HomeNewsNational Agri Newsஇந்தியாவில் முதல் முறையாக, பாசுமதி அரிசிக்கான தரங்களை FSSAI நிர்ணயம் செய்ய முடிவு

இந்தியாவில் முதல் முறையாக, பாசுமதி அரிசிக்கான தரங்களை FSSAI நிர்ணயம் செய்ய முடிவு

உணவு மற்றும் பாதுகாப்பு தரங்களை உறுதி செய்வதற்காக FSSAI ஆல் பாஸ்மதி அரிசிக்கான அடையாள தரநிலைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த முதல்-திருத்த விதிமுறைகள் கெஜட் இந்தியாவில் அறிவிக்கப்பட்டு, ஆகஸ்ட் 1, 2O23 முதல் நடைமுறைக்கு வரும்.

இந்தத் திருத்தங்கள் பாசுமதி அரிசியின் ரகத்திற்கு ஏற்ப அசல் வாசனை இருப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த திருத்தத்தின் கீழ் வரும் பாசுமதி அரிசி வகைகள் பழுப்பு பாசுமதி அரிசி, அரைக்கப்பட்ட பாசுமதி அரிசி, வேகவைத்த பழுப்பு பாசுமதி அரிசி மற்றும் அரைக்கப்பட்ட வேகவைத்த பாசுமதி அரிசி என்று பிரிக்கப்பட்டுள்ளது.

பாசுமதி அரிசிக்கான புதிய தரநிலைகள்

  • பாசுமதி அரிசியின் இயற்கையான வாசனைப் பண்பு இருக்க வேண்டும்
  • செயற்கை வண்ணங்கள், பாலிஷ் ஏஜெண்டுகள் மற்றும் செயற்கை வாசனை திரவியங்கள் இல்லாதது
  • அடையாளம் மற்றும் தர அளவுருக்களில் தானியங்களின் சராசரி அளவு மற்றும் சமைத்த பிறகு அவற்றின் நீள விகிதம், ஈரப்பதத்திற்கான அதிகபட்ச மதிப்புகள், அமிலோஸ் உள்ளடக்கம், யூரிக் அமிலம், குறைபாடுள்ள/சேதமடைந்த தானியங்கள் மற்றும் பிற பாசுமதி அல்லாத அரிசியின் தற்செயலான இருப்பு போன்றவை அடங்கும்.

பாசுமதி அரிசியின் பாரம்பரியம்

பாசுமதி அரிசி என்பது இந்தியத் துணைக்கண்டத்தில் இமயமலை அடிவாரத்தில் விளையும் ஒரு சிறந்த தரமான அரிசி வகையாகும். இது அதன் நீண்ட தானிய அளவு, பஞ்சுபோன்ற அமைப்பு, தனித்துவமான வாசனை மற்றும் சுவைக்காக பிரத்தியேகமாக உபயோகப்படுத்தப்படுகிறது. இது பயிரிடப்படும் குறிப்பிட்ட புவியியல் பகுதிகளின் விவசாய காலநிலை நிலைமைகள், அறுவடை செய்யும் முறை மற்றும் அரிசியை பதப்படுத்தும் முறை ஆகியவற்றால் அதன் தனித்துவத்தைப் பெற்றுள்ளது. இது உள்நாட்டிலும் உலக அளவிலும் பரவலாக நுகரப்படும் அரிசி வகையாகும். உலக விநியோகத்தில் மூன்றில் இரண்டு பங்கை இந்தியா மட்டுமே கொண்டுள்ளது.

பாசுமதி அரிசி பஞ்சாப், ஹரியானா, ஜம்மு மற்றும் காஷ்மீர், ஹிமாச்சல பிரதேசம், டெல்லி, உத்தரகண்ட் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களின் குறிப்பிட்ட பகுதிகளில் விளைகிறது.

முடிவுரை

புதிய சட்டத்திருத்தம், உலகளாவிய ரீதியிலும் உள்நாட்டிலும் பாசுமதி அரிசியின் நிலையை உயர்த்துவதில் குறிப்பிடத்தக்க படியாக இருக்கும். இதன் மூலம் மக்கள் பார்வையில் பாசுமதி அரிசியின் மதிப்பை சீரழிக்கும் மோசடிகள் தடுக்கப்படும்.

spot_img

Read More

Stay in Touch

Subscribe to receive latest updates from us.

Related Articles