HomeNewsNational Agri Newsகுருவைச் சாகுபடி பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை மத்திய அரசு உயர்த்தி அறிவிப்பு!     

குருவைச் சாகுபடி பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை மத்திய அரசு உயர்த்தி அறிவிப்பு!     

2023-2024 சந்தைப் பருவத்திற்கு அனைத்து குருவைப் பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.  

விலைவாசி ஏற்றத்திற்கு ஏற்றவாறு அவ்வப்போது மத்திய அரசு வேளாண் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தி அறிவித்து வருகிறது. அப்படி 2023-2024 சந்தைப் பருவத்திற்கு குருவைச் சாகுபடி பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையில் அக்டோபர் மாதம் 18–ம் தேதி மத்திய அரசு உயர்த்தியுள்ளது.  

அதன்படி பருப்பு வகைகளுக்காகக் குறைந்தபட்ச ஆதரவு விலையை 5500 ரூபாயிலிருந்து 500 ரூபாய் அதிகரித்து 6000 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது. குவிண்டால் கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை 2015 ரூபாயிலிருந்து 110 ரூபாய் அதிகரித்து 215 ரூபாயாக அறிவித்துள்ளனர். பார்லிக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை 1635 ரூபாயிலிருந்து 1735 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. பயறு வகைகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை 5230 ரூபாயிலிருந்து 5335 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராப்சீட் மற்றும் கடுகு பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையை 5050 ரூபாயிலிருந்து 5340 ரூபாயாக உயர்த்தியுள்ளனர். குங்குமப்பூவுக்காகக் குறைந்தபட்ச ஆதரவு விலையில் 5441 ரூபாயிலிருந்து 5650 ரூபாயாக உயத்தி அறிவித்துள்ளனர்.  

குறைந்தபட்ச ஆதரவு விலை என்றால் என்ன?  

குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது விவசாயிகளிடம் இருந்து வேளாண் பொருட்களை அரசு நேரடியாகக் கொள்முதல் செய்வதற்கான உத்தரவாத தொகையாகும். குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்துவதன் மூலம் விவசாயிகள் தங்களது விளைப் பொருட்களை அதிக விலைக்கு விற்று அதிக லாபம் ஈட்ட முடியும். அதுவே குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டத்தைச் செயல்படுத்தி வருவதற்கான நோக்கமாகும்.  

முக்கிய குறிப்புகள்   

  1. 2023-2024 சந்தைப் பருவத்தில் அதிகம் விளையும் 6 முக்கிய பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.  
  2. விவசாய செலவுகள் மற்றும் விலைகளுக்கான ஆணையத்தின் பரிந்துரையின் படி இந்த முடிவினை மத்திய அமைச்சகம் எடுத்துள்ளது.
  3. விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
  4. 2015-2016ல் இருந்த 2021-2022 வரை வேளான் மற்றும் அது சார்ந்த ஏற்றுமதி 53.1 சதவிகிதம் அதிகரித்துள்ளது.  

முடிவுரை  

2023-2024 குருவைச் சந்தை பருவத்தில், 6 ராபி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இந்த முடிவு விவசாயிகளின் விளைபொருட்களின் விலையை உயர்த்தி பயன் அடையச் செய்யும். விவசாயிகள் அவர்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்துவதன் மூலம் தங்கள் வருமானத்தை இரட்டிப்பாக்கி மற்ற விவசாயிகளையும் செய்ய ஊக்குவிக்கும். இதன் நோக்கம் விவசாயிகளின் வருவாயைப் பெருக்குவது மற்றும் விவசாயத் துறையை உயர்த்துவது ஆகும்.  

spot_img

மேலும் அறிய

தொடர்பில் இருக்க

அண்மை தகவல்களைப் பெற எங்களை சப்ஸ்கிரைப் பண்ணுங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்