இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் பரவலாகப் பயிரிடப்படும் பழவகைப் பயிர்களில் வாழை முதன்மையானது. ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, குஜராத், மஹாராஷ்டிரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் வாழைப்பழம் உற்பத்தியில் 33 மில்லியன் மெட்ரிக் டன்கள் செய்கின்றன. உலகளவில் வாழை உற்பத்தியில் 2021 ஆம் ஆண்டில் இந்தியா முதலாவது இடத்தில் உள்ளது. இருப்பினும், இந்தியாவில் வாழை விவசாயிகளுக்கு சிகடோகா இலைப்புள்ளி நோய் ஒரு குறிப்பிடத்தக்க பிரச்சனையாகும். சிகடோகா இலைப்புள்ளி என்பது வாழை செடிகளை பாதிக்கும் ஒரு பூஞ்சை நோயாகும் மற்றும் முறையாக நிர்வகிக்கப்படாவிட்டால் குறிப்பிடத்தக்க மகசூல் இழப்பை ஏற்படுத்தும்.
இந்த நோய் வாழையின் மகசூலை 50% வரை குறைத்து, விவசாயிகளுக்கு கணிசமான பொருளாதார இழப்பை ஏற்படுத்தும். இது உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைகளுக்கு பொருந்தாத வகையில் பழங்களின் தரத்தையும் பாதிக்கலாம். சாதகமான சூழ்நிலையில் இந்நோய் மிக விரைவாகப் பரவும். எனவே மகசூல் இழப்பைக் குறைப்பதற்கும் பழத்தின் தரத்தைப் பாதுகாப்பதற்கும் அதன் ஆரம்பக் கண்டறிதல், கண்காணிப்பு மற்றும் மேலாண்மை மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
வாழையில் சிகடோகா இலைப்புள்ளி நோயின் வகைகள்
வாழைத்தோட்டத்தை பொதுவாக பாதிக்கும் சிகடோகா இலைப்புள்ளி வகைகள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளன.
- மஞ்சள் சிகடோகா இலைப்புள்ளி (மைக்கோஸ்பேரெல்லா மியூசிகோலா)
- கருப்பு சிகடோகா இலைப்புள்ளி (மைக்கோஸ்பேரெல்லா ஃபிஜியென்சிஸ்)
வாழைப்பழத்தில் சிகடோகா இலைப்புள்ளியை ஏற்படுத்தும் இரண்டு வகையான பூஞ்சைகளில், மஞ்சள் சிகடோகா இலைப்புள்ளிகள் வாழை உற்பத்திக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. அதே நேரத்தில் கருப்பு சிகடோகா இலைப்புள்ளி இந்தியாவில் அதிகம் இல்லை.
சிகடோகா இலைப்புள்ளியை ஏற்படுத்தும் காரணிகள்
- சுற்றுச்சூழல் நிலைமைகள் – அதிக ஈரப்பதம் மற்றும் வெப்பநிலை 25-30°C, மழைப்பொழிவு, மேற்பரப்பு ஈரப்பதம் நீண்ட இலை ஈரம் போன்ற சூழ்நிலைகள் நோய் விரைவாக பரவ உதவுகிறது.
- பாதிப்புக்குள்ளாகும் வாழை வகைகள் – சிகடோகா இலைப்புள்ளிகளால் பாதிக்கப்படக்கூடிய வாழை வகைகளை பயிரிடுதல். எடுத்துக்காட்டாக கேவன்டிஷ் மற்றும் ரோபஸ்டா போன்றவை.
- தாவர ஊட்டச்சத்து – பொட்டாசியம் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்களில் குறைபாடுள்ள தாவரங்கள் அதிக பாதிப்புக்குள்ளாகும்.
- வயல் நிலைமைகள் – மோசமான வடிகால், பாதிக்கப்பட்ட இலைகள் மற்றும் தாவர குப்பைகள் வயல்களில் இருப்பது.
அறிகுறிகள்
- ஆரம்பத்தில், இலை லேமினாவின் விளிம்பு மற்றும் இலைகளின் நடுப்பகுதியில் வெளிர் மஞ்சள் அல்லது பழுப்பு நிற பச்சை கோடுகள் தோன்றும்.
- பின்னர், இந்த கோடுகள் அளவு பெரிதாகி, நரம்புகளுக்கு இணையாக செல்லும் மஞ்சள் ஒளிவட்டத்தால் சூழப்பட்ட வெளிர் சாம்பல் நிற மையத்துடன் பசுமையாக சுழல் வடிவ புள்ளிகளாக மாறும்.
- படிப்படியாக இலைகள் காய்ந்து பாதிக்கப்பட்ட இலைகள் உதிர்ந்துவிடும்.
- சாதகமான சூழ்நிலையில், இந்நோய் முழு இலைகளிலும் பரவுகிறது மற்றும் பழம் குலை தோன்றிய பிறகு மிகவும் கடுமையானதாகிறது.
- பாதிக்கப்பட்ட தாவரங்களில் உள்ள பழங்கள் சிறியதாக தோன்றி மற்றும் முன்கூட்டியே பழுக்கக்கூடும். மேலும் இறுதியில் விளைச்சலைக் குறைக்கக்கூடும்.
தடுப்பு நடவடிக்கைகள்
- நோய் தாக்கம் குறைவாக உள்ள ரகங்களை வளர்க்கவும்.
- நன்கு வடிகால் வசதி கொண்ட மண்ணில் நடவு செய்து முறையான வடிகால் வசதியை பராமரிக்க வேண்டும்.
- நீர் தேங்குவதைத் தவிர்க்கவும். ஏனெனில் இது வேர்களை அழுகச் செய்து செடியை வலுவிழக்கச் செய்வதோடு இந்நிலை மேலும் பூஞ்சை தொற்றுக்கு வழிவகுக்கும்.
- நெருங்கிய இடைவெளியில் வாழைக்கன்றுகளை நடுவதைத் தவிர்க்கவும்.
- வயலில் செடிகளுள் நெரிசலைத் தவிர்க்க பக்கக்கன்றுகளை அவ்வப்போது அகற்றி/கத்தரித்து, ஒன்றை அல்லது இரண்டு ஆரோக்கியமான கன்றுகளை மட்டும் பராமரிக்கவும்.
- பூஞ்சை மேலும் பரவாமல் இருக்க பாதிக்கப்பட்ட இலைகளை அவ்வப்போது அகற்றி அழிக்கவும்.
- பாதிக்கப்பட்ட தாவரங்களைக் கிருமி நீக்கம் செய்யாமல் கத்தரிக்கும் கருவிகளைப் பயன்படுத்த வேண்டாம்.
- உரங்களின் சீரான பயன்பாட்டைப் பின்பற்றவும்.
- வயல்களில் களைகள் மற்றும் இதர பயிர் குப்பைகள் இல்லாமல் பாதுகாக்கவும்.
- இலைகளை ஈரமாக்குவதையும், அதிக ஈரப்பதத்தை உருவாக்குவதையும் தவிர்க்க தாவர விதானத்தின் கீழ், பரிந்துரைக்கப்பட்ட அளவு நீர்ப்பாசனம் செய்வது அறிவுறுத்தப்படுகிறது.
வாழையில் சிகடோகா இலைப்புள்ளி நோயின் மேலாண்மை
பொருளின் பெயர் | தொழில்நுட்ப உள்ளடக்கம் | மருந்தளவு |
உயிரியல் மேலாண்மை | ||
மல்டிபிளக்ஸ் பயோ-ஜோடி | சூடோமோனாஸ் ஃப்ளோரசன்ஸ் & பேசிலஸ் சப்டிலிஸ் | தெளிப்பு : 5-10 கிராம் / லிட்டர் தண்ணீர் |
அனந்த் டாக்டர் பாக்டோவின் டெர்மஸ் | டிரைக்கோடெர்மா விரிடி | தெளிப்பு : 2.5 கிராம் / லிட்டர் தண்ணீர் |
டி ஸ்டேன்ஸ் ஸ்டிங் உயிர் பூஞ்சைக் கொல்லி | பேசிலஸ் சப்டிலிஸ் | தெளிப்பு : 10 மில்லி / லிட்டர் தண்ணீர் |
இரசாயன மேலாண்மை | ||
SAAF பூஞ்சைக் கொல்லி | மான்கோசெப் 63% + கார்பென்டாசிம் 12% WP | 1.5-2 கிராம் / லிட்டர் தண்ணீர் |
இன்டோஃபில் M45 பூஞ்சைக் கொல்லி அல்லது | மான்கோசெப் 75% WP | 0.8-1.1 கிராம் / லிட்டர் தண்ணீர் |
டைத்தேன் 45 பூஞ்சைக் கொல்லி | 2-2.5 கிராம்/லிட்டர் தண்ணீர் | |
பிளிடாக்ஸ் பூஞ்சைக் கொல்லி அல்லது | காப்பர் ஆக்ஸிகுளோரைடு 50 % WP | 1 – 2 கிராம் / லிட்டர் தண்ணீர் |
ப்ளூ காப்பர் பூஞ்சைக் கொல்லி | ||
டாடா இசான் பூஞ்சைக் கொல்லி அல்லது | குளோரோதலோனில் 75% WP | 2.5 கிராம் / லிட்டர் தண்ணீர் |
ஜடாயு பூஞ்சைக் கொல்லி | ||
குமன் L பூஞ்சைக் கொல்லி | ஜிராம் 27% SC | 1-2 மில்லி / லிட்டர் தண்ணீர் |
ஜீராக்ஸ் பூஞ்சைக் கொல்லி | ப்ரோபிகோனசோல் 25% EC | 1 மில்லி / லிட்டர் தண்ணீர் |
கேப்ரியோ டாப் பூஞ்சைக் கொல்லி | மெத்திரம் 55% + பைராக்ளோஸ்ட்ரோபின் 5% WG | 1.2-1.4 கிராம் / லிட்டர் தண்ணீர் |
தகாட் பூஞ்சைக் கொல்லி | ஹெக்ஸகோனசோல் 5% + கேப்டன் 70% WP | 2 கிராம் / லிட்டர் தண்ணீர் |
காத்யாயனி டெபுசுல் பூஞ்சைக் கொல்லி | டெபுகோனசோல் 10% + சல்பர் 65% WG | 2.5 கிராம் / லிட்டர் தண்ணீர் |
புரோட்டோகால் பூஞ்சைக் கொல்லி | புரப்பினெப் 70% WP | 5 கிராம் / லிட்டர் தண்ணீர் |
குறிப்பு
- ரசாயன பூஞ்சைக் கொல்லிகளைப் பயன்படுத்தும்போது 1 மில்லி/லிட்டர் தெளிப்புக் கரைசலில் அன்ஷுல் ஸ்டிக் மேக்ஸ் அட்ஜுவண்ட் போன்ற ஒட்டும் மற்றும் பரப்பும் முகவரைப் பயன்படுத்தவும். இதன் மூலம் ரசாயன மருந்துகள் திறம்பட பயன்படுத்தப்படுவதோடு, சிறப்பான கட்டுப்பாடும் கிடைக்கும்.
- வாழைத்தோட்டங்களை இயற்கை முறையில் பயிரிடும்போது, அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள உயிரியல் முகவர்களை 5 மில்லி/லி தண்ணீரில் வேப்ப எண்ணெயுடன் சேர்த்துப் பயன்படுத்தினால், வாழையில் சிகடோகா இலைப்புள்ளி நோயைத் தடுக்கவும் நிர்வகிக்கவும் உதவும்.
- பயன்படுத்தும் காலம்: பூசண கொல்லிகளை 15-20 நாட்கள் இடைவெளியில் தெளிக்கலாம்.
முடிவுரை
சிகடோகா இலைப்புள்ளி நோய் என்பது ஒரு பூஞ்சை நோயாகும். இது நாடு முழுவதும் வாழை செடிகளுக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. இந்தப் பூஞ்சை வாழை இலைகளைத் தாக்கி புள்ளிகளை ஏற்படுத்துகிறது. பின்னர் இலைகள் காய்ந்து உதிர்ந்துவிடுகிறது. இது பழத்தின் தரத்தை பாதிக்கிறது. இதனால் மகசூலைக் குறைக்கிறது. சிகடோகா நோயை திறம்பட நிர்வகிக்க, எதிர்ப்புத் திறன் கொண்ட இரகங்களைப் பயன்படுத்துவது உட்பட, பயனுள்ள பூஞ்சைக் கொல்லிப் பயன்பாடுகள் மற்றும் வயல் சுகாதாரத்தை பராமரித்தல் போன்ற கலாச்சார மற்றும் இரசாயன கட்டுப்பாட்டு முறைகளின் கலவை தேவைப்படுகிறது. இந்த அழிவுகரமான நோயிலிருந்து வாழைப் பயிரைப் பாதுகாக்க இந்தத் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மேலாண்மை உத்திகளை தொடர்ச்சியாகச் செயல்படுத்துவது முக்கியம்.