HomeNewsNational Agri Newsபிஎம் கிசான் திட்டம்: விவசாயிகளுக்கு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு நிதிப் பரிமாற்றத்தை அறிவித்தார் பிரதமர்...

பிஎம் கிசான் திட்டம்: விவசாயிகளுக்கு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு நிதிப் பரிமாற்றத்தை அறிவித்தார் பிரதமர் மோடி!

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதித் திட்டம் (PM-KISAN) என்பது, நாடு முழுவதும் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்குவதற்காக கடந்த பிப்ரவரி மாதம் 2019 ஆம் ஆண்டில், இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட சிறப்புத் திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ், தகுதி மற்றும் வரம்புகளை பூர்த்தி செய்யும் விவசாயிகளுக்கு ஒரு ஆண்டிற்கு மொத்தமாக ரூ.6,000 வழங்கப்படும். இது மூன்று சம தவணைகளில் தலா ரூ.2,000 என, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். இந்தத் திட்டம் விவசாயிகளின் வருமானத்தை ஆதரிப்பது மற்றும் அவர்களின் விவசாய செலவுகளைச் சமாளிக்க உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

கருத்து

பிரதமர் நரேந்திர மோடி 2023 பிப்ரவரி 27 ஆம் தேதியன்று, பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதித் (PM-KISAN) திட்டத்தின் கீழ், 13வது தவணையாக ரூ.16,800 கோடியை நேரடிப் பயன் பரிமாற்றத்தின் (DBT) மூலம், தகுதியுள்ள 80 மில்லியனுக்கும் மேற்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றினார். இச்சந்தர்ப்பத்தில் சிறு விவசாயிகளுக்கு ரூ.2.5 லட்சம் கோடிக்கும் மேல் வரவு வைக்கப்பட்டு, அதில் ரூ.50,000 கோடி சகோதரிகள் மற்றும் தாய்மார்களின் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டது. விவசாயத்திற்கான பட்ஜெட் 2014 ஆம் ஆண்டில் ரூ.25,000 கோடியில் இருந்து, இந்த ஆண்டு ரூ.1.25 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இரசாயன உரங்களின் பயன்பாட்டைக் குறைக்கும் மாநிலங்களுக்கு, மத்திய அரசின் கூடுதல் உதவியை வழங்குவதற்காக, பிரதமர் பிரணாம் யோஜனா திட்டத்தையும் அரசாங்கம் தொடங்கியுள்ளது. 

விழாவில் மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பேசுகையில், விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் பிரதமரின் முயற்சிகளைப் பாராட்டினார். உலகில் வேறு எந்த நாட்டிலும் விவசாயிகளுக்கு நன்மை அளிக்கும் திட்டங்கள் இல்லை என்றும் அவர் கூறினார். பிஎம் கிசான் திட்டம், விவசாயிகளின் நிதிச் சுமையைக் குறைக்க உதவியது மற்றும் அவர்களின் ஒட்டுமொத்த நலனுக்கும் பங்களித்துள்ளது என்று குறிப்பிட்டார். விவசாயத் துறையின் வளர்ச்சிக்கு, அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும், எதிர்காலத்தில் விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கான நடவடிக்கைகளைத் தொடரும் என்றும் அவர் கூறினார். 

பிரதமர் மற்றும் மத்திய விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், பின்வரும் முக்கியக் குறிப்புகளை எடுத்துரைத்தனர்.

  • பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதித் திட்டம், உலகிலேயே விவசாயிகளின் வங்கிக் கணக்கில் அதிக எண்ணிக்கையில் நேரடி வரவு வைக்கப்படும், புதுமையான திட்டமாகும்.
  • விவசாயத்தை லாபகரமாக மாற்றவும், இடைவெளிகளை நிரப்பவும் போதுமான முதலீடு செய்யப்பட்டுள்ளது. ரூ.1 லட்சம் கோடி மதிப்புள்ள வேளாண் உள்கட்டமைப்பு நிதியில், விவசாயம் மற்றும் அதனைச் சார்ந்த துறைகளுக்கு ரூ.50,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • இயற்கை விவசாயம், தினை, தோட்டக்கலைப் பயிர்கள் மற்றும் வேளாண் துறையில் தொழில்நுட்பத்தை மேம்படுத்த முதலீடு செய்யப்பட்டுள்ளது. 
  • இரசாயன உரங்களின் பயன்பாட்டைக் குறைக்கும் மாநிலங்களுக்கு ஆதரவாக, பிரதமர் பிரணாம் யோஜனா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 
  • விவசாயத்திற்கான பட்ஜெட் கணிசமாக அதிகரித்துள்ளது. இது நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்குப் பலனளிக்கிறது.

விவசாயிகளின் கொள்கைகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்ட விவசாயிகளுக்கு பிரதமர் மற்றும் மத்திய விவசாயத் துறை அமைச்சர் நன்றி தெரிவித்தது மட்டுமின்றி, விவசாயிகளின் வருமானம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக குறிப்பிட்டார். நாட்டின் விவசாய ஏற்றுமதிகள் 4 லட்சம் கோடி ரூபாயை எட்டியிருப்பது, சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவின் விவசாயத் துறையின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காட்டுகிறது. உணவு தானியங்களில் இந்தியா தன்னிறைவு அடைந்து, உலகளாவிய விவசாய உற்பத்தியில் முதல் அல்லது இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ள நிலையில், அரசு எடுத்துள்ள முயற்சிகளின் முடிவுகளை நாடு கண்டு வருகிறது. ஒட்டுமொத்தமாக, சிறு விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கவும், நாட்டில் விவசாயத்தை மாற்றவும் அரசாங்கம் செயல்பட்டு வருகிறது.

spot_img

மேலும் அறிய

தொடர்பில் இருக்க

அண்மை தகவல்களைப் பெற எங்களை சப்ஸ்கிரைப் பண்ணுங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்