HomeNewsImportant Eventsநமது உணவின் தேர்வாக சிறுதானியங்களை நாம் மேற்கொள்வோம்: பிரதமர் மோடி  

நமது உணவின் தேர்வாக சிறுதானியங்களை நாம் மேற்கொள்வோம்: பிரதமர் மோடி  

ஜி20 வேளாண் அமைச்சகப் பணிக்குழுக் கூட்டம் 2023, ஜூன்-15 முதல் 17 வரை ஹைதராபாத்தில் நடைபெற்றது. மூன்று நாட்கள் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஜி20 உறுப்பு நாடுகள், அழைப்பு  நாடுகள், சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்ற்றனர். பல்வேறு நாடுகளின் வேளாண் துறை அமைச்சர்கள், சர்வதேச அமைப்புகளின் தலைமை இயக்குநர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். 

முதல் நாள் அன்று மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர்கள் கைலாஷ் சௌத்ரி கண்காட்சியை தொடங்கிவைக்தார். வேளாண் மற்றும் அதை சார்ந்த துறைகளில் இந்தியாவின் சாதனைகளை எடுத்துக்காட்டும் விதமாக, கண்காட்சி இடம்பெற்று இருந்தது. 

இரண்டாம் நாளில் மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பங்கேற்று ஜி20 கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர்கள் மற்றும்  இதர பிரதிநிதிகளை வரவேற்றார். உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்துக்கான நீடித்த வேளாண்மை, மகளிர் சார்ந்த வேளாண்மை,  நீடித்த உயிரி பன்முகத்தன்மை, பருவ நிலை தீர்வுகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. பிரதமர் நரேந்திர இந்த கூட்டத்தில் காணொலி வழியாக உரையாற்றினார். கூட்டத்தில் பங்கேற்ற, அனைத்து முக்கிய பிரமுகர்களையும் இந்தியாவிற்கு வரவேற்பதாகக் கூறிய பிரதமர், மனித நாகரிகத்தின் இதயம் வேளாண்மை என்று குறிப்பிட்டார். ஒரு வேளாண்மை அமைச்சரின் பொறுப்புகள் பொருளாதாரத்தின் ஒரு துறையைக்  கையாளுவது மட்டுமின்றி, மனித குலத்தின் எதிர்காலத்தை பாதுகாக்கும் பொறுப்பையும் கொண்டதாகும் என்று குறிப்பிட்டார். உலகளவில் 2.5 பில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு வேளாண்மை வாழ்வாதாரத்தை வழங்குவதாகவும், உலகளாவிய தெற்கில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 30 சதவிகிதத்தை அது அளிப்பதுடன், 60 சதவிகிதத்திற்கும் அதிகமான வேலைகளை வழங்கி வருவதாகவும் பிரதமர் கூறினார். உலகளாவிய தெற்கு இன்று எதிர்கொள்ளும் சவால்களை விளக்கிய பிரதமர், பெருந்தொற்றின் தாக்கம் மற்றும் விநியோகச் சங்கிலியை சீர்குலைக்கும் மோசமான புவிசார் அரசியல் பதற்றம் ஆகியவை பெரும் சவால்களாக உருவெடுத்துள்ளன என்று தெரிவித்தார்.  அடிக்கடி தீவிர வானிலை உச்ச நிகழ்வுகளை ஏற்படுத்தும் பருவநிலை மாற்றத்தையும் அவர் குறிப்பிட்டார். 

 வேளாண் துறையில் இந்தியாவின் பங்களிப்பை விளக்கிய பிரதமர், ‘அடிப்படைகளுக்குத் திரும்புதல்’, ‘எதிர்காலத்திற்கு முன்னேறுதல்’ ஆகியவற்றின் கலவையாக இந்தியாவின் கொள்கை உள்ளது என்று கூறினார். மேலும் இந்தியா இயற்கை வேளாண்மை மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த வேளாண்மையை ஊக்குவித்து வருவதாக பிரதமர் தெரிவித்தார். “இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகள் தற்போது இயற்கை வேளாண்மையை மேற்கொண்டு வருகின்றனர்” என்று பிரதமர் கூறினார். அவர்கள் செயற்கை உரங்கள் அல்லது பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதில்லை, அவர்கள் அன்னை பூமியைப் புதுப்பித்தல், மண்ணின் வளத்தைப் பாதுகாத்தல், ஒவ்வொரு துளியிலும், அதிக விளைச்சல் என்ற முறையில் கரிம உரங்கள் மற்றும் பூச்சி மேலாண்மை தீர்வுகளை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்துகின்றனர் என்று அவர் கூறினார். அதே நேரத்தில், நமது விவசாயிகள் உற்பத்தித்திறனை அதிகரிக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, தங்கள் பண்ணைகளில் சூரிய சக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்து பயன்படுத்துவதையும், பயிர்த் தேர்வை மேம்படுத்த மண்வள அட்டைகளைப் பயன்படுத்துவதையும், ஊட்டச்சத்து உரங்களை  தெளிக்க ட்ரோன்களைப் பயன்படுத்துவதையும் அவர் உதாரணமாகக் காட்டினார். அவர்களின் பயிர்களைப் கண்காணிக்கவும். வேளாண்மையில் உள்ள பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் இந்த ‘இணைவு அணுகுமுறை’ சிறந்த வழி என்று மோடி தெரிவித்தார். 

2023 ஆம் ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக கொண்டாடப்படுவதைச் சுட்டிக்காட்டிய பிரதமர், சிறுதானியம் அல்லது ஸ்ரீ அன்னாவை அடிப்படையாகக் கொண்டு பல உணவுகள் தயாரிக்கப்படுவதால், உயரதிகாரிகள் ஹைதராபாத்தில் தங்கள் தட்டுகளில் இதனை சுவைக்கலாம் என்று கூறினார். இந்த அருமையான உணவுகள் ஆரோக்கியமானவை என்பதுடன், சிறுதானிய பயிருக்கு குறைந்த நீர் மற்றும் உரம் தேவைப்படுவதால் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தவும் உதவுகிறது என்று மோடி தெரிவித்தார். சிறுதானியங்களின் வரலாற்றை எடுத்துரைத்த பிரதமர், அவை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பயிரிடப்பட்டு வருவதாகவும், ஆனால் சந்தைகள் மற்றும் சந்தைப்படுத்தலின் தாக்கம் காரணமாக பாரம்பரியமாக விளையும் உணவுப் பயிர்கள்  அவற்றின் மதிப்பை இழந்ததையும் சுட்டிக்காட்டினார். “நமது விருப்பத்திற்குரிய உணவாக ஸ்ரீ அன்னாவை ஏற்றுக் கொள்வோம்” என்று கூறிய பிரதமர், சிறுதானிய வேளாண்மையில் சிறந்த நடைமுறைகள், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான, சிறந்த மையமாக, சிறுதானிய ஆராய்ச்சி நிறுவனத்தை இந்தியா உருவாக்கி வருகிறது என்று குறிப்பிட்டார். 

உலகளாவிய உணவுப் பாதுகாப்பை அடைவதற்கான கூட்டு நடவடிக்கையை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து வேளாண் அமைச்சர்கள் ஆலோசிக்க வேண்டும் என்று மோடி வலியுறுத்தினார். விளிம்புநிலை விவசாயிகளை மையமாகக் கொண்டு, உலகளாவிய உர விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்தும் நிலையான மற்றும் உள்ளடக்கிய உணவு முறையை உருவாக்குவதற்கான வழிகளைக் கண்டறியுமாறு அவர்  கேட்டுக்கொண்டார். அதே நேரத்தில், சிறந்த மண் வளம், பயிர் வளம், மகசூல் அதிகரிப்பு ஆகியவற்றிற்காக அந்த வேளாண் முறைகளை பின்பற்றுமாறு பிரதமர் கேட்டுக் கொண்டார். உலகின் பல்வேறு பகுதிகளில்  மேற்கொள்ளப்பட்டு வரும் பாரம்பரிய நடைமுறைகள், வேளாண்மைக்குப் புத்துயிரூட்டுவதற்கான மாற்று வழிகளை உருவாக்க நம்மை ஊக்குவிக்கும் என்று பிரதமர் கூறினார். நவீன டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் விவசாயிகளுக்கு அதிகாரம் அளிப்பது மற்றும் உலகளாவிய தெற்குப்பகுதியில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு மலிவு விலையில் தீர்வுகளை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். வேளாண்மை மற்றும் உணவுக் கழிவுகளை குறைக்க வேண்டிய அவசரத் தேவையை அவர் வலியுறுத்தினார், அதேசமயம் கழிவுகளிலிருந்து செல்வத்தை உருவாக்குவதில் முதலீடு செய்யுமாறு அவர் கேட்டுக்கொண்டார். 

“வேளாண்மையில் இந்தியாவின் ஜி20 முன்னுரிமைகள் நமது ‘ஒரே பூமியை’ குணப்படுத்துதல், நமது ‘ஒரே குடும்பத்தில்’ நல்லிணக்கத்தை உருவாக்குதல் மற்றும் பிரகாசமான ‘ஒரே எதிர்காலத்திற்கான’ நம்பிக்கையை அளிப்பதில் கவனம் செலுத்துகின்றன” என்று அவர் தெரிவித்தார். ‘உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்துக்கான டெக்கான் உயர்மட்டக் கோட்பாடுகள்’, சிறுதானியங்கள்  மற்றும் பிற தானியங்களுக்கான ‘மகரிஷி’ முயற்சி ஆகிய இரண்டு உறுதியான முடிவுகளின் பணிகள் நடைபெற்று வருவதாக அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். “இந்த இரண்டு முயற்சிகளுக்கான ஆதரவு, உள்ளடக்கிய, நிலையான, மற்றும் நெகிழக்கூடிய விவசாயத்திற்கு ஆதரவான  நடவடிக்கையாகும்” என்று கூறி பிரதமர் தமது உரையை நிறைவுசெய்தார். 

முக்கிய புள்ளிகள்

  1. ஹைதராபாத்தில், ஜி20 விவசாய அமைச்சர்கள் கூட்டத்தில் உணவு பாதுகாப்பு, நிலையான விவசாயம், உள்கட்டமைப்பு மற்றும் டிஜிட்டல் மாற்றம் தொடர்பாகத்  நடைபெற்றது. 
  2. இந்த கண்காட்சியில் கழிவு மேலாண்மை, வேளாண் கண்டுபிடிப்புகள் மற்றும் துல்லியமான விவசாயம் உள்ளிட்ட விவசாயத்தின் சாதனைகளைக்  காண்பிக்கப்பட்டன. 
  3. கூட்டத்தின் முன்னுரிமைப் பகுதிகளாக உணவுப் பாதுகாப்பு, வேளாண் பல்வகைப்படுத்தல், காலநிலையை எதிர்க்கும் விவசாயம், சிறு விவசாயிகளுக்கான உள்கட்டமைப்பு மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் ஆகியவை அடங்கின. 
  4. குழு விவாதங்கள்,விவசாய வணிகத்தை நிர்வகித்து லாபம் பெறுதல், மக்கள் மற்றும் கிரகத்திற்காகநிலையான விநியோகச் சங்கிலி அமைப்புகளை வலியுறுத்துதல், ஆகியவற்றை ஆராய்கின்றன. 
  5. வேளாண்மையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் சக்தி மற்றும் டிஜிட்டல் பிளவைக் குறைப்பதற்கான உத்திகள் ஆகியவற்றையும்இந்த பக்க நிகழ்வு எடுத்துக்காட்டுகிறது. 
  6. G20 இல் இந்தியாவின் தலைமையானது, உலகளாவிய விவசாய மேம்பாடு மற்றும் அறிவுப் பகிர்வு ஆகியவற்றில், அதன் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது. 
  7. இந்தியாவின் முன்முயற்சிகளானசர்வதேச தினை ஆண்டுமற்றும்பயிர் பல்வகைப்படுத்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்போன்ற நிலையான விவசாய நடைமுறைகளை G20 கூட்டத்தில் பங்களிக்கின்றன. 
  8. இந்தியாவில் செயல்படுத்தப்பட்ட வெற்றிகரமானக்கொள்கைகள் மற்றும் திட்டங்கள்உணவு முறைகளை வலுப்படுத்துவதுடன் விவசாயிகளின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கின்றன. 
  9. G20 விவசாய அமைச்சர்கள் கூட்டத்தில் விவசாயத்தில் நெகிழக்கூடிய மற்றும் வளமான எதிர்காலத்திற்கான கொள்கைகளையும், திட்டங்களையும் வடிவமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 

G20 யின் முக்கியத்துவம் மற்றும் இந்தியாவின் பங்கு

G20 யில் இந்தியாவின் பங்கேற்பும் தலைமைத்துவமும் உலகளாவிய விவசாய வளர்ச்சிக்கான, அதன் உறுதிப்பாட்டை காட்டுகிறது. வலுவான விவசாயத் துறையுடன், இந்தியா தனது அறிவையும் அனுபவங்களையும் உலகளாவிய விவசாய சமூகத்தின் நலனுக்காக பகிர்ந்து கொள்கிறது. 

சர்வதேச தினை ஆண்டு, பயிர் பல்வகைப்படுத்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி, இயற்கை மற்றும் இயற்கை விவசாயத்தை மேம்படுத்துதல் மற்றும் ICAR யின் காலநிலைக்கு ஏற்ற ரகங்கள் போன்ற நாட்டின் செயல்திறன் மிக்க முன்முயற்சிகள், நிலையான விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலனுக்கான அதன் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகின்றது. இந்தியாவின் வெற்றிகரமான கொள்கைகள், முன்னோடித் திட்டங்கள் மற்றும் நிலையான தீர்வுகள் ஆகியவை உணவு முறைகளை வலுப்படுத்தி, விவசாய நிலப்பரப்பை மாற்றுவதில் முக்கியப் பங்காற்றியுள்ளது. 

G20 விவசாய அமைச்சர்கள் கூட்டம் வெளிவருகையில், விவசாயிகளுக்கு நிலையான மற்றும் வளமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான உறுதிப்பாட்டில் அமைச்சர்கள், நிபுணர்கள் மற்றும் அமைப்புகள் ஒன்றிணைந்துள்ளன. ஒத்துழைப்பு, அறிவைப் பகிர்தல் மற்றும் டிஜிட்டல் தீர்வுகளை ஏற்றுக்கொள்வதன் மூலம், உலகம் முழுவதும் உள்ள விவசாயிகளுக்குப் பயனளிக்கும் கொள்கைகள் மற்றும் திட்டங்களை வடிவமைப்பதை இந்தக் கூட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. “ஒரே பூமி, ஒரே குடும்பம் மற்றும் ஒரு எதிர்காலம்” என்ற உணர்வைத் தழுவுவதன் மூலம், நாடுகளின் கூட்டுச் செயல்கள், நெகிழக்கூடிய மற்றும் செழிப்பான விவசாயத் துறைக்கு வழி வகுக்கும். 

spot_img

மேலும் அறிய

தொடர்பில் இருக்க

அண்மை தகவல்களைப் பெற எங்களை சப்ஸ்கிரைப் பண்ணுங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்