நீரியல் விவசாயம் என்பது தாவரங்களை மண்ணில் வளர்ப்பதற்குப் பதிலாக ஊட்டச்சத்து நிறைந்த நீர் கரைசலில் வளர்க்கும் ஒரு செயல்முறையாகும். நீரியல் விவசாயம் அதிக மகசூலைத் தருகிறது மற்றும் வீட்டிற்குள் வளர எளிதானது. இருப்பினும், நீங்கள் அதை வீட்டிற்கு உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் வளர்க்கலாம்.
அவரை மிகவும் விரும்பக்கூடிய காய்கறிகளில் ஒன்றாகும், மேலும் அவை உலகளவில் பல்வேறு உணவுகளில் அவற்றின் சுவைக்காகவும், அதில் உள்ள வளமான ஊட்டச்சத்துக்களுக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன. இதனுள் அதிக அளவில் பி-வைட்டமின் மற்றும் நார்சத்து உள்ளது. இப்போது இந்த அவரையை வளர்க்க அதற்க்கு ஏற்ற பருவங்களுக்காக காத்திருக்காமல், நீரியல் அல்லது மண்ணில்லா அவரை விவசாயம் மூலம் ஆண்டு முழுவதும் அவற்றை வளர்க்க முடியும். அவரை அதிக உற்பத்தி திறன் கொண்ட காய்கறிகளில் ஒன்றாகும். எனவே இதனை நீரியல் அல்லது மண்ணில்லா விவசாயம் மூலம் செய்யும்பொழுது குறைந்த பராமரிப்பில் அதிக லாபம் எடுக்க முடியும்.
நீரியல் அவரை விவசாயத்தின் நன்மைகள்
- பாரம்பரிய அவரை விவசாயத்துடன் ஒப்பிடும்போது நீரியல் அல்லது மண்ணில்லா அவரை விவசாயம் பல நன்மைகளைக் கொண்டுள்ளது. அவரை செடிகளை நடுவதற்கு மண்ணைப் பயன்படுத்தாததால், மண்ணால் பரவும் நோய்களைத் தவிர்க்கலாம்.
- ஊட்டச்சத்துக் கரைசலில் அதிக ஆக்ஸிஜன் அளவு இருப்பதால் விரைவான மற்றும் அதிக மகசூல் பெறலாம்.
- அவரை சாகுபடிக்கு ஏற்ற பருவம் வரை காத்திருக்காமல் வருடம் முழுவதும் நடவு செய்யலாம்.
- பாரம்பரிய அவரை சாகுபடியில் செலவாகும் 80-90 சதவீத தண்ணீரை சேம்பிக்கலாம்.
- இதற்க்கு அதிக இடம் தேவையில்லாத காரணத்தினால், வீட்டிலேயே சாகுபடி செய்யலாம்.
நீரியல் அவரை வளர்க்க தேவையான சத்து ஊடகம்
பெர்லைட் மற்றும் வெர்மிகுலைட்டின் கலவை
பெர்லைட் என்பது எரிமலைக் கண்ணாடியிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு கனிம ஊடகமாகும், இது அதிக காற்றோட்டத்தைக் கொண்டுள்ளது. வெர்மிகுலைட் என்பது அதிக தண்ணீர் உறிஞ்சக்கூடியவை மற்றும் நன்கு காற்றோட்டமான ஊடகமாகும். இவ்விரண்டின் கலவை நீரியல் அவரை வளர்ப்பிற்கு சிறப்பாகச் செயல்படும்.
களிமண் கூழாங்கற்கள்
அதிக அளவு நீர், ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை தக்கவைத்துக்கொள்ளும் திறனைக் கொண்டிருப்பதால், செடியின் வளர்ச்சிக்கு உதவும் ஊடகங்களில் இதுவும் முக்கியமான ஒன்றாகும்.
அவரை சாகுபடி செய்ய நீரியல் அமைப்பு
மண்ணில்லா அவரை சாகுபடிக்கு உகந்த இரண்டு முக்கிய அமைப்புகள் உள்ளன. அவை எப்-மற்றும்-ப்லொவ் (ebb-and-flow) அமைப்பு மற்றும் ஊட்டச்சத்து ஓட்ட தொழில்நுட்பம் (NTF) அமைப்பு. வீட்டுத் தோட்டத்திற்கு, தளர்வான வளர்ச்சி ஊடகத்துடன் கூடிய டச்சு பக்கெட் அமைப்பு மிகவும் சிறப்பாக இருக்கும்.
பிரபலமான அவரை ரகங்கள்
அவரை வளரும் பழக்கவழக்கங்களின் அடிப்படையில் இரண்டு வகைகளாக வகைப்படுத்தப்படுகின்றன, அதாவது செடி அவரை மற்றும் கோடி அவரை எனப்படும். செடி அவரை புதர் போன்று வளரக்கூடியவை. இதனால் இவற்றை வளர்க்க குறைந்த இடங்கள் இருந்தால் போதுமானதாகும். ஆனால் கொடி அவரை வளர்க்க மூங்கில் அல்லது இரும்பு கம்பிகளை கொடி படர கொடுக்கவேண்டும்.
அதாவது நீரியல் அவரை சாகுபடிக்கு இந்த இரண்டு ரக அவரையும் உகந்ததாகும்.
இடத்தை தேர்வு செய்தல்
முன்பே கூறியதுபோல இரண்டு வகை அவரை இருப்பதால், கொடி அவரைக்கு செங்குத்தாக வளர ஆதரவு தேவை, அவற்றின் வளர்ச்சிக்கு மூங்கில், கயிறுகள் அல்லது குறுக்கு நெடுக்காக அடிக்கப்பட்ட தட்டி ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். எனவே நீங்கள் கொடி அவரை வளர்க்க ஏற்ற இடங்களை தேர்வு செய்வது அவசியமாகும்.
நீரியல் முறையில் அவரை விதை முளைப்பு
அவரையை அதனின் விதையை கொண்டு இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. பொதுவாக அவரை மிக வேகமாக முளைக்கும் திறன் கொண்டது, அதாவது 2 வாரங்களில் முளைக்கும். சிலசமயங்களில் 6-7 நாட்களில் முளைத்துவிடும். இதனை நீங்கள் வீட்டில் அல்லது வெளிப்புறத்திலும் முளைக்க வைக்கலாம்.
பொதுவாக, விதைகள் 1 அங்குல ஆழத்தில் விதைக்கப்பட வேண்டும், இருப்பினும், இது விதை வகை, தரம் மற்றும் பிற காரணிகளைப் பொறுத்து இந்த அளவு மாறுபடும். முளைக்கும் வரை விதைகளுக்கு மிகவும் சாதகமான வெப்பநிலை 16℃ – 18℃ ஆகும்.
விதைகள் முளைத்த பிறகு, அவரை முளைத்த 2 முதல் 3 இலைகள் வந்த பிறகு, அவற்றை மிகவும் கவனமாக ஒரு நீரியல் அமைப்பிற்கு இடமாற்றம் செய்யவேண்டும். செடியின் நெரிசலைத் தவிர்க்க, கொடி அவரையே 4-6 அங்குல இடைவெளியில் வைக்கவேண்டும். மேலும் செடி அவரையை 2-4 அங்குல இடைவெளியில் நடலாம்.
அவரை சாகுபடியில் வெப்பநிலை மற்றும் சூரியஒளியின் முக்கியத்துவம்
அவரை செடி அதிக அளவில் சூரிய ஒளியை விரும்பக்கூடியவை. அதனால் உங்கள் செடி ஒரு நாட்களில் 12-13 மணி நேரம் சூரியஒளி பெறுவது மிகவும் அவசியமானதாகும்.
ஊட்டச்சத்து கலந்த ஊடகம்
நீரியல் முறையில் வள விழுமாறு இருந்தால் உங்கள் செடியின் மகசூல் அதிகரிக்கும். எனவே நீங்கள் நன்கு சூரியஒளி உள்ளவாறு இடத்தை தயார் படுத்தவேண்டும். அவரை செடிகளுக்கு குறைவான அளவிலான ஊட்டச்சத்துக்கள் மட்டுமே தேவைப்படுகின்றன. நீங்கள் வீட்டிலேயே சொந்தமாக தீர்வை உருவாக்கலாம் அல்லது முன் கலந்துவைத்த, பயன்படுத்த தயாராக உள்ள ஊட்டச்சத்து கலந்த ஊடகத்தை பிக்ஹாட் இணையதளத்தின் மூலம் வாங்கி பயன்படுத்தலாம்.
அவ்வாறு நீங்கள் இணையதளத்தில் வாங்கி பயன்படுத்தினால், ஊடகத்தை உபயோகிக்கும் முன்பு, அதைப்பற்றி நன்கு தெரிந்துக்கொண்டு பயன்படுத்தவேண்டும்.
நீரியல் அவரையின் அறுவடை
நீரியல் முறையில் வளர்க்கப்படும் அவரை பாரம்பரியமாக வளர்க்கப்பட்டதை விட வேகமாக அறுவடைக்கு வரும். பச்சை அவரையே முதிர்ச்சியடைந்து, மிருதுவான மற்றும் புத்துணர்ச்சியை இழக்கும் முன்பே அறுவடை செய்ய வேண்டும். மேலும் நீங்கள் அறுவடை செய்யும்பொழுது, செடியை பாதிக்காத வகையில் அறுவடை செய்யவேண்டும்.