HomeGovt for Farmersமத்தியப் பிரதேச விவசாயிகளுக்கு நற்செய்தி: கடனுக்கான வட்டி தள்ளுபடி!  

மத்தியப் பிரதேச விவசாயிகளுக்கு நற்செய்தி: கடனுக்கான வட்டி தள்ளுபடி!  

விவசாயிகளின் நிலுவையில் உள்ள பயிர்க் கடன்களுக்கான வட்டியைத் தள்ளுபடி செய்வதன் மூலம், விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்கும் நோக்கத்துடன், மத்தியப் பிரதேச விவசாயிகள் கடன் வட்டித் தள்ளுபடித் திட்டம் (முக்யமந்த்ரி கிரிஷக் பியாஜ் மாஃபி யோஜனா), மத்தியப் பிரதேச அரசால் 2023 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. விவசாயக் கடன் வாங்கி, வங்கிகளில்  திருப்பிச் செலுத்தாத விவசாயிகளை இந்தத் திட்டம் இலக்காகக் கொண்டுள்ளது. 

திட்ட மேலோட்டம் 

  • திட்டத்தின் பெயர்: மத்தியப் பிரதேச விவசாயிகள் கடன் வட்டித் தள்ளுபடித் திட்டம் 2023
  • திட்டம் செயல்படுத்தப்பட்ட ஆண்டு: 2023
  • அரசுத் திட்டத்தின் வகை: மத்தியப் பிரதேச மாநில அரசுத் திட்டம்

அம்சங்கள்

  • மத்தியப் பிரதேச விவசாயிகள் கடன் வட்டித் தள்ளுபடித் திட்டம் 2023 – பின்வரும் சில முக்கிய அம்சங்களை வழங்குகிறது.
  • வங்கிகளில் திருப்பிச் செலுத்தாத விவசாயிகளின் கடனுக்கான வட்டியை, மத்தியப் பிரதேச அரசு செலுத்தும். 
  • 31 மார்ச் 2023 நிலவரப்படி, அசல் மற்றும் வட்டி உள்பட ரூ.2 லட்சம் வரை நிலுவையில் உள்ள கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். 
  • இந்தத் திட்டம், தொடக்க வேளாண்மைக் கடன் கூட்டுறவு சங்கங்களில் (PACS) உள்ள கடனை தள்ளுபடி செய்கிறது. 

திட்டத்தின் நன்மைகள் 

  • விவசாயிகளின் நிலுவையில் உள்ள பயிர்க் கடன்களுக்கான வட்டியைத் தள்ளுபடி செய்வதன் மூலம், அவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும். 
  • விவசாயிகள் மீதான நிதிச் சுமையைக் குறைத்து, விவசாய உற்பத்தியை மேம்படுத்த வழிவகுக்கிறது. 
  • கடனைத் திருப்பிச் செலுத்துவதைப் பற்றிய கவலையின்றி, விவசாயப் பணிகளைத் தொடர விவசாயிகளுக்கு ஊக்கம் அளிக்கிறது.

திட்டத்தின் குறைகள்

கிரெடிட் ஸ்கோரில் தாக்கம்

வட்டி தள்ளுபடி உடனடி நிவாரணம் அளிக்கும், அதே வேளையில் கடனைத் திருப்பிச் செலுத்தாதவராக அறிவிக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கடன் மதிப்பீட்டில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும். இதனால் அவர்கள் எதிர்காலத்தில் கடன் பெறுவது கடினமாகிவிடும்.

தனியார் கடன் வழங்குபவர்களை விலக்குதல்

தொடக்க வேளாண்மைக் கடன் கூட்டுறவு சங்கங்களில் (PACS) உள்ள கடன் பெற்றவருக்கு மட்டும், இந்தத் திட்டம் பொருந்தும்.

நிர்வாக சவால்கள்

திட்டத்தை திறம்பட செயல்படுத்துவது மற்றும் தகுதியானப் பயனாளிகளை அடையாளம் காண்பது போன்றவை நிர்வாக சவால்களை ஏற்படுத்தலாம். செயல்பாட்டில் தாமதம் அல்லது குழப்பம் ஏற்பட்டால், விவசாயிகளுக்கு சரியான நேரத்தில் நிவாரணம் கிடைக்காமல் போகலாம்.

எதிர்காலத் திட்டங்களைச் சார்ந்திருத்தல்

விவசாயிகள் நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் ஒவ்வொரு முறையும், இதுபோன்ற ஆதரவை எதிர்பார்த்து எதிர்காலத்தில் கடன் தள்ளுபடி திட்டங்களை நம்பியிருக்கலாம். இது விவசாயத் துறையில் உள்ள அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக கடன் நிவாரணத்தை எதிர்பார்க்கும் வடிவத்தை உருவாக்கலாம்.

மத்தியப் பிரதேச விவசாயிகள் கடன் வட்டித் தள்ளுபடித் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதி வரம்புக்குள் இடம் பெறாத விவசாயிகளுக்கு, இந்தத் திட்டம் பயனுள்ளதாக இருக்காது. 

முடிவு

விவசாயிகளின் நிலுவையில் உள்ள பயிர்க் கடன்களுக்கான வட்டியைத் தள்ளுபடி செய்வது, அவர்களின் நிதிச் சுமையைத் தணிக்க மத்தியப் பிரதேச அரசு மேற்கொண்டுள்ள குறிப்பிடத்தக்க முன்முயற்சி தான், ‘ மத்தியப் பிரதேச விவசாயிகள் கடன் வட்டித் தள்ளுபடித் திட்டம் – 2023’. இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம், விவசாயிகளை ஆதரிப்பதும், மாநிலத்தில் விவசாய வளர்ச்சியை மேம்படுத்துவதும் அரசின் முக்கிய நோக்கமாக உள்ளது.

spot_img

மேலும் அறிய

தொடர்பில் இருக்க

அண்மை தகவல்களைப் பெற எங்களை சப்ஸ்கிரைப் பண்ணுங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்