வேளாண் இயந்திரமயமாக்கல் (SMAM) திட்டம், இந்தியாவில் உள்ள விவசாயிகளை மேம்படுத்துவதற்காக வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது. விவசாய உற்பத்தி மற்றும் செயல்திறனை அதிகரிக்க ட்ரோன் தொழில்நுட்பம் உள்பட, பொருத்தமான விவசாய இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்க, வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. பண்ணை இயந்திரங்களை மலிவு விலையிலும், சிறு மற்றும் குறு விவசாயிகள் எளிதில் அணுகக் கூடியதாகவும் மாற்றுவது தான், SMAM திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
திட்ட மேலோட்டம்
- திட்டத்தின் பெயர்: விவசாய இயந்திரமயமாக்கலின் துணைப் பணித் திட்டம் (ட்ரோன் தொழில்நுட்பம்)
- திட்டம் செயல்படுத்தப்பட்ட ஆண்டு: 2021
- திட்ட நிதி ஒதுக்கீடு: ரூ.1,050 கோடி
- அரசுத் திட்டத்தின் வகை: மத்திய அரசுத் திட்டம்
- துறை/நிதியுதவித் திட்டம்: வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம்
- விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்: https://agrimachinery.nic.in/
- உதவி எண்: 011-23604908
SMAM திட்டத்தின் அம்சங்கள்
வகை | கருத்துக்கள் |
செயல்படுத்தும் முகவர் | பண்ணை இயந்திர பயிற்சி மற்றும் சோதனை நிறுவனம் (FMTTI), இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ICAR) நிறுவனங்கள், கிருஷி விக்யான் கேந்திரா (KVKs), உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் (FPOs) மற்றும் மாநில வேளாண் பல்கலைக்கழகங்கள் (SAUs). |
நிதி உதவி | |
அரசு நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களால் ட்ரோன்களை வாங்குதல் | விவசாய ட்ரோனின் செலவில் 100%-ஐ SMAM திட்டம் வழங்குகிறது. அதாவது, ஒரு ட்ரோனுக்கு அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை வழங்குகிறது. |
விவசாயிகளின் வயல்களில் FPO-க்களின் செயல்விளக்கம் | விவசாய ட்ரோனுக்கு 75% வரை நிதி உதவி வழங்குகிறது. |
செயல்படுத்தும் நிறுவனங்களுக்கு தற்செயல் செலவு வழங்கப்படுகிறது |
|
விவசாயிகள், FPO-க்கள் மற்றும் கிராமப்புற தொழில்முனைவோர், கூட்டுறவு சங்கத்தின் கீழ் உள்ள தனிப்பயன் பணியமர்த்தல் மையங்களின் (CHC) மூலம் விவசாயிகளுக்கு வாடகை அடிப்படையில் | 40% வரை மானியங்கள் (அதிகபட்சம் ரூ.4.00 லட்சம்) |
தனிப்பயன் பணியமர்த்தல் மையங்களை நிறுவும் விவசாயப் பட்டதாரிகளுக்கு | செலவில் 50% வரை நிதி உதவி (ஒரு ட்ரோனுக்கு அதிகபட்சம் ரூ.5.00 லட்சம்) |
தனிப்பட்ட வாங்குதலுக்கு |
|
SMAM திட்டம் பற்றிய சமீபத்திய செய்திகள்
சமீபத்தில், ஊட்டச்சத்து மற்றும் பூச்சிக்கொல்லி பயன்பாட்டிற்கான ட்ரோன்களின் பாதுகாப்பான மற்றும் பயனுள்ள செயல்பாட்டிற்கு, வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன் (DA&FW) துறையால், நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் (SOPs) வெளியிடப்பட்டது.
ட்ரோன் பயன்பாட்டிற்கான பூச்சிக்கொல்லிகளின் பதிவுத் தேவைகளுக்கான நெறிமுறைகள், மத்திய பூச்சிக்கொல்லி வாரியம் மற்றும் பதிவுக் குழுவால் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
SMAM திட்டத்தின் நோக்கங்கள்
- விவசாயத்தில் ட்ரோன் தொழில்நுட்பத்தை பின்பற்றுவதை ஊக்குவித்தல்.
- பண்ணை இயந்திரங்கள் மற்றும் கருவிகளை வாங்குவதற்கு விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்குதல்.
- உயர் மதிப்பு மற்றும் உயர் தொழில்நுட்ப மதிப்புள்ள பண்ணை உபகரணங்களுக்கான மையங்களை உருவாக்குதல்.
- பண்ணை இயந்திரமயமாக்கலை ஊக்குவிப்பதற்காக களத்திலும், வெளியிலும் பயிற்சி மற்றும் செயல் விளக்கங்களை வழங்குதல்.
SMAM திட்டத்தின் நன்மைகள்
- SMAM திட்டம் விவசாயிகள் மற்றும் பிற பங்குதாரர்களுக்கு, ட்ரோன்கள், பிற விவசாய இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை வாங்க நிதி உதவி வழங்குகிறது.
- இத்திட்டம் ட்ரோன்கள் மற்றும் பிற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது குறித்து, விவசாயிகளுக்கு திறன் மேம்பாடு மற்றும் பயிற்சியை வழங்குகிறது.
- விவசாய இயந்திரமயமாக்கலில் ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது, விவசாயிகளுக்கு குறிப்பிடத்தக்க நன்மைகளை வழங்குகிறது. இதில் அதிகரித்த செயல்திறன், மேம்பட்டத் துல்லியம், குறைக்கப்பட்ட செலவுகள், அதிகரித்த பயிர் விளைச்சல் மற்றும் சுற்றுச்சூழல் நன்மைகள் ஆகியவை அடங்கும்.
SMAM திட்டத்தின் சவால்கள்
விவசாயத்தில் நவீன கருவிகள் மற்றும் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் பல விவசாயிகளுக்குத் தெரியாது. மேலும், அவர்கள் இன்னும் உடலுழைப்பைச் சார்ந்து இருக்கிறார்கள் மற்றும் மாற்றத்தை எதிர்க்கின்றனர்.
விண்ணப்பிக்கும் வழிமுறைகள்
- பண்ணை இயந்திரமயமாக்கல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான டிஜிட்டல் தளத்தின் அதிகாரப்பூர்வ வலைத் தளத்தைப் பார்வையிடவும் https://agrimachinery.nic.in/.
- முகப்புப் பக்கத்தில், ‘வேளாண்மை இயந்திரமயமாக்கலில் நேரடி பயன் பரிமாற்றம்’ எனும் விருப்பத்தை கிளிக் செய்யவும்.
- அதனைத் தேர்ந்தெடுத்த பிறகு, டாஷ்போர்டில் உள்ள பதிவு பட்டனைக் கிளிக் செய்யவும்.
- பதிவின் கீழ் தோன்றும் மெனுவிலிருந்து, “விவசாயிகள்” எனும் விருப்பத்தைக் தேர்ந்தெடுக்கவும்.
- உங்கள் மாநிலம் மற்றும் ஆதார் எண்ணை உள்ளிட்டு, உங்களை விவசாயியாக பதிவு செய்து கொள்ள வேண்டும்.
- கேட்கப்பட்ட அனைத்து தகவல்களையும் கவனமாக நிரப்பி முடித்த பிறகு ‘சமர்ப்பி’ என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
மாற்றாக, விவசாயிகள் அரசாங்கத்தால் அமைக்கப்பட்டுள்ள பொது சேவை மையங்கள் (CSCs) மூலமாகவும் SMAM திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த மையங்கள், SMAM திட்டம் உள்பட பல்வேறு அரசாங்க திட்டங்களுக்கான ஆன்லைன் விண்ணப்ப சேவைகளை வழங்குகின்றன.
தேவையான ஆவணங்கள்
- அடையாளச் சான்று
- பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
- விளைநிலத்தின் புகைப்பட நகல்
- வங்கிக் கணக்கு விவரங்கள்
- சாதிச் சான்றிதழ்
- குடியிருப்புச் சான்றிதழ்
முடிவுரை
விவசாய இயந்திரமயமாக்கலில் ட்ரோன் தொழில்நுட்பம் விவசாயிகளுக்கும், ஒட்டுமொத்த விவசாயத் தொழிலுக்கும் குறிப்பிடத்தக்க நன்மைகளைத் தரும் என்பது ஒரு நம்பிக்கைக்குரிய வளர்ச்சியாகும். தொழில்நுட்பம் தொடர்ந்து மேம்பட்டு, மேலும் அணுகக் கூடியதாக மாறும் போது, அதன் திறனை முழுமையாக உணர, சவால்கள் மற்றும் வரம்புகளை நிவர்த்தி செய்வது மிகவும் முக்கியமாகும்.