HomeNewsNational Agri Newsமீன்பிடித் துறை மற்றும் கடலோர மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் 'சாகர் பரிக்ரமா கட்டம் III' ! 

மீன்பிடித் துறை மற்றும் கடலோர மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் ‘சாகர் பரிக்ரமா கட்டம் III’ ! 

உலக மீன் உற்பத்தியில் இந்தியா 8% பங்களிப்போடு, உலகின் 3வது அதிக மீன் உற்பத்தி செய்யும் நாடாக உள்ளது.  மீன்பிடித் துறையின் முக்கியத்துவத்தை உணர்ந்துசாகர் பரிக்ரமாஎன்னும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. இந்திய

சுதந்திரத்தின் 75 ஆண்டுகளைக் குறிக்கும் ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் விழாவில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. சாகர் பரிக்ரமாவின் மூன்றாம் கட்டம் 2023 பிப்ரவரி 19 முதல் 21 வரை குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் நடைபெற்றது. 

இந்திய அரசின் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தின் மீன்வளத் துறை  சாகர் பரிக்ரமா திட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமானது, மீனவர்கள் மற்றும் பிற பங்குதாரர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதுடன் பல்வேறு மீன்பிடித் திட்டங்கள் மூலம் மீனவர்களின் பொருளாதார மேம்பாட்டை எளிதாக்குவதாகும். 

இந்த நிகழ்வு மீனவர்கள், மீனவ சமூகங்கள் மற்றும் பிற பங்குதாரர்கள் அவர்களுக்கு நேரிடும் பிரச்னைகளை எடுத்துரைக்க அமைத்த ஒரு தலமாக இருந்தது. இதில் மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா,   மீன்வளத் துறை,  தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம், குஜராத் அரசு, மகாராஷ்டிரா அரசு, இந்திய மீன்வள ஆய்வு, இந்திய கடலோரக் காவல்படை ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர். 

இந்த நிகழ்வின் போது, பிரதமரின் மத்ஸ்ய சம்பதா திட்டம், கிசான் கடன் அட்டைகள் & மாநில திட்டம் தொடர்பான சான்றிதழ்கள் கடலோர மற்றும் பிற பகுதி மீனவர்களுக்கும், மீன் வளர்ப்பவர்களுக்கும், இளம் மீன்பிடித் தொழில்முனைவோர்களுக்கும் வழங்கப்பட்டன. 

முக்கிய குறிப்புகள்   

  • மீனவர்களின் வாழ்க்கைத் தரம் மற்றும் அவர்களின் பொருளாதார நல்வாழ்வை மேம்படுத்தவும், அதிக வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்கவும், ஒரு முழுமையான அணுகுமுறையை இந்த திட்டம் வழங்கியது. 
  • தேசத்தின் உணவுப் பாதுகாப்பு மற்றும் கடலோர மீனவ சமூகங்களின் வாழ்வாதாரத்திற்கான கடல் மீன்வள வளங்களைப் பயன்படுத்துவதற்கு இடையே நிலையான சமநிலையை உருவாக்க சாகர் பரிக்ரமா கவனம் செலுத்தியது. 
  • கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தில் விவசாயிகளைப் போலவே மீனவர்களும் பயனடையலாம். 
  • பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா போன்ற பல்வேறு மீன்வளத் திட்டங்களின் மூலம் மீனவர்களின் பொருளாதார மேம்பாட்டை எளிதாக்குவதை நோக்கமாக கொண்டு செயல்பட்டது. மீன்பிடித் துறையில் ரூ.20,000 கோடி முதலீட்டைக் கொண்டது பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா. 

இந்த சாகர் பரிக்ரமாவின் மூன்றாம் கட்டத்தில் 20000 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். மேலும் இந்த நிகழ்ச்சியானது யூடியூப், முகநூல் போன்ற பல்வேறு சமூக ஊடக தளங்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. 

மீனவ மக்களுடன் நேரடி தொடர்புகளை ஏற்படுத்தவும், அவர்களின் பிரச்சனைகளை புரிந்து கொள்ளவும், கடலோர பகுதிகள் தொடர்பான பிரச்சனைகளை புரிந்து கொள்ளவும் இந்த திட்டம் உதவியது. 

spot_img

Read More

Stay in Touch

Subscribe to receive latest updates from us.

Related Articles