HomeGovt for Farmersஉணவுப் பதப்படுத்துதல் துறையை மேம்படுத்தும் பிரதான் மந்திரி கிசான் சம்பதா யோஜனா (PMKSY) திட்டம்!

உணவுப் பதப்படுத்துதல் துறையை மேம்படுத்தும் பிரதான் மந்திரி கிசான் சம்பதா யோஜனா (PMKSY) திட்டம்!

பிரதான் மந்திரி கிசான் சம்பதா யோஜனா (PMKSY) எனும் திட்டத்தை, உணவுப் பதப்படுத்தும் தொழில் அமைச்சகம் (MoFPI) அறிமுகப்படுத்தி தொடங்கி வைத்தது. PMKSY திட்டம் என்பது விவசாயத் துறையை நவீனமயமாக்கவும், உணவுப் பதப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தவும், இந்திய அரசால் தொடங்கப்பட்ட ஒரு விரிவானத் திட்டமாகும். இத்திட்டம் விவசாயிகள், நுகர்வோர் மற்றும் ஒட்டுமொத்த உணவுப் பதப்படுத்தும் தொழிலுக்கும் பயனளிக்கும் வகையில் உள்ளது. கிராமப்புறங்களில் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குதல், பதப்படுத்துதலை நவீனப்படுத்துதல், விவசாய உற்பத்தி கழிவுகளைக் குறைத்தல் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களின் ஏற்றுமதியை மேம்படுத்துதல் ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் ஆகும். 

திட்ட மேலோட்டம்

  • திட்டத்தின் பெயர்: பிரதான் மந்திரி கிசான் சம்பதா யோஜனா (PMKSY) திட்டம்
  • திட்டம் செயல்படுத்தப்பட்ட ஆண்டு: 2016 ஆம் ஆண்டில் SAMPADA (வேளாண்-கடல் செயலாக்கம் மற்றும் வேளாண் செயலாக்கக் குழுக்களின் மேம்பாட்டிற்கான திட்டம்) மற்றும் 2017 ஆம் ஆண்டில் PMKSY எனத் திட்டத்தின் பெயர் மாற்றப்பட்டது.
  • திட்ட நிதி ஒதுக்கீடு: ரூ.4,600 கோடி
  • அரசுத் திட்டத்தின் வகை: மத்திய அரசுத் திட்டம்
  • நிதியுதவி / துறைத் திட்டம்: உணவுப் பதப்படுத்தும் தொழில் அமைச்சகம்
  • விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்: https://www.mofpi.gov.in/
  • உதவி எண்: NA

PMKSY இன் அம்சங்கள்

வகை  கருத்துக்கள்
நோக்கம் செயலாக்கத்தை நவீனப்படுத்த, விவசாயக் கழிவுகளைக் குறைத்து விவசாயத்திற்கு துணைபுரிய வேண்டும்
திட்டம் நீட்டிக்கப்பட்ட காலம்  2021-22 முதல் 2025-26 வரை 
மூலதன மானியம் பல்வேறு கூறுகளின் கீழ், முதலீட்டாளர்களுக்கு தகுதியான திட்டச் செலவில் 35% முதல் 75% வரை, உதவித்தொகை வடிவில் வழங்கப்படுகிறது
பயனாளிகள் இந்திய விவசாயிகள்
உதவி முறை உற்பத்திக் குழுவிலிருந்து பயிர்களைக் கொண்டு செல்வதற்கும், பயிர்களுக்கான சேமிப்பு வசதிகளை வாடகைக்கு எடுப்பதற்கும் (அதிகபட்சம் 3 மாதங்கள்) உண்டாகும் செலவில், 50% மானியத்தை அமைச்சகம் வழங்கும்
ஒரு நிறுவனத்திற்கு (ஒன்று அல்லது அதிகப் பயிர்கள்) கொள்முதல், கொண்டு செல்லுதல் மற்றும் சேமித்து வைக்க வேண்டிய குறைந்தபட்ச அளவு
  • தனிப்பட்ட விவசாயிகள், விவசாயிகளின் குழு – 9MT
  • FPO, FPC, கூட்டுறவு சங்கம் – 100MT 
  • உணவுப் பதப்படுத்துபவர்கள், ஏற்றுமதியாளர்கள், உரிமம் பெற்ற கமிஷன் முகவர்கள் – 500MT
  • சில்லறை விற்பனையாளர்கள், மாநில சந்தைப்படுத்தல், கூட்டுறவு கூட்டமைப்பு – 1000MT

 

PMKSY திட்டம் பற்றிய சமீபத்திய செய்திகள்

PMKSY திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து இதுவரை, 18,06,027 விவசாயிகளுக்கு உதவி வழங்கப்பட்டுள்ளது. 2017-18 முதல் 2022-23 வரை, PMKSY திட்டத்தின் பல்வேறு துணைத் திட்டங்களின் கீழ், 4,026 திட்ட முன்மொழிவுகளில் 1,002 முன்மொழிவுகள் மாநில அரசுகள் மற்றும் தொழில்முனைவோரால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. 

2016-17 ஆம் ஆண்டில் ரூ.1.79 லட்சம் கோடியாக இருந்த உணவுப் பதப்படுத்துதல் துறையின் மொத்த மதிப்பு, 2020-21 ஆம் ஆண்டில் ரூ.2.37 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதன் கூட்டு ஆண்டு வளர்ச்சி விகிதம் 7.27%.

PMKSY திட்டத்தின் கூறுகள்

  • ஆபரேஷன் கிரீன் 
  • உணவுப் பாதுகாப்பு மற்றும் தர உத்தரவாத உள்கட்டமைப்பு 
  • மனித வளங்கள் மற்றும் நிறுவனங்கள் – ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (R&D) 
  • உணவுப் பதப்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் திறன்களின் விரிவாக்கம் 
  • ஒருங்கிணைந்த குளிர் சங்கிலி மற்றும் மதிப்புக் கூட்டல்.
  • உள்கட்டமைப்பு வேளாண் செயலாக்க உற்பத்திக் குழுக்களுக்கான உள்கட்டமைப்பு.

பிரதான் மந்திரி கிசான் சம்பதா யோஜனா திட்டத்தின் பலன்கள்

  • PMKSY திட்டம் விவசாயிகளுக்கு நல்ல வருவாயை வழங்குவதோடு, உணவுப் பதப்படுத்தும் துறையின் வளர்ச்சியை அதிகரிக்கவும் உதவுகிறது. 
  • PMKSY திட்டம் உணவுப் பதப்படுத்தும் துறையில், குறிப்பாக கிராமப்புறங்களில், உணவுப் பதப்படுத்தும் தொழில்களை ஊக்குவிப்பதன் மூலம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும். 
  • பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களின் பாதுகாப்பு மற்றும் தரத்தை உறுதி செய்வதற்காக, உணவுப் பரிசோதனை ஆய்வகங்கள் மற்றும் தரச் சான்றிதழ் போன்ற தர உத்தரவாத வழிமுறைகளை அமைப்பதில் இந்தத் திட்டம் உதவுகிறது. 
  • இந்தத் திட்டம் உணவுப் பதப்படுத்தும் துறையின் போட்டித் தன்மையை மேம்படுத்துவது மட்டுமின்றி, பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களின் ஏற்றுமதியை அதிகரிக்கவும் உதவும்.

PMKSY திட்டத்தின் குறைகள் 

பல விவசாயிகளும், உணவுப் பதப்படுத்தும் பிரிவுகளும் PMKSY திட்டத்தைப் பற்றி அறிந்திருக்கவில்லை. விழிப்புணர்வை அதிகரிப்பதும், பங்கேற்பை ஊக்குவிப்பதும் திட்டத்தின் வெற்றிக்கு முக்கியமானதாகும்.

விண்ணப்பிக்கும் வழிமுறைகள் 

  1. உணவுப் பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும். https://www.mofpi.gov.in/
  2. “திட்டங்கள் (Schemes)” எனும் தாவலைக் கிளிக் செய்து, கீழ்தோன்றும் மெனுவில் இருந்து பிரதான் மந்திரி கிசான் சம்பதா யோஜனாவைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. திட்டங்கள் தாவலைக் கிளிக் செய்த பிறகு, “ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்” என்ற விருப்பத்தைக் கிளிக் செய்யவும்.
  4. விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான விவரங்களை நிரப்பவும்.
  5. அடையாளச் சான்று, முகவரிச் சான்று மற்றும் வங்கிக் கணக்கு விவரங்கள் போன்ற தேவையான அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றவும்.
  6. விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்த பிறகு, அதனை ஆன்லைனில் சமர்ப்பிக்கவும்.

தேவையான ஆவணங்கள்

  • அடையாளச் சான்று 
  • வயதுச் சான்று 
  • வருமானச் சான்றிதழ் 
  • சாதிச் சான்றிதழ் 
  • ரேஷன் அட்டை 
  • பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 
  • கைபேசி எண் 

முடிவுரை

PMKSY திட்டம் என்பது, இந்தியாவில் விவசாயம் மற்றும் உணவுப் பதப்படுத்தும் துறையை மாற்றும் திறன் கொண்ட ஒரு குறிப்பிடத்தக்க முயற்சியாகும். மதிப்புக் கூட்டலை ஊக்குவிப்பதன் மூலமும், வீணாவதைக் குறைப்பதன் மூலமும், இந்தத் திட்டம் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும், வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், நுகர்வோருக்கு பதப்படுத்தப்பட்ட உணவின் தன்மை மற்றும் தரத்தை மேம்படுத்த முடியும்.

spot_img

மேலும் அறிய

தொடர்பில் இருக்க

அண்மை தகவல்களைப் பெற எங்களை சப்ஸ்கிரைப் பண்ணுங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்