஸ்போ பாக்டீரியா) | மண்ணுக்கானப் பரிந்துரை: 4 கிலோ |