நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் கரிம உரங்களின் ஊட்டச்சத்துக்கள் மண் வளத்தையும் மண்ணின் ஊட்டச்சத்தையும் அதிகப்படுத்திடுகிறது. மக்காச்சோளம் ஒரு நிலையான உணவு விருப்பமாகவும், உலகின் பல பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு குறிப்பிடத்தக்க பயிராகவும் திகழ்கிறது.
மக்காச்சோள பயிருக்கான ஊட்டச்சத்து தேவைகள்
- மக்காச்சோளப் பயிருக்கு மண்ணிலிருந்து உயர்மட்ட ஊட்டச்சத்து தேவைப்படுகிறது, இதனால் இதற்கு உயர்தர உரங்கள் தேவை. மேலும் மண்ணின் சத்தை பரிசோதித்த பிறகே, புதிதாக உரத்தை கொடுக்கவேண்டும்.
- மக்காச்சோள பயிருக்கு 40% தழைச்சத்து, 25% மணிச்சத்து, 20% சாம்பல்சத்து மற்றும் மீதமுள்ள சிறிய பகுதி நுண்ணூட்டச்சத்துக்கள் அதிக மகசூலுக்கு தேவைப்படுகிறது.
- தழை, மணி, சாம்பல்சத்து மற்றும் ஜிங்க் ஆகியவை பயிர் வளர்ச்சிக்கான சிறந்த ஆதாரங்களாகும். மேலும் இந்த சத்துக்களை கரிம அல்லது கனிம உரமாக முழு பயிர் வளர்ச்சி காலத்திற்கும் கொடுக்கலாம்.
- மக்காசோளத்தின் வெவ்வேறு ரகங்களை பொறுத்து அதற்க்கு வழங்கப்படும் உரத்தின் அளவு மாறுபடும்.
தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்கள்
- தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்கள் ஆகியவை இணைந்து மண்ணின் ஊட்டச்சத்து அளவை சமன் செய்து மக்காச்சோளம் வளர்ச்சிக்கு பங்களிக்கின்றன. இது மக்காசோள செடி வளர்ச்சிக்கும் கருது வளர்ச்சிக்கும் தேவையான மண்ணில் அத்தியாவசிய மற்றும் முக்கிய ஊட்டச்சத்துக்களாக செயல்படுகிறது.
- பாசன நீருடன் கரிம மற்றும் கனிம உரங்களைப் பயன்படுத்துவது விதை வளர்ச்சி, மண்ணின் காற்றோட்டம், ஊட்டச்சத்து உள்ளடக்கம் ஆகியவற்றை கூட்டாக ஊக்குவிக்க உதவும். மேலும் பயிர் வளர்ச்சி மற்றும் மண் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் உதவுகிறது.
- மக்காச்சோள பயிருக்கு மண் பரிசோதனை செய்த பிறகே உரத்தை கொடுக்கவேண்டும். ஒருவேளை பரிசோதனை செய்யாவிடில், ஒரு ஏக்கருக்கு 27.4 கிலோ தழைச்சத்து , 4.8 kg மணிசத்து மற்றும் 18.4 சாம்பல் சத்து என்ற அளவில் கொடுக்கவேண்டும்.
- கால்சியம், சல்பர், மெக்னீசியம், போரான் மற்றும் துத்தநாகம் போன்ற நுண்ணூட்டச் சத்துக்களைப் பயன்படுத்துவதன் மூலம், பயிர் மற்றும் மண்ணுக்குத் தேவையான சிறந்த ஊட்டச்சத்துக்களை வழங்கி, அவை மண் வளத்தைத் தக்கவைத்து, பயிர் விளைச்சலை அதிகரிக்கவும் உதவுகிறது.
இயற்கை உரமேலாண்மை
கரிம மக்காச்சோள உற்பத்தியில் ஊட்டச்சத்து மேலாண்மைக்கான பின்வரும் விருப்பங்கள் பொருத்தமான கலவையில் கிடைப்பதன் அடிப்படையில் பயன்படுத்தப்பட வேண்டும்:
பசுந்தாள் உரமிடுதல்:
பசுந்தாள் உர பயிர்களான சணப்பை/ தக்கைப்பூண்டு/ குதிரைவாலி முறையே 12/20/20 கிலோ விதை வீதம்/ஏக்கருக்கு விதைப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மக்காச்சோளத்தை விதைப்பதற்கு முன், ஐம்பது நாள் வயதுடைய பசுந்தாள் பயிரை உழுது, 10 நாட்களுக்கு வயலில் மக்க வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதனால் மண்ணின் தரம் உயரும்.
- மக்காச்சோளத்தை விதைப்பதற்கு முன் கோடை வெண்டைக்காய் அல்லது குதிரைவாலி பயிரின் வைக்கோலை வயலில் இட்டு பிறகு அதனை உழலாம்.
- பண்ணை தொழு உரம் அல்லது மக்கிய குப்பை உரம் @ 6 டன்/ஏக்கருக்கு அல்லது மண்புழு உரம் @ 3 டன்/ஏக்கருக்கு என்ற அளவில் கொடுக்கலாம்.
உயிரி உரம்:
அசாடோபாக்டர் அல்லது அசோஸ்பைரில்லம் இதனுடன் பி.எஸ்.பி எனப்படும் உயிரி உரத்தை கலந்து ஏக்கருக்கு 200 கிராம் விதை நேர்த்தி செய்ய பயன்படுத்தலாம். நீர் நடுவில் இருந்தால் ஏக்கருக்கு 100 மில்லி என்ற அளவில் பயன்படுத்தலாம். இதையே வயலுக்கு கொடுப்பதற்கு அனைத்தையும் 5-6 கிலோ/ ஏக்கர் என்ற அளவில் கொடுக்கவும்.
மக்காச்சோளம் உர அட்டவணை:
செடியின் வயது | உர அட்டவணை |
விதைக்கும் தருணம் (அடியுரமாக ) | சாம்பல் மற்றும் மணிச்சத்தை முழு அளவையும் அடியுரமாக கொடுக்கவேண்டும் மேலும் இதனுடன் மூன்றில் ஒரு பங்கு தழைச்சத்தையும் நுன்னூட்டத்தையும் கொடுக்கவேண்டும். |
முழங்கால் உயரம் வந்த பிறகு (முதல் தவணை) | மேலுரமாக மூன்றில் ஒரு பங்கு தழைச்சத்து கொடுக்கவேண்டும். பிறகு நுன்னூட்டசத்து தனியாக ஒரு முறை செடிகளுக்கு தெளிக்கவேண்டும். |
பூ வருவதற்கு முன்பு (இரண்டாம் தவணை) | மேலுரமாக மூன்றில் ஒரு பங்கு தழைச்சத்து கொடுக்கவேண்டும். பிறகு நுன்னூட்டசத்து தனியாக ஒரு முறை செடிகளுக்கு தெளிக்கவேண்டும். |
உர அளவு
உங்கள் மக்காச்சோளம் பயிருக்கு 50 கிலோ யூரியா, 55 கிலோ டி.ஏ.பி. மற்றும் 20 கிலோ பொட்டாஷ்/ ஏக்கர் ஆகியவற்றை அடியுரமாக இடவேண்டும், பிறகு ஒரு மாதம் கழித்து 50 கிலோ யூரியா/ ஏக்கர் இடவேண்டும், பிறகு பூக்கும் தருணத்தில் 50 கிலோ யூரியா/ ஏக்கர் என்ற அளவில் இடவேண்டும்.