HomeCropUAL கரிம அடிப்படையிலான தயாரிப்பைப் பயன்படுத்தி வாழைப்பயிரில் பூச்சி மேலாண்மை

UAL கரிம அடிப்படையிலான தயாரிப்பைப் பயன்படுத்தி வாழைப்பயிரில் பூச்சி மேலாண்மை

வாழைப்பழங்கள் பல நாடுகளுக்கு இன்றியமையாத உணவு ஆதாரமாக விளங்குகிறது, மேலும் உலகின் பல நாடுகளில், வெப்பமண்டல பகுதிகளில் மிகவும் அதிகமாக பயிரிடப்படும் மென்மையான பழமாகக் கருதப்படுகிறது. இவ்வாறு இருப்பினும், வாழை செடிகளின் உற்பத்தித்திறனைக் குறைக்கக்கூடிய வகையில், பல்வேறு பூச்சிகள் அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகிறது. இந்த பூச்சிகளைக் கட்டுப்படுத்த செயற்கை பூச்சிக்கொல்லிகளை விவசாயிகள் பயன்படுத்துகிறார்கள். இது மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிக்கும் மற்றும் பூச்சிகளில் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கிறது. வாழையில் வரக்கூடிய பூச்சிகளை சமாளிக்க ரசாயனங்களுக்கு பதிலாக இயற்கை எதிரிகள்‌ அல்லது பூச்சி விரட்டிகளைப் பயன்படுத்துவதே சிறந்த வழி.

பூச்சிகளின் பட்டியல்:

  1. கிழங்கு துளைக்கும் கூன்வண்டு
  2. தண்டு‌ கூன்‌ வண்டு
  3. வாழை அசுவினி

1. கிழங்கு துளைக்கும் கூன்வண்டு:

அறிவியல் பெயர்: காஸ்மோபொலைட்டஸ் சார்டிட்டஸ்

மிகவும் பாதிக்கப்பட்ட தாவர பகுதி: தண்டு மற்றும் பழம்

அறிகுறிகள்:

  • வேர்த்தண்டுக்கிழங்குகளில் இருண்ட நிறத்தில் புழுக்கள் குடைந்த தடங்கள் இருக்கும். இந்த அடையாளம் வேர்த்தண்டுக் கிழங்கைத் துளைத்து தாவரத்தைக் கொல்லும் இந்த வண்டின் புழுக்களால் ஏற்படுகின்றது.
  • வெளிப்புற இலைகள் வாடுதல் மற்றும் விரியாத தண்டு இறத்தல்.

கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் (உயிரியல்):

தடுப்பு / முற்காப்பு:

நோய் தடுப்பு மருந்தளவு/லிட்டர் தண்ணீர்  வேர்த்தண்டுக் கிழங்கு சிகிச்சை  இடைவெளி  பயன்படுத்தும் முறை 
ஜிமோ தைமோக்ஸ்சைமோ அல்ட்ரா ஸ்பெக்ட்ரம் + ஜிமோ மேக்ஸ் ஸ்பெரெட்  1-2 மில்லி + 1-2 மில்லி + 0.10 மில்லி  1 –  வேர்த்தண்டுக் கிழங்கு சிகிச்சை 

நோய்க்கான தீர்வு: 

நோய்க்கான தீர்வு மருந்தளவு/லிட்டர் தண்ணீர்  சிகிச்சையின் எண்ணிக்கை  இடைவெளி  பயன்படுத்தும் முறை 
சைமோ பக்ட்ரோல் + சைமோ அல்ட்ரா ஸ்பெக்ட்ரம் + ஜிமோ மேக்ஸ் ஸ்பெரெட்  1.5 மில்லி + 1-2 மில்லி + 0.10 மில்லி  2-3 5-7 நாட்கள்  இலைவழித் தெளிப்பு
ஜிமோ தைமோக்ஸ்  1-2 மில்லி  2-3 5-7 நாட்கள்  மண்ணில் ஊற்றுதல் 
  1. தண்டு‌ கூன்‌ வண்டு:

அறிவியல் பெயர்: ஒடாய்போரஸ் லாங்கிகோலிஸ்

மிகவும் பாதிக்கப்பட்ட தாவர பகுதி: தண்டு மற்றும் பழம்

அறிகுறிகள்:

  • தண்டுகளை இதன் புழுக்கள் துளைத்து, குடைந்த பாதையை ஏற்படுத்துகிறது.
  • குடைந்த பகுதி அழுகிப் போகின்றது மற்றும் தண்டுகள் வாடிவிடுகின்றது. வெளிப்புறத்தில் வெட்டப்பட்டது போல் துளைகள் காணப்படும்; ஆரம்ப அறிகுறிகளாக, தாவர சாறு வெளியேற்றம் மற்றும் துளைகளில் இருந்து கறுப்பு நிறத்தில் மலப்பொருட்கள் வெளிப்படும். 

கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் (உயிரியல்):

தடுப்பு / முற்காப்பு:

நோய் தடுப்பு மருந்தளவு/லிட்டர் தண்ணீர்  தெளிப்புகளின் எண்ணிக்கை  இடைவெளி  பயன்படுத்தும் முறை 
சைமோ பக்ட்ரோல் + ஜிமோ மேக்ஸ் ஸ்ப்ரெட் 1.5 மில்லி + 0.10 மில்லி  1 –  தண்டில் ஊசி போடுதல் மற்றும் மண்ணில் ஊற்றுதல் 

நோய்க்கான தீர்வு: 

நோய்க்கான தீர்வு மருந்தளவு/லிட்டர் தண்ணீர்  சிகிச்சையின் எண்ணிக்கை  இடைவெளி  பயன்படுத்தும் முறை 
சைமோ பக்ட்ரோல் + சைமோ அல்ட்ரா ஸ்பெக்ட்ரம் + ஜிமோ மேக்ஸ் ஸ்பெரெட்  1.5 மில்லி + 1-2 மில்லி + 0.10 மில்லி  2-3 5-7 நாட்கள்  இலைவழித் தெளிப்பு
  1. வாழை அசுவினி:

அறிவியல் பெயர்: பென்டலோனியா நைக்ரோநெர்வோசா f. டிபிக்கல் 

மிகவும் பாதிக்கப்பட்ட தாவர பகுதி: இலைகள்

வாழை அசுவினியின் அறிகுறிகள்:

  • பாதிக்கப்பட்ட தாவரங்கள் குழைகளை ஈனுவதில்லை.
  • செடியின் உச்சியில் ரோசெட் (சுருள் சுருளாக) போன்ற தோற்றத்துடன், வளர்ச்சி குன்றி மற்றும் அலை அலையாக, இலை விளிம்புகள் மேல்நோக்கி சுருண்டு காணப்படும்.
  • வாழையில் முடிக்கொத்து வைரஸ் நோய்க்கு திசையனாகச் செயல்படுகிறது.
  • பூச்சிகள் இலை அச்சுகள் மற்றும் தண்டுகளில் காணப்படுகின்றன.

கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் (உயிரியல்):

தடுப்பு / முற்காப்பு:

நோய் தடுப்பு மருந்தளவு/லிட்டர் தண்ணீர்  தெளிப்புகளின் எண்ணிக்கை  இடைவெளி  பயன்படுத்தும் முறை 
சைமோ பக்ட்ரோல் + ஜிமோ மேக்ஸ் ஸ்பெரெட் 1.5 மில்லி + 0.10 மில்லி  1-2 3-5 வாரங்கள்  இலைவழித் தெளிப்பு

நோய்க்கான தீர்வு: 

நோய்க்கான தீர்வு மருந்தளவு/லிட்டர் தண்ணீர்  சிகிச்சையின் எண்ணிக்கை  இடைவெளி  பயன்படுத்தும் முறை 
சைமோ பக்ட்ரோல் + சைமோ அல்ட்ரா ஸ்பெக்ட்ரம் + ஜிமோ மேக்ஸ் ஸ்பெரெட்  1.5 மில்லி + 1-2 மில்லி + 0.10 மில்லி  2-3 5-7 நாட்கள்  இலைவழித் தெளிப்பு

தயாரிப்புகள் :

இரசாயன பூச்சிக்கொல்லிகளின் சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கிய அபாயங்களைக் குறைப்பதற்கான ஒரு வழி, இயற்கை மூலங்களிலிருந்து பெறப்பட்ட உயிர் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதாகும். இருப்பினும், உயிரி பூச்சிக்கொல்லிகள் மற்ற உயிரினங்களுக்கும் சுற்றுச்சூழல் சமநிலைக்கும் சில எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். எனவே, உயிர் பூச்சிக்கொல்லிகளின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை மதிப்பிடுவதற்கு அவற்றின் பதிவு செயல்முறைகளில் இருந்து கூடுதல் தரவு தேவைப்படுகிறது. உயிர் பூச்சிக்கொல்லி உற்பத்திக்கான சிறந்த கரிம உள்ளீடுகளை UAL வழங்குகிறது.

  1. சைமோ அல்ட்ரா ஸ்பெக்ட்ரம்
  2. சைமோ பக்ட்ரோல்
  3. ஜிமோ தைமோக்ஸ் 
  4. ஜிமோ மேக்ஸ் ஸ்ப்ரெட்

1. சைமோ அல்ட்ரா ஸ்பெக்ட்ரம்: இது திரவ வடிவில் கிடைக்கிறது. இது தாவரவியல் சாறுகள்/தாவர எண்ணெய்கள், நிலைப்படுத்திகள் மற்றும் துணை பொருட்கள் ஆகியவற்றின் கலவையாகும்.

  • இதில் உள்ள தாவர சாறுகள் தாவரத்தில் SAR-ஐ (Systemic Acquired Resistance – முறையான வாங்கிய எதிர்ப்பினை) அதிகரிக்கின்றன. இந்த உயிரி பூச்சிக்கொல்லியானது அனைத்து பயிர்களிலும் புழுக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப் பரிந்துரைக்கப்படுகிறது.
  • இது முக்கியமாக பூச்சிகளின் லார்வா நிலையை குறிவைத்து அழிக்கிறது. இது பூச்சிகளின் நரம்பு மண்டலத்தை செயலிழக்கச் செய்வதன் மூலம், அதன் பறக்கும் திறன் மற்றும் உணவு உட்கொள்வதைத் தடுக்கிறது.
  • சைமோ அல்ட்ரா ஸ்பெக்ட்ரம் + ஜிமோ மேக்ஸ் ஸ்ப்ரேட் இரண்டையும் ஜிமோ தைமாக்ஸுடன் கலந்து தெளித்தல் மற்றும் கிழங்கு சிகிச்சை மூலம் கிழங்கு துளைக்கும் கூன்வண்டு மற்றும் தண்டு கூன்வண்டு ஆகியவற்றை கட்டுப்படுத்தலாம். பூச்சிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் 3-5 நாட்கள் இடைவெளியில் 2-3 முறை தெளிக்க வேண்டும்.
  1. சைமோ பக்ட்ரோல்: இது திரவ வடிவில் கிடைக்கிறது. தயாரிப்பு என்பது தாவரவியல் சாறுகள்/தாவர எண்ணெய்கள், நிலைப்படுத்திகள் மற்றும் துணைப்பொருட்களின் தனித்துவமான கலவையாகும்.
  • இதன் முக்கிய நன்மைகள் என்னவென்றால், இது அனைத்து வகையான பூச்சிகளிலும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மற்றும் இது ஒரு பரந்த-நிறமாலைக் கொண்ட பூச்சிக்கொல்லியாக செயல்படுகிறது.
  • இந்த உயிர் பூச்சிக்கொல்லி அனைத்து பயிர்களுக்கும் பரிந்துரைக்கப்படுகிறது மற்றும் குறிப்பாக வண்டு மற்றும் சாறு உறிஞ்சும் பூச்சிகளை குறிவைத்து அழிக்கிறது.
  • சைமோ பக்ட்ரோல் + சைமோ அல்ட்ரா ஸ்பெக்ட்ரம் + ஜிமோ மேக்ஸ் ஸ்ப்ரேட் இவற்றை தண்டில் ஊசி போடுதல் மூலம் கிழங்கு துளைக்கும் கூன்வண்டு, அசுவினி மற்றும் தண்டு கூன்வண்டு ஆகியவற்றை கட்டுப்படுத்தலாம். பூச்சிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், 5-7 நாட்கள் இடைவெளியில் 2-3 முறை பயன்படுத்த வேண்டும்.
  • இது செயல் முறை நரம்பு மண்டலத்தை முடக்குகிறது மற்றும் அதன் இயக்கம்/பறத்தல் மற்றும் உணவு உட்கொள்வதைத் தடுக்கிறது.
  1. ஜிமோ தைமோக்ஸ்: இது ஒரு செறிவூட்டப்பட்ட பரந்த நிறமாலை கொண்ட கரிம பூஞ்சை மற்றும் பாக்டீரியாவினைக் கட்டுப்படுத்தும் முகவர் ஆகும்.
  • இத்தயாரிப்பு தாவரவியல் சாறுகள் செறிவு, தாவர எண்ணெய்கள், நிலைப்படுத்திகள் மற்றும் துணைப் பொருட்கள் ஆகியவற்றின் தேர்ந்தெடுக்கப்பட்ட கலவையைக் கொண்டுள்ளது.
  • நோய்த்தடுப்பு நடவடிக்கையாக வேர்த்தண்டுக்கிழங்கு கூன்‌வண்டுக்கு எதிராக ஜிமோ தைமோக்ஸை மண்ணில் ஊற்ற வேண்டும். மேலும், பூச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், 5-7 நாட்கள் இடைவெளியில் மீண்டும் 2-3 முறை மண்ணில் ஊற்ற வேண்டும்.
  • நோய் தாக்கிய பிறகு உடனடித் தீர்வாக, இவை பரிந்துரைக்கப்படுகின்றன. நோய் கடுமையான நிலையில் இருந்தால் 1-2 மி.லி/லிட்டர் தண்ணீருக்கு, 5-7 நாட்கள் இடைவெளியில் மற்றொரு முறை தெளிக்க வேண்டும். 
  1. சைமோ மேக்ஸ் ஸ்பெரெட்: இது திரவ வடிவில் கிடைக்கிறது. இது தெளிக்கப்பட்ட பகுதிகளில் உயிர் பூச்சிக்கொல்லியை சீரான முறையில் பரப்ப உதவுகிறது. இதை அனைத்து பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். இது நீரின் மேற்பரப்பு பிணைப்பை உடைத்து, தெளிப்பு கரைசலின் ஒட்டும் தன்மையையும், அதன் பரவலையும் அதிகரிக்கிறது.
  • சைமோ மேக்ஸ் ஸ்பெரெட்-ஐ UAL -இன் பிற தயாரிப்புகளுடன் இணைந்து பயன்படுத்தலாம். இது விவசாயத்தில் பயன்படுத்தப்படும் ஒரு அருமையான பரவலன். இது அனைத்து தெளிப்பு கரைசல்கள் மற்றும் மண்ணில் பயன்படுத்தப்படும் கரைசல்களின் செயல்திறனை அதிகரிக்கவும் செய்கிறது.
  • இது இயற்கையில் அயனி அல்லாதது மற்றும் கரிமமானது. இது ஒரு இந்திய NPOP – ஆல் அங்கீகரிக்கப்பட்ட உள்ளீடு. எனவே கரிம வேளாண்மையிலும் இதனை பயன்படுத்தலாம்.
  • சைமோ மேக்ஸ் ஸ்பெரெட் மருந்தின் அளவு, பயன்பாட்டு முறையைப் பொறுத்தது. தொட்டி கலவை தீர்வுக்கு, 0. 10 மி.லி/லி தண்ணீர் (அதாவது 10 மி.லி/100லிட்டர் தண்ணீர்) பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. சொட்டு நீர் பாசனத்திற்கு, ஏக்கருக்கு 25 மி.லி/200 லிட்டர் தண்ணீருக்கு பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.

வாழைத் தோட்டத்தை பராமரிக்க:

நிலை 1: 3-4 கிலோ/ஏக்கர் ஜிமோ பயோ குரோ, 1.5-2.0 கிலோ/ஏக்கர் சைமோ பயோஃபெர்ட் & 0.5-1.0 கிலோ சைமோ பயோடானிக் AG (தூள்) ஆகியவற்றை 200-400 கிலோ நன்கு மட்கிய தொழு உரத்துடன் கலந்து, மரக்கன்று நடவு செய்த பிறகு, முதல் முறை இட வேண்டும். அதாவது 15 நாட்களுக்குப் பிறகு – பக்கவாட்டில் இட வேண்டும்.

நிலை 2: 3-4 வது மாதத்தில் பயன்படுத்த – பக்கவாட்டில் இடுவதற்கு: 2.0-2.5 கிலோ/ஏக்கர் ஜிமோ பயோ க்ரோ, 1.0- 1.5 கிலோ/ ஏக்கர் ஜிமோ க்ரோவெல், 1.5-2.0 கிலோ/ஏக்கருக்கு சைமோ பயோஃபெர்ட் & 0.5-1.0 கிலோ சைமோ பயோடானிக் AG (தூள்) ஆகியவற்றை 200-400 கிலோ நன்கு மட்கிய தொழு உரத்துடன் கலந்து இட வேண்டும்.

சான்றிதழ்: OMRI, ECOCERT, EU, JAS, NOP மற்றும் NPOP போன்ற கரிம வேளாண்மைக்கான பல்வேறு சர்வதேச மற்றும் தேசிய தரநிலைகளால் சான்றளிக்கப்பட்டு, ZYMO® மற்றும் XYMO® தொடர்களின் பிராண்ட் பெயர்களின் கீழ் கரிம உயிர் தீர்வுகளை UAL தயாரித்து சந்தைப்படுத்துகிறது. UAL தயாரிப்புகள் பாதுகாப்பானவை, இயற்கையானவை மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை என்பதை உறுதிசெய்து, கரிம வேளாண்மையின் முக்கியமான தேவைகளைப் பூர்த்தி செய்கிறது.

spot_img

மேலும் அறிய

தொடர்பில் இருக்க

அண்மை தகவல்களைப் பெற எங்களை சப்ஸ்கிரைப் பண்ணுங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்