HomeGovt for Farmersசேமிப்புக் கிடங்கு மானியத் திட்டம்: விவசாயிகளுக்கான முழு விளக்கம் இதோ!

சேமிப்புக் கிடங்கு மானியத் திட்டம்: விவசாயிகளுக்கான முழு விளக்கம் இதோ!

இந்தியாவின் மிக முக்கியமான மற்றும் அத்தியாவசியத் தொழில்களில் ஒன்றான விவசாயம், சேமிப்புக் கிடங்குகளுடன் கைகோர்த்துச் செல்கிறது. உற்பத்தியில் தொடர்ந்து அதிகரித்து வரும் விவசாயத் துறையுடன், சேர்த்து கிடங்குகளுக்கானத் தேவையும் அதிகரித்து வருகிறது. 

தொழில்துறைக்கு உதவுவதற்காக, இந்திய அரசாங்கம் கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகளுக்காக, ‘மூலதன முதலீட்டு மானியத் திட்டமான’ ‘கிராமின் பண்டாரன் யோஜனாத் திட்டத்தை ஏப்ரல்.1.2001’ அன்று அறிமுகப்படுத்தியது. விவசாயிகள் தங்கள் விளைப்பொருள்களை சேமித்து வைப்பதற்கு முறையாக கிடங்குகளை கட்ட அல்லது புதுப்பிக்க, கிடங்கு கட்டுமானத்திற்கு மானியம் வழங்குவதே, இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். 

திட்ட மேலோட்டம்

  • திட்டத்தின் பெயர்: கிராமின் பண்டாரன் யோஜனா / கிராமின் கிடங்கு யோஜனா
  • திட்டம் மாற்றப்பட்ட ஆண்டு: 01.04.2001
  • திட்ட நிதி ஒதுக்கீடு: மூலதனச் செலவில் 15% ஆன, 3 கோடி ரூபாய் வரை.
  • அரசுத் திட்டத்தின் வகை: இந்திய மத்திய அரசு
  • நிதி உதவி / துறைத் திட்டம்: கிராமப்புற சேமிப்புத் திட்டம்
  • விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்: https://www.nabard.org/
  • உதவி எண்: நபார்டு- (91) 022-26539895/96/99 

நபார்டு கிராமப்புற கிடங்குத் திட்டத்தின் அம்சங்கள் 

மத்திய அரசின் சேமிப்புக் கிடங்குத் திட்டம், விவசாயிகள் தங்கள் விளைப்பொருள்களை மழை மற்றும் பிற விலங்குகளிடம் இருந்து பாதுகாக்க, அறுவடை  செய்வதற்காக ஏற்ற சேமிப்பு அலகுகளை உருவாக்க அனுமதிக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் கடன் தகுதி பெற, விண்ணப்பதாரர்கள் கிடங்கு கட்டுமானத்திற்கான நபார்டு வழிகாட்டுதல்களைப் பூர்த்தி செய்து பின்பற்ற வேண்டும். 

  • கிடங்கு கட்டுமானமானது, அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட அனைத்து அளவுகோல்கள் மற்றும் விவரக் குறிப்புகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
  • சேமிப்புக் கிடங்கு, எலிகள் மற்றும் பறவைகளிடம் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும். 
  • கிடங்கின் திறப்புகள் நிலையான நெறிமுறையின்படி இருக்க வேண்டும். 
  • முறையான வடிகால் அமைப்பு மற்றும் தீ விபத்துகளுக்கு எதிரானத் தடுப்பு நடவடிக்கைகள் இருக்க வேண்டும். 
  • விளைப்பொருள்களை ஏற்றுவதற்கும், இறக்குவதற்கும் ஒழுக்கமான சாலைகளுடன் உள்ளேயும், வெளியேயும் எளிதாக அணுகும்படி இருக்க வேண்டும்.

கிடங்குக்கான நபார்டு கடனின் கூடுதல் விவரங்கள் கீழே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன.

வகை கருத்துகள்
யார் தகுதியானவர்கள்?   தொழில்முனைவோர், நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் விவசாயக் குழுக்கள் போன்றவை.
திட்டத்தில் உள்ளடக்கிய செயல்பாடுகள்  சேமிப்புக் கிடங்குகள், குளிர்பதனக் கிடங்குகள் மற்றும் குழிகளை நிர்மாணித்தல் அல்லது பழுதுபார்த்தல்
சேமிப்பு அலகு குறைந்தபட்சத் திறன் 
  • குறைந்தபட்சம் மொத்தம் 100 டன்கள் முதல் அதிகபட்சம் 10,000 டன்கள் வரை. 
  • சில சிறப்புப் பகுதிகளில் சிறிய அலகுகளுக்கு குறைந்தபட்சம் 50 டன்கள். 
  • மலைப்பாங்கான கிராமப்புற பகுதிகளில், 25 டன்கள் வரையிலான சிறிய அலகுகளுக்கும் விண்ணப்பிக்கலாம்.
கடன் தொகை
  • SC/ST பிரிவினருக்கு 33.3% 
  • விவசாயிகள், கூட்டுறவு மற்றும் விவசாயப் பட்டதாரிகளுக்கு 20-25% 
  • தனிநபர்கள், பெருநிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு 10-15%
செலவை உள்ளடக்கியது எல்லைச் சுவர், மேடை, உள் வடிகால் அமைப்பு, தரப்படுத்துதல், பேக்கேஜிங் மற்றும் உள் சாலை அமைப்பு போன்றவை.
தேவையான ஆவணங்கள் ஆய்வுத் துறை, சட்டத் துறை மற்றும் இடர் மேலாண்மைத் துறைகளின் வழிகாட்டுதல்களின்படி
கடனை திரும்பச் செலுத்துதல் குறைந்தபட்சம் வட்டி செலுத்துதலுடன் 2 ஆண்டுகள் தடை
கடன் வட்டி விகிதம் கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி வட்டி விகிதங்களின்படி
கடன் காலம் 7 ஆண்டுகளுக்கு மேல்
காப்பீட்டுத் தொகை கடனைப் பெற விண்ணப்பதாரர் சொத்துக்கான காப்பீட்டைப் பெற வேண்டும்

கிடங்கிற்கான நபார்டு மானியத்தின் நன்மைகள் 

  • நபார்டு சேமிப்புக் கிடங்குத் திட்டம், கிடங்கின் பல்வேறு அம்சங்களைப் பழுதுபார்த்தல் மற்றும் கட்டுமானம் போன்ற பல்வேறு செலவினங்களுக்காக கடன்களை வழங்குவதன் மூலம், விவசாயிகள் கணிசமானச் சுமையில் இருந்து விடுவிக்கிறது. 
  • இந்த அரசுக் கிடங்குத் திட்டம் தனிநபர்கள் அல்லது தனிநபர்கள் குழு ஆகிய இருவரையும் கடனுக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கிறது. 
  • சேமிப்புத் திறன், ஒதுக்கப்பட்ட வரம்பை மீறினாலும், அனுமதிக்கப்பட்ட வரம்புகளுக்குள் நீங்கள் கடனைப் பெறலாம். 
  • சிறிய திறன் கொண்ட சேமிப்பகங்கள் கூட, வங்கியின் முறையான ஆய்வின் மூலமாக இத்திட்டத்தின் பலனைப் பெறலாம். 

நபார்டு கிடங்கு கட்டுமான மானியத்தின் குறைகள் 

  • விவசாயக் கிடங்கு மானியத் திட்டம் விவசாயிகளுக்குப் பயனளிக்கும் வகையில், கடன் தொகை 10,000 டன் வரை மட்டுமே பொருந்தும். 
  • நீங்கள் வேறு எந்த மூலத்தில் இருந்தும் உதவியை நாடினாலும், இந்த திட்டத்திற்கு நீங்கள் தகுதி பெற மாட்டீர்கள். அதிக சேமிப்புத் திறன் கொண்டவர்களுக்கு இது சவாலாக இருக்கலாம். 
  • நீங்கள் ஒரு குறிப்பிட்டப் பகுதியில் இருந்தால் மட்டுமே, சிறிய சேமிப்பு அலகுகளுக்கான கடனைப் பெற முடியும். 

கிடங்குகளுக்கான அரசாங்க மானியத்திற்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள்

  1. கிடங்குக்கான நபார்டு கடனுக்கு விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ இணையதளத்தை (https://www.nabard.org/) நீங்கள் பார்வையிட வேண்டும்.
  2. குறிப்பிட்ட கிடங்கு யோஜனாத் திட்டத்தை கிளிக் செய்ய வேண்டும்.
  3. விரிவான வழிமுறைகளைப் பின்பற்றி தேவையான ஆதார ஆவணங்களை வழங்க வேண்டும்.
  4. விவசாயக் கிடங்கு மானியத்திற்கான படிவத்தைச் சமர்ப்பிக்கவும்.

இந்தத் திட்டத்தின் கீழ் அந்தந்த வங்கிகளில் இருந்து ஆய்வு மற்றும் கடன் ஒப்புதல் ஆகியவை அடுத்த நடவடிக்கைகளில் அடங்கும்.

நபார்டு வங்கியில் இருந்து கிடங்குக் கடனுக்குத் தேவையான ஆவணங்கள் 

கிடங்கு மீதான அரசாங்க மானியத்திற்கான விண்ணப்பத்திற்கு, பல்வேறு திட்டங்களில் சில குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்கள் தேவை. 

தேவையான முதன்மை ஆவணங்கள்

  • ஆதார் அட்டை 
  • ரேஷன் அட்டை 
  • வங்கிக் கணக்கு விவரங்கள் 
  • கைபேசி எண் 
  • பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 
  • முகவரி ஆதாரம் 

கிடங்கு மானியத் திட்டம் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உள்ளது. இந்தத் திட்டத்தைப் பற்றியக் கூடுதல் விவரங்களுக்கு நீங்கள் மாநில அரசு அல்லது உள்ளூர் விவசாய அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளலாம்.

spot_img

மேலும் அறிய

தொடர்பில் இருக்க

அண்மை தகவல்களைப் பெற எங்களை சப்ஸ்கிரைப் பண்ணுங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்