HomeNewsNational Agri Newsமாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட ஆந்திர FCV புகையிலை விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்க 28.11 கோடி ரூபாய்...

மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட ஆந்திர FCV புகையிலை விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்க 28.11 கோடி ரூபாய் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது

மாண்டஸ் சூறாவளிக்கு நிவாரணமாக, புகையிலை வாரியத்தின் விவசாயிகள் நலத் திட்டத்தின் (ஆந்திரப் பிரதேசத்தின் தெற்குப் பகுதி) ஒவ்வொரு உறுப்பினருக்கும் வட்டியில்லாக் கடன் வழங்கப்படும் என்று திரு. பியூஷ் கோயல், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

புது தில்லி

ஆந்திராவில் மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட 28,112 FCV புகையிலை விவசாயிகளுக்கு உடனடி நிவாரணம் வழங்க, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், புகையிலை வாரியத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் 10,000 ரூபாய் வட்டியில்லா கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளார். இந்த நடவடிக்கையானது ஆந்திர பிரதேசத்தின் தெற்கு இலேசான மண் மற்றும் தெற்கு கருப்பு மண் பகுதிகளில் உள்ள 28,112 விவசாயிகளுக்கு மாண்டஸ் புயலால் ஏற்பட்ட சேதத்தை சமாளிக்க உதவுவதன் மூலம் அவர்கள் பயனடையும் வகையில் அமைந்துள்ளது.

 FCV (Flue-cured Virginia) புகையிலை அனைத்து மூலப் புகையிலைகளிலும் அதிகமாக ஏற்றுமதி செய்யப்படும் புகையிலை வகையாகும். இது ஆந்திரப் பிரதேசத்தின் 10 மாவட்டங்களில் 66,000 ஹெக்டேர் பரப்பளவில் 121 மில்லியன் கிலோ (2021-22ம் ஆண்டு) உற்பத்தியுடன் விளைகிறது. 2021-22 நிதியாண்டில் மொத்த உற்பத்தி செய்யப்படாத புகையிலையில் (புகையிலை கழிவுகள் தவிர்த்து), FCV புகையிலை ஏற்றுமதி அளவு 53.62 சதவீதமாகவும் மதிப்பின் அடிப்படையில் 68.47 சதவீதமாகவும் இருந்தது.

இந்திய புகையிலை வாரியம்

புகையிலை வாரியம் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தால் நிறுவப்பட்டது. அதன் தலைமையகம் குண்டூரில் உள்ளது. 

இவை நிறுவப்பட்டதற்கான உள் நோக்கங்கள்

  • புகையிலை விவசாயிகளின் நலனைக் கவனிக்க 
  • அதன் உற்பத்தி மற்றும் குணப்படுத்தும் செயல்முறையை ஒழுங்குபடுத்த
  • மின்-ஏல தளங்கள் மூலம் புகையிலை விற்க விவசாயிகளுக்கு உதவ
  • அதன் தரத்தில் முன்னேற்றம் கொண்டு மகசூலை மேம்படுத்தவும் மற்றும் 
  • அதன் ஏற்றுமதியை ஊக்குவித்தல்

புகையிலை சாகுபடி

இந்தியாவில் நான்கு வகையான புகையிலை பயிரிடப்படுகிறது-

  • FCV
  • பீடி
  • சுருட்டு நிரப்பி
  • ஹூக்கா மற்றும் மெல்லும் வகை

புகையிலை பயிர் விளைவிப்பதற்கு500-1000 மி.மீ வருடாந்தர மழைப்பொழிவு தேவைப்படுகிறது. மேலும் அது அதிக வறண்ட காலநிலையை தாங்காது. புகையிலை உற்பத்தியில் ஆந்திரப் பிரதேசம் முதலிடத்திலும், அதற்கு அடுத்தபடியாக தமிழ்நாடு, மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், பீகார், கர்நாடகா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களும் உற்பத்தி செய்கின்றன.

முடிவுரை

புகையிலை வாரியம் அறிவித்துள்ள இந்த நிவாரணம், புகையிலை உற்பத்தியில் ஆந்திர பிரதேசத்தின் நம்பர் 1 என்ற நிலையை தக்க வைத்துக்கொள்ளக்கூடிய ஒரு சிறந்த நடவடிக்கையாகும். இது மட்டுமின்றி, விவசாயிகளின் பலத்தை அதிகரித்து, கவலையின்றி புகையிலை பயிரிட விவசாயிகளை ஊக்குவிக்கிறது.

spot_img

மேலும் அறிய

தொடர்பில் இருக்க

அண்மை தகவல்களைப் பெற எங்களை சப்ஸ்கிரைப் பண்ணுங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்