- மக்களவையில் பருத்தி ஏற்றுமதி குறித்த கேள்விக்கு பதிலளித்த மத்திய ஜவுளித்துறை இணையமைச்சர் திருமதி. தர்ஷனா ஜர்தோஷ் அவர்கள் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், 2022-23ல் பருத்தி ஏற்றுமதி 40 லட்சம் பேல்களாக இருக்கும். பருத்தியின் கிடைக்கும் தன்மை, உலகளாவிய தேவை மற்றும் விலை சமநிலை ஆகியவற்றைப் பொறுத்து மாறுபாடுகள் இருக்கலாம். இந்தியாவில், குஜராத், மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானா ஆகிய மூன்று மாநிலங்கள் பருத்தி உற்பத்தியில் 65% பங்கைக் கொண்டுள்ளன.
- பருத்தி ஏற்றுமதியினைப் போலவே சணல் மற்றும் மேஸ்தா போன்றவையும் உயர்ந்து காணப்படுகின்றன. சணல் மற்றும் மெஸ்டா உற்பத்தி தொடர்பான 5 ஆண்டு தரவு கீழே உள்ளது.
ஆண்டு | 2018-19 | 2019-20 | 2020-21 | 2021-22 | 2022-23 |
அளவு (லட்சம் பேல்கள்) | 72 | 68 | 60 | 90 | 95 |
(ஆதாரம்: சணல் ஆலோசனை வாரியம் / சணல் நிபுணர் குழு)
எதிர்பார்ப்புகளை அடைய பின்வரும் உத்திகளை இந்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
- சணல் பேக்கேஜிங்கின் தொடர்ச்சி, சட்டம் 1987. (பொருட்களின் மேல் உறையிடுவதில் சணலை கட்டாயமாகப் பயன்படுத்துவது)
- சணல் துறையின் முன்னேற்றம் மற்றும் ஊக்குவிப்புக்காக, தேசிய சணல் மேம்பாட்டுத் திட்டத்தை (NJDP) செயல்படுத்துதல்.
- சணல் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு ஆதரவாக குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) அறிவிப்பு.
- விவசாயிகளை மோசடி நடவடிக்கைகளில் இருந்து தடுக்க, ஜூட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா அவர்களிடம் இருந்து குறைந்தபட்ச ஆதரவு விலையில் சணல் கொள்முதல் செய்கிறது.
- சணல் ஆலைகளின் உற்பத்தி திறன் ஆண்டுக்கு 26 லட்சம் பேல்களில் இருந்து 28 லட்சமாக உயர்ந்துள்ளது. அரசு அதிக அளவில் உணவு தானியங்களை சேகரிப்பதால், பேக்கிங் பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது.