HomeGovt for Farmersபிரதான் மந்திரி க்ரிஷி சிஞ்சாய் யோஜனா 

பிரதான் மந்திரி க்ரிஷி சிஞ்சாய் யோஜனா 

விவசாயம் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் 2015 இல் பிரதான் பிரதான் மந்திரி க்ரிஷி சிஞ்சாய் யோஜனா திட்டத்தை (PMKSY) அறிமுகப்படுத்தியது 

இந்தியாவில் 80% நீர் விவசாயத்தில் பாசனத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. இந்திய விவசாயிகள் இன்னும் தங்கள் நிலங்களுக்கு நீர்ப்பாசனம் செய்வதற்கு மழையை நம்பியே உள்ளனர், இதனால் பயிர் இழப்புகளை சந்திக்க உள்ளாகிறார்கள். இந்த பிரச்சனைகளை தீர்க்கவே இந்திய அரசு பிரதான் மந்திரி க்ரிஷி சிஞ்சாய் யோஜனா திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. 

பண்ணை உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கும் நீர் ஆதாரங்களை சிறந்த முறையில் பயன்படுத்துவதை உறுதி செய்வதற்கும் ஒரு விரிவான தீர்வை வழங்குவதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. 

‘ஒரு சொட்டுக்கு அதிக பயிர்’ என்ற கொள்கையுடன் இந்த திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டம் நுண்ணீர் பாசனங்களான சொட்டு நீர் பாசனம் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் ஆகியவற்றின் மூலம் பண்ணை அளவில் நீர் பயன்பாட்டு திறனை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. 

திட்டத்தின் அம்சங்கள்

  • இந்த திட்டத்தை செயல்படுத்த 93,068 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 
  • இந்த திட்டத்தின் கால அளவு முன்னர் 2020 வரை இருந்த நிலையில் இப்பொழுது 2026 வரை நீடிக்கப்பட்டுள்ளது. 
  • திட்டத்தின் முக்கிய பயனாளிகளாக விவசாயிகள் கருதப்படுகிறார்கள். 
  • சுமார் 22 லட்சம் விவசாயிகள் பயனடைவதை நோக்கமாக இந்த திட்டம் கொண்டுள்ளது. 
  • பிரதான் மந்திரி க்ரிஷி சிஞ்சாய் யோஜனா திட்டத்தை திறம்பட செயல்படுத்தி நிரல் கட்டமைப்பிற்கு கொள்கை திசையை வழங்கவும், தேசிய அளவில் திட்டத்தை செயல்படுத்துவதை மேற்பார்வையிட்டு நிர்வாக சிக்கல்களை நிவர்த்தி செய்யவும் பிரதமர் தலைமையில் தேசிய வழிகாட்டுதல் குழுவும், NITI ஆயோக்கின் துணைத் தலைவர் தலைமையில் தேசிய செயற்குழுவும் இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளது.   
  • வடகிழக்கு மாநிலங்கள் உட்பட அனைத்து மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் இந்த திட்டத்தில் உள்ளடக்கப்பட்டது. 

பிரதான் மந்திரி க்ரிஷி சிஞ்சாய் யோஜனாவின் கூறுகள்

துரிதப்படுத்தப்பட்ட நீர்ப்பாசனப் பயன் திட்டம் (AIBP): இது அணைகள், தடுப்பணைகள், கால்வாய்கள் மற்றும் கிணறுகள் போன்ற தற்போது நடந்து கொண்டிருக்கும் நீர்ப்பாசனத் திட்டங்களை முடிக்க மாநிலங்களுக்கு நிதி உதவி வழங்கும். 

ஹர் கெத் கோ பானி (HKKP):  இது நுண்ணீர் பாசனம், நீர்நிலை மேம்பாடு மற்றும் மழைநீர் சேகரிப்பு உள்ளிட்ட நீர் பாதுகாப்பு மற்றும் மேலாண்மைக்கான தீர்வுகளை வழங்கி, பண்ணை மட்டத்தில் இருந்து நீர் பயன்பாட்டு திறனை மேம்படுத்தும். 2026 குல் 4.5 லட்சம் ஹெக்டேர் நீர்ப்பாசனத் திறனை உருவாக்குவதே ஹர் கெத் கோ பானியின் இலக்காகும். 

நீர்நிலை மேம்பாட்டுக் கூறுகள் (WDC): இந்த நீர்நிலைப் மேம்பாட்டானது மண்ணின் ஈரப்பதம் மற்றும் நிலத்தடி நீர் மீள்நிரப்பு செய்ய உதவி செய்யும். 

விண்ணப்பிக்க தகுதியானவர்கள்

விவசாயம் செய்பவர்கள் குறிப்பாக சிறு மற்றும் குறு விவசாயிகள். 

விண்ணப்பிக்க தேவைப்படும் ஆவணங்கள்

  • ஆதார் அட்டை 
  • ரேஷன் அட்டை 
  • முகவரி ஆதாரம் 
  • விவசாய நில ஆவணங்கள் 
  • வங்கி இருப்புக் கையேடு 

விண்ணப்பிக்கும் முறை

https://pmksy.gov.in/  எனும் பிரதான்பிரதான் மந்திரி க்ரிஷி சிஞ்சாய் யோஜனாவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை அணுகவும். இதில் நீங்கள் விண்ணப்பிக்க இருக்கும் திட்டத்தை கிளிக் செய்து கேட்கப்படும் கேள்விகளை கவனமாக நிரப்பி தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்து சமர்ப்பிக்கவும். 

பிரதான் மந்திரி க்ரிஷி சிஞ்சாய் யோஜனா, நீர் ஆதாரங்களை திறம்பட பயன்படுத்துவதை உறுதி செய்வதன் மூலம் விவசாயிகள் மற்றும் ஒட்டுமொத்த விவசாயத்திற்கும் குறிப்பிடத்தக்க நன்மைகளை கொண்டு வர முடியும் என எதிர்பார்க்கமுடிகிறது. 

spot_img

மேலும் அறிய

தொடர்பில் இருக்க

அண்மை தகவல்களைப் பெற எங்களை சப்ஸ்கிரைப் பண்ணுங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்