HomeGovt for Farmers10,000 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை (FPOs) உருவாக்குதல் மற்றும் மேம்படுத்துதல் 

10,000 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை (FPOs) உருவாக்குதல் மற்றும் மேம்படுத்துதல் 

விவசாய வளர்ச்சியில் இந்தியா உலக அளவில் முன்னணியில் இருக்கிறது. பொருளாதார வளர்ச்சியிலும் விவசாயத் துறை முக்கிய பங்கு வகிக்கிறது.  இருப்பினும், நாட்டில் 86% க்கும் மேற்பட்ட விவசாயிகள் சிறு மற்றும் குறு விவசாயிகள். போதுமான பொருளாதார பலம் இல்லாத காரணத்தால் சிறு மற்றும் குறு விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை சந்தைப்படுத்துவதில் பெரும் சவால்களை எதிர்கொள்கின்றனர். இதை கருத்தில் கொண்டு, “10,000 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை (FPOs) உருவாக்குதல் மற்றும் ஊக்குவித்தல்” திட்டத்தை வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் தொடங்கி வைத்தது. 

இந்தியாவில் ஐந்து ஆண்டுகளில் 10,000 புதிய FPOக்களை உருவாக்குவதற்கான ஆதரவான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கும் நோக்கத்துடன் இத்திட்டம் 2020 ஆம் ஆண்டு தொடங்கியது. இது ஒரு மத்திய துறை திட்டமாகும். 

FPO என்பது பொதுவாக உழவர் உற்பத்தியாளர் அமைப்பு என்று அழைக்கப்படும் ஒரு அமைப்பாகும். இந்த அமைப்பானது சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்டது. இது விவசாயிகள் பயிரிடும் பயிர்களுக்கு விதைப்பு முதல் அறுவடை வரை அவர்களுக்கு தேவையான உள்ளீடுகள், தொழில்நுட்ப சேவைகள், செயலாக்கம் மற்றும் சந்தைப்படுத்துதல் என சாகுபடிக்கு தேவையான அனைத்து சேவைகளையும் வழங்கி ஆதரவளிக்கிறது. 

உழவர் உற்பத்தியாளர் அமைப்பு விவசாயிகள் அனைவரையும் ஒன்றிணைத்து ஒரு நிறுவனம் போல் உருவாக்கி, அவர்களின் பேரம் பேசும் திறனை அதிகரித்து, விவசாயிகளின் பொருளாதார நிலையை மேம்படுத்த உதவுகிறது. 

திட்டத்தின் நோக்கம்

இந்த FPO திட்டமானது விவசாயிகளின் போட்டித் திறனை மேம்படுத்துவதையும், வளர்ந்து வரும் சந்தை வாய்ப்புகளில் அவர்களின் நன்மையை அதிகரிப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளது. 

FPO – வின் முக்கிய செயல்பாடுகள்

  • விவசாயிகளுக்கு விதை, உரம் மற்றும் இயந்திரங்கள் வழங்குதல் 
  • சந்தை இணைப்புகள், பயிற்சி, நெட்வொர்க்கிங், நிதி மற்றும் தொழில்நுட்ப ஆலோசனை வழங்கி விவசாயிகளுக்கு உதவி செய்வது. 

திட்டத்தின் அம்சங்கள்

  • ஒரு FPO குழுவில், குறைந்தபட்சம் சமவெளி பகுதிகளில் 300 நபர்களும், வடகிழக்கு பகுதிகளில் 100 நபர்களும் இருக்க வேண்டும். 
  • இந்த திட்டத்தை செயல்படுத்த இந்திய அரசு ரூபாய் 6865 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இதில் ரூபாய் 4496 கோடி 2019-20 முதல் 2023-24 வரையான நிதியாண்டிற்கும், ரூபாய் 2369 கோடி 2024-25 முதல் 2027-28 வரையிலான நிதியாண்டிற்கு என பிரித்து ஒதுக்கப்பட்டுள்ளது.  
  • இந்த திட்டத்தின் கீழ், ஒரு  FPO க்கு ரூபாய் 18 லட்சம் வரை நிதி உதவி வழங்கப்படுகிறது. 
  • FPO குழுவில் உள்ள விவசாயிகளுக்கு தலா ரூபாய் 2000 வரை பங்கு மானியம் அளிக்கப்பட்டு, அதிகபட்ச வரம்பு FPO ஒன்றுக்கு 15 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
  • இந்தத் திட்டம் “ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு” கிளஸ்டரின் கீழ் FPOக்களை ஊக்குவிக்கும். 
  • கிளஸ்டர் அடிப்படையிலான வணிக நிறுவனங்கள் (CBBOs) மூலம்  FPO களுக்கு ஆரம்ப பயிற்சி 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. 

விண்ணப்பிக்க தகுதியானவர்கள்

இந்திய குடிமக்கள், விவசாயம் செய்பவர்கள் குறிப்பாக சிறு மற்றும் குறு விவசாயிகள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.  

விண்ணப்பிக்க தேவைப்படும் ஆவணங்கள் 

  • ஆதார் அட்டை  
  • ரேஷன் அட்டை  
  • முகவரி ஆதாரம்  
  • விவசாய நில ஆவணங்கள்  
  • வங்கி இருப்புக் கையேடு  
  • வருமான சான்றிதழ் 

https://pmkisan.gov.in/ என்னும் இணையதளம் மூலம் ஆர்முள்ள விவசாயிகள் இந்த FPO திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். 

இவ்வாறு FPOக்களை உருவாக்குவது மற்றும் மேம்படுத்துவது க்ரிஷியை ஆத்மநிர்பர் க்ரிஷியாக மாற்றுவதற்கு உதவி செய்யும். இந்த திட்டம் குறைந்த செலவில் உற்பத்தி, உற்பத்தித்திறன் மற்றும்  FPO உறுப்பினருக்கு அதிக வருமானத்தை அளிக்கும். மேலும் இது கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தி இளைஞர்களுக்கு கிராமங்களிலேயே வேலை வாய்ப்புகளை உருவாக்கும். 

spot_img

மேலும் அறிய

தொடர்பில் இருக்க

அண்மை தகவல்களைப் பெற எங்களை சப்ஸ்கிரைப் பண்ணுங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்