HomeNewsNational Agri Newsவிவசாயிகள் தரமான விதைகளை கொள்முதல் செய்ய 'விதை கண்டுபிடிப்பு' அமைப்பை இந்திய அரசு விரைவில் தொடங்க...

விவசாயிகள் தரமான விதைகளை கொள்முதல் செய்ய ‘விதை கண்டுபிடிப்பு’ அமைப்பை இந்திய அரசு விரைவில் தொடங்க உள்ளது! 

தேசிய விதை சங்கம் மார்ச் 4-ம் தேதி புதுதில்லியில் இரண்டு நாள் இந்திய விதை காங்கிரஸை  ஏற்பாடு செய்திருந்தது. இதில் விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். 

இதில் கலந்து கொண்ட நரேந்திர சிங் தோமர் பின்வரும் கருத்துகளை பற்றி நிகழ்வில் எடுத்துரைத்தார்,  

  • விவசாயிகளுக்கு நல்ல தரமான விதைகள் கிடைப்பதை உறுதிசெய்வதற்கு, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியாவில் ‘விதை கண்டுபிடிப்பு அமைப்பு’ தொடங்கும். 
  • இந்த அமைப்பு விதை வர்த்தகத் துறையில் கொள்ளையடிப்பதைத் தடுக்கவும், விவசாயிகள் மற்றும் விதைத் துறையில் பணிபுரியும் மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். 
  • இந்த அமைப்பை தொடங்குவதன் மூலம், விவசாயிகள் மற்றும் விதைத் துறையில் சிறப்பாகச் செயல்படும்  மக்களும் பயனடைவார்கள். மேலும் இது விதைத் துறை சரியாகச் செயல்படுவதை உறுதி செய்வதற்கும்  உதவும். 
  • விதைத்துறை சுமூகமாக செயல்படுவதற்கு என்ன தடைகள் வந்தாலும், அரசு தீவிர நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறினார். 
  • இந்தியா விவசாயத்தில் முன்னணியில் இருப்பினும், எண்ணெய் வித்துக்கள் மற்றும் பருத்தி உற்பத்தியில் பின்தங்கி உள்ளதால், அவற்றை தன்னிறைவு அடையச் செய்யவும், இறக்குமதிச் சுமையைக் குறைக்கவும் விதைத் துறையின் பங்குதாரர்கள் பங்களிக்க வேண்டும். மேலும் இதற்கு விதை தொழிற்சாலைகள் வரைபடத்தை தயாரித்து செயல்படுத்த வேண்டும் என்று தோமர் தெரிவித்தார். 
  • அவர் விவசாயத் துறையின் தொடர்ச்சியான முன்னேற்றத்தில் விதைத் துறையின் பங்களிப்பைப் பாராட்டினார். விதையே இயற்கை என்றும், விதையின் வளர்ச்சி இயற்கையின் வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது என்றும் தெரிவித்தார்.   
  • இந்நிகழ்ச்சியில், ‘உலகளாவிய ஒற்றுமைக்கான விதைகள்’ சுவரை தோமர் திறந்து வைத்தார். 

விவசாயிகளுக்கான நன்மைகள்

  • விதை கண்டுபிடிப்பு அமைப்பு விவசாயிகள் தங்கள் விதைகளின் தரத்தை அவர்கள் நடவு செய்யப்படும் நேரத்திலிருந்து அறுவடை வரை கண்காணிக்க அனுமதிக்கும். நோய் அல்லது மாசுபாடு போன்ற விதைகளில் வரும் சிக்கல்களை அடையாளம் காண உதவும். 
  • விவசாயிகள் சான்றளிக்கப்பட்ட விதைகளைப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்த உதவுகிறது. 
  • விவசாயிகளுக்கு எந்த விதைகள் அவர்களின் குறிப்பிட்ட வளரும் நிலைமைகளுக்கு பொருத்தமானவை என்பதை அறிந்துகொள்ள உதவுகிறது. இவ்வாறு செய்வது, பயிர் மகசூல் மற்றும் தரத்தை மேம்படுத்தவும் உதவும். 

விதை கண்டுபிடிப்பு அமைப்பு என்பது இந்திய அரசாங்கத்தின் குறிப்பிடத்தக்க முயற்சியாகும், இது விதை துறையில் விவசாயிகள் மற்றும் பங்குதாரர்களுக்கு பயனளிக்கும். இது பயிர் விளைச்சலையும் தரத்தையும் மேம்படுத்தும். பயிர் தோல்வியின் அபாயத்தைக் குறைக்கும். விதை வர்த்தகத் துறையில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும். இந்த அமைப்பு விவசாயத் துறையில்  அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு மற்றும் விவசாயிகளின் செழிப்பை உறுதி செய்வதற்கான முயற்சிகளுக்கு ஒரு உதாரணமாகும். 

spot_img

மேலும் அறிய

தொடர்பில் இருக்க

அண்மை தகவல்களைப் பெற எங்களை சப்ஸ்கிரைப் பண்ணுங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்