HomeCrop ManagementAgri Hacksஉங்கள் மாதுளை பயிர் அதிக மகசூல் வழங்க வேண்டுமா? பஹார் சிகிச்சை பற்றித் தெரியுமா?

உங்கள் மாதுளை பயிர் அதிக மகசூல் வழங்க வேண்டுமா? பஹார் சிகிச்சை பற்றித் தெரியுமா?

உங்கள் மாதுளை பயிர் அதிக பூக்கள் வைக்கின்றன, ஆனால் நீங்கள் விரும்பும் சுவையில், உயர்தரமான மற்றும் அதிக மகசூல் கொடுக்கவில்லையா?

இந்த பிரச்சனைக்கு நீங்கள் ஒரு தீர்வைத் தேடுகிறீர்களானால், நீங்கள் சரியான இடத்தில் தான் இருக்கிறீர்கள். உங்களின் கவலைகளை நீக்குவதற்கான இறுதி தீர்வு எங்களிடம் உள்ளது. அதுவே பஹார் சிகிச்சை முறை. இத்துடன் நிறுத்த வேண்டாம் இந்த கலாச்சார நடைமுறையை (பஹர் சிகிச்சை) ஏன், எப்போது, எப்படி செய்வது என்பதை அறிய மேலும் படிக்கவும். உங்கள் மாதுளை பழத்தோட்டத்தை ஏராளமான மற்றும் சுவையான பழங்களுடன் மாற்றவும்.

பஹார் சிகிச்சை என்றால் என்ன?

பஹார் சிகிச்சை என்பது ஒரு தோட்டக்கலை நடைமுறையாகும். இது மகசூல் மற்றும் பழங்களின் தரத்தை மேம்படுத்துவதற்காக குறிப்பிட்ட பருவத்தில் தாவரத்தின் பாகங்களைக் கத்தரித்தல் (கவாத்து செய்தல்) மற்றும் பூக்களை தூண்டுவதன் மூலம் தாவர வளர்ச்சியை கட்டுப்படுத்துகிறது.

பஹார் சிகிச்சை செய்வதன் நோக்கம் என்ன?

மாதுளை மரங்கள் மண்ணில் போதுமான ஈரப்பதத்தைப் பெறும் வரை ஆண்டு முழுவதும் பூக்கும் திறன் கொண்டது. இருப்பினும், தொடர்ச்சியான பூக்களை அனுமதிப்பது சிறிய அளவில் ஒழுங்கற்ற பழம் தருவதற்கு வழிவகுப்பதோடு குறைந்த விளைச்சலுடன் வணிக ரீதியாக மாதுளை சாகுபடியை சாத்தியமற்றதாக மாற்றுகிறது. எனவே, மாதுளை மரங்கள் பூக்கும் மற்றும் பழம்தரும் முறைகளை ஒழுங்குபடுத்த பஹார் சிகிச்சைக்கு உட்படுத்தப்படுகின்றன.

மகசூலை அதிகரிக்க பூக்களை ஒத்திசைப்பதைத் தவிர, பிற நோக்கங்களில் பின்வருவன அடங்கும்

  • கத்தரித்தல் (கவாத்து செய்தல்) மற்றும் மெலிதல் (தின்னிங்) காற்றோட்டத்தை அதிகரிக்கிறது, ஈரப்பதத்தை குறைக்கிறது, பூச்சி மற்றும் நோய் தாக்குதலின் அபாயத்தை குறைக்கிறது.
  • இது பழத்தின் தரத்தை மேம்படுத்த உதவுகிறது. இது மீதமுள்ள கிளைகள் அதிக சூரிய ஒளி மற்றும் ஊட்டச்சத்துக்களைப் பெற அனுமதிக்கிறது. இதன் விளைவாக பழத்தின் நிறம், அளவு மற்றும் சுவை சிறந்ததாக அமைகிறது. 

பூப்பிடிப்பதைத் தூண்டுவதற்கான சரியான நேரம்

வெப்பமண்டல நிலைகளில், மாதுளை சாகுபடி மூன்று வெவ்வேறு பூக்கும் பருவங்களை அனுபவிக்கிறது: அம்பி பஹார், மிரிக் பஹார் மற்றும் ஹஸ்தா பஹார் போன்றவையே அவை. பாசன நீர் இருப்பு அல்லது மழை, சந்தை தேவை மற்றும் குறிப்பிட்ட பகுதியில் பூச்சிகள் மற்றும் நோய்களின் நிகழ்வு போன்ற காரணிகளின் அடிப்படையில் பூக்கும் பருவத்தின் தேர்வு தீர்மானிக்கப்படுகிறது.

மழை பொழியும் காலங்களின் அடிப்படையில் மூன்று குறிப்பிட்ட காலகட்டங்களில் பூக்களை தூண்டலாம்.

  1. மிரிக் பஹார் (ஜூன்-ஜூலை)

  • ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை தொடரும் உறுதியான மழைப்பொழிவு உள்ள பகுதிகளில் இது சாதகமானது.
  • அறுவடை நேரம்: டிசம்பர் முதல் பிப்ரவரி வரை
  • பூக்கும் மற்றும் காய்க்கும் பருவம் மழைக்காலத்துடன் அல்லது மழைக்குப் பின் உடனடியாக ஒத்துப்போவதால் இந்தப் பருவம் விரும்பப்படுகிறது.
  1. ஹஸ்தா பஹார் (செப்டம்பர்-அக்டோபர்)

  • பொதுவாக ஆகஸ்ட் மாதத்தில் பருவமழை ஒழுங்கற்ற நிலையில் தொடங்கும் பகுதிகளில் இம்முறை நன்மை பயக்கும்.
  • அறுவடை நேரம்: மார்ச் முதல் ஏப்ரல் வரை
  • பார்வைக்கு ஈர்க்கும் தோல் மற்றும் கருமை நிற ஏரில்கள்(aril) இந்த பருவத்தில் குறைந்த அளவு கிடைப்பதால், அவை அதிக சந்தை மதிப்பைக் கொண்டுள்ளன.
  1. அம்பியா பஹார் (ஜனவரி-பிப்ரவரி)

  • இது ஏப்ரல்-மே மாதங்களில் உறுதியான நீர்ப்பாசன வசதி உள்ள பகுதிகளுக்கு ஏற்றது அல்லது பருவமழை முன்கூட்டியே தொடங்கி செப்டம்பரில் பின்வாங்கிச் கூடிய இடங்களுக்கு உகந்தது. அக்டோபரில் பூக்கள் பூக்கும்.
  • அறுவடை நேரம்: ஜூன் முதல் செப்டம்பர் வரை
  • இந்த பருவம் ஏற்றுமதி அளவு தரத்தை பெறக்கூடிய தரமான பழங்களுக்கு ஏற்றது. ஏனெனில் பழ வளர்ச்சியின் போது வறண்ட வானிலை, கவர்ச்சிகரமான நிறம் மற்றும் தரத்திற்கு முக்கிய காரணியாக அமைகிறது.

பஹார் சிகிச்சையை மேற்கொள்வதற்கான படிகள்

பல்லாண்டுப் பயிர்களில் உள்ள தாவர அமைப்பின் உடலியலைப் பொறுத்து, அழுத்தம் தான், பூப்பிடிக்கும் திறனை ஊக்குவிக்கிறது‌. எனவே மாதுளையில் ஈரப்பதம் அழுத்தத்திற்கு தாவரங்களை கட்டாயப்படுத்தும் விஞ்ஞானத்தின் நிகழ்வாக பஹார் சிகிச்சை கருதப்படுகிறது.

படி – 1: லேசான மணல் கலந்த மண்ணில் பஹார் சிகிச்சைக்கு குறைந்தபட்சம் 30-35 நாட்களுக்கு முன்பும், மணல் கலந்த களிமண் மண்ணாக இருந்தால் 40-45 நாட்கள் அல்லது 2 மாதங்களுக்கு முன்பும் நீர் பாசனம் செய்வதை நிறுத்துங்கள்.

படி – 2: மரங்களை சரியான விதானத்திற்காக கத்தரிக்கவும் (நீர்ப்பாசனம் நிறுத்தப்பட்ட 40-45 நாட்களுக்குப் பிறகு).

படி 3: கத்தரித்த 2 நாட்களுக்குள் எத்ரல் 25 மிலி/லிட் + DAP 5 கிராம்/லிட் தண்ணீரில் கலந்து இலையுதிர்தலுக்காக வெட்டப்பட்ட மரங்களின் மீது தெளிக்கவும் மற்றும் இலையுதிர்ந்தவுடன் (80-85% இலை உதிர்வு), லேசான கத்தரித்தல் அல்லது கவாத்து செய்தல் (15-25 செ.மீ. ) செய்வது அவசியம்.

படி – 4: கவாத்து செய்த 2-3 நாட்களுக்குள், தேவையான அளவு ஊட்டச்சத்துக்களை மண்ணில் இடவும். கீழே பரிந்துரைக்கப்பட்ட சத்துக்கள் 2-5 ஆண்டு பயிருக்கானது. பின்னர் பயிர் வயது மற்றும் தாவர அளவு ஆகியவற்றின் அடிப்படையில் ஊட்டச்சத்துக்கள் அல்லது உரங்களின் அளவை அதிகரிக்க வேண்டும்.

ஊட்டச்சத்து மட்கு/உரம் மருந்தளவு (ஒரு செடிக்கு)
கரிம உரம் தொழு உரம் 20 கிலோ
தழைச்சத்து அம்மோனியம் சல்பேட் 2 கிலோ
மணிச்சத்து ஒற்றை சூப்பர் பாஸ்பேட் (SSP) 1.6 கிலோ
சாம்பல் சத்து மியூரேட் ஆஃப் பொட்டாஷ் (MOP) 1.3 கிலோ
துத்தநாகசத்து கீலேட்டட் திரவ துத்தநாகம் 3-5 மிலி / லிட்டர் தண்ணீர்
மெக்னீசியம் சத்து மெக்னீசியம் சல்பேட் (0.2%) 2 கிராம்/லி தண்ணீர்
போரான் சத்து போரான் 20% 1 கிராம்/லி தண்ணீர்

படி 5: மேற்கூறிய சத்துக்களைப் பயன்படுத்திய பிறகு, அவற்றை மண்ணால் மூடி, மண்ணைப் பூசி, பின்னர் லேசான நீர்ப்பாசனத்தைக் கொடுங்கள். மட்குகள் மற்றும் உரங்களைப் பயன்படுத்திய பிறகு, தாவரங்களுக்கு தண்ணீர் அளவு சிறிது அதிகமாக இருக்கலாம் (8-12 லிட்டர்/தாவரத்தின் வயது மற்றும் அளவு அடிப்படையில்). ஆனால் அடுத்த இரண்டு நாட்களுக்குத் தண்ணீரின் அளவு முதல் ஒன்றில் வழங்கப்படும் அளவின் பாதியாக இருக்க வேண்டும்.

  • இந்த கட்டத்தில் அதிகப்படியான உட்செலுத்துதல் தவிர்க்கப்பட வேண்டும் இல்லையெனில் பூக்கும் திறன் மோசமாக பாதிக்கப்படும்
  • 3 வது முறை நீர்ப்பாய்ச்சலுக்குப் பிறகு, 5-6 நாட்களுக்கு நீர்ப்பாசனம் செய்வதை நிறுத்துங்கள்.

மேற்கூறிய வழிமுறைகளை சரியான நேரத்தில் மற்றும் தவறாமல் பின்பற்றினால், அது ஏராளமான பூக்கள் மற்றும் சிறந்த காய்களை உருவாக்கும். ஆரம்பத்தில் அதிக ஆண் பூக்கள் தோன்றி பின்னர், ஹெர்மாஃப்ரோடைட் பூக்கள் தோன்றி பழங்களை உற்பத்தி செய்யும். வழக்கமான தாவர பாதுகாப்பு (பூச்சி மற்றும் நோய்) நடவடிக்கைகளை பயிர் பருவம் முழுவதும் பின்பற்ற வேண்டும்.

(குறிப்பு: பஹார் சிகிச்சையானது 18 மாதங்களுக்கும் மேலான பயிர் மற்றும் தாவர வளர்ச்சியின் அடிப்படையில் செய்யப்பட வேண்டும்.)

spot_img

மேலும் அறிய

தொடர்பில் இருக்க

அண்மை தகவல்களைப் பெற எங்களை சப்ஸ்கிரைப் பண்ணுங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்