தர்தி அக்ரோ கெமிக்கல்ஸ் 1வது மரபணு ஆண் மலட்டுத்தன்மை (ஜிஎம்எஸ்) அடிப்படையிலான தட்டைப்பயிறு கலப்பினங்கள் மற்றும் மூன்று தட்டைப்பயிறு கலப்பினங்களை அறிமுகப்படுத்தியது. அவை,
- பபிள்
- ஷெர்லி
- பூர்வஜா
வழக்கமான மழைக்காலப் பருவத்தில் 10 சதவிகிதம் கலப்பின வீரியத் தன்மையையும் மற்றும் பருவம் தவறிய காலப் பருவத்தில் 20-25 சதவிகிதம் கலப்பின வீரியம் ஆகியவற்றுடன் விவசாயிகளுக்கு அவர்கள் குறிப்பிடத்தக்க முடிவுகளை அளித்துள்ளனர். இது பாரம்பரிய ரகங்களை ஒப்பிடும் போது கிட்டத்தட்ட இரண்டு மடங்கு லாபத்தைத் தருகிறது.
மரபணு ஆண் மலட்டுத்தன்மை (GMS):
மரபணு ஆண் மலட்டுத்தன்மை என்பது மைட்டோகாண்ட்ரியல் மரபணுக்கள் அணுக்கரு மரபணுக்களுடன் அல்லது அணுக்கரு மரபணுக்களின் கலவையின் விளைவாகும். நிலைமையினைப் பொறுத்து சைட்டோபிளாஸ்மிக் ஆண் மலட்டுத்தன்மை (CMS) மற்றும் மரபணு ஆண் மலட்டுத்தன்மைக்கு (GMS) வழிவகுக்கும்.
பல்வேறு பயிர்களுக்கு CMS மற்றும் GMS ஐப் பயன்படுத்தி கலப்பின விதைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதனால் இனப்பெருக்கம் செய்பவர்கள் ஹீட்டோரோசிஸ் (கலப்பின வீரியம்) தொடர்புடைய விளைச்சலைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
CMS இல், ஆண்களின் தனித்தன்மை, நிகழ்வு மற்றும் கருவுறுதல் மறுசீரமைப்பு ஆகியவை மைட்டோகாண்ட்ரியல் மற்றும் அணுக்கரு மரபணுக்களுக்கு இடையிலான தொடர்பு அடுக்குகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன.
சுற்றுச்சூழல் உணர்திறன் உடைய மரபணு ஆண் மலட்டுத்தன்மை மரபுப்பிறழ்ந்தவர்கள் (mutants) -ஆல் எபிஜெனிட்டிக் கட்டுப்பாடு கொண்ட குறியீட்டு அல்லாத RNA-க்கள் உருவாகின்றன.
மேலும், அவை வெவ்வேறு வளரும் நிலைமைகளைப் பொறுத்து கருவுறுதல் திறனைத் திரும்பப் பெறலாம். மேலும், அவை கலப்பின விதைத் தொழிலுக்கு பயனுள்ள இனப்பெருக்கப் பொருட்களாக இருப்பதற்கு இதுவே காரணம்.
எதனால் தட்டைப்பயிறு?
இது புரதம் மற்றும் சில சுவடு கூறுகளின் வளமான மூலமாகும். இது நைட்ரஜனை நிலை நிறுத்திக் கொள்ளும் திறனைக் கொண்டுள்ளது மற்றும் கார்பன் வரிசைப்படுத்துதல் மற்றும் மண்ணை மேம்படுத்த உதவுகிறது. தட்டப்பயிரின் இந்த தன்மையானது, விவசாயத்தின் பங்களிப்பை தாவரப் பாதுகாப்புப் பொருட்களின் உபயோகத்தின் அளவைக் குறைக்க உதவுகிறது. இது மறைமுகமாக மண்ணின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், நிலைநிறுத்தவும் உதவுகிறது. தட்டப்பயிறு கலப்பினங்கள் பருவம் இல்லாத சாகுபடிக்கு மிகவும் ஏற்றது மற்றும் ஒளிக்கதிர்களுக்கு உணர்திறன் இல்லாதது. கலப்பின வீரிய இனப்பெருக்கம் அனைத்து நன்மை பயக்கும் மரபணுக்கள் மற்றும் அவற்றின் தொடர்புகளின் கூட்டுத்தொகையைப் பயன்படுத்தி ஒட்டுமொத்த பயிர் உடலியலை மேம்படுத்துகிறது. இதன் விளைவாக அதிக மகசூல், சிறந்த நோய் எதிர்ப்பு, பரந்த தழுவல், சிறந்த பழங்களின் தரம் மற்றும் கருத்தரிப்பிற்கு மிகவும் பயனுள்ள விளைவை ஏற்படுத்துகிறது.