HomeNewsNational Agri Newsபட்ஜெட் 2023-2024: விவசாயிகளுக்கு கிடைத்தது என்ன? 

பட்ஜெட் 2023-2024: விவசாயிகளுக்கு கிடைத்தது என்ன? 

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டின் முக்கியமான நோக்கம் விவசாயத்தை நவீனமயமாக்குவது மற்றும் விவசாயிகள், ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு விரிவான பலன்களை வழங்குவதாகும். 

வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் மொத்த பட்ஜெட் ரூ. 1.25 லட்சம் கோடி ஆகும். இதில்,  

  • பிஎம்கிசான் திட்டத்திற்கு ரூ.60,000 கோடி 
  • கிசான் கிரெடிட் கார்டுக்கு (KCC) ரூ.23,000 கோடி, 86% சிறு விவசாயிகள் பயனடைகின்றனர். 

பட்ஜெட் கீழே கொடுக்கப்பட்டுள்ள பல்வேறு வேளாண் துறைகளில் கவனம் செலுத்துகிறது: 

  • கால்நடை வளர்ப்பு, பால்பண்ணை மற்றும் மீன்வளத்துறைக்கு ரூ.20 லட்சம் கோடி விவசாய கடன் இலக்கு 
  • 450 கோடியுடன் டிஜிட்டல் வேளாண்மைத் திட்டம் 
  • 600 கோடி ஒதுக்கீட்டில் தொழில்நுட்பம் மூலம் விவசாயத் துறையை மேம்படுத்துதல் 
  • 459 கோடியில் இயற்கை விவசாயம் 
  • 3 ஆண்டுகளில் 1 கோடி விவசாயிகளுக்கு இயற்கை விவசாயத்திற்கு உதவும் வகையில் 10000 உயிர் உள்ளீடு ஆராய்ச்சி மையங்கள் திறக்கப்படும். 

2023-24 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் பட்ஜெட்டில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து ரூ.1,623 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

5 ஆண்டுகளுக்கு 500 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் விவசாய வெகுமதி திட்டம் மூலம் வேளாண் தொடக்கங்களை பட்ஜெட் ஊக்குவிக்கிறது. 

இந்த பட்ஜெட் தோட்டக்கலைத் துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் ரூ.2,200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 

இந்த பட்ஜெட் கீழே பட்டியலிடப்பட்டுள்ள திட்டங்களுடன், சாமானிய மக்களுக்கு நன்மை பயக்கவும் மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதயம்  நோக்கமாகக் கொண்டுள்ளது: 

  • பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் இலவச ரேஷனுக்கான ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது 
  • பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்துக்கான ஒதுக்கீடு 66% அதிகரித்து ரூ.79,000 கோடியாக உள்ளது 
  • அதிகரித்த வேலை வாய்ப்புகள், குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினருக்காக தேசிய டிஜிட்டல் நூலகத்தைத் திறப்பது. 
  • கோவிட் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு நிவாரணம். 
திட்டம் அல்லது துறை  ஒதுக்கப்பட்ட பட்ஜெட் (₹ கோடி) 
வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் (MAFW)   1.25 லட்சம் 
PM கிசான்  60,000 
கிசான் கிரெடிட் கார்டு (KCC)  23,000 
கால்நடை வளர்ப்புக்கு விவசாயக் கடன்  20 லட்சம் 
டிஜிட்டல் விவசாயம்  450 
தொழில்நுட்ப ஊக்குவிப்பு  600 
இயற்கை விவசாயத்தை ஊக்குவித்தல்  459 
புதிய விவசாயிகள் உற்பத்தியாளர் அமைப்பு (FPOs)  955 
உணவு மற்றும் தேசிய பாதுகாப்பு  1623 
விவசாய வெகுமதி திட்டம்  500 
தோட்டக்கலை  2200 
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜன  79,000 

 

spot_img

மேலும் அறிய

தொடர்பில் இருக்க

அண்மை தகவல்களைப் பெற எங்களை சப்ஸ்கிரைப் பண்ணுங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்