HomeNewsNational Agri Newsவிவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் அரசின் முயற்சிகள்!

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் அரசின் முயற்சிகள்!

விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்க இந்திய அரசு செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த இலக்கை அடைய பல கொள்கைகள், சீர்திருத்தங்கள், வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்தக் கட்டுரையில், இந்த திட்டங்களைக் கூர்ந்து கவனிப்போம் மற்றும் அவற்றின் முக்கிய அம்சங்களை ஆராய்வோம்.

கருத்து

விவசாயிகளின் வருவாயை அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று, பட்ஜெட் ஒதுக்கீட்டில் விவசாயத்திற்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் உயர்த்தப்பட்டதாகும். 2013-14 நிதியாண்டில், வேளாண் அமைச்சகம் மற்றும் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகம் ஆகியவற்றுக்கு, அவர்களின் பட்ஜெட்டில் வெறும் ரூ.30,223.88 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. இது தற்போது 4.35 மடங்கு அதிகரித்து, 2023-24 இல் ரூ.1,31,612.421 கோடியாக உயர்ந்துள்ளது.

விவசாயிகளுக்கு மூன்று தவணைகளில் ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கும், பிஎம் கிசான் திட்டத்தை தொடங்கியுள்ளது அரசாங்கம். 11 கோடிக்கும் அதிகமான விவசாயிகளுக்கு, இத்திட்டத்தின் மூலம் ரூ.2.24 லட்சம் கோடிக்கும் மேல் வழங்கப்பட்டுள்ளது. PMFBY திட்டம், 2016-இல் தொடங்கப்பட்டது. இத்திட்டம் அதிக பிரீமியம் விகிதங்கள் மற்றும் கேப்பிங் சிக்கல்களைத் தீர்க்கிறது. விவசாயிகள் பிரீமியமாக ரூ.25,174 கோடியைசெலுத்தி, ரூ.1,30,185 கோடிக்கும் மேல் (தற்காலிக) கோரிக்கைகளைப் பெற்றுள்ளனர்.

விவசாயத் துறைக்கு நிறுவனக் கடன் வழங்குவதிலும் அரசு கவனம் செலுத்தியுள்ளது. 2013-14 இல் ரூ.7.3 லட்சம் கோடியாக இருந்த நிறுவனக் கடன், 2022-23 இல் ரூ.18.5 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. கிசான் கிரெடிட் கார்டுகளின் (KCC) மூலம், அனைத்து பிஎம் கிசான் பயனாளிகளுக்கும் சலுகை நிறுவனக் கடன் வழங்க பிப்ரவரி 2020 முதல் ஒரு சிறப்பு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், 30.12.2022 வரை சிறப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக, 389.33 லட்சம் புதிய கிசான் கிரெடிட் கார்டு (KCC) விண்ணப்பங்களுக்கு ஒப்பதல் அளிக்கப்பட்டு, கடன் வரம்பாக ரூ.4,51,672 கோடி அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

அரசின் மற்றொரு முக்கிய முயற்சி, குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP), உற்பத்திச் செலவை விடவும் ஒன்றரை மடங்கு அதிகமாக நிர்ணயித்தல் ஆகும். 2018-19 முதல் அனைத்து காரீஃப், ரபி மற்றும் பிற வணிகப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP), அனைத்திந்திய உற்பத்திச் செலவை விடவும் 50% வருவாயை வழங்குவதற்காக அதிகரித்துள்ளது. 

இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக, அரசாங்கம் 2015-16 ஆம் ஆண்டில் பரம்பரகட் க்ரிஷி விகாஸ் யோஜனா (PKVY) திட்டத்தை தொடங்கியது. இது, 6.53 லட்சம் ஹெக்டேர் பரப்பளவை உள்ளடக்கியது மற்றும் இதன்மூலம் 16.19 லட்சம் விவசாயிகள் பயனடைகிறார்கள். நமாமி கங்கே திட்டத்தின் கீழ் 1.23 லட்சம் ஹெக்டேர்களும், இயற்கை விவசாயத்தின் கீழ் 4.09 லட்சம் ஹெக்டேர்களும் அடங்கியுள்ளது. அரசாங்கம் 1,72,966 ஹெக்டேர் பரப்பளவை உள்ளடக்கிய வடகிழக்குப் பிராந்தியத்தில் (MOVCDNER), மிஷன் ஆர்கானிக் வேல்யூ செயின் டெவலப்மென்ட்டை அறிமுகப்படுத்தியது.

2015-16 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட “ஒரு சொட்டு அதிகப் பயிர் (PDMC)” திட்டம், நீர் பயன்பாட்டுத் திறனை அதிகரிப்பது, உள்ளீடு செலவைக் குறைப்பது மற்றும் சொட்டுநீர் மற்றும் தெளிப்பான் அமைப்புகள் போன்ற நுண்ணீர்ப் பாசனத் தொழில்நுட்பங்கள் மூலம் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2015-16 ஆம் ஆண்டு முதல் PDMC திட்டத்தின் மூலம், இதுவரை 72 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் நுண்ணீர்ப் பாசனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

தொடக்கத்தில் 5,000 கோடி தொடக்கக் கூட்டுத்தொகை நிதியுடன், நபார்டு வங்கியுடன் இணைந்து ஒரு நுண்ணீர்ப் பாசன நிதியை அரசாங்கம் நிறுவியது. 2021-22 பட்ஜெட் அறிவிப்பில், நிதியின் கூட்டுத்தொகை அதிகரிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தகவல் அட்டவணை

கொள்கை/திட்டம் விளக்கம் புள்ளிவிவரங்கள்
பட்ஜெட் ஒதுக்கீடு  வேளாண்மை அமைச்சகம் மற்றும் மீன்பிடி, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீடு அதிகரிப்பு  2013-14 இல் ரூ.30,223.88 கோடியில் இருந்து 2023-24ல் ரூ.1,31,612.41 கோடியாக அதிகரிப்பு
பிம் கிசான் வருமான ஆதரவாக 3 சம தவணைகளில் ஆண்டுக்கு 6000 வழங்கும் திட்டம்  இதுவரை 11 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் 2.24 லட்சம் கோடிக்கு மேல் பெற்றுள்ளனர்
PMFBY பயிர்க் காப்பீட்டுத் திட்டம் 2016 இல் தொடங்கப்பட்டது  37.66 கோடி விவசாயிகள் பதிவு செய்துள்ளனர், 12.38 கோடிக்கும் அதிகமானோர் (தற்காலிக) ரூ.25,174 கோடி பிரீமியத்திற்கு எதிராக ரூ.1,30,185 கோடி (தற்காலிக) உரிமைகோரல்களைப் பெற்றனர்
நிறுவன கடன்  2013-14 இல் ரூ.7.3 லட்சம் கோடியில் இருந்து 2022-23 இல் ரூ.18.5 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டது ரூ.4,51,672 கோடி கடன் வரம்புடன் 389.33 லட்சம் புதிய KCC விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன
குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) MSP உற்பத்தி செலவை விட ஒன்றரை மடங்கு அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது 2018-19 முதல் உற்பத்தி செலவை விட 50% வருவாயை உறுதி செய்வதற்காக, அனைத்து காரீஃப், ரபி மற்றும் வணிக பயிர்களுக்கும் MSP உயர்த்தப்பட்டது
இயற்கை விவசாயம்  PKVY, நமாமி கங்கே திட்டம், இயற்கை விவசாயம் மற்றும் BPKP மூலம் இயற்கை விவசாயத்தை ஊக்குவித்தல் PKVY இல் 6.53 லட்சம் ஹெக்டேர் பரப்பில் 32,384 தொகுப்புகள் உருவாக்கப்பட்டன. நமாமி கங்கை 1.23 லட்சம் ஹெக்டேரும், இயற்கை விவசாயம் 4.09 லட்சம் ஹெக்டேரும். MOVCDNER 1.72 லட்சம் ஹெக்டேரில் தொடங்கப்பட்டது.
ஒரு சொட்டு அதிகப் பயிர்  நுண்ணீர்ப் பாசன தொழில்நுட்பங்கள் மூலம் தண்ணீர்ப் பயன்பாட்டுத் திறனை அதிகரிக்க தொடங்கப்பட்டத் திட்டம் PDMC திட்டத்தின் மூலம் 72 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் நுண்ணீர்ப் பாசனம் செய்யப்படுகிறது
நுண்ணீர்ப் பாசன நிதி  நபார்டு வங்கியானது ரூ.5,000 கோடியின் தொடக்கக் கூட்டுத்தொகையுடன் ஒரு நிதியை உருவாக்கியது 17.09 லட்சம் ஹெக்டேருக்கு ரூ.4,710.96 கோடி மதிப்பிலான திட்டங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன
உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் (FPOs) புதிய மத்திய அரசுத் திட்டத்தின் மூலம் FPO-க்களை மேம்படுத்துதல் N/A

 

spot_img

மேலும் அறிய

தொடர்பில் இருக்க

அண்மை தகவல்களைப் பெற எங்களை சப்ஸ்கிரைப் பண்ணுங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்